|
||||
|
ஆரோக்கியமான
சமுதாயத்தை
அமைக்க எமது மூதாதையோரின்
நற்பண்புகளை
கடைப்பிடிக்க
வேண்டும்
இலங்கையில்
100 முதல் 150 வருடங்களுக்கு
முன்னர் வாழ்ந்த மக் கள்
தேக ஆரோக்கியத்துடன்
விளங்கினார்கள். அன்று அவர்கள்
இயற்கையுடன்
இணைந்து வாழ்ந்ததே
அவர்களின்
நீண்ட ஆயு ளுக்கும்
தேக ஆரோக்கியத்திற்கும்
பிரதான காரணமாக இருந்தது.
அன்றைய
காலகட்டத்தில்
மக்களுக்கு
பொழுதுபோக்காக
திரைப்படங்க
ளும், இலங்கை
வானொலியும்
மாத்திரமே
இருந்தன. திரைப்படங்களும் இரவு 9.30 மணியுடன் முடிவடையும்.
அதற்கு பின்னர்
திரைப்படங்கள்
காண்பிக்கப்படுவதில்லை.
வெள்ளி, சனி நாட்களில்
மாத்திரம்
இரவு 9.30 மணிக்கு
திரைப்படங்கள்
காண்பிக்கப்பட்டு
நள்ளிரவுடன்
முடிவ டையும். இந்த இரவுக்
காட்சிகளுக்கு
படம் பார்க்க
செல்பவர்களின்
எண்ணிக்கை
மிகவும் குறைவாகவே
இருந்தது.
ரேடியோ சிலோனின்
வானொலி நிகழ்ச்சிகளும்
இரவு 10.30 மணிக்கு நிறைவுபெறும்.
இத னால் பொதுவாக இரவு 8 அல்லது
8.30 மணியானவுடன்
ஊர் உறங்கி
விடும். எல்லோரும் தங்கள்
வீடுகளுக்கு
சென்று இராப்போசனத்தை
முடித்துவிட்டு,
பொதுவாக ஒன்பது மணிக்குள்
நித்திரைக்கு
சென்றுவிடு
வார்கள்.
மறுநாள் காலை 4.30 மணிக்கு விழித்தெழுந்து
மக்கள் காலை க்கடனை
முடித்துவிட்டு,
அன்றைய நாள் பணிகளை
ஆரம்பிப்பார்கள்.
விவசாயிகள்
சூரிய உதயத்திற்கு
முன்னரே தங்கள் வயல் நிலங்களுக்கு
சென்று பணியை ஆரம்பிப்பார்கள். பாடசாலை பிள்ளைகள்
அதி காலை
5 மணியிலிருந்து
6.30 மணி வரையில்
தங்கள் வகுப்பு பாடங்க ளில் கவனம்
செலுத்துவார்கள்.
இல்லத்தரசிகள்
தனது பிள்ளைகளுக்
கும் கணவன்மார்களுக்கும்
காலை ஆகாரத்தையும்
பகல் உணவையும்
தயாரித்து,
பணிக்கு செல்லும் கணவன்மாருக்கும்
பாடசாலைக்கு
செல் லும்
பிள்ளைகளுக்கும்
பார்சல் செய்து கொடுப்பார்கள்.
இன்று
எங்கள் நாட்டில் இருப்பது போன்று அன்று மோட்டார்
சைக்கிள்
களோ, வாகனங்களோ
இருக்கவில்லை. 100 வீடுகளை
எடுத்துக்
கொண் டால்
அதில் ஒரு வீட்டில்
மாத்திரம்
பழைய காரொன்று
இருக்கும்.
மற் றபடி பஸ்களும் மிகவும் குறைவாகவே
சேவையில்
ஈடுபட்டன.
இத னால் அன்று மக்கள்
பெரும்பாலும்
கால்நடை மூலமே தங்கள்
வேலை த்தளங்களுக்கும்,
காரியாலயங்களுக்கும்
செல்வார்கள்.
சிலர் நாளாந்தம்
துவிச்சக்கர
வண்டிகளையும்
பயன்படுத்துவார்கள்.
தூர இடப் பிரயாண ங்களுக்கு
மக்கள் இரண்டு மாட்டு வண்டிகளையே
பயன்படுத்துவார்
கள். இவ்விதம்
மக்கள் உடல் உழைப்புக்கு
முக்கியத்துவம்
கொடுத்து
வாழ்ந்து
வந்தார்கள். அவர்கள் தங்கள்
வயல் நிலத்தில்
அறுவடை செய்யப்பட்ட
அரிசியையே
மூன்று வேளையும் உணவாக உட்கொண்டார்கள்.
மக்கள் பொதுவாக
சைவ உணவான
காய்கறிகளையே
உணவாக உட்கொண்டா
ர்கள். மீன் சாப்பிடுவதாயின்
உடனடியாக
பிடித்த மீனை சாப்பிடுவார்
களே ஒழிய
பல நாட்கள்
ஐசில் வைத்த மீனை
சாப்பிடுவதே
இல்லை. நற்பழக்கங்களை
கடைப்பிடித்த
அன்றைய எமது மூதாதையர்கள்
புகைத் தல், மது
அருந்துதல்
போன்ற தீய பழக்கங்களையும்
பெரும்பாலும்
வெறுத்து
ஒதுக்கினார்கள். நவீன உலகில்
பயன்படுத்தப்படும்
ஐஸ்கிரீம்
போன்றவற்றை
சாப்பிடுவதற்கு
பதில், மக்கள் அன்று அதிகமாக
பழ வர்க்கங்களையே
உட்கொண்டார்கள்.
வாழைப்பழம்,
பலாப்பழம்,
மாம் பழம்
போன்ற பழவகைகளுடன்
ஆணைக்கொய்யாவை
பெரிதும்
விரு ம்பி,
அதை வழித்தெடுத்து
தேங்காய்ப்பாலையும்
கலந்து ஒரு சுவை
யான இன்பானத்தை
தயாரிப்பார்கள்.
ஆனால் அன்று அவர்கள் அத ற்கு
அளவுக்கதிகமாக
சீனியை கலப்பதில்லை.
இதனை
ஆங்கிலத்தில்
திvoணீaனீo என்றும் அழைப்பார்கள். இந்த பழத் தில் புரதச்சத்து
அதிகமாக இருப்பதுடன்
இது இருதய
நோயில் இரு ந்து
மக்களை காப்பாற்றும்
ஒரு அருமருந்தாகவும்
அன்று கருதப்பட்
டது. பழுத்த
ஆணைக்கொய்யாவை
சீனி கலக்காமலேயே
சாப்பிட்டால்
உடலுக்கு
ஆரோக்கியத்தை
அளிப்பதுடன்,
இருதய நோயில் இருந்தும்
இது மக்களுக்கு
பூரண பாதுகாப்பை
அளிக்கிறதென்று
போஷாக்கு
ணவு பற்றிய
வைத்திய நிபுணர் டாக்டர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரி வித்துள்ளார்.
இந்த
பழத்தில்
விட்டமின்
ரி யும்
அதிகமாக இருப்பதனால்,
உடலில் உள்ள நோய்த்
தன்மையை குணமாக்கும்
சக்தி பெற்றுள்ளது. இன்று மக்கள்
ஆணைக்கொய்யாவில்
அளவுக்கதிகமாக
தேங்காய்ப்பாலையும்,
சீனியையும்
கலந்து சாப்பிடுவதன்
மூலம் இந்தப் பழத்தின் உண்மை யான
பயனை பெறுவதற்கு
பதில், அதனை உட்கொள்பவர்களுக்கு
நீரி ழிவு
நோய் ஏற்படுவதற்கான
வாய்ப்பும்
இருக்கிறதென்று
டாக்டர் ரேணுகா ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார். எமது
மூதாதையர்
அன்று காய்கறியையும்,
பழவர்க்கங்களையுமே
தங்கள் உணவில் பெரும்பகுதியாக
எடுத்தார்கள். அத்துடன் அவர்கள்
அந்தி சாய்ந்து சொற்ப நேரத்தில்
நித்திரைக்கு
சென்று அதிகாலையில்
எழும்பு வதால், தேக
ஆரோக்கியத்துடன்
இருந்தார்கள்.
ஆனால், இன்றைய சந் ததியினரில்
பெரும்பாலானோர்
அதுவும் இளம் வயதினர்
ஹோட்டல்க
ளில் ஆடிப்பாடி,
மதுபோதையில்
தள்ளாடியவாறு
தங்கள் வீடுகளுக்கு
நள்ளிரவை
கடந்த பின்னரே வந்து சேர்கிறார்கள்.
அதுவும் அவர்கள் வீடுகளில்
சமைக்கும்
உணவை விட,
ஹோட்டல்களில்
தயாரிக்கப்படும்
எண்ணெய் கலந்த உணவையே
பெரும்பாலும்
உட்கொள்வதனால்,
அவர்களின்
தேக ஆரோக்கியம்
பாதிப்பிற்குள்ளாகி
இளம் வயதி
லேயே நோயாளிகளாகவும்
மாறுகிறார்கள்.
கடந்த காலத்தில்
எமது மூதாதையர்
வாழ்க்கையை
கண்டிப்புடன்
வழிநடத் திச் சென்றதனால்
தான், அன்று
அவர்கள் சிக்கனமாக
வாழ்ந்ததுடன்
தங்கள் எதிர்கால சந்ததியினருக்கென
காணிகளையும்
சொத்துக்களை
யும் சேமித்து
வைக்கக்கூடியதாக
இருந்தது.
எனவே, மூதாதையரின்
நல்வழியில்
நாமும் எங்கள் வாழ்க்கையை
நல் ஒழுக்கத்துடன்
கடைப்பிடித்தால்
நிச்சயம்
எங்கள் நாட்டில் ஒரு ஆரோ
க்கியமான
சமுதாயம்
உருவாகுமென்று
நாம் அசையாத
நம்பிக்கை
கொண்டிருக்கலாம். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |