|
||||
|
தனிநாட்டு
கோஷம்
தமிழ் மக்களை
மீண்டும்
அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும்
போர் முடிவின்
பின்னரான
கடந்த மூன்று ஆண்டு களிலும்
மக்களின்
இயல்பு வாழ்வை மீளப் பெறுவதற்காக
அரசு பல்வேறு
அபிவிருத்திப்
பணிகளையும்
சமூக நலப்
பணிகளையும்
மேற்கொண்டு
வருகின்றது.
அத்தோடு இடம் பெயர்ந்து
முகாம்களில்
வாழ்ந்த மக்களுள் பெரும்பான்மையா
னோரை மீள்குடியேற்றம்
செய்துள்ளது.
புலித் தொடர் புள்ளவர்கள்
எனச் சந்தேகிக்கப்
பட்ட இளைஞர்களுக்கு
தொழிற் பயிற்சி அளித்து அவர்கள் சுயதொழில்
செய்வதற்காக
வங்கிக் கடன் வசதிகளைச்
செய்து வரு கின்றது.
சுருக்கமாகச் சொன்னால்
இன, மத
பேதமின்றி
அனைத்து மக்களும் கெளரவமாக, சுதந்திரத்
தோடு வாழ
வேண்டுமென
அரசு பணி
செய்துவருகின்றது.
இந்த முன்னேற்ற
நடவடிக்கைகளைப்
பார்வையிட
வெளிநாட்டுத்
தூதுவர்கள்,
பிரதிநிதிகள்,
இராஜதந்திரிகள்
இலங்கைக்கு
வந்து அரசின் பணிகளை அவதானித்து
திருப்தியோடு
செல்கின்றனர்.
இலங்கை பற்றிய
தவறான எண்ணங்களை
பரப்பி வருபவர்களின்
கருத்துகள்
பிழையானவை
என்பதை அவ ர்கள்
உணர்ந்து
செல்கின்றனர்.
அந்த வகையிலே வடக்கு, கிழக்கு நிலைமையை அவதா னிக்க
இந்தியத்
தூதுவரும்
அண்மையில்
கிழக்குக்கு
விஜ யம்
செய்தார். அவர் கிழக்குக்கு
விஜயம் செய்த தினத்திலே
தமிழரசுக்
கட்சியின்
தேசிய மாநாடு மட்டக்களப்பில்
நடைபெற் றது. மாநாடு நடைபெற்ற
தின மும்
இவர் சென்ற
தினமும் ஒரே தினம்
என்பதால்
இரண் டையும்
முடிச்சுப்போட்டு
மா நாட்டை
ஊக்குவிக்க
இவர் சென்றதாக
விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
இலங்கைத் தமிழர்
பிரச்சினைக்கு
இந்தியா மூலம் தான்
தீர்வு பெற முடியும்.
தீர்வுபெற வேண்டுமென்று
தமிழ்த் தலைவர்கள்
அடிக்கடி
கூறி வருவதுண்டு.
அத்தகைய கூற்றுக்கு
வலுச் சேர்ப்பதாக
இந்தியத்
தூதுவரின்
விஜயம் அமைவதாக சிலர் கருதுகின்றனர்.
ஆனால் உண்மையில்
இது காகம்
இருக்க பனம்பழம் விழுந்த கதையென மாற்றுக் கருத்துள்ளோர்
கூறு கின்றனர்.
இந்தியாவின் முழு ஆதரவுடன்
இடம் பெற்ற
வடக்கு – கிழக்கு மாகாண சபைத்
தேர்தலில்
ஆட்சியை ஈ.
பி. ஆர். எல். எப். கைப் பற்றியது.
அந்த மாகாண சபை சிவில்
தொண்டர் படை யொன்றை
உருவாக்கியது.
தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில்
இயங்கிய அந்த அமை
ப்பு வடக்கிலுள்ள
இளைஞர்கள்,
சிறுவர்களை
பலவந்தமாக
இராணுவத்தில்
சேர்த்தது.
இலங்கையில் ஒரு இராணுவம் இருக்கும்
போது தமிழ்த்
தேசிய இராணுவம் என்ற வேறொரு
அமைப்பு உருவாக்கப்பட்டமை
உண்மையில்
விரோதமானது.
நாட்டின் இறைமைக்கு
ஊறு விளைவிக்கும்
ஒரு பயங்கரமான
திட்டமாக
இது அமைந்தது.
இந்தப் படையில்
சேர்ந்த 600
க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
அநியாயமாக
இறக்கவும்
நேர்ந் தது. அத்தகைய சூழ்நிலை
யொன்று மீண்டும் ஏற்பட வேண்டுமா
என்பதே இன்றைய கேள்வியாகும்.
நாட்டின்
இறைமைக்கு
எதிராக ஒரு மாகாண
சபை தேசிய
இராணுவத்தை
அமை த்த
வரலாற்றை
நாம் நினைவு
கூர்ந்தால்,
மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் கொடுக்க முடியுமா என்ற கேள்வி
எழுந்து நிற்கின்றது.
அண்மைக் காலங்களில்
புலம்பெயர்
தமிழர்களும்
தென்னிந்தியத்
தமிழ் அரசியல் வாதிகளும்
இலங்கை பிரிபட வேண்டுமென்ற
எண்ணக்கருவுக்கு
தூபம் போட்டு வந்தபோது சம்பந்தன்
ஐயாவின் கருத்து இதற்கு ஆதரவாக அமைந்து இருக்கவில்லை.
ஒரே நாட்டில் மற்றைய மக்களைப் போல் தமிழ்
மக்களும்
வாழக்கூடிய
ஒரு தீர்வு
அமைய வேண்டும்
என்றே சம்பந்தன்
ஐயா கூறிவந்தார். அத்தோடு யு. என். பியுடன் சேர்ந்து
மே தினத்தைக்
கொண்டாடி
தமது தேசியப்
பங்களிப்பை
நல்கினார்.
தேசிய உணர்வோடு
தேசியக் கொடியையும்
ஏந்தி நின்றார்.
அவரது நிதானமான
செயற்பாடுகள்
போற்றப்பட
வேண்டியதென
பலர் கருதினர்.
அதேவேளை இந்தச்
செய்கைகளுக்கு
தப்பான அர்த்தம் கொடுத்து கடும் போக்காளர்கள்
சிலர் அவரை விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களின்
செல்வாக்கு
மட்டக்களப்பு
மாநாட்டில்
சம்பந்தன்
ஐயாவின் பேச்சில் பிரதிபலித்ததை
காணக்கூடியதாக
இருந்தது.
அவரது பேச்சிலே
தனிநாட்டை
நோக்கிய சிந்தனை பிரதிபலித்தது.
அத்தோடு பழைய சம்பவங்களை
கிளறி இளைஞர்களை
உணர்ச்சிவசப்படுத்துவதால்
விபரீதங்கள்
விழையுமே
தவிர விடிவு
கிடைக்காது.
இனங்களுக்கிடையே தற்போது
இருக்கும்
புரிந்துணர்வும்
நல்லெண்ணமும்
பாதிக்கப்படுவதற்கு
வாய்ப்புண்டு
என்பதை கடும் போக்காளர்கள்
உணர்ந்துகொள்ள
வேண்டும்.
இவ்வாறான ஒருசந்தர்ப்பத்தில்
இந்தியத்
தூதுவரின்
கிழக்கு விஜயமும் பொருத்தமற்றதென்றே
கூற வேண்டும்.
முப்பதாண்டு கால யுத்தத்தை
முடிவுக்குக்
கொண்டுவர
அரசு பகீரதப்
பிரயத்தனம்
செய்தே வெற்றிகண்டது. யுத்தம் முடிந்து
மூன்று ஆண்டுகளுக்குள்
வடக்கிலும்
கிழக்கிலும்
ஏற்பட வேண்டிய இயல்பு நிலை படிப்படியானதாகவே
அமையும்.
எடுத்த எடுப்பிலே
இராணுவத்தை
அகற்றுவதால்
அதன் விளைவுகள்
சமாதானத்துக்கு
பங்கம் ஏற்படும் என்ற எண்ணத்திலேயே
அரசு இராணுவத்தை
படிப்படியாகக்
குறைத்து
வருகின்றது.
இராணுவம்
தொடர்பாகவும்
அரசின் ஏனைய செயல்பாடுகள்
தொடர்பாகவும்
திரிபுபடுத்திக்
கூறப்படும்
செய்திகளை
கேட்டு அவற்றை உள்வாங்கிக்
கொண்டு உண்மையான நிலையை ஆராயாமல் விஷயங்களை
நடுநிலை நின்று நோக்காது கருத்துத்
தெரிவிக்கும்
வெளிநாட்டுத்
தூதுவர்கள்,
நாட்டின்
இறைமையில்
தலையிடுகின்றனர்.
பிரிட்டன், அவுஸ்திரேலியா
போன்ற நாடுகளின்
தூதுவர்கள்
அண்மையில்
தெரிவித்த
கருத்துகள்
இலங்கை மக்களை விசனமடையச்
செய்கின்றது.
இதன் மூலம் இந்நாடுகளுக்கும்
இலங்கைக்குமிடையிலான
நல்லுறவு
பாதிக்கப்பட
ஏதுண்டு.
இந்த தூதரகங்கள்
இலங்கை அரசை வழி
நடத்த ஏற்படுத்தப்பட்டவையல்ல.
1977
ஆம் ஆண்டு
வட்டுக்கோட்டைத்
தீர்மானத்தின்
பின்னர் தமிழ்த் தலைவர்கள்
பிரிவினைவாதம்
பற்றியே சிந்தித்து
வந்துள்ளனர். இவர்களின்
தேர்தல்கால
பிரசாரங்களும்
அரசியல் நடவடிக்கைகளும்
தனித் தமிழ் போக்கின்
அடிப்படையிலும்
ஓரினம் சார்ந்த அடிப்படையிலும்
நடைபெற்று
வந்ததே தவிர தேசியம்
ஒருமைப்பாடு,
இன நல்லிணக்கம்
என்பனவெல்லாம்
கருத்திலெடுக்கப்படாதவையாகவே
அமைந்து வந்துள்ளன.
இனப் பிரச்சினை
இதுவரை தீராமல் இருப்பதற்கு
இத்தகைய போக்கே காரணமாகும்.
புலிகளும் கூட தனித்தமிழ்
ஈழம் என்ற
கோரிக்கையிலிருந்து
கீழிறங்காமல்
செயற்பட்டதுதான்
இன்றைய தமிழினத்தின்
அழிவுக்கு
பிரதானமான
காரணமெனக்கூறலாம்.
எனவே மேலும்
மேலும் ஓரினத்தின்
நலன் பற்றியே
சிந்திக்காமல்
எல்லா இனங்களும்
ஒன்றித்து,
உடனிருந்து
வாழ்வோம்
என்ற சிந்தனை
வலுத்திருந்தால்
பிரச்சினைகளுக்கு
எப்போதோ விடிவுகள்
ஏற்பட்டிருக்கும்.
மேலும் மேலும்
பழைய நிலையிலிருந்து
இறங்காமல்
பல்லாண்டுகளாக
அதையே தமிழ்க் கூட்டமைப்பு
மீண்டும்
மீண்டும்
பேசிக்கொண்டிருக்குமானால்
பிரச்சினைக்கான
தீர்வு அண்மைக் காலங்களில்
சாத்தியமற்றதாகவே
இருக்கும்.
தமிழர்களுக்கென ஓர் ஆட்சியலகு,
கிழக்கிலே
முஸ்லிம்களுக்கென
ஓர் ஆட்சியலகு
என்ற சித்தாந்தம்
பேசப்படும்
நிலையிலே
வடக்கிலுள்ள
முஸ்லிம்களின்
கதி என்ன?
இடம்பெயர்ந்த ஒரு இலட்சத்துக்கு
மேற்பட்ட
முஸ்லிம்கள்
மீளக்குடியேற
மேற்கொள்ளும்
முயற்சிகள்
என்னவாகும்?
இவ்வாறான வினாக்களுக்கு
இந்த அலகுக்காரர்களிடம்
பதில் இல்லை. அத்துடன் மலையகத்திலும்
இலங்கையின்
எல்லாப் பிரதேசங்களிலும்
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.
அவர்களின் அரசியல்
நிலைப்பாடு
என்னவென்பதையும்
தமிழ்க் கூட்டமைப்பு
சிந்திக்க
வேண்டும்.
(சுஐப் எம்.
காசிம் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |