Contact us at: sooddram@gmail.com

 

இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை இழுபறிகளை முடித்து வைக்க முயற்சி

இந்திய - பாகிஸ்தான் உயர் மட்ட பேச்சுக்கள் சென்ற வாரம் சிறப்பாக ஆரம்பமானது. நெடுங்காலமாக இழுபறிக்குள்ளாகியுள்ள முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் அடுத்த சந்ததியினருக்கும் விட்டு வைக்காமல் ஒட்டுமொத்தமாக முடித்துவைப்பதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கம். எவ்வளவுதான் உள்முரண்டுபாடுகள், கோபதாபங்கள் இருந்தாலும் அயலவர் இருவரும் முரண்பட்டுக் கொண்டிருப்பது இரு நாட்டு பொதுமக்களுக்கும் நல்லதல்ல. உள்ளவற்றை வெளிப்படையாக எடுத்துரைத்து அரசியல் நலன்களுக்கப்பால் சென்று தேசங்களின் நன்மைக்காக இந்திய - பாகிஸ்தான் தலைவர்கள் செயற்பட வேண்டியுள்ளது.

இந்திய உயர்மட்டக் குழுவொன்று பாகிஸ்தான் சென்று சென்றவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.  இந்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சர்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு, உள்துறை அமைச்சர்களுக்கிடையிலான நேரடிப்பேச்சுக்கள் மட்டுமல்லாது அமைச்சுக்களின் செயலாளர்கள் மட்டம் வரையும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வியாபித்தன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நவிட்கமார் ராவல்பிண்டியில் இது குறித்துப் பேச இந்திய உள்துறை அமைச்சர் சிங் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மலிக் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் பேச்சுக்களை நடத்தினர். ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துக் கொண்ட இரு பாதுகாப்பு அமைச்சர்களும் காஷ்மீர் எல்லைப் பிரச்சினை, எல்லைதாண்டிய பயங்கரவாதம், அணு மற்றும் ஆயுத ரீதியான போட்டிகள். சியாச்சின் மலைத்தொடர், இரண்டு நாடுகளுக்கும் எல்லையில் பாயும் நதி நீரிணைகள் பற்றிப் பேசினர்.

இவ்விரண்டு நாடுகளதும் எல்லையோரங்களில் பாயும் நதிகள் யாருக்குச் சொந்தம். எவ்வளவு தொகையான நீர் விவசாயிகளுக்கப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதிலும் எல்லா விடயங்களைப் போலவும் இழுபறியுள்ளது. இறைவனின் இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடர் நதித்தொடர். பச்சைப் பசேல் என்னும் வயல் தொடர்களைக் கொண்ட பிரதேசங்களே இவ்வாரு நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன.

யார் எதை எடுப்பது என்பதில் விவசாயிகளுக்குள்ள போட்டியும், பொறாமையும் இந்திய, பாகிஸ்தானை யுத்தகளத்திற்கும் அழைக்கின்றது.

1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் மூன்று யுத்தங்கள் இந்தப் பெரிய தேசங்களிடையே மூண்டுள்ளன. போட்டிக்குப் போட்டியாக வளரும் தொழில்நுட்பம், விஞ்ஞானம், விவசாயம், கைத்தொழில் துறைகளால் இராணுவ, பொருளாதார மட்டங்களிலும் சமநிலைகளை உரசிப்பார்ப்பது போன்ற உணர்வுடன் இந்நாடுகள் செயற்படுகின்றன.

என்னதான் சொன்னாலும் இந்தியாவோடு பாகிஸ்தானை ஒப்பிட முடியாத நிலையே இப்போது காணப்படுகின்றது. சீனாவின் பின்புறத்தை நம்பியே பாகிஸ்தான் வளர்ந்து உயரப் பார்க்கின்றது. இப் போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகள் அழுத்தங்கள், தலிபான் அல்கைதா அமைப்புக்களின் செயற்பாடுகளால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பொறியில் மாட்டிக்கொண்ட நிலை¨மையிலுள்ளது பாகிஸ்தான். இவ்வளவு சிக்கல்களை வைத்துக்கொண்டு மிகப்பெரிய நாடான இந்தியாவுடன் சமனாக வளரப் பிரயத்தனம் செல்வதும் தேவையேற்பட்டால் சண்டித்தனம் பேசுவதும் பாகிஸ்தானின் பின்புலங்களையும், பலங்களையும் நம்பிய செயற்பாடே.

ஐயாயிரம் கி.மீற்றர் சீறிப்பாயும் ராட்சத ஏவுகணையை அண்மையில் இந்தியா வெள்ளோட்டம் விட்டு வெற்றியும் கண்டுவிட்டது.

சீனாவையும் அச்சுறுத்தும் வகையிலான இந்த ஏவுகணை இந்தியாவின் உச்சக்கட்ட இராணுவ வளர்ச்சியின் எடுத்துக்காட்டு. ஏட்டிக்குப் போட்டியாக சூட்டோடு சூட்டாக பாகிஸ்தானும் இது போன்ற ஏவுகணைகளை வெள்ளோட்டமிட்ட போதும் இந்தியாவின் எல்லையோ இலக்கோ, எட்ட முடியாத தூரத்திலுள்ளதென்பது உறுதியாகியுள்ள பின்னணியிலேயே இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் சென்றவாரம் மீண்டும் ஆரம்பமாகின.

இப்பேச்சுக்கள் 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு அடிக்கடி கூடிப்பேசி நீண்டகால மோதல்களை முடித்து வைப்பதென்றே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இவ்விரு நாடுகளதும் தலைவிதியோ தெரியாது. பேசுவது பிரிவது பின்னர் மீண்டும் கூடுவது கலைவது என்று எட்டு வருடங்கள் கடந்து விட்டன.

2008 இல் மும்பைத் தாக்குதல் நடந்த பின்னர் இந்தப் பேச்சுக்கள் முற்றாகக் கையிழந்தன. பாகிஸ்தானின் தூண்டுதலினால்தான் மும்பை தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்திய இந்தியா தாக்குதலுக்குப் பொறுப்பானோரை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தது.

இந்த இழுபறிகளால் நான்கு வருடங்கள் கடந்து இப்போது பேசத் தொடங்கியுள்ளனர். அப்கானிஸ்தானில் தலிபான்களின் அட்டகாசம் தலைதூக்காமல் போதியளவு உதவிகளை இந்தியா செய்ய வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுள்ளது. நேட்டோ படைகள் 2014 இல் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை இந்தியா பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதே அமெரிக்காவின் விருப்பமாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் இந்திய தலையீடுகள் பாகிஸ்தானின் செல்வாக்கை ஓரங்கட்டி விடும். அங்கு இடம்பெறும் தலிபான்களின் செயற்பாடுகள் சிலதை பாகிஸ்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன் இஸ்லாமாபாத்தின் மறைமுக காய் நகர்த்தல்கள் காபூலை சிக்கலுக்குள்ளாக்கின்றன. எனவே, ஆப்கானிஸ்தான் எப்போதும் தன் பிடியிலுள்ளதையே பாகிஸ்தான் விரும்பும். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா ஆப்கான் விடயங்களில் தலையிடக் கூடாதென்பதற்காகவே முன்னர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

பாகிஸ்தானின் கைப்பிள்ளைகளே இத்தாக்குதலைச் செய்திருப்பர் என்பது இந்தியாவின் சந்தேகம். இவை போன்ற இன்னோரன்ன விடயங்களும் இந்திய, பாகிஸ்தான் அமைச்சர்கள் மட்டத்தில் பேசப்பட்டன. எல்லா விடயங்களையும் இந்தியா நிதானமாகக் கையாள்வதால் பல முரண்டுபாடுகள் யுத்தமாக வெடிப்பது தவிர்க்கப்பட்டது. மும்பைத் தாக்குதலின் போது இந்திய, பாகிஸ்தான் முரண்பாடுகள் உச்சமட்டத்தை எட்டியதால் போர் வெடிப்பதையே பலரும் எதிர்பார்த்து அஞ்சிக் கொண்டடிருந்தனர். கடைசியாக இரு நாடுகளும் விட்டுக்கொடுத்து விடயங்களைக் கையாண்டன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com