|
||||
|
பிரதேசவாதமும் இனவாதமும்
ஆரோக்கியமானதாக
அமையாது
இனவாத சக்திகள்
நாட்டைக்
கூறுபோட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கையில்
பிர தேச
வாதம் தனது இனத்திற்குள்ளேயே
பிரிவினையை
ஏற்படுத்த
முற்பட்டுவரு
வது எதிர்கால
இருப்பிற்கு
ஆரோக்கியமானதாக
அமையாது எனும் கருத்து
புத்தி ஜீவிகளால்
தற்போது முன்வைக்கப்பட்டு
வருகிறது.
இது யதார்த்தமானதொரு
உண்மை தான். ஆங்கிலேயர்
எமது நாட்டை
எம்மிடமே
ஒப்படைத்து
விட்டுச்
சென்றதன்
பின்னர் நான் தமிழன்,
நான் சிங்களவன்,
நான் முஸ்லிம்,
நான் பறங்கியன்
எனும் இன, பேதம்
இலங்கையர்
என்றிருந்த
எமது மக்களிடம்
படிப்படியாக
எழ ஆரம்பித்தது.
அதன் விளைவின்
உச்சக்கட்டத்தையே
நாம் கடந்த
மூன்று வருடங்களுக்கு
முற்பட்ட
முப்பது வருடங்களாக
அனுபவித்து
வந்தோம்.
இன்று அது முடிவிற்கு
வந்துவிட்டது
என்று நினைத்தால்
அது முற்றுப்பெறாத
ஒரு நிலையிலேயே
இருக்கின்றது
என்பதை உணரக்கூடியதாக
உள்ளது. அழிவுகள்
போதும் இனியாவது அமைதியாக வாழ்வோம் என்று நினைப்பதற்குப்
பதிலாக இன்னமும் இன வாத
உணர்வுகளைத்
தூண்டும்
கருத்துக்களை
அரசியல் தலைவர்கள்
சிலர் விதைத்து வருவதும், அதற்குச் சில சிங்கள,
தமிழ் ஊடகங்கள் துணைபோவதும்
வேதனையளிப்
பதாக உள்ளது.
பெரும்பான்மையினக் கட்சிகள்
சில தனிநாட்டுக்
கோரிக்கையை
முன்வைத்துப்
போரா டிய
விடுதலைப்
புலிகள் இன்னமும் யுத்தம் புரிவது போல போர்க்கால
சூழலில் தெரி வித்துவந்த
இனவாதக் கருத்துக்களையே
தமது நிலைப்பாடாக
இன்றும் கொண்டிருப்பது
அவர்களது
மக்களை ஆற்றப்படுத்தலுக்கு
உள்ளாக்கப்பட
வேண்டியதன்
அவசியத்தை
உணர்த்தி
நிற்கின்றது.
இது அந்த ஒரு சிலரின்
இரத்தத்தில்
ஊறிவிட்டது.
இதனை இனி யும் தொடர
விடுவது ஆரோக்கியமானதல்ல.
அதேபோன்று பல
தமிழ்க் கட்சிகள் தமக்குப் பின்புலமாக
புலிகள் நின்று போராடுகி றார்கள் எனும் அதே
பழைய நினைப்பில்
இனவாதத்தைக்
கக்கும் கட்சிகளுடன்
ஏட்டிக் குப் போட்டியாக
கருத்து மோதல்களில்
ஈடுபட்டு
வருகின்றன.
உண்மையில்
இனவாதம் பேசும் சிங்களக் கட்சிகளையும்,
அதன் தலைவர்களையும்
ஆற்றுப்படுத்தி
இனியாவது
நாட்டில்
சகோதரத்துவத்துடன்
வாழ்வதை உறுதி செய்ய
வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட் சிகளின்
தலைவர்களின்
முன்னாலுள்ளது.
அதற்காக இனவாதம்
பேசுவோரின்
கால்களில்
விழுவது என்று பொருள்படாது.
விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை,
பொறுமையுடன்
நட ந்து
அழிவுக்குள்ளான
சமூகத்தை
மீளக்கட்டியெழுப்ப
வேண்டும்
என்பதற்காக
வேனும் இதனைச் செய்ய வேண்டும்.
ஆனால் இவ்விடயத்தில்
தமிழ்க் கட்சிகளின்
செயற்பாடு
கவலைக்குரியதாக
உள்ளது. இனவாதக் கட்சிகளுடன்
போட்டிபோடுவது
மட்டுமல்லாது
தமக்கிடையேயும்
பிரதேச வாதம் பேசி
புதிய பிரச்சினைகளையும்
இவர்கள் தோற்றுவித்து
வருகிறார்கள்.
விடுதலைப் புலிகள் அழிந்த வரலாறு எல்லோருக்குமே
தெரியும். சகல இயக்கங்களின்
உறுப்பினர்களை
இல்லாதொழித்து
பின்னர் பிரதேச ரீதியாகப்
பிரிந்து
தமக்கிடையே
யுத்தம் புரிந்து அதன் பலனாக
இறுதியில்
தாமே முற்றாக
மடிந்தனர்.
இதனை நன்கு
தெரி ந்திருந்தும்
தமிழ் மக்களால் விரும்பியோ
விரும்பாமலோ
ஓரளவு ஆதரவைப் பெற் றுள்ள
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தனது அங்கத்தவர்களிடையே
பிரதேசவாத
முறு கலை
தோற்றுவித்துக்
கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான்,
திருகோணமலையான்,
மலையகத்தான்
என்றும் யாழ்ப்பாணத்திற்குள்
தீவான், இணுவிலான்
அரியாலையான்
என்றும் வடக்கான், கிழக் கான்
என்றும், தமிழன் முஸ்லிம் என்றும் இன்று தமிழ்
பேசும் தமிழினம் தமக்கிடையே
பிரதேச பிரிவினையை
கக்க முனைந்து
வருகிறது.
இதற்கு தமிழ்த்
தலைவர்கள்
சிலரே முதற் காரணம்.
இந்த இரண்டு வாதங்களான
பிரதேச வாதத்தையும்,
இனவாதத்தையும்
இல்லாதொழிக்க
வேண்டும். இல்லையேல் அது எமது எதிர்காலத்துச்
சந்ததியினரை
இல்லாதொழித்து
விடும். இந்நாட்டில் வாழும்
சகலரும் தாம் இலங்கையர்
என்பதை ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக்
கொண்டால்
இன முரண்பாடு
ஒருபோதும்
எழ வாய்ப்பில்லை.
இனங்க ளைப் பிரித்துப்
பார்க்கும்
போதே ஏற்றத்தாழ்வுகள்
உள்ளதாக உணரும் சந்தர்ப்பம்
ஏற் படுகிறது.
அதேபோன்று தமிழ் பேசும்
இனம் தாம்
தமிழினம்
என்று எண்ணிச் செயற்பட வேண் டும். நாம் தமிழர் என்று சிந்தித்துச்
செயற்பட்டால்
பிரதேசவாதம்
ஒருபோதும்
தலைதூக் காது. தமிழன் தான் தமிழன் என்பதை மறந்து செயற்படும்
போதே பிரதேசத்தைக்
குறிப் பிட்டு தன்னை அடையாளப்படுத்த
முனைகின்றான்.
எனவே சிறு சிறு அற்ப
சொற்பத் தேவைகளுக்காக
பிரதேச வாதத்தை இழுத்துச்
செயற்படும்
குறுகிய வட்டத்திலிருந்து
வெளியே வரவேண்டும்.
பிரதேசவாதம் இனவாதம் பேசி நாம்
அழிந்த கடந்தகால வரலாறுகளை
இரைமீட்டிப்
பார்க்க வேண்டும். இனியுமொரு தடவை அந்த அழிவை
நாமே தேடிக்கொள்ளக்
கூடாது. முழு நாட்டுக்கும்
இலங்கையராகவும்,
பிரதேச வேறுபாடுகளைக்
கடந்து தமிழரா கவும் வாழப்
பழகிக் கொள்ள இனியாவது
எம்மை நாம் தயார்படுத்திக்
கொள்வது கால த்தின்
கட்டாயமாகும்.
அதற்கு தமிழ்த்
தலைவர்கள்
முதலில் தமக்கிடையேயும்,
பின்னர் மக்களிடையேயும்
ஒற்றுமையைக்
கட்டியெழுப்ப
வேண்டும்.
(தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |