|
||||
|
திறந்தவெளி குளியலறைகள்...
சுகாதாரமற்ற
கழிவறைகள்...
தலையை இடிக்கும்
கூரைகள்..
(புலம்பும்
புழல் அகதிகள்!)
''இந்தியாவில்
இருந்து
6,000 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ளது ஆஸ்திரேலியா. உரிய படகு வசதிகளுடன்
புறப்பட்டால்கூட
ஆஸ்திரேலியாவை
அடைய குறைந்தது
20 நாட்கள் தேவை. உயிருக்கு எந்த உத்தரவாதமும்
இல்லாத நீண்ட பிரயாணம்.
ஆனால், எந்த அடிப்படை வசதிகளும்
இல்லாத சிறிய வகைப்
படகுகள் மூலம்தான்
இந்தியாவில்
உள்ள இலங்கை
அகதிகள் தமது உயிரைப்
பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்குச்
செல்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில்
மட்டும்
500-க்கும் மேற்பட்ட
இலங்கை அகதிகள் இவ்வாறு ஆஸ்திரேலியா
செல்ல முற்பட்டு,
நடுக்கடலில்
தத்தளித்து
இறந்துள்ளனர்''
-இப்படி ஓர் அதிர்ச்சியூட்டும்
புள்ளி விவரம் சொல்கிறார்
புழல் அகதிமுகாம்வாசி
ஒருவர்.
இலங்கை அகதிகள் இப்படி உயிருக்கு
உத்தரவாதம் இல்லாத
பயணம் மேற்கொள்ள
என்ன காரணம்? அவர்களின் வாழ்வாதாரம்
எப்படி இருக்கிறது
என்பதை அறிந்துகொள்ள
புழல் அகதிகள் முகாமுக்கு
ரகசிய விசிட் அடித்தோம்.
காவங்கரை சிக்னலில்
இருந்து உள்நோக்கிச்
சென்றால்
வருகிறது,
புழல் கேம்ப் கேட் நம்பர்
ஒன். அதில்
இருந்து சுமார் 10 மீட்டருக்குள்
குடியிருப்புப்
பகுதிகள்
ஆரம்பிக்கின்றன.
மிகமிக நெருக்கமாக
வீடுகள்.
பிரதான வாயிலில்
இருந்து சுமார் 100 மீட்டரில்
மிகப் பெரிய கழிவுநீர்
பள்ளம் ஒன்று மழைநீர்
தேங்கிய நிலையில், குப்பைகளின்
கூடாரமாக
காட்சியளிக்கிறது.
அது கொசுக்களின்
மிகச்சிறந்த
வாழ்விடம்.
அந்தப் பள்ளத்தில்
இருந்து சுமார் 5 மீட்டரிலேயே பொதுக் குளியல்
பிரதேசம்.
அங்கேதான்
ஆண்களும் பெண்களும் குளிக்க வேண்டும். நாங்கள் சென்றபோது,
இரு ஆண்களும்
இரு பெண்களும்
குளித்துக்கொண்டிருந்தனர்.
குளித்துக் கொண்டிருந்த
பெண்களைத்
கடந்துதான்
அந்த கேட்
நம்பர் ஒன்-னில் வருபவர்கள்
செல்ல வேண்டும்.
ஆண்கள் முன் குளிக்க
வேண்டி இருப்பதால்,
முகாமில்
உள்ள பெண்கள் தர்மசங்கடத்தை
எதிர்கொள்கின்றனர்.
சுமார் 450 குடும்பங்கள்,
அதாவது 2,400 பேர் வசிக்கும்
புழல் அகதி முகாமில் குளிக்கும்
இடங்கள் நான்கு. அதிலும் மூன்று குளியல் இடங்கள் முழுவதும்
திறந்த நிலையில் இருக்க... ஒன்று மட்டும்
ஒருபகுதி
மூடிய நிலையில்!
முகாமில் மொத்தம் 30 கழிவறைகள்தான்
உள்ளன. அதில்
உபயோகிக்கக்
கூடிய நிலையில் இருப்பது
20. அதாவது, 120 பேருக்கு
ஒரு கழிவறை.
ஆண்களில்
பெரும்பாலானோர்
அருகில் உள்ள காட்டுப்
பகுதியில்தான்
மலம் கழிக்கின்றனர்.
பெண்கள் வேறுவழியில்லாமல்,
கழிவறைகளை
நம்பி உள்ளனர். நாங்கள் சென்றிருந்த
அதிகாலை வேளை, ஒவ்வொரு
கழிவறைகள்
முன்பும்
குறைந்தது
20 பெண்கள் காத்திருந்தனர்.
குளிக்கும் இடத்தில்
இருந்து 5 மீட்டரிலேயே பிரதான குடியிருப்புப்
பகுதிகள்
ஆரம்பிக்கின்றன.
அரசாங்கம் கொடுத்த
வீடு 10-க்கு
10 அடி பரப்பளவு
மட்டுமே கொண்டது. இன்னும் கொஞ்சம்
இடம் வேண்டும்
என்றால், அகதிகள் தங்கள் சொந்த செலவில்
நீட்டிக்கொள்ளலாம்.
வீட்டுக் கூரையின்
உயரம் சுமார் 6 அடிதான். கொஞ்சம் உயரமானவர்
என்றால், குனிந்துதான்
வீட்டுக்குள்
நுழைய வேண்டும். ஆஸ்பெட்டாஸ் கூரை. காற்றோட்டத்துக்கு என சிறிய
இடைவெளிகூட
இல்லை. ஃபேன் போட்டால்
அது தலையைப்
பதம்பார்த்துவிடும் . புழுக்கம் வாட்டுகிறது.
சமையல் அறை வசதிகள் செய்து தரப்படவில்லை.
ஒவ்வொரு குடும்பத்திலும்
சுமார் ஐந்து பேர்
உள்ளனர். ''இந்த சிறிய
வீட்டில்
நாங்கள் எதிர்கொள்ளும்
மிகப் பெரிய பிரச்னை
தாம்பத்ய
வாழ்க்கைதான்.
நிம்மதியான தாம்பத்ய
வாழ்க்கை
அகதிகளுக்கு
இல்லை'' என்கிறார்
சிவம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
புழல் முகாமில் குடிநீர் வசதிகளும்
செய்து தரவில்லை. குடிநீருக்கான
திட்டமும் இல்லை. வெளியில் இருந்துதான்
குடிநீர்
வாங்க வேண்டும்.
நான்கு பேர்
உள்ள குடும்பத்துக்கு
ஒரு நாளுக்கு
ஒரு கேன்
வீதம் வாங்கினால்,
ஒரு மாதத்துக்கு
சுமார் 750 ரூபாய் செலவாகிறது.
இது முகாமில்
உள்ள குடும்பத்
தலைவிக்கு
ஒரு மாதத்துக்கு
அரசாங்கம்
கொடுக்கும்
உதவிப் பணத்தைவிட
அதிகம்.
க்யூ பிராஞ்ச் என்பது அகதிகளைக்
கண்காணிக்க
அமைக்கப்பட்ட
உளவு அமைப்பு. அதில்
அங்கம் வகிப்பவர்களைப்
பார்த்து
அகதிகள் பயப்படுகிறார்கள்.
இந்த க்யூ பிராஞ்ச் அதிகாரிகளால்
பாதிக்கப்படாத
அகதிகளை விரல் விட்டு
எண்ணிவிடலாம்.
'நீங்கள்
அகதிகள்.
எமக்குப் பணிந்துதான்
போக வேண்டும்’
என்ற உளவியல்
தாக்குதல்
அவர்கள் மீது தொடுக்கப்படுவதை
உணர முடிகிறது.
30 வருடங்களாக
இந்தியாவில்
இருக்கும்
அகதிகள்கூட,
அவர்களின்
சொந்தப் பெயரில் ஒரு சிம்
கார்டுகூட
வாங்க முடியாது என்பது வேதனை.
''ஈழத்தில் உள்ள முள்வேலி
முகாம்களைவிட,
இவை தரத்தில்
மிகவும் பின்தங்கிய
நிலையில்
இருக்கின்றன''
என்பது முகாம் வாழ் மக்களின் கருத்து.
''எமது அகதி
அடையாளத்தை
இல்லாமல்
செய்யுங்கள். எங்களையும் சக மனிதர்களாக
மதியுங்கள்.
ஒரு கணம் நாடற்றவர்களாக
இருந்து பாருங்கள்.
அதன் உளவியல்
தாக்கம் அப்போதுதான்
புரியும்''
என்கின்றனர்
ஈழ அகதிகள்.
கேட்கத்தான் யாருமே
இல்லை!
ம.அருளினியன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |