Contact us at: sooddram@gmail.com

 

சுனாமி ஆபத்து எந்நேரமும் ஏற்படும  என்பதை நாம் மறந்துவிடலாகாது

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ந் திகதியன்று, இலங்கையிலும், தெற்காசிய நாடுகளையும் சின்னாபின்னப்படுத்தி, பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலிகொண்டும் கோடிக்கணக்கான பெறுமதியுடன் சொத்துக்களையும், உடைமைகளையும், கட்டிடங்களையும் அழித்துவிட்ட சுனாமி அனர்த்தத்தை இலங்கை மக்கள் இன்று முற்றாக மறந்துவிட்டார்கள். கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானையும், பசுபிக் சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகளையும் அதனைவிட அதிக பலம் வாய்ந்த சுனாமி ஒன்று பேரழிவை ஏற்படுத்தியது. ஜப்பான் மக்கள், எதற்கும் அஞ்சாத மனோதிடமும், விடாமுயற்சியும் உடைய எறும் பைப் போன்ற சுறுசுறுப்பானவர்கள். 1945ம் ஆண்டில் இரண்டா வது உலக மகா யுத்தத்தின்போது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீது அணுகுண்டை போட்டு பல லட்சக் கணக்கான மக்களை பழிவாங்கி ஜப்பானை சரணடையவைத்தது.

அந்த அணுகுண்டு தாக்குதலின் தாக்கம் இன்னமும் இவ்விரு நகரங்களை அண்டியுள்ள பிரதேசங்களில் வாழும் அப்பாவி ஜப்பானிய மக்களை விட்டுவிலகவில்லை. அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இப்போதும் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

1945ஆம் ஆண்டில் முழு உலகமே ஜப்பான் இனிமேல் தலைதூக்க முடியாது வேதனையில் மூழ்கிவிடும் என்று நம்பியிருந்த போதிலும், அழிவின் சாம்பலிலிருந்து மீண்டெழுந்த ஜப்பானிய மக்கள் விடாமுயற்சியுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்காக இரவு பகலாக கடுமையாக உழைத்தார்கள். அதன் விளைவாக இன்று ஜப்பான் உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக உருவாகி இருக்கிறது.

இன்று, ஜப்பானில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக நாடுகள் எங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் இந்த சுனாமி அழிவிலிருந்தும் ஜப்பான் மீண்டும் பழைய நிலைக்கு மிக விரைவில் வந்துவிடும்.

1940 ஆம் 50ஆம் ஆண்டு தசாப்தங்களில் உலகத்திற்கு தேவையான கார்கள், லொறிகள், பஸ்கள் போன்ற வாகனங்களை அமெரிக்காவும், பிரிட்டனுமே தயாரித்து விற்பனை செய்தன.

இன்று, இவ்விரு நாடுகளில் அந்த வாகன விற்பனை ஏகபோக உரிமையை உடைத்து பலவீனமாக்கி இருக்கும் ஜப்பான், உலக நாடுகள் அனைத்திற்கும் வாகனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நாடாக புகழ் உச்சியில் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.

இலங்கை வாழ் மக்கள் அனைவரும் இன்று தங்கள் வீடுகளிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து, மனநிறைவடைவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்த நாடான ஜப்பானுக்கு கடந்த வாரம் ஏற்பட்ட சுனாமி பேரலை குறித்து, இந்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் பரந்து வாழும் மக்கள் அனைவரும் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளார்கள்.

1980 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு ஜப்பா னிய அரசாங்கம் தனது சொந்த செலவில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை அமைப்பதற்கான சகல தொழில்நுட்ப சேவைகளையும் உருவாக்கியதுடன் நின்று விடாமல், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நூற்றுக்கு மேற்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கு ஜப்பானில் புலமைப்பரிசில் மூலம் தொழில்நுட்பம் பற்றிய அதியுன்னத பயிற்சிகளையும் பெற்றுக்கொடுத்தது.

இவையனைத்தையும் ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஒரு சன்மானமாகவே செய்து கொடுத்தது. இந்த நற்பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஜப்பானிய சக்கரவர்த்திக்கு அனுப்பியுள்ள ஒரு விசேட அனுதாபச் செய்தியில், இலங்கை இவ்வனர்த்தம் குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இந்த அனர்த்தத்திலிருந்து மீள் எழுவதற்கு இலங்கை ஜப்பானுக்கு சகல விதமான உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தை பற்றி இதுவரையில் அதிகமான தகவல்களை உங்களுக்கு எடுத்துரைத்த நாம், ‘பழைய குருடி கதவை திறடிஎன்ற கூற்றை ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

சுனாமி ஏற்பட்டதை அடுத்து, கடற்கரையிலிருந்து நூறு மீற்றருக்கு அப்பால் தான் கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டும் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், இன்று எத்தனை பேர் அதனை கடைப்பிடித்து வருகிறார் என்று நாம் வினவுகிறோம்.

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டதை அடுத்து, மற்ற நாடுகளுக்கும் இதன் தாக்கத்தினால் சுனாமி ஆபத்து ஏற்படலாம் என்று அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை அந்திசாயும் வேளையில் சுனாமி பற்றி எவ்வித அச்சமுமின்றி மக்கள் கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தங்கள் குழந்தைகளுடன் கடற்கரைக்கு சென்று பொழுதை மகிழ்ச்சியோடு கழித்ததை எங்களில் பலரும் அவதானித்திருக்கலாம்.

சுனாமி அனர்த்தம் எந்நேரத்திலும் உலகில் கடற் பிரதேசத்தை அண்டியுள்ள எந்தவொரு நாட்டையும் தாக்கி, பேரழிவை ஏற்படுத்தலாம் என்ற யதார்த்தத்தை உணர்ந்து இலங்கை மக்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையில் அவதானமாக இருந்தால், என்றாவது ஒரு நாள் சுனாமி ஏற்பட்டாலும், நாம் எங்களுக்கு ஏற்படக் கூடிய பேரழிவை அதிகளவில் குறைத்துக்கொள்ளலாம் என்ற நற்செய்தியை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com