Contact us at: sooddram@gmail.com

 

'ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' - ஹரிஹரன்.

மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும்.  அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல்.

 இந்த நிகழ்வால் பாகிஸ்தான், இலங்கை உடனான வெளியுறக் கொள்கைகள் அடியோடு மாறிவிடும் என்றோ அற்புதம் நிகழ்ந்துவிடும் என்றோ எதிர்பார்ப்பதிலும், இது மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை என்று பாராட்டுவதிலும், எந்த அர்த்தமும் இல்லை. அப்படி எதுவும் நடந்துவிடவும் முடியாது. வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான முடிவுகள், இரு நாட்டுப் பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், அதற்கான ஆலோசனைகள், திட்டங்கள் எல்லாம் முற்றிலும் வேறு முகம் கொண்டவை.

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் ராஜபக்ஷேவின் வருகையை இவ்வளவு கடுமையாக எதிர்த்தது, இங்குள்ள தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு விரோதமானது. இவர்கள் அனைவரும் தமிழர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்று உண்மையாக நினைத்திருந்தால், நிச்சயமாக அவ்வளவு கடுமையாக ராஜபக்ஷே வருகையை எதிர்த்திருக்க மாட்டார்கள்.  

தமிழக முதலமைச்சர் மற்றும் ஏனைய தமிழக அரசியல் கட்சிகளின் இந்த எதிர்ப்பு, அங்கு முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு இன்னும் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். முள்வேலி முகாம்களுக்குள் இருக்கும் தமிழர்களை அங்கிருந்து வெளிக்கொண்டுவர வேண்டுமானால், அந்த நாட்டில் தனி மெஜாரிட்டியுடன் இருக்கும் ராஜபக்ஷேவோடு நீங்கள் சுமுக உறவை வளர்த்தால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட உறவை ஏற்படுத்த, இதுபோன்ற சமயங்களில் இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எதிர்ப்பதும் கோஷம் போடுவதும் கொடும்பாவி எரிப்பதும் கட்சிக்கு ஆள் சேர்க்கத்தான் பயன்படுமே தவிர, இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு உதவாது. இன்றும் இலங்கையில் கொழும்பு உள்பட முக்கியமான நகரங்களில் வாணிபம் செய்துகொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள். அது இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டச் சூழலில் இவர்கள் தெரிவிக்கும்  எதிர்ப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, யாரும் சிந்திப்பது இல்லை.

இன்றுள்ள உலக அரசியல் சூழலில் இந்திரா காந்தி பங்களாதேஷில் செய்த போர் அரசியலை செய்ய முடியாது. நம்மால் மட்டுமல்ல... அமெரிக்காவால்கூட அப்படிச் செய்ய முடியாது. அதனால்தான் சிரியா, லிபியா, உக்ரைன், வட கொரியா விவகாரத்தில் அமெரிக்கா அடக்கி வாசிக்கிறது. அதுபோல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தியது போன்ற போராளி இயக்கத்தை இனிமேல் எந்த நாட்டிலும் யாரும் நடத்த முடியாது. இதை எல்லாம் நன்றாக யோசித்துப் புரிந்துகொண்டு, தங்களின் அடிப்படையான அரசியல் நிலைப்பாட்டை தமிழக அரசியல் கட்சிகள் மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னை மட்டுமே தமிழகத்தின் பிரச்னை அல்ல. இங்குள்ள பல பிரச்னைகளில் அதுவும் ஒரு பிரச்னை.  அதைப் புரிந்துகொள்ளாமல், ராஜபக்ஷேவின் வருகையைக் காரணம் காட்டி, வலுவான பிரதமராக உருவெடுத்து இருக்கும் மோடியின் அழைப்பை நிராகரித்ததன் மூலம், தமிழகத்தின் நலனையும் இவர்கள் நிராகரித்துள்ளனர். ஏனென்றால், தமிழகத்தின் தயவில் மத்திய அமைச்சரவை நடந்துகொண்டிருந்தபோது, இவர்களில் 12 பேர் அங்கு அமைச்சர்களாக இருந்தபோதே, தமிழகத்துக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. இப்போது தொடக்கத்திலேயே மத்திய அரசை அவமதித்துவிட்டு, எந்த முகத்தோடு தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள், நிதியுதவி ஆகியவற்றைப் போய் கேட்பார்கள்? மத்திய அரசோடு சுமுக உறவு, அண்டை நாடுகளோடு இணக்கமான போக்கு ஆகியவற்றை வளர்க்க இவர்கள் முன்வர வேண்டும். அதுவே தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.'' -  தீர்க்கமாக சொல்கிறார் கர்னல் ஹரிஹரன்.

- ஜோ.ஸ்டாலின்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com