வடமத்திய கால்வாய்
திட்டம்
யாழ்குடா, கிளிநொச்சி
உட்பட பல்வேறு பிரதேசங்களில்
நீர்ப்பற்றாக்குறைக்குத்
தீர்வு
(லக்ஷ்மி
பரசுராமன்)
மூன்று
தசாப்தங்களுக்கு
அதிக காலம்
பயங்கரவாதிகளின்
பிடிக்குள்
சிக்கித்
தவித்த யாழ். மக்களுக்கு
முழுமையான
சுதந்திரக்
காற்றை அனுபவிக்க
வழிசமைத்துக்
கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அம்மக்களின்
வாழ்க்கைத்
தரத்தைக்
கட்டியெழுப்புவதற்கு
அவசியமான
ஒவ்வொரு தேவையையும்
நிறைவேற்றி
வருகின்றார்.
அந்த
வகையில் யாழ். மக்களுக்கான சுத்தமான
குடிநீர்
தேவையையும்
ஜனாதிபதி
தலைமையிலான
அரசாங்கம்
மறந்துவிட
வில்லை.
1960 ஆம் ஆண்டளவில்
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க
தலைமையிலா
அரசாங்கத்தின்
முன்மொழிவிற்கிணங்க
ஐக் கிய
நாடுகளின்
அபிவிருத்தி
நிகழ்ச்சித்
திட்டத்தினால்
(UNDP) முழு இலங்கை யின் அபிவிருத்தியையும்
கருத்திற்கொண்டு
வரையப்பட்ட
‘மகாவலி பாரிய செயற்திட்டம்
(Mahaweli Master Plan) 1968ம் ஆண்டு இலங்கை
அரசினால்
அங்கீகரிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்
பிரகாரம்
கிளிநொச்சி
மாவட்டத்திலுள்ள
இரணைமடுக்
குளத்திற்கு
போதியளவு
நீரைப் பெற்றுக்கொடுத்து
அதனூடாக யாழ். குடாநாட்டின் குடி நீரைத் தேவையை நிறைவேற்றுவதாகவே
திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் தொடர்ந்து
இடம்பெற்ற
ஆட்சிமாற்றத்தின்
விளைவாக இத்திட்டத்
தினை முழுமையாக
நடைமுறைப்படுத்த
முடியாமல்
போனது.
1977
ஆம் ஆண்டு
ஆட்சிக்கு
வந்த ஐக்கிய
தேசியக் கட்சி அரசாங்கம்
இச் செயற்திட்டத்தின்
அடிப்படையில்
நாட்டை அபிவிருத்தி
செய்வதற்காக
ஐந்து வருட துரித
மகாவலி அபிவிருத்தி
நிகழ்ச்சித்
திட்டம் (Accele rated Mahaweli Development
Programme) என்ற
திட்ட வரைபை வரைந்து
அபிவிருத்தித்
திட்டங்களை
அமுலாக்கத்
தொடங்கியது.
ஆனால்,
இத் துரித
அபிவிருத்தித்திட்ட
வரைபில் யாழ். குடாவிற்கான அபிவிருத்தி
புறக்கணிக்கப்பட்டதன்
விளைவாக குடா நாட்டின்
குடிநீர்த்
தேவை நிவர்த்தி
செய்யப் படாமலேயே காலங்கடத்தப்பட்டு
வந்தது. யாழ். குடாநாட்டின் அனைத்துப்
பகுதி களிலுமுள்ள
மக்களுக்கு
குடிப்பதற்கென
தூய சுத்தமான
நீர் கிடைப்பதில்லை.
இம்மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக
நிலக்கீழ்
நீரையே நம்பி இருக்கின்றார்கள்.
மேலும் நிலக்கீழ்
நீர் மாசடைவதனாலும்
முறையான சுத்திகரிப்பு
இல்லாத நிலையிலும்
இந்நீரை மக்கள் பயன்படுத்த
முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம்
து¡ர இடங்களிலிருந்து
குடிநீரைப்
பெற்று வரவேண்டிய
கட்டாய சூழ்நிலையும்
இன்று வரை தொடர்கிறது. நிலக்கீழ்
நீரைப் பெற்றுக்கொள்வதால்
நிலத்தின்
கீழுள்ள நீர்மட்டம்
குறைவடைந்து
செல்வதுடன்
நிலத்தின்
இயற்கைத்
தன்மையில்
மாற்றம் ஏற்பட்டு விளைச்சலுக்கு
உகந்ததல்லாத
வகையில் சூழல் மாசடை
வதற்கு முகம் கொடுப்பதாகவும்
சூழலியலா
ளர்கள் தொடர்ந்தும்
எச்சரித்து
வருகின்றனர்.
அனைத்து
வளங்களையும்
ஒருங்கே பெற்று சிறப்புடன்
திகழும் யாழ். மாவட் டத்திற்கு
அச்சுறுத்தலாகவிருக்கின்ற
குடி நீர்ப்
பிரச்சினையையும்
அதனை தீர்த்து
வைப்பதற்கான
செயற் திட்டத்தினையும்
ஜனாதிபதி
தனது மஹிந்த
சிந்தனையில்
உள்ளடக்கியிருப்பதன்
மூலம் இப்பிரச்சி
னையை தீர்த்து
வைப்பதில்
ஜனாதிபதி
கொண்டுள்ள
தீவிர கரிசனை நன்கு புலப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
பணிப்புரையின்
பேரில் நீர்ப்பாசன
மற்றும் நீர்வளங்கள்
அபிவிருத்தியமைச்சர்
நிமல் சிறிபால டி
சில்வாவின்
வழிகாட்டலுடன்
தற்போது திட்டமிடப்பட்டு
செயற் திட்ட வரைபு
நிலையிலுள்ள
வட மத்திய
கால் வாய்
(NCP Canal) மூலம் கிளிநொச்சி
மாவட்டத்திலுள்ள
இரணைமடு குளத்திற்கு
வருடாந்த
100 மில்லியன்
கன மீற்றர்
(100 MCM) நீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு
திட்டமிடப்பட்டு
திட்டவரைபு
தயாரிக்கப்
படுகின்றது.
இவ்வாறு மேலதிகமாக
கிடைக்கப்பெறும்
நீர் வளத்தினைக்
கொண்டு இரணைமடு குளத்தின்
கீழுள்ள விவசாயிகளின்
நீர்ப்பாற்றாக்குறையை
நிவர்த்தி
செய்வதோடு
யாழ். குடா நாட் டிற்கான குடிநீர்த்
தேவையையும்
நிவர்த்தி
செய்வதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பாரிய திட்டத்தின்
மூலம் மொரகஹகந்த
நீர்த்தேக்கத்திலிருந்து
மேல் எலஹெர
கால்வாய்
(Upper Elahera Canal- UEC) மற்றும்
வட மத்திய
கால் வாய்
(NCP Canal) ஊடாக இரணைமடு குளத்திற்கு
நீர்கொண்டு
செல்லப்படுகின்றது.
இத் திட்டவரைபில்
முதல் கட்டம் மொரக ஹகந்த
நீர்த்தேக்கத்திலிருந்து
அநுராதபுரம்
மாவட்டத்திலுள்ள
ஹுருளுவெவ
மற்றும் மானங்கட்டிய
நீர்ப்பாசன
நீர்த்தேக்கங்கள்
வரை சுமார்
70 கீ. மீ நீளமான
மேல் எலஹெர
கால்வாய்
(Upper Elahera Canal- UEC) மூலம்
நீரை எடுத்துச்
செல்வதாகும்.
இவ் முதற்கட்ட
செயற் திட்டம் வடிவமைப்பு
உறுதிப்படுத்தப்பட்ட
நிலையில்
இத்திட்டத்தினை
நடைமுறைப்
படுத்துவதற்காக
ஆசிய அபிவிருத்தி
வங்கி (ADB) 500 மில்லியன்
அமெரிக்க
டொலர்களை
கடனாக வழங்க முன்வந்
துள்ளது.
மேல்எலஹெர
கால்வாய்
செக்கனுக்கு
40 கனமீற்றர்
(Cumec) நீரை
எடுத்து செல்லக்கூடிய
கொள்ளளவை
கொண்டதாகவிருக்கும். இத்
திட்டவரையில்
மேல் எலஹெர
கால்வாயைத்
(UEC) தொடர்ந்து
இரண் டாம்
கட்டமாக சுமார் 90 கி.
மீ நீளமான
வட மத்திய
கால்வாய்
(NCP Canal) மூலம் வவுனியா மாவட்டத்திலுள்ள
செம்மடுகுளம்
வரையில் நீரை எடுத்து
செல்வதற்கு
திட்டவரைபு
தயாரிக்கப்பட்டு
வருகின்றது.
இந்த வட மத்திய
கால்வாய்
(NCP Canal) செக்கனுக்கு
35 கனமீற்றர்
(Cumec) நீரை
எடுத்து செல்லக் கூடிய கொள்ளளவை
கொண்டதாக
இருக்கும்
இத் திட்டவரைபின்
படி செம்மடுக்குளத்திலிருந்து
வருடாந்தம்
100 மில்லியன்
கன மீற்றர்
(100 MCM) அளவிலான
நீர் இயற்கை
ஆறான கனக
ராயன் ஆற்றினூடாக
இரணைமடுக்
குளத்தினை
சென்றடையும்போhது
இயல்பாகவே
இரணைமடுக்
குளத்திற்கான
நீர் உள்வரவு
(Inflow Volume) கனவளவு
அதிகரிக்கும்.
இதன்போது
இரணைமடு குளத்தின்
கீழ் பயனடையும்
விவசாயிகள்
தமது விவசாயத்திற்கு
தேவையான நீரைப் பெற்றுக்கொள்வது
போக எஞ்சிய
நீர் யாழ்
மக்களின்
குடிநீர்
தேவைக்காக
திசை திருப்பப்படுவதன்
மூலம் யாழ். குடா மக்களுக்கான
குடிநீர்
பற்றாக்குறை
நிவர்த்தி
செய்யப்படும்.
தற்போது
இரணைமடுக்
குளத்தில்
போதியளவு
நீர்வசதியில்லையெனக்
கூறியே கிளநொச்சி
மாவட்ட விவசாயிகள்
அக்குளத்தீன்
நீரை யாழ். குடாநாட்டுக்குக் கொண்டு
செல்வதற்கு
ஆட்சேபம்
தெரிவித்து
வருகின்றனர்.
இத்திட்டம் முழுமையாக
நடைமுறைப்
படுத்தப்படுமானால்
வருடாந்தம்
இரணை மடு
குளத்திற்கு
100 மில்லியன்
கனமீற்றர்
நீர் மேலதிகமாகக்
கிடைக்கும்.
இதன் மூலம்
கிளிநொச்சி
மாவட்டத்தின்
விவசாயத்
தேவைகளையும்
யாழ். குடாநாட்டின் குடிநீர்த்
தேவையையும்
முழுமையாக
பூர்த்தி
செய்யக் கூடியதாகவிருக்கும்.
தற்போது
இத்திட்டவரைபின்
அமுலாக்கத்தின்
முதற்கட்டமாக
மொரக ஹகந்த
நீர்தேக்கத்தின்
அணைக்கட்டு
நிர் மாணப்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட
இப் பணிகள்
தற்போது 20 சதவீதம் பூர்த்திய
டைந்துள்ளன.
2016 ஆம் ஆண்டளவில்
இப்பணிகள்
முழுமையாக
நிறைவடைந்ததன்
பின்னர்
2018ல் மேல்எலஹர
கால்வாய்
திட்டத்திற்கூடாக
ஹுருளுவெவவிற்கு
நீரை எடுத்துவர
முடியுமென
நம்பப்படுகிறது.
முதற்கட்டத்தை
நிறைவேற்றுவதற்கே
நீண்டகாலம்
தேவைப்படுகின்ற
போதிலும்
அதனைத் தொடர்ந்து
ஏனைய வேலைத்
திட்டங்கள்
குறுகிய காலத்திற்குள்
விரை வாக
முன்னெடுக்கப்படக்
கூடியவையாகவே
உள்ளன.
இத்திட்டத்தினை
வெற்றிகரமாகப்
பூர்த்தி
செய்வதன்
மூலம் யாழ். குடாநாட்டு மக்களின்
குடிநீர்த்
தேவை முழுமையாகவே
நிவர்த்தி
செய்யப்படும்.
அதேவேளை நீர்ப்பாசனம்
முன்னெடுக்கப்படும்
திசையின்
இரு மருங்கிலுமுள்ள
பல ஹெக்டெயர்
நிலப்பரப்பும்
சிறிய ஆறுகள் வாவிகளென்
பனவும் போதியளவு நீரை பெற்றுக்கொள்
வதனால் எண்ணிலடங்கா
விவசாயக்
குடும்பங்கள்
நன்மை பெறவுமுள்ளன.
இவ்வாறாக அருவியாறு
என்றழைக்
கப்படும்
மல்வத்து
ஓயா, பாலியாறு,
யானு ஓயா,
கனகராயன்
ஆறு, மாவோயா
ஆகிய ஆறுகளின்
கீழுள்ள ஆற்றுப்படுக்கை
களின் எல்லைக்குட்பட்ட
விவசாயக்
காணிகளுக்கும்
போதியளவு
நீர் பெற்றுக்
கொள்ளப்படும்.
ஹுருளுவெவவின்
இடதுபுறமாக
அமைந்துள்ள
மானங்கட்டிய
நீர்த்தேக்கத்
திற்கும்
நீர்பாய்ச்சப்படுவதனால்
அநுராதபுரம்
மாவட்டத்திலுள்ள
நாச்சியாதீவு,
திஸாவாவி,
நுவரவெவ, மஹாகனந்தராவ
ஆகிய நீர்ப்
பாசன தொகுதிகளின்
நீர் பற்றாக்குறை
நிவர்த்தி
செய்யப்படும்.
மல்வத்து ஓயாவிற்குக்
கிடைக்கக்
கூடிய நீரின் மூலம் மன்னார்
மாவட்டத்
திலுள்ள கட்டுகரைக்குளம்
மற்றும் அகத்தி முழிப்பு ஆகிய நீர்த்தேக்கங்களின்
நீர் பற்றாக்குறையும்
நிவர்த்தி
செய்யப்படும்.
மேலும் கோடை காலத்தில்
சிறுபோக பயிர்ச் செய்கையை மேற்கொள்ள
போதுமானளவு
நீர் இதன்
மூலமாக கிடைக்கப்பெறும்.
வட மத்திய
கால்வாய்
திட்டத்திற்கூடாக
நீர் உயர்ந்த
மட்டத்தில்
எடுத்துச்
செல்லப் படுவதனால்
அதன் இருமருங்கிலுமுள்ள
சுமார் ஆயிரம் நீர்ப்பாசன
சிறிய குளங் களுக்கும்
போதியளவு
நீர் கிடைப்பதுடன்
இருபோக பயிர்ச் செய்கையினையும்
சிறப்பாக
முன்னெடுக்கக்
கூடியதாக
விருக்கும்.
மேலும் இந்த முழுமையான
திட்டத்திற்கூடாக
74 ஆயிரம் ஹெக்டெயர்
விவசாயக்
காணிகளில்
பயிர்ச் செய்கை களின்போது
ஏற்படும்
நீர்ப்பாசனப்
பற்றாக்குறையினை
நிவர்த்தி
செய்ய முடியும். அதேசமயம் வடமேல்
கால்வாய்
திட்டத்திற்கூடாக
மாத்திரம்
12 ஆயிரம் ஹெக்டேயர்
விவசாய காணிகளுக்கு
நீர் விநியோகிப்பதற்கான
வாய்ப்பு
கிட்டும்.
இத்திட்டத்தினை
முழுமையாக
நடைமுறைப்படுத்தும்
பட்சத்தில்
மகாவலி முதல் மினிப்பே
வரையிலான
நீர்மட்டம்
நான்கு மீற்றரினால்
உயர்த்தப்படுவதுடன்
அதன் இடதுகரை
கால்வாய்
மூலமாக 7 ஆயிரம் ஹெக்டெயர்
விவசாய காணிகளுக்கான
நீர்ப்பாற்றாக்குறை
நிவர்த்தி
செய்யப்படும்.