பெண்கள் உரிமை போற்றுவோம்!
(க.ராஜ்குமார்)
இன்று உலகம் முழுவதும்
கொண்டாடப்
படும் சர்வதேச மகளிர் தினம் உருவானதே
ஒரு போராட்டக்
களத்தில்தான். 1900ஆம்
ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில்
பெண்கள் பொருளாதாரரீதியாகவும்
சமூகரீதியாகவும்
கடுமையாக
பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவற் றிற்கு
எதிராக உலகம் முழுவதும்
பெண்கள் வெகுண்டெழுந்து
போராடிக்கொண்டிருந்
தனர். சில நாடுகளில்
பெண்களுக்கான
அமைப்புகள்
தோற்றுவிக்கப்பட்டன.
சர்வதேச மகளிர் தினம் தோற்றம்
1907-ல் ஜெர்மனியில்,
ஸ்டட்கார்ட்
என்ற நகரில்
முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது.
இந்த மாநாட்டில்
15 நாடுகளிலிருந்து
59 பெண் பிரதிநிதிகள்
கலந்துகொண்டனர்.
உலகம் முழுவதுமுள்ள
பெண்கள் அமைப்புகளை
ஒருங்கிணைப்ப
தற்கு ஒரு சர்வதேச
பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில்
உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பிற்கு
கிளாரா ஜெட்கின் செயலாளராக
தேர்வு செய்யப்பட்டார்.
1908-ம் ஆண்டு
முதன்முதலில்
நியூ யார்க்
நகரில், 15000-க்கும்
மேற்பட்ட
பெண் கள்
பேரணியாக
சென்று தங்களின் வேலை நேரத்தை
குறைக்க வலியுறுத்தியும்,
தேர் தலில்
வாக்களிப்பதற்கான
உரிமை கோரி யும்,
தங்களுக்கு
நியாயமான,
சமவேலைக்கு
சமஊதியம்
வழங்கவேண்டும்
என்று வலியுறுத்தி
முழக்கமிட்டனர்.
1909-ல் ஆடை
தயாரிக்கும்
தொழிலில்
ஈடுபட்டிருந்த
மகளிர் தங்களுக்கு
நியாய மான ஊதியம்
வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்து
வேலைநிறுத்
தம் மேற்கொண்டனர்.
அமெரிக்காவின் சோச லிஸ்ட் கட்சி தேசிய
அளவிலான முதல் மகளிர்
மாநாட்டை
பிப்ரவரி
28-ம் தேதி நடத் தியது.
அன்றைய தினத்திலிருந்து
1913 வரை பிப்ரவரி
கடைசி ஞாயிற்றுக்கிழமை
சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது.
ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன்
நகரில் ஜெர்மனியின்
சோசலிச ஜனநாயக கட்சி இரண்டாவது
மகளிர் மாநாட்டை நடத் தியது.
இதில் 17 நாடுகளிலிருந்து
100க்கும் மேற்பட்ட
பெண்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் பல்வேறு
நாடுகளின்
தொழிற்சங்
கங்களின்
பிரதிநிதிகளாகவும்,
சோசலிஸ்ட்
கட்சியின்
பிரதிநிதிகளாகவும்,
மகளிர் அமைப்புகளின்
பிரதிநிதிகளாகவும்
இருந்த னர். பின்லாந்து நாட்டின்
நாடாளுமன்றத்
திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
3 நாடாளுமன்ற
உறுப்பினர்களும்
பிரதிநிதிகளாக
வந்திருந்
தனர். இந்த மாநாட்டில்
சோசலிஸ்ட்
ஜனநா யக
கட்சியின்
மகளிர் பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின்
கோரிக்கைகளை
வலியுறுத்தி
ஒவ்வொரு
ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத் திட
வேண்டும்
என்ற தீர்மானத்தை
முன் மொழிந்தார்.
இந்த தீர்மானம்
அனைத்து பிரதி நிதிகளாலும்
ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரொட்டியும் ரோசாப்பூவும்
தொடர்ந்து
1911-ல் சர்வதேச
மகளிர் தினம் முதன்முதலாக
ஆஸ்திரியா,
டென் மார்க்,
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து
ஆகிய நாடு
களில் மார்ச் மாதம் 19-ந்தேதி
கொண்டாடப்
பட்டது. இந்த நாடுகளில்
ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட
பெண்கள் கலந்துகொண்ட
பேரணி கள் நடைபெற்றன.
இந்த பேரணிகளில்
பெண்கள் வேலை செய்வதற்கான
உரிமை. தேர்தல்களில்
வாக்களிப்பதற்கான
உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில்
வேலை செய்வது,
சமூகத்தில்
பாகுபாடின்றி
நடத்தப்பட
வேண்டும்
போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதே ஆண்டில்
மார்ச் மாதம் 25-ந்தேதி
அன்று நியூயார்க்
நகரில் நடைபெற்ற ஒரு முக்கோண
தீ விபத்தில்,
பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர்.
இவர் களில் பெரும்பாலானோர்
இத்தாலி நாட் டைச்
சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து
அன் றைய
தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு
பாதுகாப்பற்ற
நிலை இருந்ததை
வெளிப்படுத்தியது.
இதன் பின்னர்,
தொழி லாளர்
சட்டங்களை
கடுமையாக்க
வேண்டிய நிர்ப்பந்தம்
அரசுக்கு
ஏற்பட இந்த நிகழ்ச்சி
அடிகோலாக
அமைந்தது.
இதே ஆண்டில்
பெண்கள் நடத்திய ‘ரொட்டியும்
ரோசாப்பூவும்’
என்ற இயக்கம்
பெண்களின்
கோரிக்கை
களை வலியுறுத்துவதாக
அமைந்தது.
இத்த கைய
தொடர்ச்சியான
போராட்டங்கள்
மூலமே பெண்களுக்கு
வாக்களிக்கும்
உரிமை யும் வேலை
செய்யும்
உரிமையும்
சம ஊதியம்
பெறும் உரிமையும்
பிற்காலத்தில்
கிடைத்தன.
மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்
1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறை
யாக சர்வதேச
பெண்கள் தினம் கொண்
டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு
பிப்ரவரி
கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற
மாநாட்டில்
மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட
முடிவு செய்யப்பட்டது.
1914-ல் போருக்கு
எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும்
பேரணி நடத்தினர்.
1917-ல் ரஷ்ய
பெண்கள் ‘ரொட்டிக்காகவும்
போருக்கு
எதிராகவும்’
பிப்ரவரி
கடைசி ஞாயிறு அன்று வேலை
நிறுத்தம்
செய்தனர்.
அப்போது நடைபெற்ற
போரில் இரண்டு லட்சத்திற்கும்
மேற்பட்ட
ரஷ்ய வீரர்கள்
உயிரிழந்திருந்தனர்.
இந்த வேலை
நிறுத்தத்தை
தடைசெய்ய
ஆரம்பத் தில் அரசு
முயற்சி செய்தபோதும்
பின்னர் ரஷ்ய நாட்டு
பெண்களுக்கு
வாக்களிக்கும்
உரிமையை முதல் முறையாக
தந்தது குறிப் பிடத்தக்கது.
அந்த வீரஞ்செறிந்த
வேலை நிறுத்தம்
ரஷ்ய ஜூலியன்
காலண்டர்
படி பிப்ரவரி
23 என்றாலும்
உலகம் முழுவதும்
கடைப்பிடித்து
வரும் காலண்டர் படி மார்ச்
8 ஆகும். அந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க
நாளே நாம்
இன்று கொண்டாடும்
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும்.
இன்று சர்வதேச
மகளிர் தினம் உலகில்
அனைத்து நாடுகளிலும்
உற்சாகமாக
கொண் டாடப்படுகிறது.
சீனா, வியட்நாம்,
ஒன்றுபட்ட
ரஷ்ய நாடுகளில்
இன்று மகளிர் தினத்திற்கு
அரசு விடுமுறை
விடப்படுகிறது.
அமெரிக் காவில்
மார்ச் மாதம் முழுவதும்
பெண்கள் வரலாற்று மாதம் கொண்டாடப்படுகிறது.
இந்திய நாட்டில்
பெண்கள் நிலை
இந்திய
நாட்டிலும்
மகளிர் தின கொண்
டாட்டங்கள்
நடைபெற்று
வருகின்றன.
வணிக நிறுவனங்கள்
இந்த நாளை
பயன் படுத்திக்கொண்டு
ஆடை அணிகலன்கள்
விற்பனைக்கு,
விளம்பரத்திற்கு
பயன்படுத்திக்
கொள்கின்றன.
ஆனால் இந்திய
நாட்டில்
பெண்கள் நிலை மிகவும்
மோசமாகவுள்ளது.
இந்திய நாட்டில்
பணிபுரியும்
பெண் களுக்கு
பாதுகாப்பற்ற
நிலை உள்ளதாக
‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விப ரங்கள்
கூறுகின்றன.
இரவு நேரங்களில்,
தகவல் தொழில்நுட்பத்துறையில்
பணியாற் றும் பெண்களும்,
விமானப் போக்குவரத்துப்
பணியில் பணியாற்றும்
பெண்களும்,
மருத்து வமனையில் பணியாற்றும்
பெண்களும்
பாதுகாப்பற்ற
நிலையில்
உள்ளனர் என்றும், நிறுவனங்கள்
இவர்களுக்கு
போதுமான பாதுகாப்பை
தரத்தவறியுள்ளன
என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது தலைநகர்
தில்லியில்
அதிகபட்சமாக
65சதவீதமும் ஹைதராபாத்தில்
28சதவீதமும் மும்பையில்
28சதவீதமும் என உள்ளது.
பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில்
1600 நிறுவனங்கள்
மட்டும் தொழில்துறையில்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில்
75000 முதல் 95000 பெண்கள் பணியாற்றி
வருகின்றனர்.
மருத் துவமனைகள்,
விமானப்போக்குவரத்து,
தகவல் தொழில்நுட்பத்
துறைகளில்
பணி யாற்றும்
இவர்களில்
56சதவீத பெண்கள்
பாதுகாப்பற்ற
நிலையில்
உள்ளனர் என ‘அசோசெம்’
புள்ளிவிபரம்
கூறுகிறது.
மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால்
நேரு, தந்தை
பெரியார்
போன்றவர்கள்
பெண் களுக்கு
சம உரிமை
வழங்குவது
குறித்து
பேசியிருந்தாலும்,
பெண்களுக்கென
தனிச் சட்டங்கள்
இயற்றப்பட்டிருந்தாலும்,
அவை யெல்லாம்
ஏட்டுச் சுரைக்காயாகவே
உள்ளன. நாடாளுமன்றத்திலும்
சட்டமன்றத்திலும்
பெண்களுக்கான
33 விழுக்காடு
இட ஒதுக்கீடு
பிரச்சனையில்
இன்று இந்திய அரசியல்வாதிகளின்
முகமூடிகள்
கிழித்தெறி
யப்பட்டு
அடையாளம்
காணப்பட்டுள்ளது.
இடதுசாரிக் கட்சித்
தலைவர்களை
தவிர ஏனையோர்
இரட்டை நிலைப்பாடு
கொண்டி ருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மாநி லங்களவையில்
நிறைவேற்றப்பட்ட
இட ஒதுக்கீடு
மசோதா, மக்களவையில்
நிறை வேற்ற
முடியாமல்
உள்ளது வெட்கக்கேடானது.
இன்று பெண்கள்
தினத்தை கொண்டாடு வதில் ஒவ்வொருவருக்கும்
ஒரு நோக்கம்
உள்ளது. அதே போல் உழைப்பாளி
மக்களுக்
கும் ஒரு
நோக்கம் உள்ளது.
பெண்களுக்கு,
சமூகம், அரசியல், பொரு ளாதாரம்
மற்றும் தொழிற்சங்கத்தில்
சமத்து வம் கிடைத்திடவும்,
சொத்து உரிமை, சட்டம்
இயற்றக் கூடிய அவைகளில்
இடம் பெற்றிடவும்,
வேலை செய்யுமிடங்களில்
ஆண்- பெண்
என்ற பாகுபாடு
இல்லாமலிருக்கவும்,
வேலை செய்யுமிடங்களில்
பாதுகாப்
பினை உத்தரவாதப்படுத்திடவும்,
குழந்தைகள்
காப்பகங்கள்
ஏற்படுத்திடவும்,
பாலியல் பலாத்காரத்தை
தடுத்து நிறுத்திடவும்,
வரதட்சணைக்
கொடுமைகளை
களைந்திட
வும், பெண்களை
வணிக விளம்பரத்திற்கு
அருவருக்கத்தக்க
முறையில்
பயன்படுத்
துவதை தடுத்து நிறுத்திடவும்,
சாதியக் கொடுமைகளிலிருந்தும்,
மதரீதியான,
சம்பிர தாய, மூட
பழக்க வழக்கங்களிலிருந்தும்
பெண்களை மீட்டெடுத்திடவும்,
உலகமயத் தினால் முதலில் பாதிக்கப்படுவது
பெண் என்
பதால் அவற்றிற்கு
எதிரான போராட்டங்களில்
பெண்களை ஈடுபடுத்துவதும்
இன்று உழைப்பாளி
மக்கள் முன் உள்ள
தலையாயக்
கடமைகளாகும்.
இந்த உணர்
வோடு 101-வது
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்!
History of International Women’s Day
Each year on 8 March,
hundreds of International Women’s Day events occur all around the world. They
events range from small random informal gatherings to large-scale highly
organised events. All celebrate women’s advancement and highlght the need for
continued vigilance and action.
International Women’s Day has been observed since in the early 1900′s, a time of
great expansion and turbulence in the industrialized world that saw booming
population growth and the rise of radical ideologies.
1908
Great unrest and critical debate was occurring amongst women. Women’s oppression
and inequality was spurring women to become more vocal and active in campaigning
for change. Then in 1908, 15,000 women marched through New
York City demanding shorter hours, better pay and voting rights.
1909
In accordance with a declaration by the Socialist Party of America, the
first National Woman’s Day (NWD)
was observed across the United States on 28 February. Women continued to
celebrate NWD on the last Sunday of February until 1913.
1910
n 1910 a second International Conference
of Working Women was held in Copenhagen. A woman named a Clara
Zetkin (Leader of the ‘Women’s Office’ for the Social Democratic
Party in Germany) tabled the idea of an International
Women’s Day. She proposed that every year in every country there should be a
celebration on the same day – a Women’s Day – to press for their
demands. The conference of over 100 women from 17 countries, representing
unions, socialist parties, working women’s clubs, and including the first three
women elected to the Finnish parliament, greeted Zetkin’s suggestion with
unanimous approval and thus International Women’s Day was the result.
1911
Following the decision agreed at Copenhagen in 1911, International Women’s Day (IWD)
was honoured the first
time in Austria, Denmark,
Germany and Switzerland on 19 March. More than one million women
and men attended IWD rallies campaigning for women’s rights to work, vote, be
trained, to hold public office and end discrimination. However less than a week
later on 25 March, the tragic ‘Triangle Fire’ in New York City took the lives of
more than 140 working women, most of them Italian and Jewish immigrants. This
disastrous event drew significant attention to working conditions and labour
legislation in the United States that became a focus of subsequent International
Women’s Day events. 1911 also saw women’s ‘Bread
and Roses‘ campaign.
1913-1914
On the eve of World War I campaigning for peace, Russian women observed their
first International Women’s Day on the last Sunday in February 1913. In 1913
following discussions, International Women’s Day was transferred to 8 March and
this day has remained the global date for International Wommen’s Day ever since.
In 1914 further women across Europe held rallies to campaign against the war and
to express women’s solidarity.
1917
On the last Sunday of February, Russian women began a strike for “bread and
peace” in response to the death over 2 million Russian soldiers in war. Opposed
by political leaders the women continued to strike until four days later the
Czar was forced to abdicate
and the provisional Government granted
women the right to vote. The date the women’s strike commenced was Sunday 23
February on the Julian calendar then in use in
Russia. This day on the Gregorian calendar in
use elsewhere was 8 March.
1918 – 1999
Since its birth in the socialist movement, International Women’s Day has grown
to become a global day of recognition and celebration across developed and
developing countries alike. For decades, IWD has grown from strength to strength
annually. For many years the United Nations has held an annual IWD conference to
coordinate international efforts for women’s rights and participation in social,
political and economic processes. 1975 was designated as ‘International
Women’s Year‘ by the United Nations. Women’s organisations and governments
around the world have also observed IWD annually on 8 March by holding
large-scale events that honour women’s advancement and while diligently
reminding of the continued vigilance and action required to ensure that women’s
equality is gained and maintained in all aspects of life.
2000 and beyond
IWD is now an official holiday in China, Armenia, Russia, Azerbaijan, Belarus,
Bulgaria, Kazakhstan, Kyrgyzstan, Macedonia,
Moldova, Mongolia, Tajikistan,
Ukraine, Uzbekistan and
Vietnam. The tradition sees men honouring their mothers, wives, girlfriends,
colleagues, etc with flowers and small
gifts. In some countries IWD has the equivalent status of Mother’s
Day where children give small presents to their mothers and grandmothers.
The new
millennium has witnessed a significant change and attitudinal shift in both
women’s and society’s thoughts about women’s equality and emancipation. Many
from a younger generation feel that ‘all the battles have been won for women’
while many feminists from the 1970′s know only too well the
longevity and ingrained complexity of
patriarchy. With more women in the boardroom, greater equality in legislative
rights, and an increased critical mass of women’s visibility as impressive
role models in every aspect
of life, one could think that women have gained true equality. The unfortunate
fact is that women are still not paid equally to that of their male
counterparts, women still are not present in equal numbers in business or
politics, and globally women’s education, health and the violence against them
is worse than that of men.