|
||||
|
“இது
தமிழ் இனம் உணர
வேண்டிய ரணம்!
''உலகம் முழுக்க நண்பர்கள்...
பல நாடுகளில்
அலுவலகங்கள்...
இந்தியனா
இருந்தாலும்
ஏதோ எல்லைகளே
இல்லாதவன்
மாதிரி சுத்திட்டு
இருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா
இது எனக்கான
பெருமை இல்லை; சினிமா
என்ற கலைக்கான
பெருமை!'' - கலகலவெனப்
பேசத் தொடங்குகிறார்
சந்தோஷ் சிவன். உலகம் அறிந்த
இந்திய ஒளிப்பதிவாளர்.
11 தேசிய
விருதுகள்
பெற்றவர்.
ஆஸ்கர் விருதுகளைத்
தேர்வு செய்வதில்
முக்கியப்
பங்கு வகிக்கும்
'அமெரிக்கன்
சொஸைட்டி
ஆஃப் சினிமாட்டோகிராபர்ஸ்’
அமைப்பின்
உறுப்பினர்...
என ஒவ்வோர்
அடையாளத்திலும்
கண்ணிய அங்கீகாரம்
சேர்த்திருப்பவர்.
சாகச வித்தைகளுக்கு
கமர்ஷியல்
சினிமா, ரசனைப் பதிவுகளுக்கு
கிளாசிக்
சினிமா என இயங்குபவர்,
இப்போது 'இனம்’ என்ற
படத்தை இயக்கியிருக்கிறார்.
ஈழப்போரினால்
பாதிக்கப்பட்ட
குழந்தைகளின்
மனநிலையை
விவரிக்கும்
படத்தின்
டீஸர் அதிரடிக்கிறது! ''ஒரு
போர் முடிஞ்சதும்
அது தொடர்பான
பதிவுகள்,
படங்கள் வருவதை உலகம் நெகிழ்வோடு
வரவேற்கும்.
உங்களுக்கு எப்படி
இந்த யோசனை
வந்தது?'' ''என்
நண்பர் ஒருவரைச் சந்திக்கப்
போயிருந்தேன். அந்த வீட்டில்
ஒரு சிறுமி
இருந்தாங்க.
அவங்க கண்ணில் அவ்வளவு சோகம். 'யார்?’னு
விசாரிச்சேன்.
அவங்க போரில்
தன் குடும்பத்தைப்
பறிகொடுத்தவங்க.
அவங்க சொன்ன கதை
என்னை உலுக்கிருச்சு.
ஒரு போர் எப்படியெல்லாம்
ஒரு குடும்பத்தைச்
சிதைக்கும்னு
தெரிஞ்சு
அதிர்ச்சி
ஆகிட்டேன்.
அப்போ வந்த எண்ணம்தான்
'இனம்!''’ ''ஏற்கெனவே
ஈழம் தொடர்பான
சரியான புரிதல் இல்லாமல் எடுத்த இந்திப் படம் இங்கே
பிரச்னைகளை
சந்திச்சதே?'' '''இனம்’
எந்த அரசியலையும்
முன்வைக்காது. போரினால் பெற்றோர்களை,
உறவினர்களை
இழந்து அநாதையான குழந்தைகள்
பற்றி மட்டுமே பேசும் படம் இது.
இந்தப் படம் முடியும்போது
சில கேள்விகள்
உங்கள் மனதில் அலையடிக்கும்.
அதுக்குப் பதில்களும்
கிடைக்கலாம்.
அப்படி உங்களுக்குப்
பதில் கிடைச்சா, அதுதான் படத்துக்கான
வெற்றி. இது இலங்கையில்
நடக்கும்
கதை. ஆனால்,
உலகம் முழுக்கப்
போரால் பாதிக்கப்படும்
எல்லாக் குழந்தைகளின்
கதைகளையும்
பேசும் படம் இது!'' ''இந்தப்
படத்தை ஷூட் பண்ண
இலங்கையில்
அனுமதி கிடைச்சதா?'' ''இலங்கையில்
நடக்கிற கதை. அதை இலங்கையிலேயே
எடுத்திருக்கலாம்.
ஆனால், 'இப்படித்தான்
எடுக்கணும்’
என ஏதும்
முட்டுக்கட்டைகள்
வரலாம். அதனால் ஈழத்தை
அப்படியே
இங்கே க்ரியேட் பண்ணிட்டோம்.
கொஞ்சம் ராமேஸ்வரத்திலும்
ஷூட் பண்ணியிருக்கோம்.
நடிகை சரிதா 'சுனாமியக்கா’ங்கிற
கேரக்டரில்
நடிச்சிருக்காங்க.
சுனாமியில்
மொத்தக் குடும்பமே
சாக, இவர்
மட்டுமே தப்பியிருப்பார்.
'இவ்வளவு
பேர் இறந்த
பிறகும், நான் மட்டும்
உயிரோட இருக்கேன்னா...
ஏதோ நல்லதுக்குத்தான்’னு
நினைச்சு
ஒரு காப்பகத்தை
நடத்திட்டு
இருப்பாங்க. போரில்
உறவினர்களை
இழந்த குழந்தைகள்,
அங்கே அடைக்கலம்
தேடி வருவாங்க.
அதை 'காப்பகம்’னு
சொல்றதைவிட
ஒரு 'குடும்பம்’னு
சொல்லலாம். இந்தச் சூழலில்
இறுதி யுத்தம் வருது. அவங்க வாழ்க்கை
என்ன ஆகுதுங்கிறது
கதை. இந்தக் கதை தமிழ் இனம்
உணர வேண்டிய
ரணம்!'' ''யாரெல்லாம்
நடிச்சிருக்காங்க?'' ''கேரளாவில்
எனக்கு டாக்டர் ஃப்ரெண்ட்
ஒருத்தர்
இருக்கார். அவரோட குழந்தை
ஸ்பெஷல் சைல்டு. டவுண் சிண்ட்ரோமால்
பாதிக்கப்பட்டவன்.
அவனை நான் ஷூட் பண்ணணும்னு
ரொம்ப நாளா சொல்லிட்டு
இருந்தார்.
ஒருநாள் டைம் கிடைச்சப்ப,
அவனை ஷூட்
பண்ணப் போனேன். அந்தக் குழந்தையின்
உலகமே வேறு. அவனோட
உலகத்துக்குள்
போய் அவனோட
நண்பனா நின்னு, நான் ஷூட்
பண்ணப்ப 'இதுவரை பண்ணதுலேயே
இதுதான் நம்மளோட பெஸ்ட் வொர்க்’னு தோணுச்சு. 'இனம்’
கதைக்கு அப்படி ஒரு ஸ்பெஷல்
சைல்டு கேரக்டர் தேவைப்பட்டப்ப,
எனக்கு அறிமுகம் ஆனான் கரண். 16 வயசுப்
பையன். ஒன்பது மாசம் அவனுக்கு நடிக்கப் பயிற்சி கொடுத்தோம்.
அவனைத் தவிர முகாமில் உள்ள நிஜ
அகதிகளும்
நடிச்சிருக்காங்க!'' ''இந்தப்
படத்துக்கு,
உலகத் திரைப்பட விழாக்களில்
என்ன ரெஸ்பான்ஸ்?'' ''பாடல்கள்
உள்ள இண்டியன்
வெர்ஷனை புசான்ல திரையிட்டோம். நல்ல ரெஸ்பான்ஸ்.
அடுத்து நார்வே
போகுது. உலகத் திரைப்பட
விழான்னதும்
படம் ஏதோ
டாக்குமென்டரி
ஃபீல்ல இருக்கும்னு
நினைக்காதீங்க.
கமர்ஷியலான
படம். நான் ஒளிப்பதிவு
பண்ற 'அஞ்சான்’
படத்தோட டைரக்டர் லிங்குசாமி
இந்தப் படம் பார்த்துட்டு,
'நானே ரிலீஸ்
பண்றேன்’னு
சொல்லியிருக்கார்!'' '' 'தளபதி’ படத்துக்கு
முன்னாடியே
இங்க வந்துட்டீங்க.
ஆனால், தமிழ் பேச
இவ்வளவு திணறுறீங்களே.. தமிழ் கத்துக்க
ஆர்வம் இல்லையா?'' ''வேலை
காரணமா அதிகமா இங்கிலீஷ்தான்
பேசுறேன். மணிரத்னம் டீம் உள்பட நான்
வொர்க் பண்ற டீம்
எல்லாமே அப்படியே அமைஞ்சிருச்சு.
பிறகு எப்படி
தமிழ் கத்துக்க முடியும்?
இப்பதான் லிங்குசாமி
டீம்ல தமிழ் பேசிக்
கத்துட்டு
இருக்கேன்.
அடுத்து நம்ம மீட்டிங்கில்
பெட்டரா தமிழ் பேச
முயற்சி பண்றேன். கிராமத்துக்குப் போகும்போது
இன்னும் பெட்டராப்
பேசுவேன்னு
நினைக்கிறேன்.'' ''கமர்ஷியல்
படங்களுக்கு
ஒளிப்பதிவு
பண்றீங்க.. சீரியஸ்
படங்களை டைரக்ட் பண்றீங்க.. இதுக்கு என்ன காரணம்?'' ''இதுதானே
இன்ட்ரெஸ்ட்டிங். சின்ன வயசுல கேரளாவில்
இருக்கும்போது
நான் எம்.ஜி.ஆர்.
ரசிகன். குழந்தைகள் எல்லாருக்கும்
அவரோட ஹீரோயிசம்
பிடிக்கும்.
ஆனால், பயணங்கள்,
அனுபவங்கள்னு
வளர்ந்த பின்னாடி யதார்த்தமாப்
படம் பண்ணணும்னு
ஆசை வந்துச்சு.
எங்க பாட்டி
ஒரு பெயின்டர்.
அவங்க நிறைய ராஜா கதைகள்
சொல்வாங்க.
அப்படித்
தான் ஹிஸ்டாரிக்கல்
ஃபிலிம் மேல் ஆர்வம்
வந்தது. ராஜா ரவிவர்மன்
கேரக்டரில்
நடிக்கவும்
செஞ்சேன்.
எந்த சமரசமும்
இல்லாமல்
உண்மைக்கு
நெருக்கமா
படம் எடுக்க
நினைச்சேன்.
அப்படித்தான் 'மல்லி’, 'டெரரிஸ்ட்’
எடுத்தேன்.
பணத்துக்காக கமர்ஷியல்
படங்களில்
ஒளிப்பதிவு
பண்றேன்.
எனக்குப் பிடிச்சது
எல்லாம் பண்றேன். அதனால்தான் நான் சந்தோஷ் அப்புறம் சிவன்!'' ''யார்கிட்டயும்
நீங்க உதவியாளரா
இருந்தது
இல்லை.
இவ்வளவு பெரிய உயரம் எப்படிச்
சாத்தியம்?'' ''புனே
ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல
படிச்சேன். 'யார்கிட்டயாவது
உதவியாளரா
இருக்கணும்,
இல்லைனா வேலையே கிடைக்காது’னு
சொன்னாங்க.
யார்கிட்டயும்
உதவியாளரா
சேர எனக்கு
விருப்பம்
இல்லை. கொஞ்ச நாள் ஸ்டில் போட்டோ கிராபி பண்ணிட்டு
இருந்தேன். ஒருமுறை
அருணாசலப்பிரதேசத்துல
உள்ள ஒரு
ஸ்கூலுக்கு
போட்டோகிராபி
டிரெய்னிங்
தரப் போயிருந்தேன். காட்டுக்கு நடுவில்தான்
அந்த ஸ்கூல்
இருக்கு.
பசங்க எல்லாரும்
புத்தகத்தோட
கையில் கத்தியும்
வெச்சிருந்தாங்க.
'படிக்கும்
பசங்க கையில் கத்தியா?’னு
விசாரிச்சா,
'இங்கே அடிக்கடி புலிகள் நடமாடும்.
புலி வந்தா எல்லாரும்
ஓடிருவோம்.
இல்லைன்னா மரத்துல
ஏறிடுவோம்.
முடியலைன்னா... அதை பயமுறுத்தத்தான்
கத்தி’னு பதில் சொன்னாங்க.
எனக்குப்
பதற்றம் ஆகிருச்சு.
'எனக்கு
ஓடவோ, மரம்
ஏறவோ தெரியாதே...
புலி வந்தா
என்ன பண்றது?’னு
கேட்டேன்.
'பிரச்னையே
இல்லை. புலியை நேரில்
பார்த்தா
எல்லாத்தையும்
நீங்களே கத்துப்பீங்க’னு
சிரிச்சுக்கிட்டே
சொன்னார்
ஒருத்தர்.
அவ்வளவுதான் வாழ்க்கை.
வளரணும்னா சவாலைச்
சந்திக்கணும்.
கடுமையா உழைக்கணும்னு
தோணுச்சு.
நேரடியாக் களத்தில்
இறங்கிட்டேன்!'' -
ம.கா.செந்தில்குமார் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |