|
||||
|
புதிய உலக
ஓழுங்கு புலம்பெயர்ந்த இரகசிய பேச்சுவார்த்தை இம்மாதம் (யூன் மாதம்) 8ந் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சராலும் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினாலும் உலகத்தமிழர் பேரவையாலும் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையொன்றின் வாயிலாக இலண்டனில் இலங்கை அரசு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவைச் சார்ந்த பிரதிநிதிகளும் (உலகத்தமிழர் பேரவையென அறிக்கையில் சொல்லப்பட்டாலும், பிரித்தானியா தமிழர் பேரவைச் சார்ந்தவர்களே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்) மற்றும் தென்னாபிரிக்கா, சுவிட்சலாந்து, நோர்வே நாட்டு பிரதிநிதிகளும் இரகசிய (ஏன் இந்த இரகசியம்?..) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் இப்பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தி எந்தவொரு ஊடகத்திலும் வெளிவராததால், இப்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மிகவும் இரகசியமாக பேணப்பட்டுள்ளது என்பது உறுதியாகத் தெரிய வருகின்றது. இலங்கையில் நல்லிணக்கம் ஒன்றினை ஏற்படுத்தி, அரசியல் தீர்வொன்றினை எட்டுவதற்காக இலங்கை அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடனோ அல்லது தென்னாபிரிக்கா, சுவிட்சலாந்து, நோர்வே நாட்டு பிரதிநிதிகளுடனோ பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது புருவத்தை உயர்த்தும் விடயமல்ல. ஆனால் இவர்கள் அனைவருடனுமான பேச்சுவார்த்தையில், இலங்கையின் முன்னைய அரசினால் அறிவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட பட்டியலிலுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளில் ஒன்றான உலகத்தமிழர் பேரவையும் இணைந்துள்ளது என்பதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த அமைப்போ அல்லது வேறு எந்த புலம்பெயர் அமைப்போ இலங்கை அரசியலில் தீர்மானகரமான பங்கொன்றினை வகிக்கவேண்டிய கட்டாயமான புறச்சூழலொன்று உருவாகியிருப்பது மாதிரியும் தெரியவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் ஒரு புலம்பெயர் அமைப்புடனான பேச்சுவார்த்தை என்பது அந்த அமைப்புக்கு ‘தலைப்பா’ கட்டும் காரியமே. அத்துடன் இவ்வாறானதொரு பேச்சுவார்த்தைக்கு தூண்டிய சக்திகளின் பின்னணிபற்றியும் இதனால் எதிர்காலத்தில் அரசியலில் ஏற்படுத்தப்போகும் பாரிய விளைவுகளையும் ஆராயமலிருக்க முடியாது. இப்பேச்சுவார்த்தை இலண்டனில் நடைபெற்றுள்ளதாலும், மேற்கத்தைய சக்திகளின் உதவியுடன் நிறுவப்பட்டுள்ள புதிய இலங்கை அரசே இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாலும், மேற்கத்தைய சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் (புதிய உலக ஒழுங்கின்) கீழேயே இப்பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளதாக உறுதிபடக் கூறலாம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக புலம்பெயர் தமிழ்சார் அமைப்பொன்றுக்கு இலங்கையின் அரசியலில் மூக்கை நுழைப்பதற்கு பகிரங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்திற்கான அடிப்படை, இலங்கையின் தறபோதைய அரசு மற்றும் தமிழத்தேசியக். கூட்டமைப்பினர் போலவே இந்த அமைப்பும் மேற்கத்தைய சக்திகளின் அடிவருடிகள் என்பதே. புலிகளின் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் பல பிரிவுகள், பிரிவுகளுக்குள் உட்பிரிவுகள் என சிதைந்து போயுள்ளனர். இந்த பிரிவுகளில் பெரும்பாலானவை இலங்கை அரசு மீது எப்போதும் போலவே பகையுணர்வுடனேயே இருக்கிறார்கள். அதனால் இந்த உடைந்து சின்னாபின்னமாய் பலவீனமாக போயுள்ள புலிகளின் எச்சசொச்சங்களை தங்கள் வலைக்குள் வீழ்த்திய ஏகாதிபத்திய சக்திகள், இலங்கை அரசினை நவகாலனித்துவ பிடிக்குள் வைத்திருப்பதற்காக இவர்களை துரும்புச்சீட்டாக பயன்படுத்துகின்றன. உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பு புலிகள் முற்றுமுழுதாக முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஏறத்தாழ 6 ஆண்டுகளின் முன்பு ஸ்தாபிக்கப்பட்டது. பிரித்தானியா தமிழர் பேரவை, உலகத்தமிழர் பேரவையை விடவும் சில வருடங்கள் பழைமையானது. இவ்விரு அமைப்புகளின் தலைமைப்பீடத்திலுள்ள அனைவருமே புலம்பெயர் நாடுகளில் புலிகளை தீவிரமாக விசுவாசித்தவர்கள். அதனால் புலிகளின் நிகழ்ச்சி நிரலினை, புலிகளின் முற்றுமுழுதான அழிவிற்கு பின்னர், இலங்கைக்கு வெளியிலிருந்து இயங்க வைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தமது இருப்பினை, குறிப்பாக பணவருவாயினை, பேணி வருகின்றனர். இதற்காக பல ஊர்வலங்களை புலிப்பதாகைகள் தாங்கி ஐரோப்பிய நாடுகளில் நடாத்தியுள்ளனர். இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை என்பது இவர்களது நாளாந்த புலம்பல்களில் மிக முக்கியமானது. இலங்கையில் இனங்களுக்கிடையே நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய நல்லிணக்கம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கும், பொருளாதார காரணிகளுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவு அவசியம் என்பது நிட்சயமாக ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இலங்கைக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டுமென்று நல்லெண்ணங்கொண்டவர்கள் என்றும் இலை மறை காயாக உதவிய வண்ணமே இருக்கிறார்கள். இந்த சக்திகளை மென்மேலும் ஊக்குவிப்பதற்கு இன்னமும் இலங்கையில் எந்த பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை. புலிகள் அமைப்பு சகலவிதமான ஜனநாயகங்களையும் குழி தோண்டி புதைத்தவர்கள். எனவே புலிகளை வெறித்தனமாக ஆதரித்ததை பின்புலமாக கொண்ட புலம்பெயர் தமிழர்களோ அல்லது அவ்வாறானவர்கள் சார்ந்த அமைப்புகளோ, எந்த பிசாசின் துணை கொண்டாவது, எப்போதுமே இலங்கைக்கு மீண்டும் நாசகாரம் விளைவிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பவர்கள் என்ற எச்சரிக்கையை நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். – ஆசிரியர் தலையங்கம், வானவில் இதழ் 54 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |