Contact us at: sooddram@gmail.com

 

''நமக்கு தி.மு.க-வும் வேண்டாம், அ.தி.மு.க-வும் வேண்டாம்!''

வழக்கமான வரவேற்புரை முடிந்ததும் பேச ஆரம்பித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சில் காரம் ரொம்பவே அதிகம். 'காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்தார்கள் இங்கே இருக்கும் சிலர். கேட்டால் நாங்கள் சீமான்கள் என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், சாலைகள், புதிய ரயில் பாதை, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்தது காங்கிரஸ்தான். 'தனி ஈழம் வேண்டும்என்று இவர்கள்தான் குரல் கொடுக்கிறார்கள். இலங்கையில் எந்தத் தமிழனாவது எங்களுக்குத் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கிறானா? அப்படி யாராவது கேட்டால், அவர்களில் 20 பேர் பெயரை மட்டும் விலாசத்துடன் கொடுங்கள். ஏற்றுக்கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தோடு புதிதாக ஒருவரும் சேர்ந்திருக்கிறார். அவருக்கு திடீர் ஞானோதயம் வந்திருக்கிறது. எட்டரை ஆண்டுகளில் டெல்லியில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, ஜெயிலுக்குப் போகாமல்தப்பித்துவிட்டு, திடீரென்று 'இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் சரியாகச் செயல்படவில்லை. அதனால் நாங்கள் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்என்று அறிவிக்கிறார். இதில் சூட்சுமம் என்னவென்றால், 'தந்தைக்கு முதல்வர் பதவி போய்விட்டது. எனக்கு துணை முதல்வர் பதவி போய்விட்டது. அண்ணனுக்கு மட்டும் என்ன டெல்லியில் பதவி? அவரையும் அதை அனுபவிக்கவிடக் கூடாதுஎன்ற ஒருவரது எண்ணம் காரணமாக தந்தையை நிர்பந்திக்கிறார். அதனால் விலகிவிட்டார்.

'பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி. எனவே, அவருக்கு நான் ஆதரவு தர முடியாதுஎன்று நீங்களே ஒரு முறை சொல்லியிருக்கிறீர்கள். பிறகு ஏன் இந்த நாடகம்? தயவு செய்து... விலகியது விலகியதாகவே இருக்கட்டும். மீண்டும் வந்துவிடாதீர்கள். இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போல, நமக்கு தி.மு.க-வும் வேண்டாம். அ.தி.மு.க-வும் வேண்டாம். காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி அமைப்போம்.

அமைதிப் படையை ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கமே, தனி ஈழம் அமைக்கத்தான். ஆனால், பிரபாகரன் கேட்டது என்ன? 'தனி ஈழத்திலே ஜனநாயகம் கூடாது, தேர்தல் கூடாது. என்னை சர்வாதிகாரியாக அமர்த்த வேண்டும்என்று சொன்னார். இந்தியா அதை மறுத்தது. உடனே, இலங்கை ராணுவத்தோடு சேர்ந்துகொண்டு நம் ராணுவ வீரர்களைக் கொன்றார் பிரபாகரன். ராஜீவ் காந்தியின் திட்டத்தை நாசமாக்கியவர், பாழாக்கியவர் பிரபாகரன்.

பிரபாகரனின் பையன் பாலச்சந்திரனின் போட்டோவைப் போட்டு 12 வயது பாலகனைக் கொன்றார்கள்... கொன்றார்கள்... என்று எல்லாக் கட்சிக்காரர்களும் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அது கவலை தரும் செய்திதான். இதே பிரபாகரன் 11 வயது இளம் சிறுவர்களையும், சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி இழுத்துவந்து போர்க்களத்திலே நிறுத்தினாரே? அதைவிடவா இது கொடியது?

பிரபாகரனைக் கைதுசெய்து அவருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்தானே இந்த ஜெயலலிதா. இப்போது அதே பிரபாகரன், உங்கள் கண்ணுக்கு மாவீரன்போல் தோன்றுகிறாரா? நீங்கள் குழம்பி இருக்கிறீர்களா? அல்லது மக்களைக் குழப்புகிறீர்களா? காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக, இதை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். ஆனால், மக்கள் உங்கள் எல்லோரையும் தனிமைப்படுத்திவிடுவார்கள்.

முதல்வரிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்வது இல்லை. ஆனால், பிரதமருக்குக் கடிதம் மட்டுமே எழுதுகிறீர்கள். மேல மாசி வீதியில் குப்பை இருக்கிறது என்றால், அதற்கும்கூட பிரதமருக்குக்தான் கடிதம் எழுதுகிறார். இதற்காகவா உங்களை ஆட்சியில் அமரவைத்தோம்?

இன்னமும் நான் பேசலாம். இரவு 10 மணி ஆகவில்லை. ஆனால் நாளைக்கே 10 மணிக்குப் பிறகு பேசியதாக, என் மீது வழக்குப் போடுவார்கள். எனவே, என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்'' என்று முடித்தார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள்.

- கே.கே.மகேஷ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com