|
||||
|
ஜே.வி.பிக்கும் எல்.ரி.ரி.ஈ
இற்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருக்கின்றதா?
அரசியலில் செல்லாக்காசாகி
மக்களால்
அரசியல் குப்பைத் தொட் டியில்
தூக்கியெறியப்பட்டிருக்கும்
ஜே.வி.பி. மீண்டும் தன்னு டைய தேசத்துரோக
செயற்பாடுகளை
மேற்கொள்வதற்காக
பழைய குருடி
கதவைத் திறடி என்ற
நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட
ஓர் அரசாங்கத்தை
துப் பாக்கி
முனையில்
அடிபணியவைத்து,
அரசாட்சியை
கைப்பற்ற
வேண் டுமென்ற
வன்முறை கலாசாரத்தை
இலங்கையில்
முதல் தடவையாக 1971ம்
ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயுதக்
கிளர்ச்சியின்
மூலம் ஜே.வி.பி. அறிமுகம் செய்து
வைத்தது.
இந்தக் காலகட்டத்தில்
வடபகுதியிலும்
கிழக்கு மாகாணத்திலும்
உள்ள தமிழ்
இளைஞர்கள்
ஆயுதப் போராட்டங்களைப்
பற்றி நினைத்துகூட
பார்க் காமல் தங்கள்
உயர் கல்வியிலேயே
முழுக்கவனத்தையும்
ஈர்த்து, நாட் டுக்கு
நல்லது செய்யக்கூடிய
படித்த இளைஞர்களாக
தங்களை உரு வாக்கிக்
கொள்வதில்
ஆர்வத்துடன்
இருந்தார்கள்.
இந்த காலகட்டத்தில்
ஜே.வி.பி. என்ற
இடதுசாரிப்
போக்கை ஆதரிக்கும்
சிங்கள இளைஞர்களை
பலிக்கடாக்களாக
மாற்றும்
இந்த இயக்கம்
நாட் டின்
ஜனநாயக பாரம்பரியத்தையும்,
வெஸ்ட் மினிஸ்டர்
ஆட்சி முறை யையும்
பூண்டோடு
அழித்துவிடும்
எண்ணத்துடன்
1971ம் ஆண்டின்
அரசாங்கத்திற்கு
எதிரான கிளர்ச்சியை
ஆரம்பித்தது.
ஜே.வி.பியின் தலைவர்கள்
இந்தப் போராட்டத்திற்கான
எண்ணக்கருவை
தயா ரித்து
அதனை நிறைவேற்றும்
பொறுப்பை
அப்பாவி சிங்கள இளைஞர் களிடம் கொடுத்தார்கள். 5 பாடங்கள்
என்ற இரகசிய
வகுப்புகளை
இவ் வியக்கத்தின்
தலைவர்கள்
சிங்கள இளைஞர்களின்
மனதில் புகட்டி, இந்த போராட்டத்தில்
ஈடுபட்டு
நாட்டை ஏகாதிபத்தியவாதிகளிடம்
இரு ந்து
விடுவியுங்கள்
என்று தேசப்பற்றுள்ள
வர்களைப்
போன்று நடித்து ஜே.வி.பி. தலைவர்களை சிங்கள
இளைஞர்களை
நட்டாற்றில்
தள்ளி னார்கள்.
இந்த ஜே.வி.பி. கிளர்ச்சியை இந்திய
விமானப் படையின் ஹெலிகொப்டர்
களின் உதவியுடன்
சில தினங்களில்
பிரதம மந்திரி திருமதி ஸ்ரீமாவோ பண்டாராநாயக்கவின்
அரசாங்கம்
அடக்கியது.
இதனால் சுமார்
80 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட
சிங்கள இளைஞர்கள்
அநியாயமாக
தங்கள் உயிர்களை பலிகொடுத்தார்கள்.
ஏப்ரல் கிளர்ச்சியை
அடக்கியவுடன்
அரசாங்கம்
இதில் சம்பந்தப்பட்ட
இளை ஞர்கள்
அனைவரும்
தங்களிடம்
வந்து, சரணடைந்தால்
அவர்களுக்கு
புனர்வாழ்வளித்த
பின்னர் விடுவிப்போம்
என்று அளித்த வாக்குறுதி,
சரியான முறையில் நிறைவேற்றப்பட்டது.
இதனால் ஜே.வி.பியின்
முது கெலும்பு
முறிக்கப்பட்டதென்று
அரசாங்கமும்
அரசியல் கட்சிகளும்
நம்பிக்கை
கொண்டிருந்த
போதிலும்,
தலைமறைவாகி
உயிர்தப்பிய
ஜே.வி.பி. தலைவர்கள் மீண்டும்
அதற்கு உயிரூட்டினார்கள்.
இவ்விதம் உயிர்பெற்று
வந்த ஜே.வி.பி. 1982ம்
ஆண்டு ஜனாதிபதித்
தேர் தலில்
போட்டியிட்டது.
இதில் எல்லாமாக
6 வேட்பாளர்கள்
போட்டி யிட்டார்கள்.
ஜனாதிபதி தேர்தலில்
ஐக்கிய தேசியக்கட்சியின்
தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன
34 லட்சத்து
50 ஆயிரத்து
811 வாக்குகள்
பெற்று வெற்றியீட்டினார்.
இவருக்கு அன்று
52.91சதவீத வாக்குகள்
கிடைத்தன.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்
வேட்பாளர்
ஹெக்டர் கொப்பேகடுவ
25லட் சத்து
48 ஆயிரத்து
438 வாக்குகளை
பெற்று இரண்டாம் இடத்தையும்,
மூன்றாம்
இடத்தைப்பெற்ற
ரோஹன விஜேவீர
2 லட்சத்து
73 ஆயி ரத்து
428 வாக்குகளும்,
அகில இலங்கை
தமிழ் காங்கிரஸின்
தலைவர் குமார் பொன்னம்பலம்
ஒரு லட்சத்து
73ஆயிரத்து 934 வாக்குகளை
யும், லங்கா
சமசமாஜக்
கட்சியின்
தலைவர் கொல்வின் ஆர் டி.
சில்வா 58 ஆயிரத்து
531 வாக்குகளையும்,
நவசமசமாஜ
கட்சியின்
தலைவர் வாசுதேவ நாணயக்கார
17 ஆயிரத்து
5 வாக்குகளையும்
பெற்றனர்.
இவ்விதம் அரசியலில்
அதிகாரத்தைப்
பெறலாம் என்று முயற்சித்த
ஜே.வி.பி. அதுவும் சரிபோகாத
காரணத்தினால்
மீண்டும்
1988ல் வன் முறைகளை கட்டவிழ்த்துவிட்டு
இன்னுமொரு
தடைவை அப்பாவி ஆயிரக்கணக்கான
சிங்கள இளைஞர்களின்
மரணத்திற்கு
வழிவகுத்தது.
அதையடுத்து
மீண்டும்
தேர்தலில்
பங்குகொண்டும்
பாராளுமன்றத்திற்கு
சென்றும்
தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற
முடியாததனால்
இப்போது அரசாங்கத்துக்கு
உள்ளூரிலும்
வெளிநாட்டிலும்
அவப்பெயரை
ஏற்ப டுத்திக்
கொடுப்பதற்கான
போலிப் பிரசாரங்களையும்
ஆர்ப்பாட்டங்க
ளையும் நடத்துவதற்கு
எத்தனித்துள்ளது.
கட்டுவனவில் இடம்பெற்ற
இரட்டைக்கொலை
சம்பவத்திற்கும்
அரசாங்கத்
திற்கும்
தொடர்பு இருக்கிறதென்று
இன்று (22) லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை
நடத்துவதற்கு
ஜே.வி.பி. முடிவெடுத்துள்ளது. நாட்டில் நடைபெறும்
வன்முறைகளுக்கும்
படுகொலைகளுக்கும்
அரசாங்கத்தின்
மீது குற்றம்
சுமத்துவது
தவறு. அரசாங்கம் இத்தகைய
வன்முறைகள்
பற்றி நியாயபூர்வமான
விசாரணைகளை
நடத்தி குற்றமிழைத்தவர்களை
தண்டிக்கும்
தார்மீக பொறுப்பைக்
கொண்டுள்ளது.
அதனடிப்படையில் பொலிஸார் இப்போது ஒரு சந்தேக
நபரை கைது
செய்து தொடர்ந்து
விசாரணைகளை
நடத்திக்
கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை
அரசியலாக்கி
தங்கள் கட்சியின்
செல்வாக்கை
மீண்டும்
பெருக்குவத
ற்கு எடுத்துவரும்
முயற்சிகள்
ஒருபோதும்
பயனளிக்கப்
போவதில்லை.
ஜே.வி.பி. வெளிநாடுகளில்
உள்ள எல்.ரி.ரி.ஈயை
ஆதரிக்கும்
புலம் பெயர்ந்த சில தீய
சக்திகளுடன்
ஒன்றிணைந்து
இவ்விதம்
அரச எதிர்
ப்பு ஆர்ப்பாட்டங்களை
செய்து கொண்டிருப்பதாக
புலனாய்வு
பிரிவி னருக்கு ஆதாரபூர்வமான
தகவல்கள்
கிடைத்து
வருவதாக தெரிவிக்கப்
படுகிறது.
நாட்டுப்பற்றுள்ளவர்களைப் போன்று வேடமணிந்து மக்களை ஏமாற்றும் ஜே.வி.பி. இனிமேலாவது உண்மையை உணர்ந்து வெளிநாட்டவர்கள் எங்கள் நாட்டில் தலையிட்டு எமது இறைமைக்கு ஏற்படுத்தக்கூடிய தீமைகளுக்கு தூபமிடுவதைப் போன்று செயற்படலாகாது. அவ்விதம் தொடர்ந்தும் ஜே.வி.பி. செயற்பட்டால் அவர்களுக்கு மக்கள் நிச்சயம் கடும் தண்டனையை கொடுப்பார்கள். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |