Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது சனல் 4 ஆவணப்படம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் இரண்டாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரச படையினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த வீடியோ நேற்று ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கையின் கொலைக்களம்தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்ற இந்த ஆவணப்படம்  60 நிமிடங்களை கொண்டது. நாளை மறுதினம் சனல் 4 தொலைக்காட்சியில் இது ஒளிப்பரப்பாக உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பதற்கு சில வீடியோ ஆதாரங்கள் இப்படத்தில் காண்பிக்கப்படுகின்றன.

இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரமாக இப்புதிய வீடியோ அமையும் என்று நம்பப்படுகின்றது. யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற கொடூரங்களை முன்னெப்பொழுதும் இருந்திராத வகையில் இது வெளிப்படுத்துகின்றது.
சிறிலங்கா அரச படையினரால் போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் புரியப்பட்டு இருக்கின்றன என்பதை தடவியல் புலனாய்வு விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தி ஆதாரங்கள் வெளியிட்டு உள்ளனர் என்கிறார் இதனை தயாரித்திருக்கும் ஸினோ.அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற படுகொலைகளுக்கு ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும், ஏனெனில் போரில் ஈடுபட்ட தளபதிகளுக்கு கட்டளை இடுகின்ற உயரிய நிலையில் இவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று சொல்கின்றார் ஸினோ.
ஆதாரங்களை வெளியிட வேண்டியமை ஊடகவியலாளர்களின் கடமை, முறையான புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டியதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதும் ஐ.நா, சர்வதேச சமூகம் ஆகியவற்றுக்கு உரியது என அவர் கூறியுள்ளார்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?, படுகொலைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? என்பதை அக்காலப் பகுதிக்கு உரித்தான ஆவணங்கள், கண்கண்ட சாட்சிகள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஆகியன மூலம் ஆராய்ந்து இருக்கின்றார்.
ஐக்கிய
நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.


வீடியோவில் காண்பிக்கப்படுகின்ற மிகப் பயங்கரமான காட்சிகளில் ஒன்றாக பாலச்சந்திரன் பிரபாகரனின் உடல் வேட்டுக்களால் சல்லடைப் போடப்பட்டிருக்கின்றமையை கூற முடிகின்றது. பாலச்சந்திரன் ஐந்து தடவைகள் சுடப்பட்டு இருக்கின்றார், போர்க் கடமையின்போது இறந்து இருக்கவில்லை என்று தடயவியல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் டெரிக் பௌன்டர்  ுகைப்பட ஆதாரத்தை வைத்து உறுதிப்படுத்தி இருக்கின்றார். இரண்டு அல்லது மூன்று அடி தூரத்துக்கு உள்ளாக இருந்துதான் பாலச்சந்திரனின் நெஞ்சு மீது சூடுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன,  எதிரில் நீட்டப்பட்டு இருந்த துப்பாக்கியை கைகளால் பாலச்சந்திரன் தொட்டு இருந்திருக்கின்றார், காயப்பட்டமையுடன் பின்னோக்கி விழுந்து இருக்கின்றார். அதன்
பின்புதான் இரு குண்டுகள் துளைத்து இருக்கின்றன என்று தெரிகிறது என இப்பேராசிரியர் கூறுகின்றார்.

துப்பாக்கிதாரி முன்னால் நின்று சுட்டு இருக்கின்றான், பாலச்சந்திரன் முதலாவது சூட்டை அடுத்து நிலத்தில் விழுந்து விட்டார், எனவே  படுகொலை இடம்பெற்று இருக்கின்றமையில் சந்தேகம் இல்லை என்கிறார் பேராசிரியர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலையில் காயப்பட்டு இறந்து இருக்கின்றமையை காட்டுகின்றன உத்தியோகபூர்வமற்ற முறையில் சனல் 4 இற்கு கிடைக்கப் பெற்று இருக்கின்ற போட்டோக்கள்.
இவரது உடல் முதலில் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டபோது தலைப் பகுதி துணியால் மறைக்கப்பட்டு இருந்தது. முதலில் உடுப்புடனும், பின் ஆடைகள் களையப்பட்டும், பின் சேறு பூசப்பட்டும் பிரபாகரனின் உடல் படங்களில் உள்ளது. பிரபாகரன்
படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார் என்றே பேராசிரியர் இப்புகைப்பட ஆதாரங்களை வைத்து நம்புகின்றார்.

அதி விசை கொண்ட துப்பாக்கி ஒன்றால் பிரபாகரனின் தலையில் சுடப்பட்டு இருக்கின்றது, சிறிய துப்பாக்கி ஒன்றால் களமுனைப் போரில் தலையில் சூடு பட்டு காயம் ஏற்படுதல் என்பது மிக மிக அபூர்வமாக இடம்பெற கூடியது, அசைய முடியாது இருந்த நிலையில் சூடு பட்டு இருக்கின்றார் என்கிற முடிவுக்கு வர முடிகின்றது என்கிறார் பேராசிரியர்.
தமிழ் கைதிகளின் கைகளை கட்டுதல், ஆடைகளை களைதல், தலையின் பின்பகுதியில் சுடுதல் ஆகியன  படுகொலை செய்கின்றமைக்கு முன் படையினர் பொதுவாக மேற்கொள்கின்ற நடைமுறைகள் ஆகும் என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com