Contact us at: sooddram@gmail.com

 

பனைமரக்காட்டு நடிகர்களும் ,ஓவர் செண்டிமெண்டலும்.

(பனங்காட்டு வசந்தன்)

விடை கொடு எங்கள் நாடே!

 கடல் வாசல் தெளிக்கும் வீடே!

 பனைமரக்காடே பறவைகள் கூடே!

 மறுமுறை ஒரு முறை பார்ப்போமா?

இது Money ரத்தினம் money மேக் பண்ணுவதற்காக இலங்கைப் பிரச்சனையை வைத்து தயாரிக்கப்பட்ட “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் இடம்பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல். தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிப்பதற்கு இலங்கைப் பிரச்சனை பெரிதும் உதவியது. முதலில் இலங்கைத் தமிழர்களைச் சம்பந்தப்படுத்தி “புன்னகை மன்னன்” படத்தைத் தயாரித்தார் இயக்குனர் பாலச்சந்தர். பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி சந்தனக்கட்டை வீரப்பனின் கதையை “காப்டன் பிரபாகரன்” என்று இலங்கைப் பிரச்சனைக்குச் சம்பந்தமேயில்லாத படத்தைத் தயாரித்தார் ஆர் .கே.செல்வமணி. பிரபாகரன் பக்தர்கள் அந்தப் படத்தைப் பார்க்கத் தவறமாட்டார்கள் என்பது இந்த மணி மேக் பண்ணும் செல்வமணிக்கு நன்றாகத் தெரியும். பின்னர் முருகதாஸ் என்ற மணிமேக்கர் “7ம் அறிவு” என்ற படத்தைத் தயாரித்தார். சிறீலங்காவிலை அடிச்சான், மலேசியாவிலை அடிச்சான், இப்ப தமிழ்நாட்டுக்கு வந்து அடிக்கிறான். என்ற வரிகள் தமிழ் ரசிகர்களை உணர்ச்சியூட்ட வைத்தது. அது மட்டுமில்லாமல் புலிக்கவிஞர் பா.விஜய் “இன்னும் என்ன தோழா” என்ற பாடலை எழுதி தமிழர்களுக்கு இன்னும் உணர்ச்சி பொங்க வைத்தார். இப்படி பல படங்கள், பாடல்கள்  இலங்கைத் தமிழர்களின் போராட்டம் இணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதனால் பலத்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.

 கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் இடம்பெற்ற “விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடல் இப்போது விஜய் தொலைக்காட்சியில் வெர்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  ஒரு சில வருடங்களுக்கு முன்பு “பிரேம் கோபால்” என்ற இலங்கைத் தமிழர் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி விஜய் தொலைக்காட்சி அரங்கில் இருந்தவர்களை உணர்ச்சி பொங்க வைத்தார். அங்கிருந்த அவரது சகோதரி குலுங்கிக் குலுங்கி அழுதார். இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது பண்ணுங்க,எங்கள் மக்களைக் காப்பாத்துங்க  என்று கேட்டுகொண்டார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உதவப் போய் இந்தியா  இலங்கைத் தமிழர்களிடமே அடி வாங்கிக் கொண்டது. 87ம் ம் ஆண்டு யுத்தத்தை நிறுத்தி ஒரு சமாதான ஒப்பந்தத்தைச் செய்து தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்றிய இந்தியத் தலைவர் ராஜீவ்காந்தியும் அவரோடு பதினாறு அப்பாவிகளும் தமிழ்நாட்டில் வைத்து இலங்கைத் தமிழர்களாலேயே கொல்லப்பட்டார். இதெல்லாம் விடை கொடு எங்கள் நாடே என்று நடனமாடி இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்திய மக்களிடம் கெஞ்சும் “பிரேம்கோபால்” குடும்பத்துக்குத் தெரியாமல் போய்விட்டது.

அன்றைய காலத்தில் இருந்த நெருக்கடியான சூழல் காரணமாக தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளீநாடுகளுக்கு அனுப்பிவைத்தார்கள். இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. அங்கு விமானக் குண்டு வீச்சு இல்லை. குண்டுவெடிப்புகள் இல்லை. பசி பட்டிணி இல்லை. அப்பாவிகள் கைது இல்லை. இலங்கை மக்கள் எந்த மூலைக்கும் எந்தத் தடங்கலுமின்றிச் சென்று வரலாம். யுத்தத்திற்கு  முன்னர் தமிழ் மக்கள் செல்லாத இடங்களுக்கெல்லாம் இப்போது சென்று வருகிறார்கள். நயினாதீவு, கதிர்காமம்,மடு, வற்றாப்பளை, திருக்கேதீஸ்வர்ம், செல்வச்சந்நதி, வல்லிபுரக்கோவில், சிவனொளிபாதமலை., கண்டி, நுவரெலியா, என்றெல்லாம் யாத்திரை செல்லுகிறார்கள்.

வெளிநாடுகளிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆலயத் திருவிழாக்களில் பங்கு கொள்ளவும் தங்கள் பிள்ளைகளின் திருமணம்,பூப்புனித நீராட்டுவிழா,பிறந்தநாள் என்று கொண்டாட்டங்களையும் இலங்கையில் தங்கள் சொந்த மண்ணில்,சொந்த வீடுகளில் கொண்டாடிவிட்டு மீண்டும் வெளிநாட்டுக்குத் திரும்புகிறார்கள். பலருக்கு தங்கள் சொந்த ஊரில் வாழ விருப்பம் இருந்தாலும் அவர்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்ததனால் அவர்கள் எதிர்காலம் கருதி திரும்பவும் தங்கள் வசிக்கும் வெளிநாடுகளுக்கே திரும்ப வரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். தங்கள் ஊரில் சொந்தக்காரர் யாரும் இல்லை. அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்று கூரும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். நாட்டில் போய் வாழமுடியாது. அங்கு பிரச்சனை என்ற பொய்க் காரணத்தை யாரும் கூறமுடியாது. மடியில் கனமில்லாதவர்கள் இலங்கையில் தங்கள் சொந்த ஊர்களில் வாழ விரும்புபவர்கள் அங்கு போய் வாழுவதற்கு எந்தத் தடையும் இருக்காது. வெளிநாடுகளில் வாழும் பல தமிழர்கள் இலங்கையில் தங்கள் முதலீடுகளையும்  செய்கிறார்கள். வலிகாமம் வடக்கு பகுதியச் சேர்ந்த மக்கள் இன்னும் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்லவில்லை. உயர் பாதுகாப்பு வலயம் அவர்கள் பகுதிக்குள் இருப்பதனால் அவர்களுடைய மீள் குடியேற்றம் இன்னும் சாத்தியமாகவில்லை.

அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறவும் தமிழ் அரசியல்வாதிகள் இடையூறாக இருக்கிறார்கள். சரியான ஒத்துழைப்பும்.புரிந்துணர்வும் இருக்குமானால் அந்த மக்கள் மீளக் குடியேற வாய்ப்புகள் உண்டு. காலமாற்றத்தில் அது நிகழலாம். தமிழர்கள் எதிபாராத பல விடயங்கள் தமிழர் பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. ஏ9 பாதை மீண்டும் திறக்கும்,காங்கேசன்துறைக்கு  மீண்டும் யாழ்தேவி செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்று யார் நினைத்திருப்பார்கள். 30 வருடங்கள் போரில் சிதைவடைந்த நாடு, எல்லாம் சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்று எதிர்பார்த்துவிட முடியாது. ஆனால் ஒரு யுத்தம் இல்லை,ஷெல்த் தாக்குதல் இல்லை,தற்கொஅலித் தாக்குதல் இல்லை,சிறுவர்கள் இராணுவம் இல்லை, அடையாள அட்டை,பாஸ், சோதனைச் சாவடித் தொல்லைகள் இல்லை. மக்கள் அகதிகளாக அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவில் என்றும் இல்லாத என்றூம் இல்லாத சனத்திரள். இனி நல்லூர்,செல்வச்சந்நதி தொடர்ச்சியாக ஆலயத் திருவிழாக்களுக்கு வெளிநாடுகளும்,உள்நாட்டிலும் தமிழ்ப் பக்தர்கள் படையெடுக்கிறார்கள்.

இப்படியெல்லாம் நாடு வழமைக்குத் திரும்பி மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று தங்கள் அன்றாட வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் கனடாவில் வாழும் ஒரு குடும்பம் ஒன்று “விஜய்” தொலைக்காட்சியில் விடைகொடு நாடே,பனைமரக்காடே என்று பாடி செண்டிமெண்டல் வளர்க்கிறார்கள். பனைமரக்காடும் பறவைகள் கூடும் பாடவேண்டிய காலமா இது?

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடாத்துபவர்கள் இலங்கை பற்றிய அறிவு இல்லாதவர்கள். அவர்கள் இலங்கை சென்று நிகழ்ச்சி நடத்தவும் சீமான். கோபால்சாமி போன்ற   தமிழ் நாட்டுப் பிரக்கிருதிகள் தடையாக உள்ளார்கள். கனடாவிலிருந்து சென்ற “ஜசிக்கா யூட்ஸ்”என்ற பிள்ளை பாட தாயார் அழுகின்றார். மலையாளி சித்திராவும்,பம்பாய் மால்குடி சுபாவும், தெலுங்கு மனோவுக்கும் யாழ்ப்பாணம் பற்றிய அறிவு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கனேடியப் பிள்ளை ஜசிக்காவும் தாயோடை இருக்கு, ஜசிக்காவின் தாயும் தாயோடை இருக்கு, பிறகு எந்தத் தாய்மடியைத் தேடி ஜசிக்கா அழுகுது. ஜசிக்காவின் ஆச்சிக்கு 13 பிள்ளைகளூம் வெளீநாட்டிலைதான். ஆச்சிக்கு தாய் நாட்டில் போய் வாழ வேணுமெண்டு ஆசை இருந்தால் அங்கு போய் வாழலாம்தானே?  ஆச்சிக்கு என்ன தடை? ஆச்சி கனடாப் பென்சன் பணத்தை விட்டிட்டு எப்படிப் போவா? ஜசிக்காவின் தாயார் பாடலை 25 தடவை ஹெட்போன் போட்டு கேட்டாவாம். 25 தடவையும் அழுதாவாம்.என்ன நடிப்பு?

எத்தனை ஆச்சிமார் தாய்நாட்டிலை சந்தோசமாக வாழுகிறார்கள். அதுவும் ஜசிக்காவின் ஆச்சியின் ஊரைச் சேந்த ஆச்சிமார் தங்கள் பில்லைகள் வெளிநாடுகளில்  தங்கள் பிள்ளைகள் இருந்தாலும், சொந்த மண்ணிலேயெ வாழுகிறார்கள். எங்களூக்கு  வெளிநாட்டில் வாழப் பிடிக்கவில்லை. செத்தாலும் எங்கடை நாட்டிலைதான் சாவோம் என்று கடும் யுத்த காலத்திலும் தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்ற தாய் தந்தையர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் தங்கள் மண்ணில் பாசம் உள்ளவர்கள். என்னுடைய தந்தையார் கனடா வந்திருந்தார். அவரைக் குடிவரவாளராக ஸ்பொன்சர் செய்யக் கூடிய வசதி இருந்தும் தற்காலிகமாக மூன்று மாத விசாவில்தான் அவரைக் கனடாவிற்கு அழைத்தேன். இரண்டு மாதத்தின் பின் என்னிடம் அவர் கூறியது என்னை நீ நாட்டுக்கு அனுப்பவில்லையென்றால் நான் இறந்துவிடுவேன். அவர் நாட்டிற்குத் திரும்பச் சென்று சில வருடங்கள் வாழ்ந்து  தன் மண்ணிலேயே உயிரை நீத்தார். அவர் உயிர் பிரியும்வரை அங்கு கடும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. என் தந்தை போன்று பல பெற்றோர்கள்  பல பெற்றோர்கள் வெளிநாடு வந்து தங்கள் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு தாய் மண்ணிற்கு திரும்பவும் சென்று வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். பாதுகாப்புக் காரணமாக பலவருடங்களூக்கு முன் வெளீநாடு வந்த என்னைப்போலப் பலர் தங்கள் பெற்றோர்களை ஸ்பொசர் செய்து வெளிநாட்டிற்கு அழைக்கும் வாய்ப்புக்கள் இருந்தும் அவர்கள் அதனைச் செய்யவில்லை.

ஜசிக்காவின் ஆச்சியின் 13 பிள்ளைகளும் வெளிநாடுகளில் பிரசாவுரிமை பெற்றவர்கள்.  ரொறோன்ரோவில் மிகவும் வசதியாக வாழ்கிறார்கள்.  ஆச்சியின் பெரும்பாலான உறவுகள்  ரொறொன்ரோவின்  மார்க்கம் பகுதியிலே சிறப்பாக வாழ்கிறார்கள். தமிழீழம் கிடைத்திருந்தாலும் அவர்கள் நாட்டிற்குச் செல்லத் தயாராக இல்லை. ஆச்சிக்கும் பென்சன் பணத்தை விட்டுவிட்டு பனைமரக்காடு பார்க்க மனம் வராது. அப்படியிருக்கும்போது விஜய் தொலைக்காட்சியில் வந்து ஏதோ ஈழத் தமிழர்கள் தெருவில் படுத்துக் கிடக்கிறார்கள். யாரும் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் இருக்கிற மாதிரியும் அதுவும் தெருவெல்லாம் தமிழர்கள் படுத்துக் கிடக்கும் தமிழ் நாட்டில் போய் ஒப்பாரி வைத்து “ஜசிக்கா ஜூட்” குடும்பம் உலகத்தை ஏமாற்றுகிறார்கள்.  ஆச்சி தான் நாட்டிற்குத் திரும்பப் போகலாம் என்று நினைத்துத்தான் கனடா வந்தாவாம். ஆனால் இன்றும் திரும்பிப் போகமுடியவில்லையாம்.  அப்போது விஜய் தொலைக்காட்சி யுத்தம் நடப்பதுபோலக் காட்டுகிறது. இவர்களுக்கு உண்மையாக தாய்மண்ணில்தான் வாழவேண்டும் என்ற பற்றுதல் இருந்தால் கனடாவில் பிரசாவுரிமைக்கு விண்ணப்பிக்காமல் இருந்து ஆச்சியையும் அழைத்துக்கொண்டு தாய்மண்ணில் வாழ்ந்திருக்கலாம். விஜய் தொலைக்காசியில் சென்று ஒப்பாரி வைத்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com