Contact us at: sooddram@gmail.com

 

மோடியின் வெற்றி

பதறிப் போய் நிற்கும் தமிழ்க் கூட்டமைப்பு

இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களின் அபார வெற்றி எவருக்கெல்லாம் மகிழ்ச்சியை கொடுத்தது, ஆனால் யாரெல்லாம் துக்கத்தில் இருக்கின்றனர் என்பதை நாமறியோம் பராபரமே! ஆனால் கூட்டமைப்பினர் கதிகலங்கிப் போய் கிடக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. தேர்தலில் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சி ஸ்தானத்தைக் கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது தள்ளாடும் இந்திய காங்கிரஸ் கட்சி கூட இந்தளவிற்கு கதி கலங்கியிருக்காதாம். கூட்டமைப்பினர் மத்தியில் ஏனாம் இந்தக் கலக்கம்? காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கை தொடர்பாக இந்தியாவின் நடவடிக்கைகள் பலவற்றை தங்களது ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக அல்லவா கூட்டமைப்பி னர் பறைசாற்றி வந்தனர். இப்போது அதில் பெரிய இடி விழுந்து விட்டது. உண்மையில் முன்னர் இடம்பெற்ற விடயங்களும் கூட்டமைபபினரின் நடவடிக்கைகளுக்கும் ஒரு தொடர்பு மில்லை என்பது அரசியல் தெரிந் தவர்களுக்கு விளங்கும். இலங்கையின் மீது அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா ஆதரவளித்திருந்தது.

இதனை கூட்டமைப்பினரோ தங்களின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று, தமிழ் மக்கள் மத்தியில் முழங்கித் திரிந்தனர். இதே போன்று கொழும்பில் இடம்பெற்ற பொதுநல வாயரசு மகாநாட்டின் போது, பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை. இதனையும் கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் தாங்களே அதனை தடுத்து நிறுத்தியதாக கதைகள் சொன்னார்கள். இப்படியாக இந்திய மத்திய அரசு தனது உள்நாட்டு மற்றும் வெளிவிவகார விடயங்களை அனுசரித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் கூட் டமைப்பினரின் திறமையா கிப்போனது. ஆனால், இனி தங்களால் இப்ப டியெல்லாம் கதை கள் சொல்ல முடியாதே என்பதுதான் கூட்டமைப் பின் தற்போ தைய கவலை யாம். ஏனென் றால் மோடியிடம் இந்த விளையாட்டுக்கள் பலிக்காது.

இப்போது கூட்டமை ப்பினர் முன்னால் ஒரு பெரிய பிரச் சினை இருக்கிறது. அதாவது மோடியின் அரசாங்கம் தமிழ் நாட்டின் ஆதரவின்றி அமைக் கப்பட்டிருக்கிறது. தமிழ் நாடு மட்டுமல்ல எந்தவொரு மாநிலத்தினதும் ஆதரவும் மோடிக்குத் தேவையில்லை. எனவே இதுவரை காலமும் தமிழ் நாட்டைக் கொண்டு, மத்திய அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரலாம் என்று தமிழ் தேசியவாதிகள் என்போர் போட்ட கணக்குப் பிழைத்து விட்டது.

இந்தச் செய்தியை மோடி அவர்கள் தனது பதவிப் பிரமாண வைபவத்தின் போதே தெள்ளத்தெளிவாக நிரூபித்துவிட்டார். மோடி தனது பதவியேற்பு நிகழ் விற்கு சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பைக் கூட அவர் அழைக்கத் தவறவில்லை. நவாஸ் ஷெரிப்பையே அழைத்தவர் எப்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழையாமல் விடுவார். இது எவற்றையும் விளங்கிக் கொள்ளாமல் தமிழ் நாட்டில் உள்ள புலியாதரவு அரசியல் வாதிகள் வழமைபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைக்கக் கூடாது என்று கூச்சல் போட்டனர். கூச்சல் புகழ் அரசியல் வாதியான வை. கோபாலசாமி புதுடில்லியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்றையும் நடத்தியிருந்தார்.

ஆனால், எதுவும் பலிக்கவில்லை. தமிழ் நாட்டில் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்கும். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயராமன் ஜெயலலிதாவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்ச்சி வந்தால், தான இதில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். தமிழ் ஊடகத் தரப்பினருக்கு தெரியாத விடயம் ஒன்றும் இருக்கிறது. ஜெயலலிதா வெறுமனே அறிக்கை மட்டும் விட வில்லையாம். மோடியிடம் தனது எதிர்ப்பை நேரடியாகவே தெரிவித் திருக்கின்றார். ஆனால் மோடி அதனை நிராகரித்து விட்டாராம். இததெல்லாம் கூட்டமைப்பின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டது.

தற்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜெயலலிதாவிற்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கின்றார். இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு சம்பந்தன் கேட்டிருந்தார்.

இங்குள்ள வேடிக்கையான விடயம் என்னவென்றால் ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அவரை ஒருமுறை கூட கூட்டமைப்பினர் சந்திக்க முயற்சிக்கவில்லை. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பொறுப்பேற் றுக்கொண்ட இந்த ஒரு வருட காலத்திலும் ஜெயலலிதாவை சந்திக்க எந்தவொரு முயற்சியும் மேற் கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால், மோடி அபார வெற்றிபெற்ற பின்னர் கூட்டமைப்பினருக்கு திடீர் ஞானம் ஏற் பட்டு விட்டது. இப்போது ஜெயலலிதாவை எப்படிச் சந்திக்கலாம் என்றும் கூட் டமைப்பினர் மந்திராலோசனை நடத்தி வருகின்றனராம்.

ஜெயலலிதா இன்று தமிழ் மக்கள் பற்றியெல்லாம் பேசினாலும் அடிப்படையில் அவர் புலிகளை எதிர்ப்பதில் மிகவும் கடுமையான ஒருவர். குறிப்பாக புலித் தலைவர் பிரபாகரனை அவர் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. இத்தனைக்கும் அவரது துணைவராக அறியப்பட்ட பிரபல நடிகர் எம். ஜி. ராமசந்திரன் பிரபாகரனின் ரசிகனாக இருந்த ஒருவர். பிரபாகரனுக்கு அப்போதே கோடிக் கணக்கில் உதவி செய்தவரும் கூட. ஆனால் ஏனோ தெரியவில்லை ஜெயலலிதாவிற்கு புலிகள் என்றால் தீண்டத் தகாதவர்களாவர். புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் கூட்டமைப்பினர் புலிகளுடன் இருந்தவர்கள் என்பது தெரிந்ததே.

இந்தக காலத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும் சிலர் ஜெயலலிதா குறித்து தாறுமாறாக ஏசியிருக்கின்றனர். கேவலம் ஒரு நடிகை என்றெல்லாம் பேசியிருக்கின்றனர். அப்போது புலிகளை குளிரச் செய்யும் நோக்கில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஜெயலலிதா அறியாமல் இருப்பாரா? என்பதும் சந்தேகம்தான். எனவே கூட்டமைப்பு விரும்பினால் கூட ஜெயலலிதா இவர்களை சந்திப்பாரா என்பதும் சந்தேகம்தான்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் கூட்டமைப்பின் ஜாதகத்தில் ஏழரைச் சனி என்றே சாத்திரிகள் கணிக்கின்றனராம். ஆனால் கூட்டமைப்பிற்கு தமிழ் ஊடங்களின் பலமான ஆதரவவு இருக்கும்வரை, அவர்களின் பலவீனம் வெளிவரப் பொவதில்லையாம். இதுவரைக்கும் மோடி அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு அழைப்போ அல்லது சாதகமான சைகைகளோ கூட்டமைப்பிற்கு கிடைக்கவில்லையாம். இதன் பின்னரே சம்பந்தன் சும்மா இருந்தால் மோடி அரசாங்கத்துடன் தங்களுக்கு தொடர்புகள் இல்லை என்பதை மக்கள் அறிந்து விடுவார்கள் என்று பயந்து தற்போது ஜெயலலிதாவிற்கு ஒரு கடிதத்தை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றாராம்.

மோடி தனது முதலாவது பயணத்தை எந்த நாட்டிற்கு மேற்கொள்வார் என்பது இன்னும் வெளிவரவில்லை. அது நிச் சயம் ஓர் ஆசிய நாடாகத்தான் இருக்கு மென்று நம்பப்படுகிறது. ஆனால் அவர் நிச்சயம் இலங்கைக்கும் வருவார். இவையெல்லாம் கூட்டமைப்பினர் மத் தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கூட்டமைப்பினர் ஒன்றில் மோடி அர சாங்கத்துடன் இணைந்து போக வேண் டும் அல்லது அதனை எதிர்த்து அறி க்கைகள் விட வேண்டும்.

(கே. வாசுதேவன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com