|
||||
|
ஜனாதிபதி-எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
நல்லிணக்கத்துக்கான
திறவுகோலாக அமையுமா?
புரையோடிப்போன
இலங்கையின் தேசியப்
பிரச்சினைக்கு
தீர்வு தேடல் நடவடிக்கைகளும்,
முன்னெடுப்புக்களும்,
கடந்த 25 ஆண்டுகளாக
இடம்பெற்றுக்
கொண்டேயிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான
உயிர்களையும்,
பல கோடிக்கணக்கான
பெறுமதிமிக்க
சொத்துக்களையும்
இலங்கை இழந்துவிட்டது.
உயிர்களையும்,
உடைமைகளையும்
இழந்தமை ஒருபுறமிருக்க
பரஸ்பர நம்பிக்கையீனம்
காரணமாக நித்தம்,
நித்தம் மன உணர்வுகளையும்
இழந்து கொண்டிருக்கிறோம்.
சகலருடனும்
சகல கட்சிகளுடனும்
கலந்து பேசி ஏகோபித்தடிப்படையில்
அல்லது பெரும்பான்மை
அடிப்படையில்
தேசியப் பிரச்சினைக்கு
தீர்வு காண்பது
ஜனநாயகப் பாரம்பரிய
முறை.
புரையோடிப் போய்
தீர்க்கப்படாதுள்ள
பிணக்குகளுக்கு
தீர்வுகாண முனைகையில்
பல கருத்துக்களும்
அபிலாஷைகளும்
மத்திய மயப்படுத்தப்பட்டு
ஜனநாயக பாரம்பரிய
முறைகளும் தோற்றுப்
போகலாம். செய்ய
வேண்டியதை/ செய்யக்
கூடியதை/ கலந்தாலோசனை , கருத்துப்
பரிமாற்றம் என்ற
சொற்பதங்களுக்குள்
மறைத்து செய்யாமலே
விட எத்தனிக்கத்
தேவையில்லை.
நிறைவேற்று
அதிகாரங்கொண்ட
ஜனாதிபதிகள் வரிசையில்
ஐந்தாமவருடன்
இலங்கை சஞ்சரித்துக்
கொண்டிருக்கிறது. இலங்கையின்
தேசியப் பிரச்சினையை
தீர்த்து வைப்பதிலும்
முயற்சி எடுத்ததிலும்
சகலருமே பங்குதாரர்களாக
இருந்துள்ளனர்.
கடந்த
25 ஆண்டுகளுக்கும்
மேலாக சர்வதேச
பேச்சுவார்த்தைகள்
உள்நாட்டு, வெளிநாட்டு
மாநாடுகள், சர்வகட்சி
மாநாடுகள், சந்திப்புக்கள்
என பல இன்னோரன்ன
மேடைகளைக் கண்ட
இனப்பிரச்சினை
முன்னரும் பாராளுமன்ற
தெரிவுக் குழுவை
காணாமலில்லை. ஆனால் சமகாலத்திலும்
பாராளுமன்ற தெரிவுக்
குழு என்ற தீர்வு
காண்பதற்கான மேடை
தயாராகிக்கொண்டிருக்கிறது.
பெயரிடுவதிலும்,
இணைத்துக் கொள்வதிலும்/
இணைந்து கொள்வதிலும்
கடந்த பல மாதங்களாக
இழுபறிக்குள்ளாகிக்
காணப்படுகின்றமை
நாடறிந்ததே! இந்தப் பின்னணியிலேயே
ஜனாதிபதி தலைமையிலான
சுதந்திரக் கட்சிக்
குழுவும், எதிர்க்
கட்சித் தலைவர்
தலைமையிலான ஐ.
தே. க. குழுவும்
உத்தியோக பூர்வ
சந்திப்பை மேற்கொண்டுள்ளன.
சந்திப்பு
- முன் அனுபவம்
எதிர்க்
கட்சித் தலைவர்,
ஜனாதிபதி சந்திப்பு
இதற்கு முன்னரும்
பலதடவைகளில் தனித்தனியாகவும்,
கூட்டாகவும் நடந்தமை
யாவரும்அறிந்த
விடயமாகும். ஆனால்
தேசிய ரீதியான
அல்லது ராஜாங்க
ரீதியான எந்த விவகாரங்களும்
வெளிச்சத்துக்கு
வந்ததாகவோ வெற்றியாகி
வந்ததாகவோ, சரித்திரமில்லை.
ஐ. தே. க - சு. க. செய்துகொண்ட
புரிந்துணர்வு
உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டதையும்
ஒரு தடவைகாண முடிந்தது.
எவ்வாறாயினும்
கடந்த 2010 பாராளுமன்றத்
தேர்தலைத் தொடர்ந்து
ஜனாதிபதி, எதிர்க்
கட்சித் தலைவர்
சந்திப்பு - தற்போதைய
பாராளுமன்றத்தின்
எதிர்க் கட்சித்
தலைவர் பதவிக்கு
ரணிலை பிரேரித்தல்,
ஆமோதித்தல், ஏற்றுக்கொள்ளல்,
என்ற முன் உடன்பாட்டுக்கமைய
நடந்துகொள்ளும்
வாய்ப்பை ஏற்படுத்தியது.
ஐ. தே. க. வின் நிலைப்பாடு
பாராளுமன்ற
தெரிவுக் குழுவுக்கான
நிகழ்ச்சி நிரலை
தயாரிக்கும் பொருட்டு
ஜனாதிபதியின்
அழைப்பின் பேரில்
எதிர்க் கட்சித்
தலைவர் தலைமையிலான
குழுவினர் பேச்சுக்களில்
ஈடுபட்டனர். நிகழ்ச்சி நிரலை
தயாரிப்பதிலும்,
தெரிவுக் குழுவை
முன்னெடுப்பதிலும்,
ஐ. தே. கவை விட
தமிழ்க் கூட்டமைப்பும்
இணைந்திருப்பது
முக்கியமானதாகும்.
உத்தேச தெரிவுக்
குழுவில் கூட்டமைப்பினரை
இணைத்துக் கொள்வதற்கானதும்
சாதகமானதுமான
அரசியல் சூழலை
ஏற்படுத்துவதற்கான
சூத்திரத்தை ஐ.
தே. க. / அரசாங்கத்திடம்
ஒப்படைத்திருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட
வட்டாரங்களின்
தகவல்களின் படி
13 வது திருத்தத்துக்கு
அப்பால் சென்று
அரசியல் தீர்வுக்கான
வேலைத் திட்டத்தை
வகுக்க வேண்டுமென
ஐ. தே. க. வற்புறுத்தியதாக
தெரிய வருகிறது.
நல்லிணக்க
ஆணைக் குழுவின்
அறிக் கையின் அமுலாக்கம்
தொடர்பாக கலந்து
ரையாடியதாக கூறும்
ஐ. தே.
க, இருபக்க பேச்சுக்களின்
போது கலந்துரையாடப்பட்ட
அரசியல் பிரேரணைகளை
அடிப்படையாகக்
கொண்டு கண்டடையக்
கூடிய எத்தகைய
தீர்வையும் கட்சி
எதிர்க்காது என்று
ஜனாதிபதியிடம்
அறிவித்தது. தேசியப் பிரச்சினைக்குத்
அரசியல் தீர்வு
காணும் முன்னேற்றத்துக்கு
ஐ. தே. க. இணைந்து
கொள்ள வேண்டிய
தேவையை சந்திப்பின்போது
ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதேவேளை தமிழ்
கூட்டமைப்புக்கும்,
அரசுக்கும் இடையில்
கண்டடையக்கூடிய
எந்தத் தீர்வையும்
எதிர்க்கப் போவதில்லை
என ஐ. தே. க. கூறியதாக
பத்திரிகைச் செய்திகள்
கூறுகின்றன.
கூட்டமைப்பின்
கோரிக்கை
கடந்த
காலங்களில் தமிழ்க்
கூட்டமைப்புடன்
அரசாங்கம் நடத்திய
பேச்சுக்களை அடிப்படையாகக்
கொண்டு அல்லது
இனிமேல் பேசி கண்டடையக்கூடிய
விடயங்களே தெரிவுக்
குழுவின் நிகழ்ச்சி
நிரலுக்கு அடிப்படையானதாக
அமையவேண்டும்
என்ற நிலைப்பாட்டை
அல்லது நிபந்தனையை
தமிழ்க் கூட்டமைப்பு
கொண்டுள்ளது. பாராளுமன்ற
தெரிவுக் குழுவுக்கான
கால எல்லை ஆறு
மாதங்களைக் கொண்டதாக
அமைய முடியும்
என்ற பேச்சு அரசியல்
அரங்கில் இருந்து
கொண்டிருக்கிறது.
கடந்தகால கசப்பான
அனுபவங்கள்அவர்களிடத்திலே
இழையோடிக் காணப்படுவதை
அறிந்து கொள்ள
முடியாமலில்லை.
அது
ஒரு புறமிருக்க
இது கால வரையில்
கூட்டமைப்புடன்
நடத்தப்பட்ட பேச்சுக்கள்
அரசாங்கத்துடனான
பேச்சுக்களாகவன்றி
சுதந்திரக் கட்சியுடனான
பேச்சுக்களாகவே
அமைந்திருந்ததாக
எதிர்க் கட்சித்
தலைவரிடம் ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில்
அரசாங்கம் நடத்திய
பேச்சுக்களை அடிப்படையாகக்
கொண்டு நிகழ்ச்சி
நிரல் தயாரிக்கப்பட
வேண்டும் என்ற
ரணிலின் கருத்துக்கு
பதிலளிக்கையிலேயே
ஜனாதிபதி அவ்வாறு
கூறியதாக தெரிய
வருகிறது. அப்படியாயின்
பேச்சுக்களுக்கான
அடிப்படை அல்லது
நிகழ்ச்சி நிரல்
என்ற கூட்டமைப்பின்
கோரிக்கை இல்லாமலாகிறது.
இது
இவ்வாறிருக்க
தேசியப் பிரச்சினையை
தீர்க்கும் வகையில்
அரசியல் தீர்வை
உருவாக்குவதற்காக
அரசாங்கத்தால்
முடுக்கிவிடப்படும்
பாராளுமன்ற தெரிவுக்
குழுவில் சம்பந்தனை
பங்கேற்கச் செய்யும்
வகையில்/ அவரை
தனிப்பட்ட முறையில்
ஐ. தே. க. தலைவர் அணுகியதாகவும்
முன்பதான செய்தி
ஒன்று கூறுகிறது.
இதனை திட்டவட்டமாக
தமிழ்க் கூட்டமைப்புத்
தலைவரிடம் அரசியல்
தீர்வை வழங்கும்
வகையில் அரசாங்கத்தை
கட்டாய நிலைக்குத்
தள்ளும் தெரிவுக்
குழுவில் பங்கேற்குமாறு
ரணில் குறிப்பிட்டவேளை
தனது சம்மதத்தை
அவரிடம் வெளிப்படுத்திய
சம்பந்தன் கூட்டு
எதிரணியாக செயல்பட
உடன்பட்டிருப்பதாகவும்
உறுதிப்படுத்தப்படாத
செய்திகள் கூறுகின்றன.
ஜனாதிபதி மஹிந்த
- ரணில்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவும்,
எதிர்க் கட்சித்
தலைவர் ரணிலும்
அலரி மாளிகையில்
சந்தித்து அரசியல்
தீர்வுக்கான பாராளுமன்ற
தெரிவுக் குழு
அமைத்து தேசியப்
பிரச்சினையை தீர்த்துவைக்கும்
பூர்வாங்க பேச்சுக்களை
நடத்தியதை பொதுவாக
தமிழ் மக்களும்
குறிப்பாக தமிழ்
தலைவர்களும் குறித்த
முன்னேற்றம் தொடர்பில்
திடீரென யோசிக்க
ஆரம்பித்திருப்பர்.
ஜனாதிபதியே
விடுத்த அழைப்பை
ஏற்று தமது சிரேஷ்ட
சகபாடிகள் சகிதம்
பங்கேற்றமை தெரிந்ததே!
சிறுபான்மையினரின்
அபிலாஷைகள் மற்றும்
அவர்களது பிரச்சினைகளுக்கு
தீர்வுகாணுதல்
போன்ற நோக்கங்களை
உள்ளடக்கியே ஒரு
தெளிவான நிகழ்ச்சி
நிரலைக் கொண்டமைந்ததாக
ஜனாதிபதி ஏற்படுத்திக்
கொண்ட சந்திப்பு
இருந்திருக்கும்.
வழக்கமாக
கோபப்படாத, சாந்தமான
முகபாவத்துடன்
தென்படுகின்ற
ஜனாதிபதி - இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண வேண்டியதாக
எழுந்துள்ள சர்வதேச
அழுத்தம், மற்றும்
விமர்சனங்களுக்கு
முறையான நகர்வுகளை
கண்டடைய முடிவு
செய்திருக்கக்
கூடும். அந்த
வகையில் பாராளுமன்ற
தெரிவுக் குழுவுக்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை
இசைவாக்கம் செய்ய
ஐ. தே. க. தலைவரால்
முடியுமா என்பதை
ஜனாதிபதி அறிய
முற்பட்ட போதிலும்,
சுதந்திரக் கட்சியும்
ஐ. தே. க.வும்
வேறுபாடுகளைக்
களைந்து முன்னகர
முடியுமா என்ற
கேள்வி எழுந்ததாக
தெரிய வருகிறது.
அதாவது
இரு கட்சிகளும்
இணைந்து கூட்டாக
தமிழர்களால் எதிர்நோக்கப்படும்
பிரச்சினைகளுக்கு
பரிகாரம் காண்பதற்கு
ஒரு உறுதியான சூத்திரத்தை
முன்வைத்து, அதனூடாக
தேசியப் பிரச்சினைக்கு
ஒட்டுமொத்த தீர்வை
எட்டமுடியாதா
என்பதே கேள்வியாக
அமைந்ததாக கூறப்படுகிறது.
சிரேஷ்ட கட்சி
முக்கியஸ்தர்களான
திஸ்ஸ அத்த நாயக்க,
ஜோன் அமரதுங்க,
லக்ஷ்மன் கிரியெல்ல,
ரவி கருணாநாயக்க,
ஜோஸப் மைக்கல்
பெரேரா போன்றோருக்கு
தலைமை தாங்கிச்
சென்ற ரணில் விக்கிரமசிங்க,
சம்பந்தப்பட்ட
கேள்விக்கு உடன்
பதிலளிக்கவில்லை
என செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்குப் பதிலாக
தேசிய பிரச்சினைக்கு
ஒரு தீர்வு காணப்பட
வேண்டுமானால்,
தெரிவுக் குழுவுக்குள்
TNA ஐ உள்வாங்குவது
கட்டாயமானது என்பதை
வலியுறுத்தினார்.
அந்த
வகையில் SLFP - UNP ஒன்றிணைந்த,
தயாரிக்கக் கூடிய
தீர்வுத் திட்ட
சூத்திரம் தொடர்பில்
எதிர்க் கட்சித்
தலைவரின் நோக்கங்கள்
சார்புப் போக்கை
கொண்டிராதவாறு
காணப்பட்டதாக
தெரிய வருகிறது.
அவ்வாறு இரு கட்சிகளும்
கூட்டான முன்மொழிவுகளை
முன்வைப்போமாகில்
அதனை TNA நிராகரிக்க
முடியாது என ஜனாதிபதி
மீண்டும் சுட்டிக்காட்டிய
வேளை நுட்பமாக
பதிலளித்த ஐ. தே.
க. தலைவர், தேசியப்
பிரச்சினைக்கு
இறுதித் தீர்வு
காணப்பட வேண்டுமானால்,
TNA யையும் ஒரு சக்தியாக
ஏற்கவேண்டும்.
ஆகவே அக்கட்சியும்
தெரிவுக் குழுவுக்குள்
உள்ளடக்கப்பட
வேண்டும் என கூறியதாக
அறிய முடிகிறது.
முக்கிய ஐந்து
விசயங்கள்
பாராளுமன்ற
தெரிவுக் குழுவில்
அங்கத்துவம் வகிப்பதற்கு
TNA முன்வைக்கும்
நிபந்தனைகள் என்ன
என்பது தொடர்பில்
ஐ. தே.
க. தலைவரிடமிருந்து
அறிய முற்பட்டபோது,
அதற்கு அவர் கூறியதாவது,
'பாராளுமன்ற தெரிவுக்குழு
அதன் நடவடிக்கைகளை
ஆரம்பிக்கும்
தருணத்தில் விடயத்
தலைப்புகளாக உள்ளடக்க
வேண்டுமென அரசாங்கத்தைக்
கோரி TNA ஒப்படைத்துள்ள
ஐந்து முக்கிய
விவகாரங்களை கருத்திற்கொள்ள
முடியும் என்றார்.
எது
எவ்வாறாயினும்,
ஜனாதிபதி - TNA யுடனான
அரசாங்கத்தின்
பேச்சுக்களை ஏக
அடிப்படையாகக்
கொண்டு, தீர்வுத்
திட்டத்தை உருவாக்குவது
தொடர்பில் ரணிலுடனான
கலந்துரையாடல்
முழுக்க தமது வெறுப்பை
வெளிப்படுத்தினார்.
அந்த வகையில் வரையறுக்கப்பட்ட
கருத்துப் பரிமாற்றங்களை
வைத்துக்கொண்டு
ஏதேனும் தீர்வுகாண
முற்படுவது விருப்பத்துக்குரிய
ஏற்புடைமையை எட்டாது
என்பதை ஜனாதிபதி
கூறத் தவறவில்லை.
நிலைமைகள்
இவ்வாறிருக்கின்ற
போதிலும் சிநேக
பூர்வமாகவும்
புரிந்துணர்வோடும்
இடம்பெற்றுள்ளதாகக்
கருதப்படுகின்ற
நேரடி சந்திப்பு
சங்கடங்களையும்
சஞ்சலங்களையும்
உண்டுபண்ணாமல்
தேசத்தின் நன்மை
கருதி பிரச்சினைக்கான
தீர்வு முயற்சியில்
புதிய பரிமாணத்தையும்,
புதிய திருப்பத்தையும்
தோற்றுவிக்க வேண்டுமென
நலன்விரும்பிகள்
விரும்புகின்றனர்.
பேச்சுக்கள்
ஒழுங்கு
2011
ஜனவரி 10இல் அரசும்
- TNA யும் பேச்சுக்களை
ஆரம்பித்தன. இரு
திறத்தவர்களும்,
இதுவரையில் இனப்பிரச்சினையை
தீர்த்து வைத்தல்
தொடர்பாக பத்து
சுற்றுப் பேச்சுக்களில்
ஈடுபட்டனர். 2011 ஜூன் 14 இல் வடக்கு,
கிழக்கு நெருக்கடிக்கு
அரசியல் தீர்வை
வரையும் பொறுப்பை
பாராளுமன்றத்திடம்
ஒப்படைக்க அரசாங்கம்
தீர்மானித்தது.
இனப்பிரச்சினைக்கு
அரசியல் தீர்வு
காண்பதில் இறுதித்
தீர்வு உத்தேச
பாராளுமன்ற தெரிவுக்
குழுவினாலேயே
தீர்மானிக்கப்படுமாதலால்
ஹினிதியுடனான
பேச்சுக்களை தொடர்வதில்
யதார்த்தமான காரணம்
எதுவுமில்லை என
2012 ஜனவரி 29 இல் அரசாங்கம்
கூறிற்று.
கடந்த
காலப் பேச்சுக்கள்
- ஹினிதிக்கும்
சுதந்திரக் கட்சிக்
குழுவுக்குமிடையிலானதே
தவிர, அரசாங்கத்துக்கும்
ஹினிதிக்கும்
இடையிலானதல்ல
என்று கூறியிருந்த
ஜனாதிபதியின்
கூற்றை அக் கூட்டமைப்பின்
எம்.பி. சுமந்திரன்
மறுத்துரைத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தால்
அனுப்பப்பட்ட
கடிதத்தில் - ஹினிதியுடனான
பேச்சுக்களில்
கலந்துகொள்வோர்
அரசாங்கத்தின்
பிரதிநிதிகளே
என்று குறிப்பிடப்பட்டிருந்ததை
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின்
இணைப்புச் செயலாளர்
என்ற கோதாவில்
சஜின்வாஸ் குணவர்த்தன
கையொப்பமிட்டு
அனுப்பியிருந்த
கடிதத்தின்படி
அரசாங்கத்தின்
பிரதிநிதிகளாக
அமைச்சர்களான
ரத்னசிறி விக்ரமநாயக்க,
நிமல் சிறிபால
டி சில்வா, பேராசிரியர்
ஜி. எல். பீரிஸ் மற்றும்
சஜின்வாஸ் குணவர்த்தனவின்
பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை
தெரிவித்துள்ளார்.
இதேவேளை
ஜனாதிபதியுடனான
பேச்சுக்களின்
போது பரிமாறப்பட்ட
கருத்துக்களின்
அடிப்படையில்
எதிர்க் கட்சித்
தலைவர் ரணில் ஹினிதியுடன்
பேசியதாகவும்
பேசப்போவதாகவும்
தகவலறிந்த வட்டாரங்கள்
கூறுகின்றன. அவ்வாறு பேசுவதன்
மூலம் தமிழ் கூட்டமைப்பின்
பிரசன்னம் உறுதிப்படுத்தப்பட்டு
தெரிவுக் குழு
முறைமை ஆரம்பிக்கப்பட
வேண்டும் என்பதே
அரசியல் ஆர்வலர்களின்
கருத்தாக உள்ளது.
எனெனில் பாராளுமன்ற
தெரிவுக்குழு
முக்கியமானது,
அரசியல் தீர்வை
வரைவதற்கு அது
ஒரு சிறந்த மேடை
என சுட்டிக்காட்டப்படுகிறது.
சட்டத்தரணி |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |