Contact us at: sooddram@gmail.com

 

ஜே.ஆர். அரசின் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடு நாட்டை பிரச்சினைக்கு உட்படுத்தியுள்ளது

ஏற்கனவே ஜெனீவாவில் ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே அமெரிக்கா பிரிட்டனின் அனுசரணையுடன் இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டு தொடர்பான பிரேரணையை சம ர்ப்பித்திருக்கும் இவ்வேளையில் நாம் எமது தாய்நாடு இந்த இக்கட் டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு பின்னணியில் இருந்தவர்களை முழு உலகத்துக்கும் நம்நாட்டு மக்களுக்கும் அம்பலப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்படுவத ற்கு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சியின் போது இடம்பெற்ற 1983ம் ஆண்டின் இனக்கலவரமே பிரதான காரணமாக அமைந்தது.

கறுப்பு ஜூலை என்று உலகெங்கிலும் பிரபலம் பெற்று விளங்கும் இந்த இனக்கலவரத்தை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களே தூபமிட்டு ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

அன்றைய அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சர் பதவி வகித்த ஒரு வரின் கீழ் இருந்த ஒரு கூட்டுத்தாபனத்தின் லொறிகளில் கொழும்பு நகரம் எங்கும் குண்டர்கள் ஏற்றிவரப்பட்டு, தமிழர்கள் வாழும் வீடு களையும், அவர்களுக்குச் சொந்தமான கடைகளையும் வாக்காளர் பதிவுப் படிவங்களின் மூலம் அடையாளம் கண்டு அந்தக் கட்டி டங்களை அடித்தும், தீக்கிரையாக்கியும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி யதுடன் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிரும் இந்தக் குண்டர்களினால் பறிக்கப்பட்டது.

இதனால் அஞ்சிய இலட்சக்கணக்கான இலங்கை வாழ் தமிழர்கள் தங் கள் குடும்பங்களுடன் 1983க்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து அங்கு பல்லாண்டு காலமாக நிரந்தரமாக வாழ்ந்து வருகி றார்கள். அவர்கள் தங்களுக்கு இலங்கையில் இழைக்கப்பட்ட அநி யாயத்தை வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எடுத்துரைத்து இவ்வி தம் தாங்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவ தற்கு வழியமைத்தவர்களை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1983ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்தன அர சாங்கம் செய்த தமிழர்களுக்கு எதிரான மனிதாபிமானம் அற்ற செய ற்பாட்டினால்தான் இன்று இலங்கை சர்வதேச ரீதியில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய வேதனைக்குரிய நிலை ஏற்பட்டிரு க்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி செய்த தவறின் பிரதிபலனையே ஜெனீவாவில் நாடு இன்று முகம் கொடுக்கிறது. இறுதி கட்ட யுத்தத்தின் போது அர சாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமல் விட்ட தவறை திருத்திக் கொள் வதற்கு ஜெனீவா மாநாட்டின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தலைவர்கள் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரி வித்துள்ளார்கள்.

சர்வதேச மட்டத்தில் ஏற்படும் அழுத்தங்களை அநேக நாடுகள் எதிர்க் கட்சியின் உதவியுடன் முகம் கொடுத்துள்ளதை சுட்டிக் காட்டிய கூட் டமைப்பின் தலைவர்கள் இறுதிக் கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நவநீதம்பிள்ளை அம்மையார் தெரி வித்த குற்றச்சாட்டுக்கு எதிராக எங்கள் நாட்டு எதிர்க்கட்சிகள் எது வும் பேசவில்லை என்று அமைச்சர் வேதனை தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணை மூலம் எங்கள் நாட்டுக்கு எவ்வித பொருளாதார தடையையும் விதி க்க முடியாது என்றும் ஜெனீவா மாநாட்டை காரணம் காட்டி நாம் எவ்விதத்திலும் வாக்கு வேட்டை செய்ய மாட்டோம் என்றும் தெரி வித்தார்.

2003ம் ஆண்டில் இரசாயன ஆயுதம் இருப்பதாக ஈராக்குக்கு எதிராக மேற் கத்திய நாடுகள் போர் தொடுத்தன. ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் தூக்கில் இட்டு அந்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.

2003 முதல் இன்று வரை ஈராக்கில் 11 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ள னர். அது போன்று லிபியா, டியுனீசியா, எகிப்து போன்ற நாடுகளி லும் ஸ்திரமற்ற நிலையை அமெரிக்காவும், மேற்கத்தைய நாடுகளும் ஏற்படுத்தின என்று தெரிவித்த அமைச்சர் திரு. சுசில் பிரேம்ஜயந்த் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரும் நாடுகள் இலங்கையின் வடபகுதி அபிவிருத்திக்கு 5 சதத்தைக் கூட செலுத்தவில்லை. மக்கள் செலுத்தும் வரி மூலமே இங்கு அபிவி ருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக்கட்சி அன்று சந்தர்ப்பவாத அரசியலை நடத்தியதனால் தான் இன்று ஜெனீவாவில் எமக்கு பிரச்சினைகளுக்கு முகம் கொடு க்க வேண்டி இருக்கிறது. அமைதியாக உள்ள நாடுகளில் குழப்ப த்தை தோற்றுவிப்பதே மேற்கத்திய நாடுகளில் இராஜதந்திரமாக அமை ந்திருக்கிறது என்று அமைச்சர் சுசில் பிரேம்ஜயந் மேலும் கண்டனம் தெரிவித்தார்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com