Contact us at: sooddram@gmail.com

 

கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்?

மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி

மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை. இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19-ம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் கிடைத்தபடி இருக்கின்றன!

 மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு கடந்த மார்ச் 8-ம் தேதியன்று அதிகாலை நேரத்தில் கிளம்பிச்சென்றது போயிங் விமானம். சீனக் கடலுக்கு மேலே வியட்நாம் அருகே உள்ள ஒரு தீவுக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென மாயமானது. இந்த விமானத்தில் 239 பேர் இருந்தனர். இவர்களில் 153 பேர் சீனர்கள். ஐந்து பேர் இந்தியர்கள். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.  விமானத்தைத் தேடும் பணியில் சீனா அதிக தீவிரம்காட்டுகிறது. இந்த நிலையில், மாயமான விமானத்தின் தலைமை பைலட் ஜகாரி அகமது ஷா-வின் மர்மப் பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அவருடைய வயது 53. விமானப் பணியில் 30 வருட சர்வீஸ் கொண்டவர் அவர்.

ஐ.நா. கண்காணிப்பு அமைப்பினர், 'அணுகுண்டு வெடிப்பு மற்றும் பூகம்பங்களைக் கண்டறியும் வகையில் அதி நவீன தொழில்நுட்பக் கண்காணிப்புக் கருவிகளை உலகெங்கும் பல்வேறு இடங்களில் நிறுவியுள்ளோம். அதை வைத்துப் பார்க்கும்போது, மலேசிய விமானம் நடுவானில் எங்கும் வெடித்துச் சிதறவில்லை. தரையில் எங்கும் விழுந்து நொறுங்கவில்லை. கடலில் எங்கும் மோதியதாகவே தெரியவில்லைஎன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சொன்னார்கள். அப்படியானால், விமானம் என்ன ஆகியிருக்கும் என்கிற சஸ்பென்ஸ் இன்னும் கூடியிருக்கிறது. ஒட்டுமொத்த விசாரணை ஏஜன்சிகளின் பார்வை விமான பைலட் அகமது ஷா மீது திரும்பியிருக்கிறது.  

இந்த நிலையில் இந்தியன் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு கவுன்சிலின் அட்வைஸராக இருக்கும் அ.ரெங்கநாதனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டோம். இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான பைலட்டாக இருந்தவர். மலேசியன் விமானம் மாயமாக மறைந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார். இனி, ரெங்கநாதன் பேசுகிறார்...

''என்னுடைய 40 வருட அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்... 1997-ம் வருடம் சிங்கப்பூர் நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அதன் பைலட் திடீரென்று விபரீதமான காரியத்தைச் செய்தார். மிக உயரத்துக்கு விமானத்தை ஓட்டிச் சென்றவர், வழியில் இந்தோனேஷியா நாட்டில் ஓடும் நதி ஒன்றை நோக்கி விமானத்தைச் செலுத்தி, விபத்தை ஏற்படுத்தினார். அந்தக் கோரச் சம்பவத்தில் 104 பயணிகள் இறந்தனர். அதாவது, பைலட் தானும் தற்கொலை முடிவை எடுத்து, மற்ற பயணிகளையும் கொலைசெய்யக் காரணமாக இருந்தார். அதே பாணியில்தான் இந்த மலேசிய நாட்டு விமான மர்மச் சம்பவம் அரங்கேறி இருக்குமோ என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

மலேசிய விமானத்தை ஓட்டிய விமானியின் வீட்டில் 'சிமுலேட்டர்என்கிற கருவி சிக்கியுள்ளது. அதை பரிசோதித்தபோது, தென்னிந்திய ஏர்போர்ட், மாலத்தீவின் ஏர்போர்ட்... போன்ற சிறிய விமான தளங்களில் பெரிய விமானத்தை எப்படி லேண்ட் ஆவது என்பது பற்றிய புரோகிராம்களை வைத்திருந்தாராம். இந்தக் கோணத்தில் அவர் ஏன் ரகசிய பயிற்சி எடுத்தார் என்று விசாரணை அதிகாரிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். விமானிக்கும் அந்த ஏர்போர்ட்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

அன்றைய தினம் விமானத்தை 45 ஆயிரம் அடி உயரத்துக்குத் திடீரென கொண்டுசென்றிருக்கிறார். அப்போது, விமானத்தின் உள்ளே பயணிகள் இருக்கும் கேபினின் பிரஷர் தொடர்பான முக்கியக் கருவிகளின் செயல்பாட்டை திடீரென விமானி நிறுத்தியிருக்கக் கூடும். அப்படி செய்தால், விமானத்தின் உள்பக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஒன்பது விநாடிகளில் செயற்கை ஆக்சிஜனை பயணிகள் சுவாசிக்கவில்லை என்றால், மூளைச்சாவு நிச்சயம். அதிகாலை நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சுதாரிப்பதற்குள் மரணத்தைத் தழுவியிருக்கலாம். இந்த நேரத்தில், விமானி உஷாராக செயற்கை சுவாசக் கருவிகளை அணிந்திருப்பார் என்பதால், அவருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

அடுத்து, மலேசியாவை கிராஸ் செய்து வியட்நாம் பக்கம் பறந்திருக்க வேண்டும். அங்கிருந்து வடக்குப் பக்கம் போயிருந்தால், பாகிஸ்தான், சீன நாடுகளின் கண்கொத்தி ரேடார் கண்காணிப்பில் எப்படியும் சிக்கியிருக்கும். அப்படி போகாமல், தெற்குப் பக்கமாக விமானத்தை சாதுர்யமாக ஓட்டியிருக்கக் கூடும். அதாவது, இந்திய எல்லையில் வரும் அந்தமான், நிகோபார் தீவுகள் திசைநோக்கி விமானம் பறந்ததற்கான ரேடார் குறிப்புகள் கிடைத்துள்ளன. இரவு நேரத்தில் அந்தமான், நிகோபார் தீவுகளில் ரேடார் செயல்பாட்டை ஏனோ நிறுத்திவைக்கிறார்கள். அதனால், விமானம் சென்றது பற்றிய துல்லியத் தகவல்கள் அங்கே பதிவாக வாய்ப்பு இல்லை. அது சென்ற திசை பற்றித்தான் தெரியும். இதைவைத்து கணக்குப்போட்டால், இந்தியப் பெருங்கடல் மீது மலேசிய விமானம் பறந்திருக்க வேண்டும். அதன் பிறகு, வேறு எங்கும் சென்றதற்கான சுவடுகூட தெரியவில்லை.

இந்தியப் பெருங்கடல் மிகவும் ஆழமானது. 10,000 அடி ஆழத்தில் விமானம் சொருகியிருந்தால், அதை உடனடியாகக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். தற்போது ஆஸ்திரேலிய நாட்டு பிரதமரும் இதே கோணத்தில் கருத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்!

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மலேசிய விமானி ஏன் திசை மாறி விமானத்தை ஓட்டினார்? விமானத்தின் பிரஸர் கருவிகளை ஏன் ஆஃப் செய்தார்? அதற்கு என்ன நோக்கம்... என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளன. ஒருவேளை, ஹைஜாக்கர்கள் மூலம் விமானிக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா? அல்லது, அவர்கள் விமானியை மிரட்டி இதுபோன்ற விபரீதத்தை அரங்கேற்றினார்களா? இந்தக் கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார் ரெங்கநாதன்.  

இதற்கிடையில், தலைமை பைலட் ஜகாரி அகமது ஷா, மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு ஒரு வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாம். அந்தத் தீர்ப்பு வழக்கப்பட்ட நாளில்தான் விமானம் மாயமானது. தீர்ப்பு வழங்கப்பட்ட கோர்ட்டுக்கு அன்வர் இப்ராகிம் போயிருக்கிறார். அவருடன் விமானி அகமது ஷாவும் போயிருக்கிறார். தீர்ப்பை கேள்விப்பட்டு, புலம்பிக்கொண்டிருந்தாராம். பிறகு, விமான நிலையத்துக்குப் பணிக்குப் போனாராம். அதன் பிறகு, அவர் ஓட்டிய விமானம் மாயமானது. தனது தலைவருக்குத் தரப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்த விபரீதத்தை அமகது ஷாவே அரங்கேற்றியிருப்பாரா? என்றும் மலேசிய பிரமுகர்கள் சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள்.

(விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com