|
||||
|
இன்னொரு "கொலவெறி' விடியோ இன்னொரு
"கொலவெறி'
விடியோ யூடியூப் இணையதளத்தை
ஆக்கிரமித்திருக்கிறது. இரண்டு மூன்று
நாள்களில்
சுமார் 5 கோடி பேருக்கு
மேல் இந்த
விடியோவை
பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், கொலவெறி
விடியோவைப்
போல் இல்லாமல்,
இந்த முறை
அரசியல், மனித உரிமை
போன்ற நோக்கங்களுடன்
இந்த விடியோ
இண்டர்நெட்டில்
உலா வருகிறது.
விடியோவின் பெயர் கோனி 2012. அது என்ன கோனி? கோனி "அது' அல்ல,
அவர். உகாண்டா, சூடான்,
தெற்கு சூடான், டி.ஆர்.காங்கோ
ஆகிய நாட்டு
ராணுவங்களைக்
கடந்த 20 ஆண்டுகளாக
நடுங்கச்
செய்த நக்சல் அமைப்பின்
தலைவரின்
பெயர்தான்
கோனி. முழுப் பெயர் ஜோசப் கோனி.
அவரது எல்.ஆர்.ஏ.
எனப்படும்
கடவுளின்
தடுப்புப்
படையினர்
செய்த மனித உரிமை
மீறல்களைப்
பற்றியது
யூடியூப்
விடியோ. "இன்விசிபிள்
சில்ரன்' என்கிற தன்னார்வ அமைப்பு உருவாக்கியிருக்கும்
இந்த 27 நிமிட
விடியோ, கோனியை கொடூரமானவராகச்
சித்திரிக்கிறது.
கொலைவெறி பிடித்தவர்
என்று கூறுகிறது.
கிட்டத்தட்ட சாத்தான்
என்கிறது.
60 ஆயிரத்துக்கும்
அதிகமான குழந்தைகளைக்
கடத்தி சித்திரவதை
செய்தார்,
சண்டையில்
ஈடுபடுத்தினார்,
கொலை செய்தார்,
பெண்களை மானபங்கம்
செய்தார்,
மக்களைக்
கொன்றார்
என்பதெல்லாம்
கோனி மீதான
குற்றச்சாட்டுகள். கோனியின் ஆள்கள்
என்றாலே குழந்தைகள்
நடுங்குவார்களாம்.
நள்ளிரவு
நேரங்களில்
கிராமங்களில்
உள்ள வீடுகளுக்குள்
புகுந்து
கையில் சிக்கும் குழந்தைகளையெல்லாம்
தூக்கிச்
சென்று விடுவது எல்.ஆர்.ஏ.வின்
வழக்கம் என்று கூறப்படுகிறது.
வீட்டில்
தூங்கப் பயந்த குழந்தைகள்,
அருகிலுள்ள
நகரங்களிலுள்ள
மடங்களிலும்
உறவினர் வீடுகளிலும்
இரவு நேரங்களைக்
கழித்துவிட்டு,
காலையில்தான்
வீடுகளுக்குத்
திரும்புவார்களாம். இதையெல்லாம் செய்த எல்.ஆர்.ஏ.வின்
நோக்கம் என்ன என்று
கேட்டால்
ஆளாளுக்கு
ஒவ்வொன்றைச்
சொல்கிறார்கள்.
உகாண்டா அரசு அகோலி இன
மக்களைப்
புறக்கணிக்கிறது
என்கிற கோஷத்துடன்
தொடங்கிய
இந்த அமைப்பு
பின்னாளில்
கிறிஸ்தவ
மத அடிப்படைவாதத்தில்
சிக்கியிருக்கிறது. ஒரு கட்டத்தில்
கோனியின்
செயல்பாடுகளுக்கு
மக்கள் மத்தியில்
பேராதரவு
இருந்ததாகவும்,
பின்னாளில்
மக்களையே
துன்புறுத்தத்
தொடங்கியதால்,
அவரைக் கண்டு மக்கள்
அஞ்சத் தொடங்கிவிட்டார்கள்
என்கிறார்கள். தனிநாடு, ஆட்சி, அதிகாரம் என்ற எந்த
வகையான கொள்கையும்
கோனியிடம்
இல்லை என்பதுதான்
வியப்பு.
எந்த நோக்கமும்
இல்லாமல்,
அவர் வெறுமனே
அரசுகளையும்,
ராணுவங்களையும்
எதிர்த்துச்
சண்டையிட்டார்
என்கிறார்கள்.
சண்டையிடுவதும், மக்களைக்
கொல்வதும்
அவருக்குப்
பொழுது போக்குப் போல. சர்வதேச நீதிமன்றத்தில்
கோனியின்
வழக்கு கடந்த 2005-ம் ஆண்டில் வந்தது. அவர் ஒரு போர்க்குற்றவாளி
என்று அறிவிக்கப்பட்டார்.
ஆனால் ஆள் அகப்படவில்லை.
அவர் எங்கு இருக்கிறார்
என்பதிலேயே
சர்ச்சை நிலவி வருகிறது.
உகாண்டாவில்தான் இருக்கிறார்
என்றும், அவர் அங்கு
இருக்க வாய்ப்பே இல்லை என்றும்
இருவிதமான
கருத்துகள்
இருக்கின்றன. இப்படியொரு
கொடூரமான
மனிதரையும்
அவரது இயக்கத்தின்
கொடுமைகளையும்
உலக மக்களுக்குத்
தெரிவிக்க
வேண்டும்
என்பதுதான்
தங்களது நோக்கம் என்று "இன்விசிபிள்
சில்ரன்' அமைப்பு கூறுகிறது.
அதன் ஒருபகுதியே
"கோனி 2012' விடியோ. தெருத்தெருவாகப் பிரசாரம்
செய்வதற்குப்
பதிலாக இணையத்தில்
வைரஸ் போல பரவச்
செய்துவிட்டார்கள்
அவ்வளவுதான். இந்த விடியோவை,
பில் கேட்ஸ்
முதல் பராக் ஒபாமா
வரை பெரும்பாலான
பிரபலங்கள்
ஏற்கெனவே
பார்த்து
விட்டார்கள்.
அமெரிக்கப் பள்ளிகளில்
இதுபற்றி
வகுப்பறை
விளக்கம்
நடத்தப்படுகிறது.
வெள்ளை மாளிகையிலிருந்து
வெளிப்படையான
பாராட்டுப்
பறந்து வருகிறது.
பேஸ்புக்கும், டுவிட்டரும்
"ஸ்டாப் கோனி' என்கிற
குறியீட்டால்
நிரம்பி வழிகின்றன.
இவ்வளவு விளம்பரம்
எதற்கு? வலுவான ராஜதந்திரப்
பின்புலம்
இருக்கிறது.
பின் லேடனைப்
பிடித்தார்களே,
அவர்களைப்
போன்ற 100 வீரர்களைக்
கொண்ட அமெரிக்கப்
படையை கடந்த நவம்பரில்தான்
கோனியைப்
பிடிப்பதற்காக
பராக் ஒபாமா உகாண்டாவுக்கு
அனுப்பியிருந்தார்.
இதன் தொடர்ச்சியே,
"இன்விசிபிள்
சில்ரன்' அமைப்பு வெளியிட்டிருக்கும்
விடியோ. இதில் வேடிக்கை
என்னவென்றால்,
ஒரு காலத்தில்
அச்சுறுத்தும்
அமைப்பாக
இருந்த எல்.ஆர்.ஏ. இப்போது பயந்து ஓடும் குழுக்களாகச்
சிதறியிருக்கிறது.
முன்பு குழந்தைகளையும்
ஆள்களையும்
கடத்திக்
கொண்டிருந்ததாகக்
கூறப்படுவோர்
எல்லோரும்,
இப்போது வீடுகளுக்குள்
புகுந்து
உணவுப் பண்டங்களைத்
திருடிச்
செல்கிறார்களாம்.
அந்த அளவுக்கு
"காணாமல்
போய்க் கொண்டிருக்கும்'
ஓர் அமைப்பையும்
அதன் தலைவரையும்,
ஹிட்லர், பின்லேடன்
அளவுக்கு
திடீரென பரபரப்பாக்குவது
ஆச்சரியத்தைத்
தருகிறது. பஞ்சம், பட்டினிச்
சாவுகள், இன மோதல்கள்,
நாட்டுக்குள்ளேயே
பல பிரிவினைகள்,
ஸ்திரமற்ற
அரசுகள் என ஆப்பிரிக்காவின்
அரசியல் மிகவும் சிக்கலானது.
நாடுகளையும் புவியியல்
அமைப்பையும்
கடந்தது. பிற நாடுகளில்
செல்லுபடியாகும்
நியாயங்கள்
அங்கு ஏற்புடையதாக
இல்லாமல்
போகலாம்.
அப்படியிருக்கையில்,
ஓர் அமைப்புக்கு
எதிராக, ஊடக தர்மங்களையெல்லாம்
காற்றில்
பறக்கவிட்டு
இத்தகைய
"வைரஸ்' பிரசாரத்தை
மேற்கொண்டிருப்பது
ஏன் என்பதுதான்
அதிர்ச்சியை
ஏற்படுத்தியிருக்கிறது. பொருளைச் சந்தைப்படுத்துவதற்குப்
பயன்படும்
உத்தியை, நீதி வழங்குவதற்குப்
பயன்படுத்தினால்
எப்படி? (தினமணி) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |