|
||||
|
சாவெஸ் என்ற 'ஆளுமை'
ஹுகோ
சாவெஸ் உச்சரிக்க
கடினமான பெயர்தான். ஆனால்,
அதுவே பலருக்கு
கசப்பான பெயரும்
கூட. தனது சர்ச்சைச்குரிய
பேச்சு மற்றும்
செயலால் சர்வதேச
ஊடங்களில் எப்போதும்
இடம் பிடித்துவந்த
வெனிசுவெலா ஜனாதிபதி
ஹுகோ சாவெஸ் மரணமடைந்து
விட்டார். சாவெஸ்
என்ற தலைவன் இல்லாவிட்டால்
வெனிசுவெலா என்ற
நாடு உலக வரை படத்தில்
எங்கே இருக்கிறது
என்பது கூட பலருக்குத்
தெரியாமல் இருந்திருக்கும்.
இராணுவ புரட்சி
ஒன்றில் வெற்றி
பெற்று ஆட்சியை
கைப்பற்றுவதை
பொதுவாக பார்த்திருக்கிறோம்.
ஆனால் அரசை
கவிழ்க்கும் புரட்சியில்
தோற்றால் கூட ஆட்சியை
கைப்பற்ற முடியும்
என்பதை சாவெஸின்
கதையில்தான் பார்க்கிறோம்.
1954ஆம் ஆண்டு
ஜூலை 28ஆம் திகதி
பிறந்த சாவெஸ்,
நாட்டின் இராணுவ
அகடமியில் பட்டப்படிப்பை
முடித்து சம்பிரதாயமான
இராணுவ வீரராக
தனது வாழ்நாளை
கடத்தினார். ஆனால் அவருக்குள்
அரச எதிர்ப்பு
சிந்தனை ஒன்று
மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
இதனால்
1980களிலேயே அவர்
புரட்சிப் படை
ஒன்றை உருவாக்கி
இருந்தார். அந்த படையின்
பெயர் சுருக்கம்
எம். பி. ஆர். 200 என இருந்தது.
இந்த
புரட்சிக்கதையை
பார்க்கும் முன்னர்
வெனிசுவெலா எங்கே
இருக்கிறது என்று
பார்த்தால் சாவெஸ்
என்ற ஆளுமையை புரிந்துகொள்ள
முடியும். உலகின் எல்லா
இடங்களிலும் மூக்கை
நுழைக்கும் அமெரிக்கா
எட்டிபார்க்கும்
தூரத்தில்தான்
தென் அமெரிக்கா
இருக்கிறது. ஆனால் உலகில்
அமெரிக்காவால்
மூக்கை நுழைக்க
முடியாத பகுதியாகத்தான்
இன்றுவரை தென்
அமெரிக்கா அல்லது
லத்தீன் அமெரிக்கா
இருந்து வருகிறது.
அடிக்கடி இராணுவ
புரட்சிகள், ஆயுதப்
புரட்சிகள், கிளர்ச்சியாளர்கள்,
போதைக் கடத்தல்காரர்கள்,
சேகுவெரா, பிடெல்காஸ்ட்ரோ
என்று எல்லாம்
ஒன்றாக கலந்து
அமெரிக்காவுக்கு
அயலில் இருக்கும்
பிராந்திய நாடுகள்
எப்போதும் தலையிடியாக
இருக்கின்றன. இதிலே
தென் அமெரிக்காவின்
மேற்கு கடற்கரை
பகுதியில் மேற்காக
கொலம்பியாவும்,
கிழக்காக கயானாவும்
தெற்காக பிரேசிலும்
எட்டிப்பார்க்க
நடுவில் அமெரிக்காவை
அன்னாந்து பார்த்தபடி
இருக்கும் நாடுதான்
வெனிசுவெலா. இதுவல்ல
முக்கியம். வெனிசுவெலாவில்
எண்ணெய் இருக்கிறது.
அதுவும் உலகில்
அதிக எண்ணெய் ஏற்றுமதி
செய்யும் நாடுகள்
வரிசையில் வெனிசுவெலா
10ஆவது இடத்தில்
இருப்பதோடு அது
நாளொன்றுக்கு
2,399,020 பீப்பாய் எண்ணெய்யை
உலகிற்கு எற்றுமதி
செய்கிறது. இந்த எண்ணெயே
போதும் வெனிசுவெலா
பக்கம் ஆதிக்க
சக்திகள் மூக்கை
நுழைக்க. ஆனால்,
அதற்கு தடையாக
இருந்தவர் இந்த
சாவெஸ் என்ற மனிதர்தான். இனி
சாவெஸின் புரட்சியை
விட்ட இடத்திலிருந்து
பிடிப்போம். அது விரிவாக
சொல்லும் அளவுக்கு
பெரிய புரட்சி
ஒன்றுமில்லை.
புரட்சிப்படையை
உருவாக்கி வாய்ப்பு
வரும்வரை காத்திருந்த
சாவெஸ் அதன்படி
1992ஆம் ஆண்டு பெப்ரவரி
4ஆம் திகதி புரட்சி
நாடகத்தை நடத்த
ஆரம்பித்தார்.
ஆனால் அது சொதப்பி
விட்டது. இதன்
விளைவாக சாவெஸ்
சிறைப்பட்டு கம்பி
எண்ணிக்கொண்டிருந்தார்.
ஆனால்
உள்நாட்டில் அவருக்கு
ஆதரவான சிந்தனை
ஒன்று எழுந்தது. இந்த சந்தர்ப்பத்தில்
இந்த ஆள் தமக்கு
பிரச்சினையாகப்போவதில்லை
என எண்ணிய அரசு
இரண்டு ஆண்டுகளில்
சிறையில் இருந்து
விடுவித்தது.
சிறையில் இருந்து
ஒரு புரட்சி வீரனாக
வெளியே வந்த சாவெஸ்,
1994ஆம் ஆண்டு இடதுசாரி
சிந்தனையுடனான
கட்சியை ஆரம்பித்தார்.
இதனைக் கொண்டு
1998ஆம் ஆண்டு இடம்
பெற்ற ஜனாதிபதி
தேர்தலில் வெற்றிபெற்று
1999இல் ஜனாதிபதியாக
பொறுப்பேற்று
கடந்த வாரம் தான்
மரணமடையும் வரையான
14 ஆண்டுகாலத்தில்
நான்கு ஜனாதிபதி
தேர்தலில் வென்று
ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.
இந்த 14 ஆண்டுகளில்
சாவெஸ் தேசிய அளவில்
நடந்த ஒரே ஒரு
தேர்தலில் மாத்திரம்தான்
தோல்வியை சந்தித்தார்.
அடுத்த எல்லா
தேர்தல்களிலும்
வென்று அசைக்க
முடியாத தலைவராக
வாழ்ந்து காட்டினார். அமெரிக்காவை
திட்டினார். அமெரிக்க எதிரிகளுடன்
கைகுலுக்கினார்.
இதனைத் தவிர
இந்த ஆள் என்ன
செய்தார் என்று
சாவெஸை மேலோட்டமாக
பார்ப்பவர்கள்
எண்ணக்கூடும். தனது
தலைமுறையில் லத்தீன்
அமெரிக்க நாடுகளுக்கு
முன்மாதிரியாக
இருந்தவர் சாவெஸ்தான். அவரை தனது வாரிசு
என கியூபாவின்
ஒய்வுபெற்ற புரட்சித்
தலைவர் பிடெல்காஸ்ட்ரோ
எப்போதுமே கூறிவந்தார்.
சாவெஸ் எப்போதும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
எதிரான வலுவான
மாற்று கூட்டணி
ஒன்றை உருவாக்க
போராடியவர். லத்தீன்
அமெரிக்காவில்
இடதுசாரிகள் புரட்சியின்றி
தேர்தல் மூலம்
வெற்றி பெறலாம்
என்பதற்கு சாவெஸ்
முன்னுதாரணமாக
இருந்தார். உலக
அரங்கில் எப்போதுமே
ஆத்திரமூட்டும்
வகையில் பேசுவதிலும்
அமெரிக்காவுக்கு
எதிரான ஈரான் போன்ற
நாடுகளுடன் கூட்டு
சேர்வதிலும் சாவெஸ்
மும்முரமாக ஈடுபட்டுவந்தார். 1998ஆம்
ஆண்டுக்கு முன்னர்
லத்தீன் அமெரிக்க
நாடுகளில் இடதுசாரிகள்
தேர்தல் மூலம்
வெற்றிபெறுவது
கனவாக இருந்தது. ஆனால் சாவெஸின்
வெற்றிக்கு பின்னர்
அங்கு இடது சாரிகளுக்கு
தோல்விபெற முடியாத
நிலை இருந்தது.
பிரேஸில், ஆர்ஜன்டீனா,
உருகுவே, பரகுவே,
இக்வடோ, பெரு என
அனைத்து நாடுகளிலும்
இடது சாரி தலைவர்களுக்கு
மக்கள் வாக்களித்தார்கள்.
அனைத்து தலைவர்களிடமும்
ஹ¥கோ சாவெஸின்
தாக்கம் இருந்தது.
இதனை
ஆய்வாளர்கள் இளஞ்சிவப்பு
புரட்சி என்று
செல்லமாக அழைத்தார்கள். பொதுப்படையாக
வறுமை, அநீதியை
ஒழிப்பது லத்தீன்
அமெரிக்க அரசியல்
அலையின் முக்கிய
சாராம்சமாக இருந்தது. அதோடு
உப்புச் சேர்ப்பது
போல் அமெரிக்க
தலையீட்டை விமர்சிப்பதும்
இருந்தது. சாவெஸின்
வழித்தோன்றல்களாக
பொலிவியவின் ஜனாதிபதி
எவோ மொராலஸ், இக்வடோரின்
ரபெல் கொரயா மற்றும்
ஆர்ஜன்டீன தலைவர்களான
நெஸ்டோ, கிறிஸ்டீனா
கிறிச்னர் ஆகியோரை
குறிப்பிடலாம். கொலம்பியாவை
பொறுத்தவரை சாவெஸ்
பார்க் கிளர்ச்சியாளர்களுக்கு
ஆதரவு அளித்ததால்
அவரது தாக்கம்
அங்கு மாத்திரம்
குறைவாக இருந்தது. சாவெஸ்
உள்நாட்டில் கடைப்பிடித்த
பொருளாதார கொள்கைக்கு
புதிய பெயரை சூட்டினார். அதுதான் ‘21ஆம்
நூற்றாண்டின்
சமவுடைமை” வெனிசுவெலா
சாவெஸுக்கு முன்னர்
மோசமான உள்நாட்டு
உற்பத்தியை கொண்ட
நாடாக இருந்தது.
ஆனால் கடந்த
தசாப்தத்தில்
லத்தீன் அமெரிக்காவில்
5ஆவது மிகப்பெரிய
பொருளாதார வளர்ச்சி
கொண்ட நாடு வெனிசுவெலாதான். வெனிசுவெலாவின்
90 வீதமான வெளிநாட்டு
செலாவணி எண்ணெய்
மூலமே கிடைக்கிறது. இந்த எண்ணெய்
வருவாயின் பெரும்
பகுதியை அரசு வறிய
மக்களுக்காகவே
ஒதுக்கியது. குறிப்பாக கல்வி,
சுகாதாரம், வீடமைப்பு
திட்டங்களை அரசு
அறிமுகப்படுத்தி
மக்களின் வாழ்க்கை
தரத்தையும் உயர்த்தியது.
இதனால் கடந்த
ஒரு தசாப்தத்தில்
வெனிசுவெலாவில்
வறியோரின் எண்ணிக்கை
கணிசமாக குறைந்தது.
கியூப
புரட்சி இன்றுவரை
தொடர்வதற்கு சாவெஸும்
காரணம் என்று ஒரு
வகையில் சொல்லலாம். சாவெஸ் புரட்சித்
தலைவர் பிடெல்காஸ்ட்ரோவை
தனது தந்தை ஸ்தானத்தில்
இருந்துதான் பார்த்துவந்தார்.
சாவெஸ்,
கியூபாவுக்கு
சந்தையைவிடவும்
குறைந்த விலையில்
எண்ணெய் வழங்கினார். இதனால் அங்கு
சமூக பொருளாதார
பிரச்சினை ஏற்படாமல்
இன்றுவரை பாதுகாக்கப்பட்டு
வருகிறது. இதற்கு
கைமாறாக சாவெஸின்
வறியோர் திட்டங்களுக்கு
கியூபா தனது ஆயிரக்கணக்கான
சுகாதார பணியாளர்களை
அனுப்பி வந்தது. இதுமட்டுமல்லாது
தனது பெருந்தன்மை
காரணமாக சாவெஸ்
வறிய கரீபிய நாடுகளுக்கும்
குறைந்த விலைக்கு
எண்ணெய் வழங்கி
வந்தார். அதேபோன்று அவர்
பிராந்திய நாடுகளை
ஒன்று திரட்டி
பாரிய சக்தி ஒன்றை
உருவாக்கும் கனவிலும்
இருந்தார். தென்
அமெரிக்க நாடுகளின்
ஒன்றியம், அமெரிக்காவின்
பொலிவெரிய கூட்டணி,
லத்தீன் அமெரிக்க
கரீபிய நாடுகளின்
கூட்டணி என்று
அவர் பல்வேறு கூட்டணிகளையும்
தோற்றுவித்து
அமெரிக்காவுக்கு
எப்போதும் தலையிடி
கொடுத்தார். சாவெஸின்
முயற்சி பிராந்திய
நாடுகளுடன் நின்று
விடவில்லை. அமெரிக்க எதிர்ப்பு
எண்ணெய் வள நாடுகளையும்
அவர் தன் பக்கத்திற்கு
இழுக்க முயற்சித்தார்.
குறிப்பாக
கடாபி தலைமையிலான
லிபியா, அஹமதிநஜாத்தின்
ஈரான் மற்றும்
சிரியா போன்ற நாடுகளுடன்
கட்டிப்பிடித்து
கைகுலுக்கிக்
கொண்டார். இதனால்தான்
அரபு எழுச்சி ஆரம்பமானபோது
சாவெஸ், கடாபிக்கும்
பஷர்அல் அஸாத்திற்கும்
ஆதரவாக குரல் கொடுத்தார். இந்த அரபு புரட்சி
அமெரிக்காவின்
சதி என்று அவர்
குற்றஞ்சாட்டினார். இந்த
எதிர்வினை ஆதரவுக்கு
அவர் அரபு பழமொழியான,
“எனது எதிரியின்
எதிரி எனது நண்பன்”
என கூறி நியாயம்
கற்பித்தார். இதற்கு சாவெஸ்
விமர்சகர்கள்
ஸ்பெயின் பழமொழியான,
“நீ யாரிடம் வேலை
செய்கிறாய் என்று
மட்டும் சொல்.
நீ யார் என்பதை
நான் சொல்கிறேன்”
என்று கூறி கிண்டலடித்தனர். ஹுகோ
சாவெஸின் எதிர்ப்பு
பேச்சுகளும் உலக
அளவில் பிரபலமானது. 2006ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருக்கும்
ஐ.நா தலைமையகத்தில்
வைத்து அப்போதைய
அமெரிக்க ஜனாதிபதி
ஜோர்ஜ் டபிள்யூ
புஷ்ஷை “பேய்” என
திட்டினார். “பேய் தற்போது
வீட்டில் இருக்கிறது.
பேய் நேற்று
இந்த இடத்துக்கு
வந்தது. சரியாக
இந்த இடத்திற்கே
வந்தது. அதன்
கந்தக வாசம் இப்போதும்
நுகர முடிகிறது”
என சாவெஸ் ஐ.நா
மேடையில் குறிப்பிட்டார். பின்னர்
2009ஆம் ஆண்டு புஷ்
ஆட்சியில் இருந்து
வெளியேறி ஒபாமா
வந்த போது ஐ.நா
சபையில் உரையாற்றிய
சாவெஸ் “கந்தக
வாசம் இனி எப்போதும்
இல்லை” என கூறினார். இதேபோன்று
2006ஆம் ஆண்டு சாவெஸ்
தேசிய தொலைக்காட்சியில்
உரையாற்றும் போது
கூட புஷ்ஷை விட்டுவைக்கவில்லை. அதிலே அவர், “நீ
ஒரு அறிவிலி, நீ
ஒரு கழுதை, நீ எனது
மோசமான ஆங்கில
உச்சரிப்பு, அபாயகரமானவனே
நீ ஒரு கழுதை” என
வார்த்தைகளை அடிக்கிக்
கொண்டு சென்றார். அதேபோன்று
புஷ் அரசில் அமெரிக்க
இராஜாங்க செயலாளராக
இருந்து கொன்டலிசாரைஸ்,
சாவெஸ், சின்ன
பெண், எனவே அழைத்துவந்தார். கொன்டலிசாரைஸ்
2006 இல் வெனிசுவெலா
பிராந்திய ஜனநாயகத்திற்கு
அச்சுறுத்தலாக
இருப்பதாக விமர்சித்தார்.
அதற்கு சாவெஸ்
தனது வாராந்த தொலைக்காட்சி
உரையில் பதில்
கூறும்போது, “சின்ன
பெண்ணே ஞாபகம்
வைத்துக்கொள்!
நான் பூமரத்தில்
இருக்கும் முட்கள்.
என்னை மோதிக்கொண்டு
செல்லபவர்களை
முட்களால் குத்துவேன்.
என்னை கோபப்படுத்தாதே
கொன்டலிசா... என்னை
கோபப்படுத்தாதே”
என்றார். இவ்வாறு
சர்ச்சையை கிளப்பும்
வார்த்தைகளை அடிக்கடி
வெளிப்படுத்தும்
சாவெஸ் ஒபாமாவை
நேரடியாக சந்தித்து
அன்பளிப்பும்
வழங்கி இருக்கிறார்
என்றால் நம்புவீர்களா? 2009ஆம் ஆண்டு டிரினிடாட்
டொபாகோவில் லத்தீன்
அமெரிக்க கூட்டத்தில்
பங்கேற்க ஒபாமா
போன்றே சாவெஸும்
வந்திருந்தார்.
அப்போது தனக்கு
தனது கைப்பட எழுதிய
புத்தகத்தை சாவெஸ்
வழங்கியதாக ஒபாமா
கூறினார். 2010ஆம்
ஆண்டு சாவெஸ் தனது
முக்கியமான உரையொன்றின்
இடையில் திடீரென
பாட ஆரம்பித்தார். அதில் அவர் “நான்
ஹிலாரி கிளின்டனை
காதலிக்கவில்லை.
நான் ஒருபோதும்
ஹிலாரியை காதலிக்கவில்லை”
என்று தன் பாட்டுக்கு
பாடினார். அமெரிக்க
இராஜாங்க செயலாளராக
இருந்த ஹிலாரி
இக்வடோர் தொலைக்காட்சியில்
சாவெஸுக்கு எதிராக
கூறியதற்கு பதிலாகவே
அவர் இவ்வாறு பாடினார். சாவெஸ்
தனது பிராந்திய
நாட்டு தலைவர்களையும்
விமர்சித்திருக்கிறார். மெச்சிக்கோ
தலைவர் பிசன்ட்
பொக்ஸை அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின்
நாய்க்குட்டி
என்றார். பின்னர்
2010ஆம் ஆண்டு மெக்சிக்கோவில்
நடந்த ரியோ குழு
மாநாட்டில் கொலம்பிய
ஜனாதிபதி அல்விரோ
யுரிபெஷவுடன்
நேருக்கு நேராக
மோதினார். தன்னை கொல்ல
முயற்சிப்பதாகவும்
இந்த மாநாட்டில்
இருந்து வெளியேற்ற
முயற்சிப்பதாகவும்
அல்விரோ மீது குற்றம்
சாட்டினார் சாவெஸ்.
பொறுத்திருக்க
முடியாத அல்விரோ,
“மனிதனாக நடந்து
கொள்ளுங்ள்! தூரத்தில் இருக்கும்போது
தைரியமாக பேசுவதும்
நேருக்கு நேர்
சந்திக்கும்போது
பயப்படுவதும்
உங்களுக்கு பழக்கமாகிவிட்டது.
இந்த மாநாட்டில்
அது தொடர்பாக மட்டும்
பேசுங்கள்” என்று
உரக்க கத்தினார்.
கோபமடைந்த
சாவெஸ், “நரகத்திற்கு
போ” என்று கத்த
வாக்குவாதம் முடிந்தது.
சாவெஸ்
இஸ்ரேலையும் விட்டுவைக்கவில்லை. 2006இல் இஸ்ரேலின்
லெபனான் தாக்குதலுக்கு
எதிராக கடுமையாக
விமர்சித்த சாவெஸ்
அதனுடன் எந்த உறவையும்
வைத்துக்கொள்ளப்போவதில்லை
என அறிவித்தார்.
“இஸ்ரேலுக்கு
பைத்தியம் பிடித்துவிட்டது”
என்றும் அவர் விமர்சித்தார். மறுபுறத்தில்
சிம்பாப்வே தலைவர்
றொபட் முகாபேவை
உலகமே விமர்சிக்கும்போது
2004ஆம் ஆண்டு ஜி15 மாநாட்டில்
பங்கேற்க வெனிசுவெலா
வந்த முகாபேவுக்கு
‘சுதந்திர போராளி’
என்ற கேடயம் வழங்கி
கெளரவித்தார்.
இவ்வாறு சாவெஸ்
எப்போதும் உலகின்
மாற்று குரலாக
இருந்து வந்திருக்கிறார். சாவெஸ்
எப்போதும் கூறும்
குற்றச்சாட்டுத்தான்
தன்னை ஆட்சி கவிழ்க்க
அமெரிக்கா சதி
செய்வது என்பது. 2002ஆம் ஆண்டு சாவெஸுக்கு
எதிரான ஆர்ப்பாட்டம்
வெடித்ததோடு அதனோடு
அவருக்கு ஆதரவான
ஆர்ப்பாட்டமும்
இடம்பெற்றது.
இதனால் கடைசியில்ஏற்பட்ட
கலவரத்தில் 20பேர்
பலியாயினர். 110 பேரளவில் காயமடைந்தனர். இந்த
பதற்றத்திற்குள்
சாவெஸிற்கு எதிரான
உயர்நிலை இராணுவ
அதிகாரிகள் ஒரு
இராணுவ புரட்சியையே
செய்துவிட நெருக்கடி
தாங்காமல் சாவெஸ்
பதவி விலக உடன்பட்டார். ஆனால் அவர் உத்தியோகபூர்வமாக
ராஜினாமா செய்ய
மறுத்துவிட்டார்.
இந்த இடைவெளியில்
தொழிலதிபரான பெட்ரோ
கர்மொனா தம்மை
இடைக்கால ஜனாதிபதியாக
அறிவித்துக்கொண்டார்.
அவர் அரசியலமைப்பை
இரத்துச் செய்து
அரசை முன்னெடுக்க
சிறு குழுவை அமைத்தார். ஆனால்
சாவெஸ், ஆதரவு
ஆர்ப்பாட்டங்கள்
கட்டுக்கடங்காமல்
போய்விட்டன. நிலைமையை கட்டுப்படுத்த
முடியாத நிலையில்
இடைக்கால ஜனாதிபதியாக
அறிவித்த கர்மொனா
பதவி விலகினார்.
சாவெஸ் மீண்டும்
ஆட்சிக்கு வந்தார். இந்த
சதிக்கு சொந்தக்காரர்
அமெரிக்கா என்று
சாவெஸ் அடிக்கடி
கூறி வந்தார். அத்துடன் தனது
மரணத்திற்கு காரணமான
புற்று நோய் கூட
அமெரிக்காவின்
சதி என அவர் குற்றம்
சாட்டினார். லத்தீன் அமெரிக்க
நாட்டு தலைவர்கள்
பலருக்கு புற்று
நோய் ஏற்பட்டது.
இது அமெரிக்க
உளவுப் பிரிவான
சி.ஜ.ஏ வின் சதி
என குற்றஞ்சாட்டினார். எப்படியோ
உலகத்தை ஒரு குலுக்கு
குலுக்கிய சாவெஸ்
இன்று இல்லை. சாவெஸ் இல்லாத
வெனிசுவெலா, எப்படி
இருக்கும். லத்தீன் அமெரிக்கா
ஏன் உலகம் எப்படி
இருக்கும். ஹுகோ சாவெஸ்
மரணமடைந்ததையடுத்து
அந்நாட்டு அரசு
30 தினங்களில் தேர்தலை
வைக்க திட்டமிட்டுள்ளது.
சாவெஸின் வழித்தோன்றலாக
துணை ஜனாதிபதி
நிகொலஸ் மடுரோ
ஜனாதிபதியாக போட்டியிடவுள்ளார்.
சாவெஸ் கடைசியாக
சத்திர சிகிச்சை
செய்து கொள்ள கியூபா
செல்லும் முன்னர்
50 வயதான மடுரோவை
தலைவராக ஏற்கும்படி
நாட்டு மக்களுக்கு
கூறிவிட்டே சென்றார். அடுத்த
தலைவராக இருக்கும்
மடுரோ முன்னர்
பஸ் ஓட்டுனராக
இருந்தவர். தடித்த மீசை
வைத்த மடுரோ 2006ஆம்
ஆண்டு வெளியுறவு
அமைச்சராக நியமிக்கப்பட்டு
பின்னர் துணை ஜனாதிபதியாக
உயர்ந்தவர். சாவெஸ்
சிறையில் இருக்கும்போது
அவரை விடுவிக்க
தேசிய அளவில் பிராசாரத்தில்
ஈடுபட்டவர்களில்
மடுரோ முன்னணியில்
இருந்தார். அமைதியான மனிதர்
என வர்ணிக்கப்படும்
இவர், ராஜதந்திர
ரீதியில் சாவெஸிலிருந்து
வித்தியாசப்பட்டவர்
என நம்பப்படுகிறது. ஆனால்
அவர் சாவெஸை போன்றே
கியுபாவுடன் நெருங்கிய
உறவு கொண்டவர். சாவெஸின் வழிகாட்டலை
பின்தொடர்வதாக
அவர் அறிவித்திருக்கிறார். ஆனால்
சாவெஸ் என்ற மிகப்
பெரிய ஆளுமை இல்லாதது
அமெரிக்க சார்புடைய
அந்நாட்டு எதிர்க்கட்சிகளுக்கும்
சாதகமாக இருக்கும். இப்போது வெனிசுவெலா
மற்றும் பிராந்திய
நாடுகளுக்கு திருப்பு
முனைக்கான இடைவெளி
ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க
சார்புடையவர்கள்
ஒருபக்கம்... சாவெஸ்
தோற்றுவித்துவிட்டு
போன நவீன இடது
சாரி கொள்கையுடையவர்கள்
மறுபக்கம்... யார்
சந்தர்ப்பத்தை
பயன்படுத்துகிறார்கள்
என்று பொறுத்திருந்து
பார்ப்போம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |