Contact us at: sooddram@gmail.com

 

ஆதரவு மிரட்டல்?

''கருணாநிதியின் திடீர் கர்ஜனை காரணமாக ஈழப் பிரச்னையில் இந்திய நிலைப்பாடு மாறுமா எனத் தெரியவில்லை. குழப்பமே நீடிக்கிறது'' என்று சொல்லியபடியே உள்ளே வந்தார் கழுகார். ''ஈழத் தமிழர் பிரச்னையைக் கையில் எடுத்து, தன்னுடைய அரசியல் ஆட்டத்தை அரங்கேற்றுவார் என்பதை முன்னரே காங்கிரஸ் மேலிடம் உணர்ந்துவிட்டது. 'டெசோ அமைப்பு நடத்துவது தமிழ்நாட்டு பாலிடிக்ஸுக்கு அவசியமானது’ என்பதை முன்பே டெல்லி மேலிடப் பிரதிநிதிகளிடம் கருணாநிதி சொல்லி இருந்தார். ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், வயலார் ரவி போன்றவர்கள் சில மாதங்களுக்கு முன், தனித்தனியாகச் சந்தித்தபோதே கருணாநிதி இதைச் சொல்லி இருந்தார். தமிழக அளவில் மாநாடு, கூட்டம் நடத்திக்கொண்டால் சிக்கல் இல்லை என்றுதான் டெல்லியும் நினைத்தது. டெல்லியில் வந்து தேசிய அளவிலான அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்துவதை காங்கிரஸ் முதலில் விரும்பவில்லை. தமிழக காங்கிரஸிலேயே கே.எஸ்.அழகிரி போன்றவர்கள், 'டெசோ கூட்டங்களில் காங்கிரஸும் கலந்துகொள்ளலாம்’ என்று சொன்னபோது, அதற்கு ராகுல் பச்சைக்கொடி காட்டிய சமாசாரங்களை எல்லாம் நான் ஏற்கெனவே உமக்குச் சொல்லி இருக்கிறேன்.''

''ஏண்டா போனோம் என்று நினைக்கும் அளவுக்கு கருணா​நிதி தனது மிரட்டலைத் தொடங்கிவிட்டாரே?''

''தமிழகத்தில் திரண்டெழும் மாணவர் போராட்டத்தின் காரணமாக இப்படி ஒரு மிரட்டலைக் கருணாநிதி தொடங்கியதாக அவரது கட்சிக்காரர்கள் சொல்​கிறார்கள். 'இந்த மாதிரி தலைவர் செய்யவில்லை என்றால், மாணவர்களின் கோபம் அவர் மீதே பாய்ந்​துவிடலாம். அதனால், சாமர்த்தியமாக இப்படி ஒரு பதற்றத்தை உருவாக்கினார்’ என்று, கருணா​நிதியை அறிந்த​வர்கள் சொல்கிறார்கள். கடந்த 15-ம் தேதி அன்று மதியம் இந்த முடிவை எடுத்தார் கருணாநிதி. ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் போர்க் குற்றங்கள் பற்றிய திருத்தத்தை இந்தியா சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கருணாநிதி, 'இதை நிறைவேற்றத் தவறினால், தி.மு.க-வினராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவையில் இனிமேலும் நீடிப்பது என்பது அர்த்தமற்றதாகிவிடும்’ என்று சொல்லி இருந்தார். கருணாநிதி இப்படி எத்தனையோ தடவை அறிவித்துள்ளார் என்பதால், டெல்லியில் இருந்து முதலில் சலனம் இல்லை. இதைப் பார்த்து பதறிப்போய் டெல்லியில் இருந்து யாரும் கருணாநிதியிடம் பேசவில்லை. மேலிடப் பார்வையாளர்கள் வருவதற்கான அறிகுறியும் இல்லை. சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, 'இதுவரை யாரும் பேசவில்லை’ என்று வருந்திய வார்த்தைகளால் சொன்னார். தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் சொன்னார். அதன் பிறகும் எந்த அழைப்பும் டெல்லியில் இருந்து இல்லை. 'நீங்கள் இங்கே அறிக்கைதான் கொடுத்துள்ளீர்கள். சோனியாவுக்கும் பிரதமருக்கும் இந்தத் தகவல் சொல்லப்படாமல் இருக்கலாம் அல்லவா? அதனால் அவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள்’ என்று ஆலோசனைகள் வர... விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அறிவாலயம் பரபரப்பானது.''

''ஓஹோ!''

''ரப்பரை வைத்து அழித்து அழித்து எழுதிக்கொண்டிருந்தார் டி.ஆர்.பாலு. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகிய இருவருக்கும் இதே கருத்தை வலியுறுத்தி கருணாநிதி சொல்லி இருந்தார். இன்னும் உருக்கமாக, 'பெரும் மன உளைச்சல் மற்றும் இந்திய அரசால் கைவிடப்பட்ட உணர்வுடன் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்’ என்று அதில் சொல்லி இருந்தார். இந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு 18-ம் தேதி காலை, டி.ஆர்.பாலு டெல்லி சென்று அவர்களிடம் நேரில் கொடுப்பதாகத்தான் முதலில் முடிவானது. நாடாளுமன்றம் நடந்துகொண்டிருப்பதால், சந்திப்பதற்கான நேரம் ஒதுக்குவதில் சிரமம் இருக்கும் என்று ஃபேக்ஸில் அனுப்ப முடிவானது. ரகசியக் கடிதமாக இல்லாமல், மீடியாவுக்கும் கடித நகலைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் வெளிப்படையான ரியாக்ஷன் செய்தாக வேண்டிய நெருக்கடி டெல்லி மேலிடத்துக்கு ஏற்பட்டது.''

''ம்!''

''சமீப காலமாக தி.மு.க-வுக்கும் டெல்லி மேலிடத்துக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு உள்குத்துச் சண்டை நடந்து வருகிறது. சி.பி.ஐ-யின் கிடுக்கிப்பிடி இன்னமும் குறையவில்லை. ஸ்பெஷல் கோர்ட்டில் அசராமல் வாதாடி வருகிறது சி.பி.ஐ. இந்தப் போக்கில் சென்றால் விரைவில் தீர்ப்பு வந்துவிடும் என்றே சிலர் சொல்கிறார்கள். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஒரு புதுக் கோரிக்கையை வைத்தார். மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கு அனுப்பிய கடிதத்தில், 'இந்த விவகாரத்தில் உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்டு வருகின்றன. தவறான விசாரணை முறை காரணமாக உண்மைகள் அமுக்கப்படுகின்றன. எனவே, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் நான் சாட்சியம் அளிக்க வாய்ப்புத் தர வேண்டும்’ என்பதே ராசாவின் கோரிக்கை. இதை ஜே.பி.சி. நிராகரித்துவிட்டது. 'ராசா நேரில் வந்து சாட்சியம் அளிக்கத் தேவை இல்லை. வேண்டுமானால், எழுத்து மூலமாக பதில் தரலாம்’ என்று ஜே.பி.சி. தலைவர் சாக்கோ கூறினார். இது தி.மு.க-வுக்கு, குறிப்பாக ராசாவுக்கு கடுப்பைக் கிளப்பியது. 'ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடப்பதற்கு ராசா மட்டும்தான் காரணம். வேறு யாருக்கும் இதுபற்றித் தெரியாது’ - இது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி, ஜே.பி.சி-ல் அளித்த வாக்குமூலம். இதை விசாரணைக் குழு ஏற்றுக்கொண்டால், அனைத்துக்கும் ராசா மீது பழிபோட்டு தப்பிவிடுவார்கள், ராசா மட்டும் மாட்டிக்கொள்வார். எனவே, இதில் இருந்து விடுபடுவதற்கு முடிவெடுத்த ராசா, 'இது சம்பந்தமாக யார் யாருக்கெல்லாம் தெரியும்’ என்பதைச் சொல்வதற்காகவே ஜே.பி.சி. முன் ஆஜராகவதற்குத் துடித்தார்.''

''யாருக்குத் தெரியும் என்று சொல்லப்போகிறாராம் அவர்?''

''பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிந்த நிலையில்தான் இந்த ஸ்பெக்ட்ரம் பரிவர்த்தனைகள் நடந்தன என்பது ராசாவின் நிலைப்பாடு. 'ராசாவை ஜே.பி.சி-ல் பேச அனுமதித்தால், பிரதமர் மற்றும் ப.சி-யை சங்கடப்படுத்தும் குற்றச்சாட்டுகளை வைப்பார்’ என்று காங்கிரஸ் மேலிடம் நினைத்தது. அதனால், அவருக்கான அனுமதியை மறுத்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தி.மு.க-வை தனிமைப்படுத்தும் காரியமாக இதைக் கட்சி முக்கியஸ்தர்கள் கவனித்தனர். 'இந்த மனக்காய்ச்சலை காங்கிரஸ் மேலிடத்துக்கு உணர்த்துவதற்கு கருணாநிதி நேரம் பார்த்தபடி இருக்கிறார்’ என்று காங்கிரஸ் தலைமைக்கும் தகவல் போனது. அந்த நிலையில்தான், 'ஆட்சியில் நீடிக்க வேண்டுமா’ என்ற அஸ்திரத்தை கருணாநிதி எடுத்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்.''

''ம்!''

''சமீபகாலமாக டெல்லி மீடியாக்களில் ஸ்பெக்ட்ரம் டாக்குமென்ட்கள் ரிலீஸாகி வருகின்றன. அதையும் சீரியஸாகப் பார்க்கிறது மத்திய அரசு. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பிரதமரும் அவரது அலுவலகமும் எப்படி எல்லாம் நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தன என்பதைச் சொல்கின்றன அந்த ஆவணங்கள். '2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளில் எனக்குத் துளியும் சம்மதம் இல்லை. இந்த விவகாரத்தில் இருந்து நான் தள்ளியே இருந்தேன்’ என்று ஒரு கட்டத்தில் பிரதமர் அழுத்தம்திருத்தமாகச் சொன்னார். அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட காரணமாக இருந்த ஒரு முடிவை, ராசாவின் தலைமையில் இயங்கிய, தொலைத்தொடர்புத் துறை தன்னிச்சையாக செய்ததாகச் சொல்வது உண்மை இல்லை என்பதை நிரூபிக்கின்றன அந்த ஆவணங்கள். தொலைத்தொடர்புத் துறையில் கடைப்பிடிக்கப்படும் ஏல விதிமுறைகளின்படி 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறை. 2ஜி உரிமங்களையும், இந்த நடைமுறைப்படி கொடுக்க முடிவெடுத்த ராசா அதுகுறித்த ஃபைலை 2007-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி, பிரதமருக்கு அனுப்பினார். 'இதை விரைந்து பரிசீலிக்கவும்’ என்று பிரதமர் அதில் நோட் எழுதியிருக்கிறார். இதைஅடுத்து பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர், செயலாளர் ஃப்லோக் சாட்டர்ஜி ஆகிய இருவரும் ராசா அனுப்பிய பல யோசனைகளையும் அலசி ஆராய்ந்துவிட்டு, இறுதியாக ராசா கூறியிருந்த நான்கு யோசனைகளோடு தாங்கள் உடன்படுவதாக அந்த ஃபைலில் தங்கள் கைப்பட எழுதியிருக்கிறார்கள். 2ஜி ஏலம் நடைபெறுவதற்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்னதாக, பிரதமரின் அலுவலகத்தைச் சேர்ந்த செயலர் ஃப்லோக் சாட்டர்ஜி, தொலைத்தொடர்புத் துறைத் செயலாளரான சித்தார்த் பெஹூராவுடன் (இந்த விவகாரத்தில் கைதானவர்)  இதுதொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, பிரதமரின் உத்தரவுப்படி ராசாவிடம் இருந்து வந்த ஆறு பக்க கடிதத்தையும், 'டாப் சீக்ரெட்’ என்று கொட்டை எழுத்தில் அலறிய பிரணாப் முகர்ஜியின் (அப்போது அவர் - ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கான அமைச்சர்களின் குழுவின் தலைவர் மற்றும் வெளி விவகாரத் துறை அமைச்சர்) ஃபைலையும் ஃப்லோக் சாட்டர்ஜி படித்துவிட்டு, நான்கு பக்கத்துக்கு ஓர் ஒப்பீட்டு ஆய்வை கொடுத்திருக்கிறார். இந்த ஆய்வில், 2ஜி உரிமங்கள் தொடர்பாக ராசா வைத்த யோசனைகளை அவர் ஏற்றுக்​கொண்டிருக்கிறார். இதைஅடுத்து, சர்ச்சைக்குரிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகள் ஒரு சில நாட்களில் நடந்து முடிந்தன... என்று சொல்கின்றன இந்த ஆவணங்கள்.''

''அப்படியா?''

''ஏலம் நடந்து முடிந்த பிறகுதான் பிரதமரின் செயல்பாட்டில் ஒரு மிகப்பெரிய மாறுதல். அதாவது, இரண்டே வாரத்தில், பிரதமரின் அலுவலகத்தைச் சேர்ந்த பி.வி.ஆர்.சுப்பிரமணியத்திடம் இருந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு, 2008-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி சென்ற ஒரு கடிதத்தில், '2ஜி அலைக்கற்றை விஷயத்தில் பிரதமர் தள்ளியிருக்கவே விரும்புகிறார்’ என்று சொல்லப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் அனைத்தும் மீடியாக்களில் மீண்டும் வருவதன் பின்னணியையும், ஜெனிவா தீர்மானத்தையும் டெல்லி மீடியாக்கள் முடிச்சுப்போட்டுப் பார்க்கின்றன. ஜே.பி.சி-யின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நாள் நெருங்குகிறது. அந்த அறிக்கையில் என்ன இருக்கப்போகிறது என்பதை தி.மு.க. அறிந்துவிட்டது. அதனால்தான் இந்தப் பதற்றம் என்றும் சொல்லப்படுகிறது.''

''ஓஹோ!''

''கருணாநிதி அனுப்பிய கடிதத்தை, திங்கள்​கிழமை காலையில்தான் சீரியஸாகப் பார்த்தது டெல்லி. 'நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை தி.மு.க. கிளப்புவதும், காங்கிரஸை தனிமைப்படுத்துவதும் நல்லது அல்ல’ என்று, சோனியாவும் ராகுலும் நினைக்கிறார்களாம். அதற்காகத்தான் டெல்லியில் நடந்த டெசோ கலந்துரையாடலில் காங்கிரஸ் பிரதிநிதியையும் கலந்துகொள்ளச் செய்தார்களாம். 'கூட்டணியை விட்டு கருணாநிதி வெளியேறுவது காங்கிரஸுக்கு அரசியல்ரீதியாக நல்லதல்ல’ என்றும் அவர்கள் நினைக்கிறார்களாம். எனவே, அவரைச் சமாதானம் செய்யும் காரியத்தை உடனே ஆரம்பிக்கச் சொல்லி இருக்​கிறார்கள். முதலில், குலாம்நபி ஆசாத் மட்டும் வருவதாகத்தான் திட்டம். அவர், ப.சிதம்பரத்தை உடன் அழைத்துள்ளார். ஆனால் பிரதமர்தான், ஏ.கே.அந்தோணி​யையும் போகச் சொல்லி இருக்கிறார். மூன்று பேர் வந்திருப்பதுதான் அதிகப்படியான சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இலங்கைப் பிரச்னை மட்டுமல்ல, வேறு விவகாரங்களும் இதற்குக் காரணம் என்பதையும் சொல்ல வைக்கிறது.

இவர்கள் மூன்று பேரும் ராணுவத்துக்குச் சொந்தமான ஸ்பெஷல் விமானத்தில் வந்தனர். சி.ஐ.டி. காலனி வீட்டு வாசலில் நின்று துரைமுருகன்தான் வரவேற்றார். வழக்கமான சந்திப்பாக இருந்தால், டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் என்று ஒரு கூட்டமே இருக்கும். அவர்கள் யாரும் வாசலில் இல்லை. அன்பழகனைக் கட்டாயப்படுத்தி வரவழைத்திருந்தார் கருணாநிதி. டெல்லி மூவரணியுடன் பேசும்போது அன்பழகன், துரைமுருகன் ஆகிய இருவரையும் தனக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டார். டி.ஆர்.பாலு தாமதமாக வந்தார். அவரும் இவர்களோடு உட்கார்ந்தார். மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்த பேச்சு தொடர்ந்தபடி இருந்தது. 7.30-க்கு வந்த ஸ்டாலின் உள்ளே சென்றார்.''

''பேச்சுவார்த்தை எப்படிப் போனதாம்?''

''இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடந்துள்ளது. இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை என்று நிருபர்கள் சோர்வடைந்து நின்றபோது அந்தோணி, ப.சி., ஆசாத் மூவரும் வெளியே வந்தனர். 'அமெரிக்கத் தீர்மானத்தில் கருணாநிதி கூறியுள்ள திருத்தம் குறித்து பிரதமரிடம் பேசுவோம். இறுதி முடிவை அவர் எடுப்பார்’ என்ற ஆசாத், 'கருணாநிதிக்கு எந்த வாக்குறுதியும் தரவில்லை’ என்று சொல்லிவிட்டுப் போனார்.''

''கருணாநிதி வீக் ஆகிவிட்டார் என்பதையே இவரது பதில் காட்டுகிறதே?''

''ம்! 'அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வரவேண்டும்’ என்று இதுவரை சொல்லி வந்த கருணாநிதி அதோடு, 'இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர்’ என்றார். 'வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை என்று ஆசாத் சொல்கிறாரே’ என்று நிருபர்கள் கேட்க, 'உங்கள்ட்ட ஒரு நிமிஷம்தானே பேசினாரு. அதுல எல்லாத்தையும் சொல்லி இருக்க முடியாது’ என்றார் கருணாநிதி. 'ஐ.நா. சபையில தீர்மானம் கொண்டுவர முடியுமா?’ என்று ஒருவர் கேட்க, 'நீங்க ஐ.நா.வுக்கு போகப் போறீங்களா?’ என்றார். 'உங்களுக்கும் காங்கிரஸுக்கும் இறுக்கம் தளர்ந்ததா?’ என்று ஒருவர் கேட்க, 'என்ன இறுக்கம் இருந்தது?’ என்று திருப்பிக் கேட்டார். 'நான் என்ன இளித்தவாயனா?’ என்று திடீரெனக் கேட்டுக் கொண்டார். 'எப்படிக் கேள்வி கேட்கணும், எப்படி நடந்துக்கணும்னு நிருபர்களுக்கு பயிற்சி கொடுக்கணும்’ என்று நக்கல் வேறு அடித்தார். மொத்தத்தில் கருணாநிதியின் வழுக்கல் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. திடீரென, அவரே சர்ச்சையைக் கிளப்பி, டெல்லியில் இருந்து மூன்று பேரை வரவைத்து, சும்மா சீன் காண்பித்து முடித்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். 'இனியும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கக்கூடாது என்கிற மனவோட்டம் கருணாநிதி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால் மற்றக்கட்சிகள் யாரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேரமாட்டார்கள் என நினைத்தாராம் கருணாநிதி'' என்று முழுக்கதையும் சொல்லி முடித்த கழுகார், சிறிது இடைவெளிவிட்டு வேறு சப்ஜெக்ட்க்கு வந்தார்!

 ஈழத்துக்காக இன்னும் ஓர் உயிர்!

ஈழ விவகாரத்துக்காக தமிழகமே தகித்துக்​கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் ஒரு வாலிபர் தன் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்​கிறார். மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. 18-ம் தேதி மாலை 7 மணிக்கு, பைக்கில் வந்த ஒரு வாலிபர் அந்த பங்க் அருகில் வண்டியை நிறுத்தினார். 'தனி ஈழம் மலரட்டும்... ராஜபக்ஷே ஒழிக!’ என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்​​கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்க்கை நோக்கிஓடினார்.

பணியில் இருந்த ஊழியர் ஒருவர், எரிந்துகொண்டே ஓடிவந்த இளைஞரை கீழே தள்ளி, ஏற்பட இருந்த பெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். மற்ற ஊழியர்களும் சுதாரித்து, தீயை அணைத்தனர். தீ வைத்துக்கொண்ட இளைஞர் அந்த இடத்திலேயே கருகினார். தகவல் அறிந்து பதறிஅடித்து ஓடிவந்த போலீஸார், அந்த இளைஞரின் பைக், செல்போன் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். சடலத்தையும் உடனே அப்புறப்படுத்தினர். ஈழ ஆதரவாளர்களும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

(ஜு. விகடன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com