Contact us at: sooddram@gmail.com

 

தமிழீழத்தை அழித்து தன்னை வளர்க்கும் கனடா தேசியத் தொண்டர்

கனடா ஈழத்தமிழினத்தின் இரண்டாவது தாயகம். அங்கே தேசியத்தின் குரலாக நாம் நினைத்து இருந்தவர் சொல்வதைக் கேட்க ஏன் எமது இனம் தோற்றுப் போனது என்பது விளங்குகிறது. நெஞ்சு பொறுக்கிதில்லை இந்த விதி கெட்ட மாந்தரை நினைத்து.... என்று விம்மியள வேண்டும் போலிருக்கிறது. விடுதலைப்புலிகள் முற்றாக அழிந்து விட்டார்களாம். இனி அவர்களது கதையே தேவையில்லையாம். உலகத்தமிழர் இயக்கம் வன்முறை சார்ந்த அமைப்பாம். இப்படி நெஞ்சு கூசாமல் பொய் சொல்பவர்கள் வேறு யாருமல்ல. தேசியத் தலைவரின் வழிகாட்டலில் வந்தவர்கள் என்று இப்போதும் எங்களுக்கு கூறிக் கொண்டிருக்கிற கயவர்கள் தான்.

அந்தப் பத்திரிகை இந்த அரசியல் ஆலோசகரைப் பேட்டி கண்டிராவிட்டால் எதுவுமே எங்களுத் தெரிய வந்திருக்காது. இன்னமும் இவர் ஒரு தமிழ்த்தேசிய வீரர் என்று நம்பியிருப்போம். தமிழர்களுக்கு ஒரு முகம். ஏனையவர்களுக்கு இன்னொரு முகம். தமிழர்களிற்கு போராட்டத்தை வளர்க்கிறோம். நாங்கள் தான் தேசியத் தலைவரின் வாரிசுகள் என்று கூறி, எங்கே எந்த மேடை கிடைக்கிறது என்று பார்த்து கண்ணீர் வடிய வீரம் பேசுவது இவர் தன்னை வளர்ப்பதற்கான யுக்தி.

மற்றையவர்களிற்கு புலிகள் அழிந்து விட்டார்கள். புலிகளால் தான் இவ்வளவு அழிவும். இனி அவர்களைப் பற்றிக் கதைக்க வேண்டாம் என்று உண்மையான முகத்தைக் காட்டும் நியதி. இறைவா தமிழ்ச்சாதியை என்ன சொல்லிப் படைத்தாய்? புலிகள் முடிந்து விட்டார்களாம். அவர்கள் இப்போது கதைப்பதற்கான ஒரு பொருளேயல்லவாம். பெற்ற தாயை விற்பவனை விடக் கேவலமான ஒரு கதை கதைப்பவர் எங்களிற்கு வழிகாட்டியாம்.

2 சதுரக் கிலோமீற்றருக்குள் முள்ளிவாய்க்காலில் எங்கள் உறவுகள் அடையுண்டு கிடந்த போது சமயோசிதமாக போய் கனடாக் கட்சிகளுடன் கதைத்து மக்களைக் காப்பாற்ற மண்றாடுங்கள் என்றோம். அதை மறுத்து மாணவ சமுதாயம் அமெரிக்க தூதுவராலயத்தின் முன் தொடர்ச்சியாக நடத்தி வந்த போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக உண்ணாவிரதம் என்ற பூச்சாண்டியை ஏற்படுத்தியவர்.

ஆனால் மற்றப்பக்கமாக நாங்கள் இங்கே அரசியற்கட்சிகளுடன் பேசி புரட்சி செய்து விட்டோம் என முள்ளிவாய்க்கால் வரை எமது தலைமையை மயக்கி அழைத்து வந்ததே இவ்வாறான பொய்யர்கள் தான். விடுதலைப்புலிகளிற்காக ஊண் மறந்து உறக்கம் மறந்து தேசியத் தொண்டாற்றும் தொண்டர்களை கொண்டு மக்களவையை நிறுவி விட்டு அந்தத் தொண்டர்களையே தேசியத்திற்கு எதிராகப் பாவிக்கும் கபடத்தை என்னவென்று சொல்ல?

மக்களவையே தேசியத்தை வலுப்படுத்த என்று ஆரம்பித்து விட்டு அதிலுள்ளவர்களை விடுதலைப்புலிகளிற்கும் தேசியத்திற்கும் எதிராக செயற்படு, பொய் சொல்லு என்று பணித்தவரை துரோகி என்பதை விட எப்படிச் சொல்வது?

கப்பலில் வந்த எமது மக்களிற்காக அகதிகள் கவுன்சில் என்று ஆரம்பித்து காசு சேர்த்தவர்களே யாருக்கும் தெரியால் உள்ளால் களவாகக் கடிதம் கொடுத்ததிற்கு இவரே காரணம். யாரால் முடியும் "வாருங்கள் எங்கள் மக்களே" என்று இரு கரம் நீட்டி அகதிகளை வரவேற்பது போல நடித்துக் கொண்டு மறைமுகமாக அந்த அகதிகளை ஐந்து வருடம் சிறை வைக்க வழி செய்யும் சட்டத்திற்கு வரவேற்று ஆதரவுக் கடிதம் கொடுக்க?

யுத்தக்குற்றம  நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு சிறையிருக்கும் போராளிகளையும் மக்களையும் கைவிட்டு விடுதலைப்புலிகளையே தூற்றுவதை என்னவென்று கூற?

உலகத்தமிழர் பத்திரிகை போடும் தொண்டர்களைக் கொண்டு தமிழ் மக்களிற்கு போராடுகிறோம் என்று ஒரு கதை. அவர்களை வைத்தே மக்களவை என்ற பெயரில் விடுதலைப்புலிகளிற்கு எதிரான பிரச்சாரம்.

விடுதலைக்காக பணியாற்ற வந்தவர்களைப் பொய் பேசச் சொல்லி முழுப் பொய்யர்களாக மாற்றிய இந்த மனிதர் எமது இனத்திற்கு ஒரு சாபக்கேடு.

தன்னைத் தலைவனாகக் காட்டுவதற்காக தேசியத்தை நேசிக்கும் மக்களிற்கு நல்லவனாக நடித்ததைத் காலம் இப்போது வெளிக்கொண்டு வந்துள்ளது.

தான் யதார்த்தவாதியாம். இறுதிப் போரில் நடந்ததைத் திரும்பிப் பார்க்க முடியாதாம். இனி புலிகள் இல்லையென்று நினைத்துச் செயலாற்ற வேண்டுமாம்.

இவர் ஒரு உண்மை மனிதனாக இருந்தால், ஒரு உணர்வுள்ள தமிழனாக இருந்தால் இதை மாவீரர் நாள் நிகழ்வில் முதன்மை உரை நிகழ்த்தும் போது சொல்லியிருக்கலாமே?புலிகள் அழிந்து விட்டார்களாம். புலிகளால் வளர்ந்து புலிகளையே பாவித்து இன்று இந்த நிலைக்கு வந்தவர் புலிகள் அழிந்து விட்டார்களாம். தான் எப்போதுமே விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கவுமில்லை. இனியும் இருக்கப் போவதுமில்லையாம்.

அரசியல் துணைக்குழுவில் தேசியத் தலைவருடன் பங்கேற்றேன் என்ற பெருமை கதைத்தவர். அரசியல் துணைக்குழுவின் ஐரோப்பிய விஜயக் குழு 14 உறுப்பினர்களில் ஒருவர் என இருந்தவரே இப்போது தான் எப்போதும் விடுதலைப்புலிகளில் இருக்கவில்லையாம். இதைவிடத் துரோகம் என்ன இருக்கிறது?

எமது மக்களுக்கான வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இன்றுவரை எமது மக்களிற்கு சொல்லி வந்தது எல்லாம் பொய்தானே? எவ்வளவு போலியாக நடந்திருக்கிறார் இந்த மனிதர்? மாவீரர் நாளில் தனது திருமணத்தை நடத்தியவர் இவர் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது கணக்கெடுத்திருந்தால் இதுவரை நிலமை போயிருக்காது. மாவீரர்களிற்காக மனமுருகியழுது வழிபடும் நாளில் மதுவுடன் விருந்து வைக்க யாரால் முடியும்? இவரால் முடிந்தது.

இனிமேல் விடுதலை பற்றிக் கதைக்கும் தகுதியை இவர் தனது பேட்டியின் மூலமே இழந்து விட்டார். இனி மாவீரர்களின் எந்த மேடையிலும் இவர் ஏறுவதற்குத் தகுதியுடையவர் அல்ல. இளையவர்களை பொய் கூறுங்கள் என்று கூறி தன்னைப் போலவே பொய்யனாக்கும் இந்த மனிதர் எமது சமூகத்திற்கு முன்னுதாரணம் அல்லர்.

 எவராவது இந்த நபர் எப்போதாவது உண்மையாக கதைக்க எங்களை அனுமதித்திருக்கிறாரா என்று யோசித்து பாருங்கள்? எங்களைப் பொய் சொல்லச் சொன்னதே தன்னிடம் இவ்வளவு பொய் இருக்கிறது என்பதற்காகத் தான். ஒரு தேசவிரோதி எப்படி தேசியவாதியாக நடிக்கலாம் என்பதற்கு இவர் புலம்பெயர்ந்த நாடுகள் எல்லாவற்றுக்கும் உதாரணம்.

The Tigers – which he pronounced “done and gone”. // “People like me, we’re very practical people; there’s no point in going back at what happened wrong in the past because it’s not going to help you,” // “[The Tigers] are not a factor any more, but the Tamil factor is still lingering large.” // Mr. Gunaratnam mentioned as an aside that he, too, took a phone call from KP, the Tiger leader, after the war ended. He said he rebuffed an invitation to work for the new leader. // “I said, ‘No, sorry, I’m not going to work for anyone [with the Tigers] because I didn’t do it before, either,’” he said. // “I’m not going to be part of those politics at all; that’s a very clear stand that I always have.”// [Nehru Gunaratnam to the Globe and Mail]

இவற்றைத் தானே புலிகளின் 'துரோகிகள்' 25 வருடங்களாக சொல்லி வந்தார்கள். அதனாலேயே புலிகளால் 'துரோகிகள்' கொல்லப்பட்டார்கள் - உளறுவாயன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com