|
||||
|
ராஜீவ்
காந்தி கொலையின்
சூத்திரதாரியான
சிவராசனின் டயரியில்
உள்ள தகவல்கள்
குறிப்புகள் அதிரவைக்கின்றன
(இந்தியா
டுடேயில் வெளியானது)
ஜீலை
1991,எல்.டி.டி.ஈ
உளவுப் பிரிவைச்
சேர்ந்த ஜெயக்குமார்
ஒரு ரகசியத்தை
தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரான
இவர், மே 21,1991 ல்
நிகழந்த ரரஜீவ்காந்தி
கொலையில் சம்பந்தமுள்ளவராக
சந்தேக வலைக்குள்
இருந்தார். கொலை
வழக்கை விசாரித்த
சி.பி.ஐ யின் தலைமை
விசாரனை அதிகாரி(ஐ.ஓ) கே.ரகோத்மனிடம்,
எல்.டி.டி.ஈ யினர்
தங்கியிருந்த
வீட்டின் சமையறையின்
தரைக்குள் இருந்த
ஓட்டையைபற்றி
ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த வீடு 158,முத்தமிழ்
நகர், கொடுங்கையூரில்
இருந்தது. செப்டம்பர்
1990ல் எல்.டி.டி.ஈ தன்னுடைய
பல போராளிகளை தமிழகத்தில்
பாதுகாப்பான வீடுகளை
எடுத்து தங்க அனுப்பியிருந்தது.
இதில் ஒருவர்
தான் ஜெயக்குமார்.
அந்த ஓட்டைக்கு
கீழே என்ன இருந்தது
என்று ஜெயக்குமாருக்கு
தெரியாது. ஆனால் அது மிகவும்
முக்கியமானது.
ஏனெனில் ராஜீவ்
கொலையின் சூத்திரதாரிகளில்
ஒருவரான சிவராசன்(33) அந்த ஓட்டையை
திறக்கும் போதெல்லாம்
ஜெயக்குமாரை வெளியே
அனுப்பிவிடுவார்.
ராஜீவ் கொலையை
விசாரிக்க நியமிக்கப்பட்ட
சிறப்பு புலனாய்வுக்
குழு(சிஐடி)
அந்த வீட்டின்
கதவை உடைத்து உள்ளெ
புகுந்தது.
காற்றோட்டமில்லாத
மூன்றடி ஆழத்தில்
இருந்த அந்த இரண்டுக்கு
இரண்டு அளவில்
இருந்த டைல்சிக்கு
கீழே கனமான ஒரு
தமிழ்-ஆங்கில அகராதி
இருந்தது.அதன்
உள் புற்த்தில்
9மி.மீட்டர் கைத்துப்பாக்கியை
வைத்துக்கொள்வதற்கு
ஏதுவாக அட்டை வெட்டபட்டிருந்தது.இரண்டு
சிறிய பாக்கெட்
டயரிகள்,ஒரு
நோட்டுப் புத்தகம்
மற்றும் ஒரு செயற்கை
கண்ணாடி கண் ஆகியவையும்
இருந்தன.மேலெழுந்தவாரியாக
பார்த்தால் அந்த
சிறிய பக்கங்களில்
தமிழிலும்,ஆங்கிலத்திலும்
முன்னோக்கி சாய்ந்த
வாக்கில் இருக்கும்
சிவராசனின் கையெழுத்தில்
பெரிதாக எதுவும்
இல்லை. ஏராளமான
தொலைபேசி எண்கள்,முகவரிகள்,தொடர்பாளர்களின்
பெயர்கள்,அடை மொழிப்
பெயர்கள்,சங்கேதப்
பெயர்கள்,செலுத்த
வேண்டிய தொகைகள்
என்று அதில் இருந்தது.
ஆனால்
இந்த விபரங்கள்
ஒன்றோடு ஒன்று
சேர்த்துப்பார்த்து,ஆழமாக ஆராய்ந்த
போதுதான்,தன்னை
மிரள வைத்துக்
கொண்டிருந்த புதிருக்கான
விடையை சி.பி.ஐயால்
கண்டுபிடிக்க
முடிந்தது.அந்த
சிறிய நோட்டுப்
புத்தகங்கள்
20ம் நூற்றாண்டின்
மிகவும் சின்னலான
கொலையின் முடிச்சை
அவிழ்க்க உதவின.'நோட்டுப்
புத்தகங்கள்தான்
நாங்கள் கைப்பற்றியவற்றில்
முக்கியமானது.மற்ற
குற்றவாளிகளுடன்
சிவராசன் தொடர்பு
கொண்டிருந்த விதத்தை
அவை விபரித்தன'
என்கிறார் ரகோத்மன்.
மே
1,1991ல் தமிழகத்தில்,9 பேர் கொண்ட
தாக்குதல் படையுடன்
வந்து இறங்கிய
சிவராசன்,மே 23 வரை
இந்த சிறிய நோட்டுப்
புத்தகங்களை தன்னுடன்
வைத்திருந்தான்.ராஜீவ்
கொல்லப்;பட்ட
2 நாட்கள் கழித்து
மே 23 ல் அவன் தனது
சகாக்களுடன் பெங்களுரு
தப்;பிச் சென்றான்.பிற்பாடு
போலீசிடம் பிடிபடாமல்
தப்பிக்க தற்கொலை
செய்து கொண்டான்.
இந்த
டயரியில் இருந்த
தகவல்கள் குற்றவாளிகள்
நீதிமன்றத்தில்
தண்டிக்கப்பட
முக்கியமான ஆவணங்களாக
இருந்தன.ஆனால்
இந்த தவல்கள் இதுவரை
வெளியில் வரவில்லை.இந்த
டயரியில் இருந்தவை
ராஜீவ்காந்தி
கொலையில் குற்றம்
சாட்டப்பட்ட ஏழு
பேரையும் முருகன்.சாந்தன்,பேரறிவாளன்.நளினி,ஜெயக்குமார்,ரவிச்ந்திரன்
மற்றும் ராபர்ட்ட
பயஸ்-வழக்கில்
சேர்க்க முக்கிய
சாட்சியங்களாயின,இந்த
எழுவரையும் விடுவிக்கும்
தமிழக முதலமைச்சர்
ஜெ.ஜெயலலிதாவின்
முடிவுதான் தற்போது
அவருக்கு தற்போது
அவருக்கும் மத்திய
அரசுக்குமான பெரும்
பிரச்சினையாக
உருவெடுத்து நிற்கிறது.இவர்களை
விடுவிக்கும்
முடிவை பிப்பரவரி
19ந் தேதி ஜெயலலிதா
அறிவித்தார்.பிப்பரவரி
20 ஆம் தேதி இந்த
ஏழுவரையும் விடுவிக்கும்
முடிவுக்கு எதிராக
மத்திய அரசு உச்ச
நீதி மன்றத்தில்
மனுதாக்கல் செய்தது.'சட்டபடி
செய்ய வேண்டியது
எல்லாவற்றையும்
செய்வோம்' என்று
இது தொடர்பான கேள்விக்கு
ஜெயலலிதா பதில்
அளித்தார்.குறைந்தபட்சம்
மே மாத மக்களவைத்
தேர்தல்கள் முடியும்
வரை நீடிக்கப்போகும்
இந்த போராட்டம்
பற்றிய அவரது சூட்சுமம்
நிறைந்த பதில்
இது.
1991ல்
நடந்த மக்களவை
தேர்தல்களில்
ராஜீவ் காந்தி
ஜெயலலிதாவுடன்
சேர்ந்து தேர்தல்களை
சந்தித்தார்.ராஜீவின்
படுகொலை,இந்தியாவின்
முக்கியமான அரசியல்
படுகொலைகளில்
ஒன்றாகவே இருக்கிறது.இப்படுகொலைக்கான
திட்டம்,போரைக்கண்ட
அஞ்சிய
தமிழ்ப் புலிகள்
தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனின் மூளையில்,1990
ன் ஆரம்பத்தில்
வன்னிக்காட்டிலிருந்து
வெளியே வந்தவுடன்
உதித்தது.பிரபாகரன்
பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தார்.1987ல்
ஏற்பட்ட இந்திய-இலங்கை
ஒப்பந்தத்தை செயற்படத்த
இந்திய இராணுவம்
மூன்றாண்டுகள்
இலங்கையில் சர்ச்சைக்குரிய
முறையில் ஈடுபடுத்தப்பட்டது.1900ல்
இந்திய இராணுவம்
வெளியேறியது.எல்.டி.டி
க்கு எதிராக ராணுவம்
போராடியது.இதில்
உள்ள முரண்,எல்.டி.டி
க்கு பயிற்சி கொடுத்தது
இந்தியாவின் வெளியுறவு
உளவு அமைப்பான
'ரா' தான் விடுதலைப்புலிகள்
நூற்றுக்கணக்கில்
கொல்லப்பட்டனர்.அவ்வளவு
ஏன்,பிரபாகரனே
ஓர முறை ராணுவத்தால்
கொல்லப்படுவதிலிருந்து
மயிரிழையில் உணிய்
தப்பிய சம்பவமும்
நடந்தது.
புலிகளின்
துரோகம்
தற்போது,இது பழிவாங்கும்
தருணம்,ராஜீவ்காந்தி
பிரதமராக இருந்த
போது தன்னை வஞ்சித்து
விட்டதாக பிரபாகரன்
கருதினார்.பதவியிலிருந்து
ராஜீவ் இறங்கியதும்
அவரை கொல்வது சுலபமானது.உடனே
ராஜீவை கொல்ல பிரபாகரன்
முடிவு செய்தாh
என்கிறது சி.பி.ஐ
புலிகளுடன் தொடர்பிலிருந்த
'ரா' அவர்களின்
இந்த கோபத்தை கணிக்க
தவறியது.
பிரபாகரனும்
அவரது உளவுத்துறை
தலைவர் சண்முகலிங்கம்சிவசங்கர்
என்கிற பொட்டு
அம்மானும்(29) ராஜீவை
கொல்ல மூன்று பெண்
தற்கொலை படையினரை
தேர்வு செய்தனர்.இவர்கள்
கரும்புலிகள்
படையிலிருந்து
தெரிவாயினர்.இந்தப்பணியை
சிவராசன் என்கிற
பாக்கியசந்திரனிடம்
அவர்கள் ஒப்படைத்தனர்.கறுநிறங்கொண்ட,கெட்டி
தட்டிக்போன சிவராசன்
5.4 அடி உயரமானவன்,தென்னிந்திய
மொழிகள் நன்கும்
சரளமாக பேசத் தெரியும்.1987ல்
இலங்கை ராணுவத்துடனான
போரில் இடது கண்ணை
இழந்தான்.1990 ஜீனில்
சென்னையில் இந்தியாவுக்கு
ஆதரவான போராளிகள்
அமைப்பான பத்மநாபாவை
அதிரடியாக கொன்ற
பின்னர் எல்டி.டி.
யில் வேகமாக உயர்ந்தான்.புலிகள்
உளவு அமைப்பின்
பிரசித்தி பெற்ற
நடவடிக்கை அது.சென்னையில்
அவர்கள் பத்மநாபாவை
சற்றி வளைத் கொன்றனர்.சிவராசனனின்
பணி,தற்கொலைப்
படையை ராஜீவ் அருகில்
கொண்டு சேர்ப்பது
மட்டுமன்று,கொல்லப்பட்டது
புலிகளால்தான்
என்று எந்த தடயமும்
இல்லாமல் செய்துவிட
வேண்டும்.இது
'மறுக்கத்தக்க
தாக்குதல் நடவடிக்கை'
என்று உளவுத்துறை
வட்டாரங்களில்
அழைக்கப்படகிறது.1988ன்
பாகிஸ்தான் அதிபர்
ஜெனரல் ஜியா உல்
ஹக் விமான விபத்தில்
கொல்லப்பட்டது
போன்று,குற்றவாளிகளை
கண்டுபிடிக்க
முடியாமல் இதுவும்
போய்விடும் என்று,அதாவது
எந்த தயஉம் இல்லாமல்
போய்விடும் என்று
திட்டமிட்டனர்.புலிகள்,1991
மக்களவைத் தேர்தலில்
காங்கிரசின் தேர்தல்
அறிக்கை புலிகளை
அச்சத்தில் ஆழ்த்தியது.1987
இந்திய-இலங்கை
ஒப்பந்தம் நிறைவேற்றப்படம்
என்று அறிக்கை
கூறியது.சிவராசனும்,மற்ற
கொலையாளிகளும்
மே1,1987ல் தமிழகம்
வந்திறங்கினர்.உடனே
பணியிலும் இறங்கினர்.
தமிழகத்தில்
திருமணம்
ராஜீவ்
காந்தி தமிழகத்தில்
பிர்சாரத்துக்கு
வருவார்,அவரை தாக்கலாம்
என்றே எல்.டி.டி.ஈ
திட்டமிட்டது.சிவராசனின்
கும்பலில் இருந்த
இரு முக்கிய மானவர்கள்
மனித வெடிகுண்டு
தனு மற்றும் அவருக்கு
மாற்றான சுபா,இவர்கள்
தான்'திருமணத்தில்'
பங்கேற்பாளர்களாக
இருந்தனர்.படுகொலைக்கு
புலிகள் வைத்த
சங்கேதப் பெயர்தான்
'திருமணம்' இலங்கை
காடுகளில் இருந்த
புலித் தலைமையுடன்
சிவராசன் ரேடியோ
தொடர்பில் சங்கேத
மொழியில் பேசி
வந்தார்.எல்டி.டி.ஈ
அமைப்பின் ஜெயக்குமாரும்,அவருடைய
மைத்துன் ராபட்
பயசும் ஏற்கனவே
சென்னை மற்றும்
புறநகர் பகுதிகளில்
வீடுகளை வாடகைக்கு
பிடித்து இருந்தனர்.அடிக்கடி
'திருமணம்' பற்றிஅ
வன் பிரபாகரனுக்கும்,பொட்டு
அம்மானுக்கும்
தகவல்களை அனுப்பிக்
கொண்டே இருந்தான்.புலிகள்
5கிலோ தங்கத்தை
தமிழகத்திற்குள்
கடத்தி வந்தனர்.இவற்றை
சிவராசன் 19.36 லட்சத்துக்கு
விற்றான்.இந்தப்
பணம்தான் ராஜீவ்
கொலைக்கான வேலையில்
முழுச் செலவுகளையும்
சமாளிக்க பயன்படுத்தப்பட்டது.வாடகை,தகவல்
செலுத்துபவர்களுக்கு
பணம்,கொலையாளிகளின்
பயணச் செலவுகள்
மற்றும் இரண்டு
மாதங்களுக்கான
வாழ்க்கை செலவினங்கள்,எல்லா
தகவல்களையும்,பண
பட்டுவாடா விபரங்களையும்
சிவராசன் டயரியில்
குறித்து வைத்திருந்தான்.ஸ்ரீபெரும்புதூர்
காங்கிரஸ் மக்களவை
உறுப்பினரும்,மூத்த
காங்கிரஸ் தலைவருமான
மரகதம் சந்திரசேகரின்
நெருங்கிய சகாக்களுடன்
தொடர்பை ஏற்படுத்திக்
கொண்டவுடன் கொலையாளிகளுக்கு
முக்கிய தருணம்
வந்தது.மரகதம்
சந்திரசேகர்,ராஜீவ்
குடும்பத்துக்கு
நெருக்கமானவர்.
டில்லி
சதி திட்டம்
சிவராசன்
தனது 2வது திட்டம்
பற்றியும் டைரியில்
குறிப்பிட்டிருந்தான்.ஒரு
வேளை தமிழகத்தில்
ராஜீவ் கொல்வது
தவறிப்போனால்
அவரை தீர்த்துக்
கட்டுவதற்கான
2வது திட்டமிது.ஏப்ரல்
28ல்,18 வயது இளம் பெண்
ஆதிரை,யாழ்பாணத்திலிருந்து
கடல் வழியே தமிழகம்
வந்தது அடர்த்தியான
புதர்கள் நிறைந்த
கோடியாக்கரை பகுதிக்கு
பாதுகாப்பாக சென்னைக்கு
அழைத்துச் செல்லப்பட்ட
ஆதிரை அங்கு ஒரு
வீட்டில் தங்க
ஏற்பாடானது.ஆதிரைக்கு
கொடுக்ப்பட்ட
திட்டம்,ராஜீவை
தில்லியில் கொலை
செய்வது.ஆதிரைக்கு
எல்.டி.டி.ஈ.யில்
கொடுக்கப்பட்ட
புனை பெயரான சோனியா
என்பற்காக ஆதிரையை
புலிகள் தேர்வு
செய்யவில்லை.ஆதிரையின்
நிறம் கோதுமை நிறம்
என்பதால் தில்லியில்
எளிதாக சுற்ற முடியும்
என்பதுதான.;ஆதிரைக்கு
உதவ ஓய்வு பெற்ற
இலங்கை அரசு ஊழியர்
கனகசபை(70)
என்பவரை சிவராசன்
ஏற்கனவே தெரிவு
செய்திருந்தான்.கனகசபை
இறந்துபோன ஒரு
எல்.டி.டி.ஈ தளபதியின்
தந்தை.
கனசபை
தில்லிக்கு போய்
அங்கிருந்த ஆதரவாளர்
ஒருவருடன் தொடர்பை
ஏற்படுத்திக்
கொண்டார்.இந்த
நபர் ம.தி.மு.க பொதுச்
செயலாளர் வைகோவக்கு
மிகவும் நெருக்கமானவர்.இவர்கள்
தங்குவதற்கு ஒரு
வீட்டையும் கண்டுபிடித்துவிட்டனர்.வடக்கு
மோதி பாக்கில்
ஏ 233 எண் வீட்டில்
அவர்கள் தங்கினர்.ஷாந்தி
நிகேதனில் இருந்த
ஒரு வீட்டு தரகர்
மூலம் இது சாத்தியமானது.இரண்டு
அறைகள் கொண்ட இந்த
வீடு மத்திய அரசு
ஊழியர் குடியிருப்பாகும்.இதில்
குடியிருக்க உரிமை
பெற்றவர் சட்ட
விரோதமாக இதனை
உள்வாடகைக்கு
விட்டார்.இது மிகவும்
பாதுகாப்பனதாக
இருந்தது.வீட்டுத்
தரகருக்கு கனகசபை
5000 ரூபாய் கமிஷனாக
கொடுத்தார்.'என்
பேத்தி இன்னும்
சில நாட்களில்
இங்கு வந்து விடுவார்'
என்று அவர் வீட்டுத்
தரகரிடம் கூறினார்.ஆதிரை
தில்லியில் கம்பியூட்டர்
மற்றும் ஹிந்தி
பாடங்களை படிக்க
இருப்பதாக கூறினார்.தில்லியில்
ராஜீவை கொல்ல ஒரு
வலுவான குழுவை
சிவராசன் எற்படுத்தி
இருந்தாலும்,தமிழகத்தில்
ராஜீவை கொன்று
விடுவதில் அவர்
மிகவும் நம்பிக்கையைக
இருந்தான்.ஆனால்
பொட்டு அம்மான்
விரும்பியது தில்லியை.'நாம் ஏன் தில்லியில்
முயற்சி செய்யக்
கூடாது? என்று
மே 1991ல் சிவராசனுக்கு
அம்மான் அனுப்பிய
ஒரு சங்கேத மெரிழச்
செய்தி விபரித்தது.'நான்
தமிழகத்தில் இதனை
செய்ய முடியும்
என்று நம்புகிறேன்'
என்று சிவராசன்
பதில் அனுப்பினான்.ஆனாலும்
இதனை புறந்தள்ளிய
பொட்டு அம்மான்
இது நடக்க வேண்டிய
இடம் என்று வலியுறுத்தியது
தில்லியைத்தான்.
ஷபெரும்புதூரில்
புலிகளின் சதி
நிறைவேறியதால்
தில்லி திட்டத்திற்கு
தேவையில்லாமல்
போனது.ஜீன் 1991 ல்
தில்லி பஹஜர் ஓட்டலில்
தங்கியிருந்த
ஆதிரையும்,கனகசபையும்
கைது செய்யப்பட்டனர்.இவர்களை
1999ல் உச்ச நீதிமன்றம்
விடுதலை செய்தது.காரணம்
இவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர்
சம்பவத்துடன்
தொடர்பு இல்லை
எனபதால்.
தில்லி
திட்டம் ஈடேற முடியாமல்
போனாலும்,ராஜீவை
கொல்ல புலிகள்
எவ்வாறு வெறித்தனமான
உறுதியுடன் இருந்தனர்
என்பதை இது சிபிஐ
க்கு உணர்த்தியது.'ஒரு
முறை ராஜீவை கொல்ல
பிரபாகரன் உத்தரவிட்டவிட்டால்
அதிலிருந்து தப்புவது
அவருக்கு கடினமானதுதான்'
என்;கிறார்
ரகோத்தமன்.
ஸ்ரீபெரும்புதூர்
தாக்குதல்
மே
21ல் அரசு பேருந்தில்
பயணித்த கொலையாளிகள்
ராஜீவ் பேச இருந்த
கூட்ட திடலுக்குச்
சென்றனர்.பாதுகாப்பு
பெயரளவுக்குத்தான்
இருந்தது.சிவராசன்
பத்திரிகையாளர்
வேடத்தில்.வெள்ளை
பைஜாமாவும்,கையில்
நோட்டுப் புத்தகமும்,தோளில்
பையும் மாட்டிக்
கொண்டிருந்தான்.தனு
தொள, தொள வென்ற
பச்சை ஆரஞ்சு சல்வார்
கமீஸ் அணிந்திருந்தாள்.பஸ்
பயணத்தின் போது
தனது உடைக்குள்
மறைத்திருந்ததை
தனு சொன்னபோது,நளினி
அச்சத்தில் உறைந்து
போனார்.கூட்ட திடலில்
மெட்டில் டிரெக்டர்களோ,உடல்
பரிசோதனைகளோ இல்லை.நளின்
தன்னம்பிக்கையும்,சரளமான
பேசும் திறனும்
கொண்டவர்.ஆங்கிலத்தில்
எம்.ஏ பட்டம் பெற்ற
அவர் ஒரு தனியார்
நிறுவனத்தில்
ஒரு மூத்த அதிகாரியின்
தனி உதவியாளராக
பணியாற்றினார்.முருகனிடம்
காதல் வயப்பட்டார்.தளினியும்,சுபாவும்
மனித வெடிகுண்டை
அழைத்துச் சென்றனர்.
இரவு
10 மணி 20 நிமிடங்களுக்கு
ஸ்ரீபெரும்புதூர்
வந்த ராஜீவ் காந்தி
உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.கூட்டத்தில்
சாந்தனும் உண்டு.ராஜீவ்
காந்திக்கு தனு
சந்தன மாலை அணிவித்து
அவர் காலை தொட்டு
வணங்குவதுபோல
குனிந்து தனது
இடுப்பில் கட்டியிருந்த
குண்டை வெடிக்கச்
செய்தாள்.குண்டு
எடனே வெடித்து
ராஜீவ் மற்றும்
அவரை சுற்றியிருந்த
17பேர் பலியானார்கள்.சிவராசன்
குழுவினர் தப்பி
ஓடினர்.
இந்த
சதி திட்டமிட்டபடி
நிறைவேறியிருக்கும்.ஆனால்,ஹரிபாபுவின்
கமரா சிக்கியது.சிவராசன்
புகைப்படம் எடுக்க
அமர்த்திய ஹரிபாபு
எடுத்த படங்களே
சிவராசனையும்
அவனது கூட்டாளிகளை
போலிசாருக்கு
காட்டிக்கொடுத்தது.1991
ஜீலைக்குள் கார்திகேயனின்
எஸ்ஐ.டி குழு முக்கிய
சதிகாரர்களை சுற்றி
வளைத்துவிட்டனர்.இந்ததேடல்
வேட்டை பெங்களுருவில்
உள்ள ஒரு வீட்டில்
முடிவக்கு வந்தது.வீடு
சுற்றி வளைக்கப்பட,ஆகஸ்ட்
19ல் புலிகள் குழு
தற்கொலை செய்து
கொண்டது.
சிவராசன்
சென்னையில் உள்ள
பாதுகாப்பான வீட்டில்
தனது டயரியை விட்டுச்
சென்றிருந்தான்,புலனாய்வு
குழுவுக்கு மேலும்
பல ஆவணங்கள் கிடைத்தன.விசாரனையின்
போது தாக்கல் செய்யப்பட்ட
ஆவணங்களில் டயரியும்
இருந்தது.சதி காரர்கள்
ஏன்? இவ்வளவு
ஆவணங்களை விட்டு
சென்றனர்.?புலிகள்
தங்கள் ஆயுதப்
போரை ஆவணப்படுத்தி
பிரச்சாரம் செய்வார்கள்
என்கின்றனர் புலனாய்வு
குழுவினர்.
இந்தப்
படுகொலை பிரபாரனின்
விதியையும் தீர்மானித்தது.அது
புலிகளுக்கு கிடைத்து
வந்த புகலிடத்தை
முடிவுக்கு கொண்டு
வந்தது.2009 ல் புலிகள்
சுற்றி வளைக்கப்பட்டு
பிரபாகரன் மற்றும்
பொட்டு அம்மான்
கொல்லப்பட்டனர்.இந்தியாவின்
மக்களவை தேர்தல்
நடைபெற்ற நிலையில்
இது நடந்தது.இப்போது
பிரபாகரன் உத்தரவுப்படி
செயல்பட்டவர்களின்
கதி மக்களவை தேர்தலில்
முக்கிய பங்கு
வகிக்க இருக்கிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |