Contact us at: sooddram@gmail.com

 

நகரங்களுக்கும் ஆன்மா உண்டு

அண்மையில் அபுதாபி நகருக்குச் சென்றிருந்தேன். கட்டாரை விட மிகவும் வேறுபட்டு நிற்கிற நகரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. முக்கியமாக அங்கு உருவாக்கி வைத்திருக்கிற பசுமைப் பகுதிகள். சாலை நெடுகிலும் மரங்கள், பசும் புல்வெளிகள் என்று அமர்க்களமாக இருக்கிறது. பல அழகான விடயங்கள் இருக்கின்றன. வீடுகள் மிட்டாய்க் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சதுர சதுரமான மிட்டாய்களைப் போலில்லாமல் நேர்த்தியான அமைப்பைக் கொண்டிருக்கின்றன. சாலைகளும் அதிக நெருக்கடி இல்லாமல் போக்குவரத்து சுணக்கங்கள் இல்லாமல் இருக்கின்றன. இந்த நகரத்தைப் பார்த்தபின் தான் டோஹா இன்னமும் வளருகின்ற கட்டத்திலிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அங்குள்ள சாலைகளில் பிக்-அப் டிரக்குகள் இல்லை என்பது ஆச்சரியமான விடயம். கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிந்து விட்ட நகரம் என்பதை அது உணர்த்தியது. டோஹா சாலைகளில் எரிச்சலை மூட்டுகின்ற ஒரு வாகனம் இந்த பிக்-அப் டிரக்குகள்.

அபுதாபி, பஹ்ரைன் போன்ற நகரங்களிலிருந்து டோஹாவிற்கு அண்மையில் குடியேறிய பல நபர்களைச் சந்தித்திருக்கிறேன். டோஹாவை இது என்ன ஊர் என்று குறைபட்டுக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நேரில் பார்த்தபின் தான் அவர்களுடைய ஆதங்கம் புரிகிறது. இங்கு இயல்பான நகர வாழ்க்கை வர இன்னும் ஐந்தாண்டுகளாவது ஆகும் என்று கருதுகிறார்கள். 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மையமாகக் கொண்டு கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டிலிருந்துதான் தொடங்கவிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்தக் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டால் இன்னும் பிரச்சினைகள் கூடத்தான் செய்யும். சாலைக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி விட்டது.

நகர்ப்புற வளர்ச்சி என்பது வெறும் சாலை அமைப்புகளையோ கட்டடங்களையோ வைத்துக் கணிப்பது அல்ல. நகரங்களுக்கென்றே ஓர் ஆன்மா உண்டு. இது அங்குள்ள மக்களை மட்டும் பொறுத்ததல்ல. இன்னும் பல பரிமாணங்கள், புரிந்துகொள்ள முடியாத பரிமாணங்கள் பட்டணங்களுக்குண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் பட்டணங்களை போய்ப் பார்த்தால் இது விளங்கும்.

ஒரு நகரத்தின் வரலாறு மற்றும் அங்குள்ள மக்களின் கலாசாரம், சமய வாழ்க்கை ஆகியவை அந்நகரத்தின் ஆன்மாவை நிர்ணயிக்கின்றன. நகரங்கள் உலகமயமாக்குதலின் அடையாளச் சின்னங்கள் என்று கருதப்படுகின்றன. முகம், பெயர் தெரியாத வகையில் மக்கள் கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து விடலாம் என்பது ஒரு புறமிருக்க அந்த நகரத்தின் ஆன்மா ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தத்தான் செய்கிறது என்பது எல்லாருக்கும் புரிந்து கொள்ள முடியாத இரகசியம். விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது உலகமயமாக்கப்பட்ட, உலகளாவிய ஒரு கலாசாரமே தென்படும். இது செயற்கையானது. ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு ஸ்டார்பக்சில் கோப்பி குடிக்கும் கலாசாரம் இது. பெரும் அங்காடிகளும் இத்தகைய செயற்கைத்தன்மையையே உருவாக்க முயலுகின்றன. ஆனால், இந்தச் செயற்கைத் தன்மையையும் தாண்டி அந்த நகரத்தின் ஆன்மாவை நாம் உணர முடியும். அதன் மணம், நிறம், குணம் அனைத்தும் வெளிப்பட்டு விடும்.

இது எங்கள் கலாசாரம் என்று பறைசாற்றக் கூடிய ஒருசில இடங்களைக் கட்டி வருகின்றனர். கட்டாரா கிராமம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பல நாட்டு மக்கள் வாழும் இடம். பல்கலாசாரம் நிலவும் இடம். இங்கு எங்கள் கலாசாரம் புதையுண்டு போய் விடக் கூடாது என்று கவலைப்பட்டு இங்குள்ள ஆட்சியாளர்கள் எடுக்கும் முயற்சிகள் புரியத்தான் செய்கின்றன. இவர்கள் அதிகமாகக் கவலைப்படுவதும் தேவையற்றதுதான். இப்படிப்பட்ட முயற்சிகள் எதுவுமில்லாமலேயே கட்டாரின் தனித்தன்மையை உணர முடியும்.

புதிதாக டோஹாவிற்கு வரும் ஒருவர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து சாலையில் பயணப்படத் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே டோஹாவின் ஆன்மா அவரிடத்தில் அறிமுகமாகி விடும். இது இங்கு மட்டுமல்ல எல்ல நகரங்களுக்கும் பொருந்தும்.

அரபு நாடுகள் பலவற்றில் ஆட்சி மாற்றத்துக்கான போராட்டங்கள் நடைபெற்று வருவது பழக்கப்பட்ட செய்தியாகப் போய் விட்டது. ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்திய நாடுகளில் இன்னும் அமைதி திரும்பவில்லை என்பது கவலைப்பட வேண்டிய விடயம்.

(ஜெபராஜ் தேவசகாயம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com