சாத்தான் வேதம் ஓதினால்
சந்தேகம் வர வேண்டாமா?
(உ.
வாசுகி)
இலங்கை
ராணுவத்துக்கும்
விடுதலை புலிகளுக்கும்
இடையே நடந்த இறுதிக்
கட்ட ஆயுத மோதலில்,
மிகக் கடுமையான
மனித உரிமை மீறல்கள்
நடந்துள்ளன. இப்
பின்னணியில் இலங்கை
அரசு, சர்வதேச
அழுத்தத்துக்கு
அடி பணிந்து, சுயேச்சை
யான, உயர்மட்ட,
நம்பகத்தன்மையுள்ள
விசா ரணையை நடத்த
முன் வர வேண்டும்.
குற்ற வாளிகள்
தண்டிக்கப்பட
வேண்டும். மறு பக்கம், இனப்
பிரச்னைக்கு அரசியல்
தீர்வு, மீள் குடியமர்த்தப்பட்ட
தமிழ் மக்களுக்கு
மறு வாழ்வு போன்ற
சம கால, எதிர்காலத்
தேவை கள் உறுதி
செய்யப்பட வேண்டும்.
இதுவே மார்க்சிஸ்ட்
கட்சியின் நிலைபாடு.
ஜெனிவா மனித உரிமை
கவுன்சிலில், இந்தியா
இத்த கைய வாதத்தை
முன் வைத்து, இலங்
கைக்கு நிர்ப்பந்தம்
கொடுக்க வேண்டும்
என் பதையும் இந்த
நேரத்தில் கட்சி
வலியுறுத்து கிறது.
இதற்கிடையே,
அமெரிக்கா கொண்டு
வரும் மனித உரிமை
மீறல் குறித்த
தீர்மானத் தைச்
சுற்றி விவாதம்
நடந்து கொண்டிருக்
கிறது. தமிழகத்தில்
உள்ள சில அமைப்புகள்,
ஒபாமா தலையிட வேண்டும்
எனக் கோரு கிறார்கள்.
அமெரிக்காவை
மனித உரிமை பாதுகாவலராகக்
கருதி முன் வைக்கப்படும்
இக்கோரிக்கை மிக
அபாயகரமானது.
அமெ ரிக்க ஏகாதிபத்தியத்
தலையீட்டின் அரசி
யலை நாம் புரிந்துகொள்ள
வேண்டியிருக்
கிறது. வரலாற்றின்
வழி நெடுகிலும்,
மனித உரிமைகளை
அப்பட்டமாகக்
காலில் போட்டு
மிதித்தே வளர்ந்த
சக்தி அல்லவா அமெரிக்கா?
ஒபாமா, ஜார்ஜ்
புஷ், கிளிண் டன்,
கார்ட்டர், ரீகன்
போன்ற தனிநபர்களைத்
தாண்டி, ஏகாதிபத்தியத்தின்
அடிப்படை நோக்கமே
ஆக்கிரமிப்பும்,
அத்துமீறல்களும்
தானே? தமது நலனுக்காக
ஒப்பந்தங்களைப்
போட வைப்பதும்,
அதே நலனுக்காக
போட்ட ஒப்பந்தங்களைக்
கிழித்தெறிந்து
குப்பைத் தொட்டிக்கு
அனுப்புவதும்
ஏகாதிபத்திய நாடு
களின் வாடிக்கை
தானே? சவுதி
அரேபியா, இஸ்ரேல்
போன்ற நட்பு நாடுகளின்
படு மோசமான மனித
உரிமை மீறல்கள்
குறித்து அமெரிக்காவோ,
ஐரோப்பிய வல்லரசுகளோ
இது வரை தீர்மானம்
கொண்டு வராத ரகசியம்
என்ன? பின்லேடன்
போன்ற பலரை, அமெ
ரிக்க ஏகாதிபத்தியம்,
தனது நலன் கருதி
வளர்த்துவிட்டு,
அவர்களின் வன்கொடுமை
களையும், மனித
உரிமை மீறல்களையும்
ஊக்குவித்து, உதவி
செய்து, பின்னர்
தன் வர்க்க நலனுக்குப்
பலனில்லை என்று
தெரிந்தவுடன்,
அவர்களை பயங்கரவாதிகள்
என்று முத்திரை
குத்தி, போட்டுத்
தள்ளிய நடவடிக்கைகளை
அவ்வளவு சுலபமாக
மறந்து விட முடியுமா?
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
ரத்தக் கறை படிந்த
வரலாறைச் சுருக்கமாகப்
பார்ப் பது, ஆடு
நனைகிறதே என்று
(அமெரிக்க) ஓநாய்
ஏன் அழுகிறது என்ற
கேள்வியின் நியா
யத்தை உணர்ந்து
கொள்ள உதவும்.
கொலம்பஸ் போட்ட
ஆக்கிரமிப்பு
விதை
அமெரிக்கா மட்டுமல்ல இன்றுள்ள முன்
னேறிய முதலாளித்துவ
நாடுகள், குறிப்பாக
ஏகாதிபத்திய நாடுகளின்
வரலாறுகள் ஆக்கிரமிப்புகளால்
ஆனவை தான். கொலம்
பசும் அவரது குழுவும்,
1492ல் அமெரிக்கக்
கண்டத்தில் கால்
பதித்தனர். இது
தற்செய லானதல்ல.
ஐரோப்பிய முதலாளித்துவ
வளர்ச்சி மற்றும்
விரிவாக்கத்தின்
ஒரு பகு தியாக,
செல்வம் தேடி,
தங்கம் தேடி, வளங்
கள் தேடி அலைந்த
பயணக் குழுவாக
அதைப் பார்க்கலாம்.
கொலம்பஸ் குழுவினர்,
அங் கிருந்த பூர்வகுடிகளான
செவ்விந்தியர்களை
அடிமைகளாக ஸ்பெயினுக்கு
ஏற்றுமதி செய்
தனர். அவர்களது
தங்க வயல்களைக்
கபளீ கரம் செய்தனர்.
கொலம்பசும், அவருக்குப்
பின் அது போன்று
வந்தவர்களும்
2 ஆண்டு களில், தூக்கிலிட்ட,
கொலை செய்த, எரித்த,
சிதைத்த, தற்கொலைக்குத்
தள்ளிய செவ் விந்தியர்களின்
எண்ணிக்கை 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது.
இத்தகைய ஆக்கிரமிப்புகள்,
அமெரிக்கக் கண்டத்தின்
பல்வேறு இடங்களில்
நடைபெற்றன. ஐரோப் பிய கண்டத்திலிருந்து
வேலை தேடியும்
பலர் இப்படி வந்தனர்.
அமெரிக்க கண்டத்
தின் பல பகுதிகளில்
பல நூறாண்டுகளாக
வாழ்ந்த மக்களை,
இனப் படுகொலை செய்து,
ஐரோப்பாவின் பல
பகுதிகளிலிருந்து
மற்ற இனத்தவர்கள்
குடியேற்றப்பட்டனர்.
எது நாகரீகம்?
அட்லாண்டிக்
சமுத்திரத்தின்
கட லோரம் துவங்கி,
பசிபிக் சமுத்திரக்
கரை வரை, அத்தனை
பூர்வ குடியினரையும்
அழித் தொழித்து,
அமெரிக்க சாம்ராஜ்யம்
ஸ்தாபிக் கப்பட்டது.
இதற்கு சுமார்
300 ஆண்டுகள் பிடித்தன.
இந்த 300 ஆண்டுகளும்
உலகமே அதிர்ந்து
போகிற அளவுக்கான
கொடுமை கள் மனித
குலத்தின் மீது
தொடுக்கப்பட்டன.
1830ல், அமெரிக்க அதிபராக
இருந்த ஜாக் சன்,
பல்லாயிரக் கணக்கான
ஏக்கர் நிலப் பரப்பில்
இருந்த காட்டுமிராண்டிகளை
வெளியேற்றிவிட்டு,
நாகரீகமான வெள்ளை
இன மக்களை அடர்த்தியாகக்
குடியேற்று வது
தான் அமெரிக்காவின்
நோக்கம் என்று
பகிரங்கமாக அறிவித்தார்.
அமெரிக்காவின்
எல்லை கள் இப்படித்தான்
விரிவடைந்தன.
விரிவாக்கத் திற்
காக, உள்ளூர் மக்
கள் மீது படு கொலைகள்,
உயி ருடன் எரிப்பு,
ஏமாற்று வேலை,
மோசடி, பெண் கள்
மீது சொல்ல முடியாத
பாலியல் வன்கொடுமைகள்
கட்டவிழ்த்து
விட ப்பட்டன. நாகரீகம்
சொல்லிக் கொடுக்கி
றோம் என்ற பெயரிலும்,
உயர்ந்த தத்துவம்,
நாகரீகம், ஞானம்,
மனிதாபிமானம்,
சுதந்திரம், ஆண்மை
உடைய உயர் இனம்
முன்னேறு வது தான்
உலகத்துக்கு நல்லது
என்ற பெய ரிலும்
கொடுமைகள் நடந்தன.
இன்று ஜன நாயகம்
சொல்லிக் கொடுக்கிறோம்
என்ற பெயரில் பல
நாடுகளுக்குள்
அமெரிக்க ஏகாதிபத்தியம்
நுழைவதற்கு, அன்றே
அச்சாரம் போடப்பட்டுவிட்டது.
அமெரிக்க ஊடகங்கள்
மற்றும் வெகுஜன
பொதுப் புத்தி
யின் ஒரு பகுதியாக
இது மாறிவிட்டது.
அண்டை நாடுகளை
ஆக்கிரமித்து
தன் ஆளுகைக்குள்
கொண்டு வருவதற்கு
முத லாளித்துவ
வணிக நலனும், லாப
நோக்கமும் தான்
அடிப்படை காரணமாக
இருந்தன. உதா
ரணமாக, கியூபாவைப்
பற்றிச் சொல்லும்
போது, கியூபாவில்
1 கோடி ஏக்கர் செழிப்பான
வனப் பகுதி உள்ளது.
இங்குள்ள மரங்களின்
ஒவ்வொரு அடியும்,
அமெரிக்காவில்
பெரும் லாபம் கொடுக்க
வல்லது என்று அமெரிக்க
பத்திரிகைகள்
எழுதின. அன்றைக்கு
நிலம், மரம் போன்ற
பொருட்களாக இருக்கலாம்,
இன்றைக்குப் பெட்ரோலியமாக
இருக்கலாம். ஆக்கிரமிப்பின்
நோக்கம் ஒன்றே.
பிற நாட்டுத் தலைவர்கள்
அரசியல் படுகொலை
செய்யப்படுவது
அமெரிக்காவின்
உளவு நிறுவனமான
சிஐஏ, ஏகாதிபத்திய
நலனுக்கும், கொள்ளை
களுக்கும் விரோதமாக
இருக்கக் கூடியவர்க
ளுக்கு, குறிப்பாக
ஆட்சி அதிகாரத்தைக்
கைப்பற்றினாலும்,
கைப்பற்றும் நிலையில்
செல்வாக்குடன்
இருந்தாலும் அவர்களுக்கு
நாள் குறித்து
விடும். கடந்த
காலத்தில், சிஐ
ஏவின் இத்தகைய
பல சதிகள் அம்பல
மாகியுள்ளன. சம்பந்தப்பட்ட
நாட்டில் உள்ள
கூலிப்படைகள்,
போதைப் பொருள்
வியா பாரிகள்,
சமூக விரோதிகளுடன்
கூட்டு சேர்ந்து,
அரசியல் கொலைகளை
சிஐஏ அரங்கேற்றும்
என்பது ஊரறிந்த
ரகசியம். அமெரிக்க
அரசு, சிஐஏ, லாப
வெறி அமெரிக்க
நிறுவனங்களுக்கும்
ராணுவத்துக்கும்
உள்ள நெருக்கமான
பிணைப்பு (இது
ராணுவத் தொழில்
கூட்டமைப்பு என்று
அழைக்கப் படுகிறது)
ஆகியவை இதில் மையப்
பங்கு வகிக்கின்றன.
பிடல் காஸ்ட்ரோ
மீது பல முறை கொலை
முயற்சிகள் நடந்துள்ளன.
ஈரான் நாட்டு எண்ணய்
வளங்களை நாட்டு
நலன் கருதி நாட்டுடமையாக்கிய
மொஸ் ஸாதெக், காங்கோவின்
பேட்ரிஸ் லுமும்பா,
டொமினிகன் குடியரசின்
ரஃபேல் ட்ரூ ஜில்லோ,
சிலியின் ரீனே
ஷ்னீடர், புரட்சி
யாளர் சேகுவேரா,
பின்னாளில் அலெண்டே
என்று படுகொலை
செய்யப் பட்ட ஏழை
நாடு களின் ஏகாதிபத்திய
எதிர்ப்பாளர்கள்,
தேச பக்தர்களின்
ஒரு நீண்ட பட்டியல்
உள்ளது.. இத்தாலியில்
இருந்த வலுவான
கம்யூ னிஸ்ட் கட்சியின்
ஆதரவோடு ஆட்சி
அமைக்க முயற்சித்த
குற்றத்துக்காக
இத் தாலியின் கிறிஸ்தவ
ஜனநாயகக் கட்சியின்
தலைவர் அல்டோ மோரோ
கொலை செய்யப் பட்டார்.
ஆப்கானிஸ்தானில்
டாக்டர் நஜி புல்லா
தூக்கிலிடப்பட்டார்.
அண்மையில்
காலமான பாலஸ்தீன
விடுதலை இயக்கத்
தலைவர் யாசர் அராஃபத்
கொலை செய்யப் பட்டிருக்கலாம்
என்ற சந்தேகம்
எழுந் துள்ளது.
முற்போக்குவாதிகளாக
இல்லா விட்டாலும்
ஏகாதிபத்தியத்துடன்
முரண்டு பிடிப்பவர்கள்,
ஒத்துப் போகாதவர்களும்
ஏரா ளமாகக் கொலை
செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பிற நாடுகளில்
உள்ள அரசுகள் ஒத்து
வராவிட்டால், அவற்றுக்குப்
பல பெயர்கள் சூட்டி,
அவற்றைக் கீழே
இறக்கி பொம்மை
அரசுகளை உட்கார
வைப்பதிலும் அமெ
ரிக்காவை அடித்துக்
கொள்ள யாராலும்
முடி யாது. லத்தீன்
அமெரிக்க நாடுகள்,
அமெ ரிக்காவின்
இந்த அநீதிகளை
சகிக்க முடி யாத
அளவு சந்தித்திருக்கின்றன.
டொமினி கன்
குடியரசில் 4 முறை
தலையீடு செய்த
துடன், 8 ஆண்டுகள்
அமெரிக்க துருப்புகள்
அங்கு நிறுத்தி
வைக்கப் பட்டன.
ஹைத்தி யில்
1915 துவங்கி 19 ஆண்டுகள்
துருப்புகள் நிறுத்தி
வைக்கப் பட்டன.
1900- 1933 கால கட்டத்தில்
கியூபாவில் 4 முறையும்,
பனா மாவில் 6 முறையும்,
குவாதமாலாவில்
ஒரு முறையும்,
ஹோண்டுராசில்
7 முறையும், நிகரகுவாவில்
2 முறையும் ராணுவத்
தலை யீடுகள் உட்பட
அமெரிக்காவின்
தலையீடு இருந்திருக்கிறது.
ஆட்சிக் கவிழ்ப்புகளும்
அரங்கேறியுள்ளன.
இன்றைக்கும்,
பல நாடுகளில் அமெரிக்க
துருப்புகள் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று வரை அமெரிக்க
அரசின் தலையீடுகளும்
பல நாடு களின்
உள்நாட்டு விவகாரங்களில்
தொடர் கின்றன.
தற்போது லத்தீன்
அமெரிக்க பிரதேசத்
தில், 11க்கும் மேற்பட்ட
நாடுகளில் இடது
சாரி அரசுகள் அமைந்திருப்பது
தற்செயலா னதல்ல.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மீதும், அதன் கைப்பாவை
அரசுகள் மீதும்
உள்ள மக்களின்
கோபம் இந்நிலையை
உரு வாக்கியுள்ளது.
அதே சமயம், வெனிசுலா
அதிபர் சாவேசின்
புற்றுநோய் காரணமான
மரணத்தை ஒட்டி,
லத்தீன் அமெரிக்க
பிர தேசத்தில்
ஆட்சியிலிருக்கும்
இடதுசாரி தலைவர்களில்
4,5 பேருக்குப்
புற்று நோய் என்பதிலும்
அமெரிக்காவின்
கை இருக்குமா என்ற
சந்தேகம் உருவாகியுள்ளது.
ரசாயன யுத்தத்தில்
கை தேர்ந்தது தான்
அமெரிக்க ஏகாதிபத்தியம்
என்பதை மறந்து
விடக் கூடாது.
சர்வ தேச விதிமுறைகளைக்
காலில் போட்டு
மிதிப்பது
வியட்நாமின் மீதான
அமெரிக்காவின்
30 ஆண்டு கொடூர யுத்தம்,
ஏஜெண்ட் ஆரஞ்சு
உள்ளிட்ட ரசாயன
ஆயுதங்களைப் பயன்
படுத்தி, பல தலைமுறைகளுக்குப்
பாதகம் செய்த செயல்கள்
எல்லாம் சாதாரண
மனித உரிமை மீறல்களா?
5 லட்சம் குழந்தைகள்
ஊனமடைந்ததும்,
ஊனத்துடன் பிறந்ததும்
மன்னிக்கக் கூடிய
குற்றங்களா? ஜப்பானின் மீது
அணுகுண்டுகளைப்
போட்டு மனிதப்
பேரழிவை ஏற்படுத்தியது
லேசான விஷ யமா?
கியூபா உள்ளிட்ட
நாடுகள் மீது பல்
லாண்டு பொருளாதாரத்
தடை விதித்ததன்
விளைவாக ஏற்பட்டுள்ள
பாதகங்கள் கொஞ்சநஞ்சமா?
ஆனால் வீர வியட்நாம்
அமெரிக்காவை விரட்டியடித்தது.
சின்னஞ் சிறு
சோஷலிச கியூபா,
சவால் விட்டு நின்று
காட்டியது. ஆனால், அமெரிக்க
ஏகாதிபத் தியத்தின்
இத்தகைய வன்கொடுமைகளை
எந்த சர்வ தேச
நீதிமன்றம் என்ன
செய்ய முடிந்தது?
எந்த மனித உரிமை
கவுன்சி லால் நடவடிக்கை
எடுக்க முடிந்தது?
ஐநா சபையால்
என்ன தலையீடு செய்யப்
பட்டது?
ஆக்கிரமிப்புக்கு
ஆதரவு
பாலஸ்தீனத்தை
சின்னாபின்னப்
படுத்தி, இஸ்ரேல்
உருவாகவும், இன்று
வரை இஸ்ரேல் நடத்தும்
மிகக் கொடுமையான
ஆக்கிரமிப்புத்
தாக்குதல்களுக்கும்
அமெ ரிக்க அரசும்,
இதர சில மேற்கத்திய
நாடு களும், பக்கபலமாக
இருந்து வருகின்றன.
தங்களது சொந்த
நாட்டிலிருந்து
பாலஸ் தீனிய அரபு
மக்கள் கூட்டம்
கூட்டமாக வெளியேற்றப்
பட்டனர். கிட்டத்
தட்ட 1 கோடி பேர்
வெளியேற்றப் பட்டதாகக்
கூறப்படு கிறது.
பல்லாயிரக்
கணக்கானோர் கொன்று
குவிக்கப் பட்டனர்.
இஸ்ரேல், ஆக்கிரமிப்பு
பகுதிகளை விட்டு
வெளியேற வேண்டு
மென்று பலமுறை
ஐநாவின் பாதுகாப்பு
கவுன்சிலில் தீர்மானங்கள்
முன் மொழியப் பட்டன.
இது வரை, 39 முறை,
அமெரிக்கா தன்
மறுப்பு அதிகாரத்தைப்
பயன்படுத்தி இஸ்ரேலைக்
காப்பாற்றியிருக்கிறது.
ஐநா சபையால்
என்ன செய்து விட
முடிந்தது?
இல்லாத பேரழிவு
ஆயுதங்களைத் தேடுவதாக
இராக்கில் நுழைந்து,
நாசம் செய்து படுகொலைகளை
அமெரிக்க அரசு
நிகழ்த்தியது.
5 ஆண்டு யுத்தத்தில்
12 லட்சம் இராக்கியர்கள்
கொல்லப் பட்டிருக்கின்றனர்.
இது இராக்கின்
மக்கள் தொகையில்
5 சதவிகிதம்
. பலர் ஊனமுற்றுள்ளனர்.
20 லட்சம் பேர்
(மக்கள் தொகையில்
13சத விகிதம்) அகதிகளாகி
அண்டை நாடுகளில்
அவலத்துடன் உள்ளனர்.
45 லட்சம் பேர்
அனாதைகளாகி விட்டனர்.
அதே சமயம், பேரழிவு
ஆயுதங்களை இஸ்ரேல்
வைத் திருப்பது
வெளிப்படையாகத்
தெரிந்தும், அமெரிக்கா
கண்டு கொள்ளாமல்
இருக் கிறது.
தற்போது சிரியாவில்
பயங்கரவாத அமைப்புகள்
உள்ளிட்ட கலகக்
காரர்களுக்கு
அமெரிக்காவும்,
அதன் நட்பு நாட்களும்
நிதி, ஆயுதம், பயிற்சி
என்று சகலமும்
அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் அப்பாவி
சிரிய மக்கள்
60,000 பேர் வரை கொல்லப்
பட்டு, 5 லட்சத்துக்கும்
மேற்பட்டவர்கள்
அண்டை நாடுகளில்
அகதிகளாகப் போய்
சேர்ந்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில்
தாலிபான்களை வளர்த்து
விட்டு, தற்போது
அவர்களை அழிக்கிறோம்
என்ற பெயரில்,
அமெரிக்கா ஏராளமான
துருப்புகளை அங்கு
நிறுத்தி வைத்திருக்கிறது.
பல்லாயிரம்
பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலோர்
அப்பாவி மக்கள்
தான். 6 சுய அதிகாரம்
பெற்ற குடியரசுகள்
ஒன்றிணைந்த யூகோஸ்லாவியாவில்,
சோவியத் யூனியன்
சிதறுண்ட பிறகு,
ரத்த ஆறு ஓடியதற்கும்,
இனப் படுகொலைகள்
நடந்ததற்கும்
அமெ ரிக்க அரசின்
பங்களிப்பு பிரதான
காரணம்.
விசாரணை என்ற பெயரில்
போர் கைதிகள் மீது
அமெரிக்க ராணுவம்
நடத்தும் சித்ரவதைகள்
(அபு கிரெய்ப்,
குவாண்டனாமா சிறைச்சாலைகள்
உட்பட) கற்பனை
கூட செய்து பார்க்க
முடியாத அளவு மிருகத்
தன்மை கொண்டவை.
அனைத்து சர்வதேச
விதிமுறைகளையும்
ஒரு சேர மீறுபவை.
இலங்கை மனித
உரிமை மீறல்களை
விசா ரிக்க வேண்டும்
என்று இவர்கள்
கூறுவது, சாத்தான்
வேதம் ஓதுகிற கதையாகவே
உள்ளது.
சர்வ தேசக் கம்யூனிச
சதியை எதிர்த்த
போர் என்றும்,
தீய சாம்ராஜ்யமான
சோவியத் யூனியனை
எதிர்த்த போர்
என்றும் அராஜக
நடவடிக்கைகளில்
ஈடுபட்ட அமெரிக்க
ஏகாதிபத்தியம்,
தற்போது இஸ்லாமிய
பயங் கரவாதத்துக்கு
எதிரான போர் என்று,
ஒவ் வொரு காலகட்டத்திலும்
ஒவ்வொரு பெயர்
சூட்டி, தனது ஆக்கிரமிப்பு
நடவடிக்கை களை
நியாயப்படுத்திக்
கொள்கிறது. உலக நலனுக்காகவே,
தான் இதைச் செய்வதாக
மக்களை நம்ப வைக்கிறது.
கார்ப்பரேட்
ஊட கங்கள் முழுமையாக
ஒத்துழைக்கின்றன.
ஏகாதிபத்தியத்தின்
இரட்டை முகம்
அமெரிக்காவின்
இத்தகைய கொடுஞ்
செயல்களை தீரத்துடன்
எதிர்த்ததிலும்,
எதிர்கொண்டதிலும்
சோவியத் யூனியனுக்கு
மகத்தான பங்குண்டு.
இரண்டாவது உலகப்
போருக்குப் பின்
உருவான அணி சேரா
இயக்கமும், அப்போது
நிலவிய சர்வதேச
நிலைமைகளும், பலாபலன்களும்
ஏகாதி பத்திய நடவடிக்கைகளை
ஓரளவுக்குத் தடுத்து
நிறுத்தின. சோஷலிச
முகாம் என்ற ஒன்று
இருந்தது, அமெரிக்க
ஏகாதிபத் தியத்துக்குப்
பெரும் பிரச்சனையாக
இருந் தது என்பது
தான் உண்மை. இன்று
வலு வான சோஷலிச
முகாம் இல்லாத
நிலை யில், ஆகப்
பெரும் பயங்கரவாதியாக,
உலகத் தையே தன்
ஆளுகைக்குள் கொண்டு
வரும் ஆதிக்கவாதியாக,
ஏகாதிபத்திய நாடுகளின்
தலைவனாக அமெரிக்க
ஏகாதிபத்தியம்
இறுமாந்து நிற்கிறது.
சர்வ தேச நிதி
மூலதனத்தின் கொள்ளை
லாபத்துக்காக,
உலகை வேட்டைக்
காடாக மாற்ற துடித்துக்
கொண்டிருக்கும்
அமெரிக்கா மற்றும்
இதர மேலை நாடுகள்,
முதலாளித் துவத்தைத்
தூக்கி நிறுத்த
எதை வேண்டு மானாலும்
செய்யத் தயாராக
உள்ளன. வளரும்
நாடுகளின் வளங்களைச்
சுரண்டுவதும்,
சந்தைகளைக் கைப்பற்றுவதும்
அதற்காக இந்நாடுகளின்
இறையாண்மையை நீர்த்துப்
போகச் செய்வதும்,
அதிரடி ஆக்கிரமிப்பு
நட வடிக்கைகளில்
இறங்குவதும் சமகால
முத லாளித்துவத்தின்
தேவையாக உள்ளன.
பிர தேச ஒத்துழைப்பு
என்ற பெயரில் இந்
நாடுகள் அந்தந்த
மண்டலத்தில் ஒரு
கூட் டமைப்பை ( போல) உருவாக்குவதைக்
கூட ஏற்றுக் கொள்ளாமல்,
பிரித்தாளும்
சூழ்ச்சி யின்
மூலம் பலவீனப்படுத்துவதும்
ஏகாதிபத் திய மேலாதிக்கத்தின்
தேவை. இது குறித்து,
மார்க்சிஸ்ட்
கட்சியின் தத்துவார்த்த
தீர்மானம் விரிவாகவே
விளக்குகிறது.
பல நாடுகளில்
நிலவும் தேசிய
இனப் பிரச்சனையில்
அமெரிக்காவுக்கு
ஒரே நிலைபாடு கிடையாது.
நட்பு நாடாக இருந்
தால், சிறுபான்மை
தேசிய இனத்தின்
நியாய மான உரிமை
குரல்களுக்கு
எதிராக அந் நாட்டு
அரசை ஆதரிப்பது;
அணி சேரா அல்லது
சோஷலிச முகாமுடன்
நெருக்க மாக இருக்கும்
நாடானால், சிறுபான்மை
தேசிய இன உரிமைகளுக்காகவே
தான் பிறந்து வளர்ந்தது
போன்ற நிலையை எடுப்
பது; ஆக இரட்டை
நிலைபாடு ஏகாதிபத்
தியங்களுக்கு
உண்டு.
இலங்கை அமைந்துள்ள
கடல் பகுதி, அமெரிக்காவின்
ராணுவ தளங்களுக்கு
மிக வசதியாக இருக்கும்
பகுதியாகும்.
ஏற் கனவே, திரிகோணமலையில்
அமெரிக்கா வின்
தளம் ஒன்று அமைக்கப்
பட்டுள்ளது. ஒன்று பட்ட இலங்கை,
அமெரிக்காவின்
பக் கம் சாய்வது,
ஏகாதிபத்தியத்துக்குப்
பேருத வியாக இருக்கும்.
இரண்டாகப்
பிரிந்தால் இன்னும்
வசதி தான். அணி சேரா நாடாக
இருக்கும் இலங்கையைத்
தனது முகாமுக்கு
ஆதரவாகக் கொண்டு
வரும் நோக்கம்,
அமெ ரிக்காவின்
இன்றைய நடவடிக்கைக்குப்
பின்னால் இருக்கிறது.
இலங்கையின்
தேசிய இனப் பிரச்சனை
குறித்தோ, மிக
மோசமாக பாதிக்கப்
பட்டு நிற்கும்
இலங்கை தமிழர்
கள் மீதோ அமெரிக்காவுக்கு
அக்கறை எது வும்
கிடையாது. ஒரு
வேளை, எதிர்பார்க்கிற
படி இலங்கை அரசு
ஏகாதிபத்திய முகா
முக்குப் படிந்தால்,
மனித உரிமை தீர்மானம்
காற்றில் பறக்க
விடப்படும் என்பதில்
எள் ளளவும் சந்தேகமே
தேவையில்லை.
எனவே தான், உலக
பயங்கரவாதியான
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
வலை பின் னலுக்கு
இரையாகி விடக்
கூடாது. அமெ ரிக்க
அரசு உள்ளிட்ட
ஏகாதிபத்திய நாடு
களின் அக்கிரமங்களுக்கு
எதிராக, வளரும்
நாடுகளின் இறையாண்மை
பாதுகாக்கப் பட
வேண்டும்; அதே
சமயம், அந்நாடுகளின்
முதலாளித்துவ
- நிலப்பிரபுத்துவ
அரசுகள் கட்டவிழ்த்து
விடும் வர்க்க
சுரண்டலுக்கு
எதிராக, அங்குள்ள
அனைத்து தேசிய
இனங் களையும் சார்ந்த
தொழிலாளி வர்க்கம்,
இதர சுரண்டப்படும்
மக்களையும் ஒன்றிணைத்
துப் போராட வேண்டும்.
கூடவே, சிறு
பான்மை தேசிய இனங்களுக்கு
சம உரிமை, சம வாய்ப்புகள்,
அவர்களது மொழி,
கலாச் சாரம் பாதுகாக்கப்
படுவது போன்ற ஜன
நாயகக் கடமைகளை
நிறைவேற்ற பாடுபட
வேண்டும். அதற்காக அனைத்து
இனங் களிலும் உள்ள
ஜனநாயக சக்திகளை
ஒன்று படுத்தி,
அரசியல் தீர்வுக்காகக்
குரல் கொடுக்க
வேண்டும். இலங்கையிலும்
இத் தகைய அணுகுமுறையே
பலனளிக்கும்.
இந்தியா தனது
ராஜீய உறவைப் பயன்படுத்தி
இலங்கை அரசுக்கு
நிர்ப்பந்தம்
கொடுக்க வேண்டும்.
சர்வதேச மன்றங்
களில் குரல் எழுப்ப
வேண்டும். அதை
விடுத்து, இலங்கை
அரசின் பாகுபடுத்தும்
கொள்கைகள் ஒரு
புறம், இலங்கை
ராணு வம், இலங்கையின்
பூர்வகுடி தமிழ்
மக்கள் மீது நடத்திய
கொடுமையான மனித
உரிமை மீறல்கள்
மறு புறம் உருவாக்கும்
நியாயமான கோபத்திலும்,
வேதனையிலும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தைத்
துணைக்கு அழைப்பது
அடுப்புக்குத்
தப்பி கொதிக்கும்
எண்ணெயில் விழுந்த
கதையாக மாறி விடும்.
(ஆதாரம்: ‘பயங்கரவாதம்
வேர்களும், தீர்வுகளும்’
டி.ஞானையா எழுதிய
ஆங்கிலப் புத்தகம்
- முதல் பதிப்பு
2010- நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ் விலை
ரூ.190)