Contact us at: sooddram@gmail.com

 

நீர்வளத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

உலக நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு 21ம் நூற்றாண்டில் வரு டத்திற்கு வருடம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சமீ பத்தில் இந்தியாவில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் இன்னும் பத்தாண்டு காலத்தில் இந்தியர்கள் பெரும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளது. அயல் நாடான இந்தியாவுக்கு இந்த நிலை என்றால், நாலா பக்கமும் கட லினால் சூழ்ந்துள்ள இலங்கைக்கும் இதுபோன்ற குடிநீர் தட்டுப் பாடு ஏற்படாது என்றும் எவரும் திட்டவட்டமாக கூறமுடியாது.

உலகில் வாழும் மக்கள் அனைவருமே சுற்றாடலுக்கு தீங்கிழைக்கக் கூடிய வகையில் சுயநலநோக்குடன் அபிவிருத்தி என்ற பெயரில் மரங்களை வெட்டுதல், மலைப் பிரதேசங்களில் ஆடம்பர மாளி கைகளை நிர்மாணித்தல் போன்ற பலதரப்பட்ட செயற்பாடுகளும், இந்த குடிநீர் தட்டுப்பாட்டிற்கு உறுதுணை புரிகின்றன.

பொதுவாக, ஆறுகள் மலை உச்சியில் இருந்து வரும் நீரூற்றுகளின் மூலமே உருவாகின்றன. ஆறுகளிலிருந்தே மனிதன் பெரும்பாலும், குடிநீரை பெற்றுக்கொள்கிறான்.

இதனால் தான் இன்று கூட, நாம் நுவரெலியா போன்ற மலைப்பாங்கான பிரதேசத்திற்கு சென்றால், மலையிலிருந்து ஊற்றெடுக்கும் நீரை வெறுமனே குழாய்களை பொருத்தி, மக்கள் குடிப்பதை அவதானிக்க முடியும். அந் நீர் மிகவும் தூய்மையாக நோய் கிருமிகள் அற்ற நீராக இருக்கிறது.

இன்று, இந்த இயற்கையான நீரூற்றுக்களுக்கு பெருமளவில் தீங்கிழைக் கக் கூடிய வகையில் நாம் சுற்றாடலை பேணிப் பாதுகாப்பதற்கு மாறான முறையில் நடந்துகொள்கிறோம். மலையிலிருந்து ஊற்றெடு க்கும் நீரை தங்கு தடையின்றி கீழே வடிந்து ஆறுகளில் சங்கமிப் பதற்கு நாம் பல்வகையான தடைகளையும், விதிக்கின்றோம்.

அவ்விதம், ஆறுகளில் அந்த நீர் சேர்ந்து விடும் போது, மனிதனால் நடத்தப்படும் கைத்தொழில்சாலைகளிலிருந்து நச்சுத்தன்மை வாய் ந்த திரவக் கழிவுகளை மனிதன் ஆறுகள் ஊடாக வெளியேற்று கிறான். இதனால், ஆற்று நீர் அசுத்தமடைகிறது. பின்னர், அந்த நீரை மனிதன் குடிப்பதற்கும், தனது நாளாந்த வாழ்க்கைக்கும் பய ன்படுத்துவதற்கும் முடியாது இருக்கிறது.

இதனால் அரசாங்கம் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நாட்டின் நாலாபக்கங்களிலும் ஏற்படு த்தி, அதில் குளோரின் போன்ற நச்சுத்தன்மையை நீக்கும் திரவ த்தை கலந்து, நீரை மனித பாவனைக்காக சுத்தமாக்குவதற்கு லட் சக்கணக்கான ரூபாவை செலவிடுகிறது.

இவையனைத்தும் மனிதன் சுயநல நோக்கத்தினால் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் பாதகமான விளைவுகளாகும். இன்னும் ஒரு வகையிலும் மனிதன் உலனின் நீர் வளத்தை சூறையாடுகிறான். மழை நீரை நீர்த்தேக்கங்கள், வாவிகள், குளங்கள் மூலம் சேமித்து வைத்து, அதனை பயிர் செய்கைக்கு குறிப்பாக நெற்செய்கைக்கு பயன்படுத்துவதே சம்பிரதான பூர்வமான செய்முறையாகும்.

இப்போது மக்கள் இவ்விதம் இயற்கையான தங்களுக்கு கிடைக்கும் நீர்வளத்திற்கு பதில், 100 அடிக்கு கூடுதலான ஆழமான பாரிய கிணறுகளை தோண்டி, நிலத்திற்கு அடியுள்ள நீரை பம்புகள் மூலம் தனது விவசாய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதுடன், நீரை அனாவசியமான முறையிலும் விரயம் செய்து வருகிறான். இத னால், இலங்கை உட்பட உலக நாடுகளில் நிலத்திற்கு அடியில் தேங்கியிருக்கும் நீர்வளம் வேகமாக குறைந்து கொண்டிருக்கி ன்றது.

வீட்டுப் பாவனைக்கு இலகுவில் குழாய்கள் மூலம், கிடைக்கும் நீரை யும் மனிதன் அநியாயமாக விரயம் செய்வதையும் நாம் எமது நாளா ந்த வாழ்க்கையில் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு மனிதன் ஸ்நானம் செய்வதற்கு 10 முதல் 15 லீற்றர் நீரை பயன்படுத்தினால், அவன் தனது உடலை சுத்தமாக வைத்திருக்கலாம் என்பதை ஆய் வுகள் உறுதிப்படுத்துகின்றன.

எனினும், ஒரு மனிதன் ஸ்நானம் செய் வதற்கு 50 முதல் 75 லீற்றர் நீரை வீணாக்குகிறான். அதுமட்டும ன்றி, குழாயில் கையை கழுவுவதற்கு 1 லீற்றர் அல்லது ஒன்றரை லீற்றர் நீர் போதுமாக இருக்கும். அதற்கும் மனிதன் அளவுக்கதிக மாக நீரை பயன்படுத்துகிறான்.

நாட்டின் கரையோர பகுதிகளில் பாரிய கட்டிடங்களை நிர்மாணிப்பத னால் கடல் அரிப்பு அதிகரித்து கடல் நீர் ஆறுகளில் சங்கமித்து ஆற்றுநீரையும் உவர் நீராக மாற்றிவிடும் ஆபத்தும் இன்றும் இலங் கையில் இருந்து வருகிறது.

எனவே, மக்கள் நீரின் மகத்துவத்தை உணர்ந்து அதனை பாதுகாக்கக் கூடிய வகையில் சுற்றாடலுக்கு தீங்கிழைக்காமல் இருந்தால், இந்தியாவில் இன்னும் பத்தாண்டு காலத்தில் ஏற்படக் கூடியது போன்ற குடிநீர் தட்டுப்பாடு, இலங்கை யிலும் ஏற்படுவதை நாம் தவிர்த்துக்கொள்ளலாம்.

இதேவேளையில், தேசிய நீர்விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை யாழ்ப்பாண பிரதேசத்தில் உள்ள 60,000 குடும்பங்களுக்கு குடிநீரை வழங்கும் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தி வரு வது ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.

மக்கள் தங்கள் சமூக பொறுப்புக்களை உணர்ந்து நீர்வளத்தை எமது எதிர்கால சந்ததியினரின் மேம்பாட்டிற்காக பாதுகாத்து வைப்பதற்கு இன்று திடசங்கல்பம் பூண்டால் மாத்திரமே, இலங்கை இன்னு மொரு வறட்சியினால் வாடும் ஆபிரிக்கா நாடாக மாறுவதை தடு க்க முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com