|
||||
|
இப்படிச் சொல்கின்றது தினகரன் ஆசிரியர் தலையங்கம்
தமிழ் மக்களது
காணிகளில்
இராணுவம்
அத்துமீறி
முகாமா?
வடக்கு, கிழக்கில்
தமிழ் மக்களது காணிகளில்
இராணுவத்தினர்
அத்துமீறிக்
குடியேறி
முகாம்களை
ஏற்கனவே அமைத்துள்ள
தாகவும், தந்போதும்
மினி இராணுவ
முகாம்களை
அமைத்து வருவதாகவும்
பொதுவானதொரு
குற்றச்சாட்டு
பரவலாக எழுந்த வண் ணமுள்ளது.
நெருப்பில்லாது
புகைவருமா
என்பது போல இந்தக்
குற்றச் சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
சில பாராளுமன்ற
உறுப்பி னர்கள் தமது தனிப்பட்ட
பிராசாரத்திற்கு
பயன்படுத்தி
வருகின்றனர்.
இதனால் பொய்யான
இந்தக் குற்றச்சாட்டிற்கு
இப்போது கை, கால்,
மூக்கு வைத்து பரவலாகப் பேசப்பட்டு
வருகிறது.
தமிழ்க் கூட்டமைப்
பின் கைப்பொம்மைகளாக
இருந்த பாதுகாப்புப்
படையினருக்கு
எதிராக வும் பிரசாரம்
செய்துவரும்
யாழ். பத்திரிகைகள் சில இவ்விடயத்தை
மக்களிடையே
படையினர்
தொடர்பாக
நஞ்சை விதைப்பது
போல செய்திகளை
வெளியிட்டுவருகிறது.
மக்களது காணிகளை அபகரித்துத்தான்
முகாம்களை
அமைக்க வேண் டிய
நிலையில்
படையினர்
இல்லை எனவும், குடாநாட்டில்
அரசாங்க காணிகள் தாராளமாகவே
உள்ளன எனவும் யாழ். மாவட்ட கட்டளைத்
தளபதி மேஜர் ஜெனரல்
மஹிந்த ஹத்துருசிங்க
கடந்தவாரம்
தெளிவா கக் கூறியிருந்தார்.
இதற்குப் பின்னரும்
தமிழ்க் கூட்டமைப்பினர்
இவ் விடயம்
தொடர்பாக
பொய்ப்பிரசாரம்
செய்ய வேண்டுமா எனும் கேள்வி
பலரிடையே
எழுந்துள்ளது.
யுத்தம் நடைபெற்றபோது
படையினர்
சில சந்தர்ப்பங்களில்
புலிகளை எதிர்கொள்ள
நேரிட்டபோது
எல்லைப்புறங்களில்
தனியாரது
காணி களை
உள்ளடக்கியதாகவும்
முகாம்களை
அமைத்து போரிட்டது
உண் மையாக
இருக்கலாம்.
அத்துடன் உயர் பாதுகாப்பு
வலயங்களாக
சில பிரதான
முகாம்களின்
எல்லைகள்
விஸ்தரிக்கப்பட்டபோது
அவ்வேளை தனியாரது காணிகள் பலவும் அவ்வலயத்தினுள்
அகப்பட்டமையும்
உண்மையே.
அவை பழைய கதைகள். யுத்தகால சம்பவங்கள்.
இன்று யுத்தம்
முடிவுற்ற
மூன்று வருடங்கள்
கடந்துவிட்ட
நிலையில்
அவ்வாறு படையினரால்
யுத்தத் தேவையின் நிமித்தம்
உள்வாங்கப்ப
ட்ட தனியாரது
காணிகள் பலவும் மீள ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
அது வும் வெறுமனே மீள வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு காணிகளுக்கும்
அதன் பரப்பளவைக்
கவனத்திற்கொண்டும்,
காலப்பகுதியை
கணக்கீடு
செய்தும்
உரிய நஷ்ட
ஈட்டுடன்
மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில்
படையினர்
மீதும், அரசாங்கத்தின்
மீதும் வீணான பழிசுமத்து
வது அழகல்ல.
உண்மையில் யாழ். கட்டளைத் தளபதி தெரிவித்தது
போன்று இன்று யுத்தம்
இல்லை, புலிகள் மறைந்திருந்து
தாக்குதல்
நடத்துவார்கள்
என்ற பயம்
கிடையாது.
இந்நிலையில் படையினர்
தமக்குத்
தேவையான முகா ம்களை
தாராளமாகவுள்ள
அரச காணிகளில்
தமதிஷ்டப்படி
அமைத்துக்
கொள்ள முடியும்.
இந்தச் சமாதான
அமைதியான
சூழலில் மக்களது காணிகளில்தான்
குடியேற வேண்டும் எனும் தேவை
படையினருக்குக்
கிடையாது.
முன்னர் புலிகள்
தனியாரது
வீடுகளுக்குள்ளும்
பொதுமக் கள் கூடும்
இடங்களிலிருந்தும்
கூட படையினர்
மீது தாக்குதல்களை
நடத்தியிருக்கிறார்கள்.
அதனால் யுத்த காலத்தில்
குடிமனைகள்
நிறைந்த பிரதேசங்களிலும்
படையினர்
சிறுசிறு
முகாம்களை
அமைக்க நேரிட் டது.
அதேபோன்று புலிகள்
கனரக ஆயுதங்கள்,
ஆட்லறி ஷெல்கள், விமான எதிர்ப்பு
ஆயுதங்கள்
என்பவற்றை
பாவித்த காரணத்தினால்
பலாலி, காரை நகர்,
ஆனையிறவு
போன்ற படையினரின்
பிரதான முகா ம்களைச்
சூழவும் தனியாரது காணிகளை உள்ளடக்கியதாக
உயர்பாதுகா
ப்பு வலயங்களை
அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குப்
படைத்தரப்பு
தள்ளப்பட்டது.
இன்று அவ்வாறு சுவீகரிக்கப்பட்ட
காணிகளுள்
தொண் ணூறு
சதவீதமானவை
மீளவும் வழங்கப்பட்டுள்ள
நிலையில்
எவ்வித மான ஆதாரமுமில்லாது
குற்றச்சாட்டுக்களை
முன்வைப்பது
வேண்டுமெ
ன்றே சோடிக்கப்பட்டவை
என்பது தெளிவாகப்
புலனாகிறது.
தனியாரது காணிகள் அபகரிக்கப்படுவதாக
ஒரு பொய்யான
பிரசார த்தை தற்போது
தமிழ்க்கூட்டமைப்பு
மேற்கொண்டு
வருகிறது. இதற்காக
மக்களை திரட்டி அரசாங்கத்திற்கும்,
படையினருக்கும்
எதிராகச்
சில போராட்டங்களை
நடத்தவும்
முயற்சிகளை
மேற்கொண்டுவரும்
தமிழ்க் கூட்டமைப்பு
இதன் மூலம்
மக்களைப்
படையினருடன்
மோதவிட்டு
படையினர்
மக்களைத்
துன்புறுத்துவதாக
வெளியுலகிற்குக்
காட்ட முய ன்று
வருகிறது.
வடக்கில் இவ்வாறான
சில முயற்சிகள்
தோல்வியில்
முடி வுற்றமையை
கடந்தவாரம்
காணமுடிந்தது.
முன்னர் காணாமற்போனோரின்
உறவினர்களைத்
தூண்டிவிட்டு
அவர் கள்
மூலமாக அமைதியான பிரதேசத்தில்
கலகத்தை ஏற்படுத்தி
வடக்கு கிழக்கில்
அமைதியில்லை,
படையினர்
மக்களை அடக்கியாளுகின்றனர்
என்று காட்ட முயன்று
தோல்வியைத்
தழுவிய தமிழ்க் கூட்டமைப்பு
இப்போது காணிப்பிரச்சினையைக்
கையில் எடுத்துள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பின்
அரசியல் இருப்பிற்கு
இது ஆரோக்கியமாக
இருக்கலாம். ஆனால்
தமிழ் மக்கள் அமைதியாக வாழும் பிரதேசத்தில்
மீண்டும்
அமைதியின்மை
தோன்றவே இது வழிவகுக்கும்.
இதனையே தமிழ்க்
கூட்டமைப்பும்
எதிர்பார்க்கிறது.
தே¨யான பல சந்தர்ப்பங்களில்
ஒன்றுமே தெரியாதவர்கள்
போலவும், தமிழருக்கும்
தமக்கும்
தொடர்பே இல்லாதவர்கள்
போலவும் இருந்துவிட்டு
அமைதிநிலை
தோன்றி தமிழ் மக்கள்
ஏதோ சிறிதாகவேனும்
சுதந்திரக்
காற்றைச்
சுவாசித்து
வரும் இவ்வேளையில்
தமது இருப்புக்களைப்
பலப்படுத்துவதற்காக
மக்க ளைப்
பணயம் வைத்துச் செயற்பட முற்படுவது
ஆரோக்கியமானதாக
ஒருபோதும்
அமையாது.
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களால்
எதனையுமே
சாதிக்க முடியாது என்பதை தமிழர் உரிமைக்கான
ஆயுதப் போராட்ட வரலாறு நன்கு உணர்த்தியுள்ளது. இதனை நன்கு தெரிந்திருந்தும்
தமிழ்க் கூட்டமைப்பு
இனியும் தமிழ் மக்களை
தவறாக வழிநடத்தக்கூடாது.
தவறுகளைச் சுட் டிக்காட்டி,
அநியாயங்களைத்
தட்டிக்கேட்டு
பேச்சுவார்த்தை
மூலமாக தமிழர் பிரச்சினைகளுக்குத்
தீர்வுகாண
முயல வேண்டும்.
சர்வதேசம் எனும் பலம் எத்தனை
காலத்திற்கு
கூடவே நிற்கும்.
போர் முடிந்து
மூன்று வருடங்களாக
சர்வதேசத்தின்
பின்னால்
நின்று இதுவரை சாதித் ததுதான் என்ன என்றால்
எதுவுமே இல்லை. இதனையே அரசாங்கத்து
டன் உண்மையான
விசுவாசத்துடன்
நின்று செயற்பட்டிருந்தால்
ஏதோ வொரு
தீர்வினையாவது
கண்டிருக்கலாம்.
முப்பது வருடங்களுக்கு
மேலாக புலிகளின்
ஆயுதங்களுடன்
மல்லுக் கட்டிய தமிழ்ச் சமூகம் அடுத்த முப்பது வருடங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
அறிக்கைகளுடனும்,
ஆளில்லா ஆர்ப்பாட்டங்களுட
னும் மல்லுக்கட்ட
வேண்டியதொரு
மற்றுமொரு
துர்ப்பாக்கிய
நிலைக் குத் தள்ளப்பட
வேண்டுமா?
சிந்திக்காமல் செயற்படுவது
தமிழரின்
எதிர் காலத்தைச்
சூனியமாக்கிவிடும்.
தீர்வுக்காண முயற்சிகளை
கைவிட்டு
ஆர்ப்பாட்ட
அரசியலை தமிழ்க் கூட்டமைப்பு
தொடருமாயின்
வடக்கு கிழக்கில்
இராணுவத்தின்
இருப் பைக் குறைக்கும்
முயற்சிக்கும். அது பாதகமாக அமைந்துவிடும்.
அப்ப குதியில்
அமைதிநிலை
தோன்றி வருவதானாலேயே
படையினரின்
எண் ணிக்கையை
குறைத்து
பல சிறிய
முகாம்களும்
மூடப்பட்டு
வருகின் றன. இதனை யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவே
உறு தியாகத்
தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின்
மக்களைத்
தூண்டி விடும் செயற் பாடுகள்
வடக்கில்
படையினரின்
எண்ணிக்கையை
குறைப்பதற்குப்
பதி லாக
அதிகரிக்கச்
செய்யும்
செயலாகவே
உள்ளது. படையினரால்
விடு விக்கப்பட்டுவரும்
தனியாரது
காணிகளை மீண்டும் முடக்கி மக்கள் பாதுகாப்பு,
நாட்டின்
இறைமைக்காக
திரும்பவும்
மினி முகாம்களை
மக் கள்
குடிமனை பிரதேசத்தில்
அமைக்கவே
வழிவகுக்கும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |