Contact us at: sooddram@gmail.com

 

மருதமுனையின் பாரம்பரிய கைத்தொழிலான நெசவுத்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும்

சீம்பாறை மாவட்டத்திலுள்ள மருதமுனை பிரதேசத்தில் நெசவுத் தொழில் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இந்தியாவின் உற்பத்திகளையொத்த துணிகள். ஆடைகள் மருதமுனையில் உற்பத்தி செய்யப்படுகின்றமை இத்தொழிலின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மருதமுனை பிரதேச மக்களினால் பரம்பரை பரம்பரையாக மேற்கொள்ளப்பட்டு வரும் நெசவுக் கைத்தொழில் இன்று நவீன சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் துரித வளர்ச்சி கண்டுள்ளது. நெசவுத் தொழிலில் மருதமுனை மக்கள் கொண்டுள்ள ஆர்வம், தேர்ச்சி என்பன தொழில் சிறப்புக்கு பிரதான காரணங்கள் எனலாம். சர்வதேச ரீதியில் நமது நாட்டுக்கு கீர்த்தியைப் பெற்றுத் தரும் நெசவுத் தொழிலையும். அதன் உற்பத்தியாளர்கள், பணியாளர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

இந்தியாவிலிருந்து நேரடியாக நூல் இறக்குமதி செய்யப்பட்டு. அதனை அழகிய ஆடைகளாக வடிவமைத்து மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பிரதான பணியாக இடம்பெறுகின்றது. மக்களின் விருப்பிற்கேற்றவாறு நிறச்சாயமிடும் பணி பிரதேசத்திலேயே மேற்கொள்ளப்படுவதுடன் நாகரிக வளர்ச்சிக்கேற்றவாறு மக்களுக்குப் பொருத்தமான ஆடைகளை வழங்குவதிலும் உற்பத்தியாளர்கள் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.

நமது நாடு உட்பட வெளிநாடுகளின் சீதோஷண நிலையைக் கருத்திற்கொண்டு உற்பத்தி செய்து வழங்கப்படும் ஆடைகளுக்கு மக்கள் மத்தியில் சிறந்த மவுசு உண்டு. அதிக உஷ்ணம், வெப்ப காலங்களில் கடைகளுக்குச் சென்று ‘மருதமுனை கைத்தறி உற்பத்திகளைத் தாருங்கள்’ எனக் கேட்டுப் பெறுபவர்கள் இன்னும் நமது நாட்டில் அதிகமுள்ளனர்.

மருதமுனைப் பிரதேச நெசவுக் கைத்தொழிலுக்கு நீண்டகால வரலாறு உண்டு. கடந்த 1977 சூறாவளியின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட மருதமுனை நெசவுத் தொழில் படிப்படியாக வளர்ச்சிகண்டு ஸ்திர நிலையை அடைந்த போது, மீண்டும் 2004 சுனாமி அனர்த்தம் எதிர்பார்த்திராத அவலங்களை ஏற்படுத்தியது. 2004 டிசம்பர் சுனாமி அனர்த்தத்தினைத் தொடர்ந்து மீண்டும் விரைவாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மருதமுனை நெசவுத் தொழில் இன்று கிழக்கு மாகாணம் அல்லது தேசிய ரீதியில் மாத்திரமல்ல, சர்வதேச ரீதியில் பேசப்படுமளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது அனைவருக்கும் தித்திக்கும் இனிப்பான செய்தியாகும்.

மருதமுனை நெசவு உற்பத்திகளின் பட்டியல் சேலை,, சாறம், படுக்கை விரிப்பு, துவாய், சட்டைப் புடவை, கைக்குட்டை...., என விரிந்து செல்லும், மருதமுனை உற்பத்திகள் எழில்மிக்கவை, தரமானவை என்ற பேச்சு ஆரம்பகாலந் தொட்டு இன்றுவரை நாட்டு மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விடயமாக உள்ளது. இதன் காரணமாக மருதமுனை நெசவு உற்பத்திகளுக்கு ஒரு தனிக்கிராக்கி சந்தையில் இருந்த வருவது தெளிவாகும். மருதமுனை மக்கள் நெசவுத் தொழிலை பிரதான தொழிலாகவும், பகுதிநேரத் தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் பிரதேச மக்கள் சிறந்த தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். பிராந்திய மக்களுக்குத் தேவையான ஆடைகள் இங்கிருந்தே பெருமளவில் பெறப்பட்டு வருகின்றன. மருதமுனை உற்பத்திகள் நுகர்வோருக்கு நியாயவிலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வேறுபாடுகளின்றி, நெய்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்கி வருவது இத்தொழிலில் உள்ள சிறப்பம்சமாகும். நாளொன்றிற்கு ரூபா 1000 முதல் 3000 வரையான தொகையை தொழிலாளர்கள் வருமானமாகப் பெற்று வருகின்றனர். பகுதிநேரத் தொழிலாக அரச உத்தியோகத்தர்களும் நெசவுத் தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத் தொழிலில் பணியாளர்களினால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு பணிகள் இன்று இயந்திரத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நெசவுத் தொழிலில் மேலும் இலகுவாக்கப்பட்டுள்ளதுடன், உற்பத்திகளின் தரமும் அதிகரித்துள்ளது. உற்பத்திகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மருதமுனை பிரதேசத்திற்கு தினசரி வருகை தந்து உற்பத்திகளை கொள்வனவு செய்து செல்பவர்கள் பெருமளவில் உள்ளனர். இது இத் தொழிலுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

நெசவுத் தொழிலை பாரியளவில் மேற்கொள்வதற்கு ஆர்வமிருந்தும் பொருளாதார வசதியின்மை காரணமாக அதனை செயலுருப்படுத்த முடியாமல் பலர் உள்ளனர். இவர்களுக்கு உதவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். நெசவுத் தொழில் சார்ந்த நிறுவனங்கள், அரச தனியார் வங்கிகள் இவர்களுக்கு உதவும் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகும். சிறுகைத்தொழில் முயற்சிகளுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் கொண்டுள்ள இறுக்கமான நடைமுறைகள், அதிகரித்த வட்டி வீதம், கடன் அறவீட்டில் காட்டும் அவசரம் என்பன முயற்சியாளர்கள் கடன் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தினை இல்லாமற் செய்துள்ளமை வரலாறாகும்.

நமது நாட்டிற்கு பெருமளவு அந்நியச் செலாவணியுடன். புகழையும் பெற்றுத் தரும் நெசவுத் தொழிலும், தொழிலாளர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமும் எதிர்பார்ப்புமாக உள்ளது. நெசவுத் தொழிலாளர்களுக்கு உதவுவதை பிரதான இலக்காகக் கொண்டு கடன் வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் காத்திரமான பங்களிப்பு நல்க வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com