யுத்த
தோல்வியினால்
நொந்துள்ள சில
தமிழ் மக்களை அன்பின்
மூலம் சிங்களவர்
வென்றெடுக்க வேண்டும்
இது, மக்கள்
அனைவருக்கும்
கிடைத்த இரண்டாவது
சுதந்திரம் என்ற
உணர்வுடன் நாம்
பெருமைப்பட வேண்டும்
ஒரு நாடு யுத்தத்தில்
வெற்றியடைவதற்கு,
நாட்டு மக்கள்
அனைவரின் ஒத்துழைப்பே
பிரதான காரணமாகும்.
இதனால்தான்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள்
இந்த வெற்றி என்னுடையதல்ல
என்று எந்நேரமும்
கூறுவதுண்டு.
ஆயினும், சிலர்
நாங்கள்தான் இந்த
யுத்தத்தில் வெற்றியைப்
பெற்றுக்கொடுத்தோம்
என்று ஆடம்பரமாகப்
பேசுவதில் தன்னிச்சையான
இன்பம் காண்கின்றனர்.
இந்த வெற்றிக்கு
நானே பொறுப்பு,
நான்தான் திட்டமிட்டு
இந்த வெற்றியை
ஏற்படுத்தினேன்
என்று பிரபாகரனின்
தோளைக் கட்டி அந்த
மனிதனுடைய வலுவை
புரிந்துகொண்டவர்கள்
போன்று சிலர் தம்பட்டமடிப்பார்கள்.
இரண்டு
ஆண்டுகளுக்கு
முன்னர் நாம் யுத்த
முனையில் எல். ரி. ரி. ஈ.
யினரைப் படுதோல்வி
அடையச் செய்ததற்கு
இந்த சமூக கூட்டுப்
பொறுப்பே காரணமாக
அமைந்தது. எல்.
ரி. ரி.
ஈ. யினரை முறியடித்து
நாட்டை பயங்கரவாதத்தில்
இருந்து விடுவித்ததை,
நாம் பெற்ற இரண்டாவது
சுதந்திரம் என்று
கூடக் கருதலாம்.
இந்த மாபெரும்
வெற்றியை நாம்
என்றென்றும் நினைவுகூருவதோ
அல்லது வருடம்
ஒரு தடவை நினைவுகூருவதிலோ
எந்தவித தவறும்
இல்லை.
இவ்விதம்
எமது வெற்றியை
கொண்டாடும் அன்றைய
தினத்தில் தாய்நாட்டின்
விடுதலைக்காக
உயிர்த் தியாகம்
செய்த எமது நாட்டின்
வீரம்மிக்க முப்படை
மற்றும் பொலிஸ்
உத்தியோகத்தர்களுக்கு
அஞ்சலி செய்வதற்கும்
ஒரு சந்தர்ப்பமாக
பயன்படுத்துவதே
மிகவும் பொருத்தமாக
இருக்கும்.
இதனை
இராணுவ சாகசங்களை
எடுத்துக்காட்டும்
வெற்றி விழாவாகவா
அல்லது மத வழிபாட்டுக்கு
முக்கியத்துவம்
அளிக்கும் ஒரு
நிகழ்வாக நடத்துவதா
அல்லது இரண்டையும்
இணைத்து நடத்துவதா
என்ற தீர்மானத்தை
இந்த நிகழ்வுகளை
ஒழுங்கு செய்பவர்கள்
எடுக்க வேண்டும்.
இரண்டு
ஆண்டுகளுக்கு
முன்னர் எல். ரி. ரி. ஈ.
பயங்கரவாதிகளை
துவம்சம் செய்த
நிகழ்வினால் இந்நாட்டு
மக்கள் அனைவருக்கும்
விடுதலையும் சுதந்திரமும்
கிடைத்தது.
தமிழர்,
சிங்களவர் என்ற
பேதம் இந்நாட்டில்
இல்லை. வடக்கு
கிழக்கிலுள்ள
தமிழர்கள் பெற்றுக்
கொண்ட இந்த சுதந்திரத்திற்கு
எல்லையே இல்லை.
இந்நாட்டின்
சிங்கள மக்கள்
பெற்ற சுதந்திரத்தை
விட இந்த யுத்த
வெற்றி தமிழ் மக்களுக்கு
கூடுதலான சுதந்திரத்தைப்
பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த
யுத்தத்தினால்
தங்கள் இலட்சியங்கள்
அபிலாஷைகள் தவிடுபொடியாகிவிட்டது
என்று சில தமிழ்
மக்கள் நினைக்கவும்
கூடும். அந்த எண்ணத்தை
தமிழ் மக்களின்
மனதில் இருந்து
பூரணமாக நீக்கும்
பொறுப்பு சிங்கள
மக்கள் தமிழர்களை
அன்போது அரவணைப்பதன்
மூலமே நிறைவேற்ற
முடியும். இந்த நல்லெண்ணத்துடன்
இந்த தடவை நாம்
படைகளின் வெற்றி
விழாவைக் கொண்டாட
வேண்டும்.
இந்த
வெற்றிக்கு பின்னணியில்
வீரம்மிக்க படைத்
தளபதிகளும் வீரம்மிக்க
போர் வீரர்களும்
இருக்கிறார்கள். ஆயினும் இந்த
யுத்தத்தின் வெற்றிக்கு
படைகளை வழிநடத்தியவர்
நாட்டின் தலைவரான
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்களேயாவர்.
இதனால் யுத்த
வெற்றி அரசாங்க
தலைவரின் வெற்றியாக
கருதப்படுகிறது.
ஒரு
நாடு வெற்றியடையும்
போது, அதன் பொறுப்பாளியாக
அரசாங்கத் தலைவரே
விளங்குகிறார். இதுவே உலகில்
கடைப்பிடிக்கும்
நடைமுறையாகும்.
இரண்டாவது உலக
மகா யுத்தத்தில்
சர்வாதிகாரி ஹிட்லரின்
இராணுவம் ரஷ்யாவை
ஆக்கிரமிக்க சென்ற
போது ரஷ்யப் படைகளினால்
ஜெர்மன் படைகள்
துவம்சம் செய்யப்பட்ட
போது ரஷ்யப் படைத்
தளபதியை உலகம்
பாராட்டவில்லை.
ரஷ்யாவின்
அதிபர் ஸ்டாலினையே
இந்த யுத்த வெற்றிக்கு
பாராட்டினார்கள். துட்டகைமுனுவுக்கும்
எல்லாளனுக்கும்
இடையிலான யுத்தமும்
இவ்விதமே நடந்தது.
இந்த
உண்மைத் தத்துவம்
எல். ரி. ரி. ஈ. உடனான
யுத்தத்திற்கும்
பொருத்தமானது.
சரத் பொன்சேகா
ஒரு நல்ல படைத்
தளபதி. அதைப்பற்றி
எவ்வித சர்ச்சையும்
இல்லை. எல்.
ரி. ரி.
ஈ. உடனான இறுதி
யுத்தம் நடந்து
கொண்டிருந்த போது
சரத் பொன்சேகா
இரண்டு வாரகாலம்
நாட்டில் இருக்கவில்லை.
என்றாலும்,
யுத்தம் முன்னெடுத்துச்
செல்லப்பட்டது. இதனால் சரத்
பொன்சேகாவுக்கு
எவ்வித அகெளரவமும்
ஏற்படவில்லை.
எங்கள் ஆயுதப்
படைகளைச் சேர்ந்த
ஏனைய தளபதிகள்
யுத்தத்தை வெற்றிகரமாக
நிறைவுக்கு கொண்டுவந்தார்கள்
இதைத்தான் எல்லோரின்
ஒத்துழைப்புடன்
நாம் இந்த யுத்தத்தில்
வெற்றி கண்டோம்
என்று வாதிப்பதற்கான
பிரதான காரணமாகும்.
இவ்விதம்
ஆயுதப் படையினர்
வெற்றி இலக்கை
அடைவதற்கு உத்தரவு
பிறப்பிப்பவர்
நாட்டுத் தலைவரான
ஜனாதிபதிதான். ஜனாதிபதியின்
கட்டளையின் பிரகாரமே
யுத்தம் நடத்தப்படுகிறது.
அன்று வடமராட்சி
யுத்தத்தை இந்திய
பிரதம மந்திரி
ராஜீவ் காந்தியின்
உத்தரவுக்கு அமைய
அன்றைய ஜனாதிபதி
ஜே. ஆர். ஜயவர்தன உடனடியாக
நிறுத்தினார்.
ஆனால்
இந்த தடவை அவ்விதம்
எதுவும் நடைபெறவில்லை. இந்த யுத்தத்தில்
வெளிநாட்டுகளின்
அச்சுறுத்தல்களோ
அழுத்தங்களோ வரவில்லை.
இது எங்கள்
நாட்டின் தலைவரான
ஜனாதிபதி தன்னுடைய
ராஜதந்திர திறமை
மூலம் மற்ற நாடுகளுடன்
நட்புறவை ஏற்படுத்தியதே
இதற்கான காரணமாகும்.
இறுதியில்
நாட்டின் சகல படையணிகளுக்கும்
கட்டளையிடும்
ஒரேயொரு அதிகாரியாக
இருப்பது ஜனாதிபதி
அவர்களேயாவார்.
ரணில்
தனது தோல்வியைத்
தவிர்க்கவே தேர்தலில்
பொன்சேகாவை ஆதரித்தார்
ஆகாயத்தில்
உயர்ந்து பறந்து
தாக்குதல்களை
மேற்கொள்ளும்
ஒவ்வொரு செயற்பாட்டிற்கும்
பொறுப்பாளராக
இருப்பவர் ஜனாதிபதி
அவர்களே. ஜனாதிபதி
அவர்கள் விடுக்கும்
கட்டளைகளையே எமது
ஆயுதப் படையினர்
நிறைவேற்றுகிறார்கள்.
ஆயினும் வெற்றியை
எல்லோரின் ஒத்துழைப்புடனான
வெற்றி என்றே ஜனாதிபதி
கூறுகிறார். இந்த யுத்தத்திற்கான
பொறுப்பும் அதனால்
கிடைக்கும் புகழுக்கும்
உரித்தானவர் நாட்டுத்
தலைவரேயாவர்.
பின்
லேடன் என்ற பயங்கரவாதியை
அமெரிக்க உளவுப்
படையினர் படுகொலை
செய்த போதிலும்
அதற்கான உத்தரவை
பிறப்பித்தவர்
அமெரிக்க ஜனாதிபதி
பரக் ஒபாமாவேயாவர். இத்தகைய
நிகழ்வுகளின்
அடிப்படையில்
பார்க்குமிடத்தில்
சரத் பொன்சேகாவின்
வீரத்தையும் அவர்
அளித்த பங்களிப்பையும்
எவ்விதத்திலும்
குறைகூறவோ அகெளரவத்திற்கு
உட்படுத்தவோ கூடாது.
அவர் ஒரு நாட்டுக்கு
திடீரென்று உதயமாகிய
ஒரு நல்ல தளபதியாவர்.
ஆயினும், இலங்கையின்
சர்வதேச அழுத்தங்களும்
தலையீடுகளும்
அதிகமாக இருந்த
இந்த யுத்தத்தை
நிறைவுபடுத்துவதற்கு
நாட்டுத் தலைவரான
ஜனாதிபதியின்
சிறந்த ஆளுமையே
காரணமாகும்.
அதனால்தான்
நாட்டின் தலைவராக
மஹிந்த ராஜபக்ஷவைத்
தவிர வேறு ஒருவர்
இருந்திருந்தால்
இந்த யுத்தத்தில்
இலங்கை வெற்றிபெற்றிருக்க
முடியாது என்று
உள்ளூர் மற்றும்
வெளிநாட்டு ஆலோசகர்கள்
அபிப்பிராயம்
தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த அபிப்பிராயத்தை
சரி என்று நாம்
கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் திறமையையும்
சிறந்த ஆளுமையையும்
பார்த்து பொறாமைப்பட்ட
தருஸ்மன் அறிக்கையிலும்
ராஜபக்ஷ குடும்பம்தான்
தாக்குதலுக்கு
உட்படுத்தப்பட்டார்கள்.
இன்றும்
நாளையும் சரவதேசம்
இதே குறிக்கோளுடனேயே
அரசாங்கத் தலைவரை
தாக்குவதற்கு
கங்கணம் கட்டியிருக்கிறது. சர்வதேச
சக்திகள் மஹிந்த
ராஜபக்ஷவின் ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி
வைக்கவும் திட்டமிட்டார்கள்.
அதனால்தான்
சரத் பொன்சேகாவை
பொது வேட்பாளராக
ஜனாதிபதி தேர்தலில்
இந்த சக்திகள்
போட்டியிட வைத்தனர்.
அதனால்தான்
தமிழ் தேசியக்
கூட்டணியும் சரத்
பொன்சேகாவுக்கு
பக்க சார்பாக இருந்து
வருகின்றது.
எவ்வாறாயினும்,
திறமைமிக்க அரசியல்
வாதியான மஹிந்த
ராஜபக்ஷவுக்கு
ரணில் விக்கிரமசிங்க
மெதமுலானயில்
தயாரிக்கப்பட்ட
அலப்ப என்ற சிற்றுண்டியை
ஊட்டி சரத் பொன்சேகாவை
படுதோல்வியடையச்
செய்ய முடிந்தது.
இது எதிர்க் கட்சியின்
பலவீனமல்ல. ரணில்
விக்கிரமசிங்க
தன்னை மக்கள் அரசியல்
குப்பைக் கூடைக்குள்
தூக்கி எறிவதை
தவிர்ப்பதற்காக
செய்த தந்திரமே
சரத் பொன்சேகாவை
ஜனாதிபதி தேர்தலில்
ஆதரிப்பது என்று
எடுத்த முடிவாகும்.
இத்துடன் சர்வதேச
அழுத்தங்களும்
வலுவிழந்தன.
டென்சில்
கொப்பேகடுவ, ஜானக
பெரேரா ஆகிய மாபெரும்
வீரர்கள் யுத்த
முனையில் பல்வேறு
சாதனைகளை புரிந்திருக்கிறார்கள். என்றாலும்
அவர்களால் இறுதி
வெற்றி இலக்கை
அடைய முடியவில்லை.
இதற்கான பிரதான
காரணம் அன்றிருந்த
அரசியல் தலைமைத்துவத்தைவிட
இன்று நெறியாக
அரசியல் தலைமைத்துவம்
இருந்து வருவதேயாகும்.
அன்று
யுத்தத்தில் இறங்கியிருந்த
சரத் பொன்சேகா
இன்று சிறையில்
இருக்கிறார். எகிப்தின்
ஜனாதிபதி ஹொஸ்னி
முபாறக்கிற்கு
செயற்பட்ட அந்நாட்டு
இராணுவத் தளபதிக்கும்
ஓரிரு தினங்களுக்கு
முன்னர் மரண தண்டனை
விதிக்கப்பட்டது.
பொன்சேகா தளபதியாக
இருந்த போது அவரது
உத்தரவுகளை நிறைவேற்றிய
இராணுவ அதிகாரிகளும்
இன்று குற்றம்
சாட்டப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களும்
யுத்தத்தில் பங்களிப்பு
அளித்தவர்கள்.
சரத்
பொன்சேகா ஒரு வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டு
நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டுள்ளார். இவர்
இராணுவ நீதிமன்றம்
அளித்த தீர்ப்புக்கு
ஆட்சேபம் தெரிவித்து
மேன்முறையீடு
செய்துள்ளார்.
இந்த வழக்குகள்
இப்போது எங்கள்
நாட்டின் நீதிமன்றங்களினால்
விசாரணை செய்யப்படுகின்றன.
இப்போது சரத்
பொன்சேகா ஒரு நல்ல
துடுப்பாட்டக்காரராக
மாறியிருக்கிறார்.
சரத் பொன்சேகாவுக்கு
துஸ்ரா பந்து மட்டுமல்ல
சுழல் பந்துகளை
கூட யாரும் போடுவதில்லை.
இப்போது
சரத் பொன்சேகா
வுக்கு எவரும்
பந்து வீசுவதில்லை. அதனால்
அந்த மனிதர் ஜனாதிபதி
அவர்களையும் பாதுகாப்பு
செயலாளரையும்
கண்மண் தெரியாமல்
தாக்கிக் கொண்டிருக்கிறார்.
இவை ஒரு வகையில்
சேற்றை அள்ளி வீசும்
செயற்பாடு என்றுகூட
நாம் நினைக்கலாம்.
துவேச உணர்வுடனா
அல்லது பழிவாங்கும்
உணர்வுடனா இவர்
இவ்விதம் தாக்கிக்
கொண்டிருக்கிறார்
என்று எங்களால்
நினைக்க முடியாமல்
இருக்கிறது.
சண்டே
லீடர் பத்திரிகையின்
ஆசிரியை ஒரு பத்திரிகை
காரியாலயத்தில்
தேநீர் பரிமாறும்
அளவுக்கு கூட தகுதியற்றவர்
என்று சரத் பொன்சேகா
மிகவும் தாழ்வான
முறையில் தாக்கியுள்ளார்.
சரத் பொன்சேகா
ராஜபக்ஷ சகோதரர்கள்
மீது பெளன்றி மற்றும்
சிக்சர்களை அடித்துக்
கொண்டிருக்கிறார்.
பத்திரிகைகள்
அவர் சொல்லும்
அனைத்தையும் எழுதுகின்றன.
அரசாங்கம்
பத்திரிகை சுதந்திரத்தில்
தலையிடுவதில்லை.
பொன்சேகா
இன்று சிறையில்
இருப்பது யுத்தத்துடன்
தொடர்பு டைய காரணத்திற்காக
அல்ல. யுத்தத்தில்
வெற்றியடைந்த
காரணத் தினால்
அவர் சிறை சாப்பாட்டை
உண்ண வேண்டிய நிலைக்கு
தள்ளப்படவில்லை.
இராணுவத்திற்கு
யுத்த ஆயுதங்களை
வாங்குவதற்கு
முயற்சி செய்த
அவரது மருமகனின்
குற்றச் செயல்களினால்தான்
சரத் பொன்சேகா
இன்று சிறையில்
வாடுகின்றார். சரத்
பொன்சேகா இராணுவத்
தளபதியாக இருந்த
போது மேஜர் ஜெனரல்
பராக்கிரம பன்னிப்பிட்டிய
ஒரு குற்றச்சாட்டின்
மீது இராணுவ நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்ட
போது நீதிமன்றம்
சுயாதீனமாக இயங்கிய
காரணத்தினால்தான்
அவருக்கு தண்டனையில்
இருந்து விடுபட்டு
விடுதலையாவதற்கான
வாய்ப்பு கிடைத்தது.
பராக்கிரம
பன்னிப்பிட்டிய
போன்றவர்கள் இராணுவ
நீதிமன்றத்தில்
தண்டிக்கப்பட்டா
லும் மேன்முறையீட்டின்
போது உயர் நீதிமன்றம்
அவர்களை நிரபராதிகள்
என்று விடுத்தது. சரத்
பொன்சேகாவுக்கும்
இவ்விதம் நீதிமன்றத்தில்
பக்கச்சார்பற்ற
முறையில் சரியான
நீதி கிடைக்கும்.
நீதிமன்ற சுதந்திரம்
எங்கள் நாட்டில்
நிலைத்திருக்கின்ற
காரணத்தினால்தான்
சரத் பொன்சேகா
நீதிமன்றத்தில்
ஆட்டம் போடுகிறார்.
சரத்
பொன்சேகா போன்ற
கதாபாத்திரங்களை
பார்த்து சிலர்
அனுதாபம் தெரிவிப்பதும்
இயற்கையே. இன்று
சரத் பொன்சேகா
மீதான அனுதாபம்
அதிகரித்திருப்பதற்கான
காரணம் அவர் இப்போது
அரசியல்வாதியின்
கதாபாத்திரத்தை
ஏற்றிருப்பதனாலேயேயாகும்.
யாரும் அவரைப்
பார்த்து அனுதாபப்படலாம்.
ஆனால் அவரது
செயற்பாடுகள்
சட்டத்திற்கும்
நீதிக்கும் உட்பட்டதாக
இருக்க வேண்டும்.
சட்டம் மற்றும்
நீதிக்கு புறம்பாக
சரத் பொன்சேகாவுக்கு
அநீதி இழைக்கப்பட்டால்
அது தவறு. அதுபற்றி
தீர்மானம் எடுக்கும்
பொறுப்பை மக்கள்
நீதிமன்றத்தின்
கையில் விட வேண்டும்.
இது
2600 ஆவது சம்புத்
ஜயந்தியை அனுஷ்டிக்கும்
புனித காலமாகும். இதைப்பற்றி
நாம் புதிதாக எதையும்
சொல்லத் தேவையில்லை.
பகைமைக்கு
பகைமை காட்டுவது
தவறு என்று புத்த
பெருமான் உலகத்திற்கு
அறிவுறுத்தியிக்ருகிறார்.
அப்படியிருந்தாலும்
புத்தபெருமான்
அரச நீதியை கெளரவிக்கவும்
தவறவில்லை. கொசல் மன்னன்
மற்றும் பிம்மிசார
மன்னர் ஆகியோர்
கடைப்பிடித்த
சட்டதிட்டங்களை
மாற்ற வேண்டும்
என்று புத்தபெருமான்
ஆலோசனை கூறவுமில்லை.
புத்தபெருமான்
எது நல்லது எது
தவறானது என்பதையே
உலக மாந்தர்களுக்கு
எடுத்துரைத்தார்.
புத்த தம்ம
மத கோட்பாடுகளுக்கும்
அரசாட்சிக்கும்
இடையிலான இடைவெளியை
சரியான முறையில்
விளக்கிக் கூறுவதும்
பெளத்த தர்மமேயாகும்.