|
||||
|
முல்லைத்தீவு
மீண்டும் துளிர்விடும்
நம்பிக்கை
தெளிந்த நீரில் பல்வேறு வகையான பறவைகள் தமக்கான இரையைத் தேடிக்கொண்டிருக்கின்றன. நன்னீர் மீன்கள்
நிறைந்து
காணப்படுவதால்,
இரை தேடுவதற்காக
பல இடம்பெயர்
பறவைகள் அங்கு குழுமியிருக்கின்றன.
அப்பகுதியைச் சூழவிருந்த
கண்ணிவெடிகள்
அப்புறப்படுத்தப்பட்டதால்,
நந்திக் கடல் ஏரிப்
பகுதி இப்போது மீன்பிடிப்பில்
மீண்டும்
பிரசித்தமாகியிருக்கின்றது.
கடந்த காலப் பயங்கரங்களையெல்லாம்
தன்னுள் விழுங்கிய
படியே நிச்சலனமற்றிருக்கிறது
நந்திக் கடல். இன்று
அப்பகுதி
அமைதியாகக்
காட்சி தந்தாலும்,
தயானி (வயது 24), ஜெகதாஸ்
(வயது 36) தம்பதியினருக்கு,
நந்திக்கடல்
இன்னமும்
பயங்கரமானதாகவே
இருக்கிறது.
காரணம், இன்று அமைதியாய்
ஓடிக்கொண்டிருக்கும்
இந்த நந்திக்
கடலில்தான்,
அவர்களது
3 மாதமே நிரம்பிய மகளை அவர்கள்
இழந்தார்கள்.
மூன்று வருடங்களுக்கு
முன்னர் என பேச
ஆரம்பித்த
தயாணிக்கு
அதற்கு மேல் பேச
முடியவில்லை.
அழ ஆரம்பித்துவிட்டார்.
ஆம் மூன்று
வருடங்களுக்கு
முன்னர் தயானி மட்டுமல்ல,
அனேகமாக அப்பகுதியின்
எல்லாக் குடும்பங்களும்
இதே பயங்கரங்களை
அனுபவித்தவர்கள்
தான்.
பல தடவைகள் இடம்பெயர்ந்து,
எல்.ரீ. ரீ.ஈயினரால் கேடயங்களாக்கப்பட்டு
நந்திக் கடலை கடந்து
செல்ல முற்பட்டோருக்கு
எல். ரீ.ரீ.
ஈயினரால் நேர்ந்த
கதியைப் பார்த்து பீதியில் புதுமாத்தளனில்
கலங்கி நின்ற ஆயிரக்கணக்கானோரில்
தயானி, ஜெகதாஸ் தம்பதியினரும்
அடங்குவர்.
‘நந்திக்
கடலைக் கடக்க நாமும்
பல தடவைகள்
முயன்றோம்.
ஆனால், எல். ரீ.
ரீ. ஈ யின்
அச்சுறுத்தலால்
அந்த எண்ணத்தைக்
கைவிட்டோம்.
எல். ரீ. ரீ.ஈ. யை வெளிப்படையாக
விமர்சித்து
நந்திக் கடலைக் கடக்க முயன்ற
பலர் சுட்டுக்
கொல்லப்பட்டதைப்
பார்த்தபின்னர்
எமக்கு அதற்கான தைரியம் வரவில்லை என்று மூன்று
வருடங்களுக்கு
முன்னர் நிகழ்ந்தவற்றை
ஞாபகப்படுத்தினார்
ஜெகதாஸ்.
நாங்கள் இடம்பெயர்ந்து
கொண்டிருந்தோம். அடைக்கலம் புகுவதற்கு
இடமேதும்
இருக்கவில்லை.
அதிக வெப்பமான
காலப்பகுதியாக
இருந்தபடியால்,
அதிக தாக்கத்தாலும்
பசியாலும்
எங்களால்
எதுவுமே செய்ய முடியாத
நிலை. எங்களுக்கு மத்தியில்
தான், இராணுவத்தினரைத்
தாக்குவதற்கான
பாரிய ஆயுதங்களை
எல். ரீ. ரீ.ஈயினர் பொருத்தி
வைத்திருந்தனர்
தாக்குதல்கள்
உக்கிரமடையவே.
எப்படியாவது நந்திக்
கடலைக் கடப்பதென்று
நாங்கள், சுமாராக ஒரு ஆயிரம்
பேர் முடிவு
செய்தோம்.
நந்திக்கடலை நாங்கள்
கடக்க ஆரம்பிக்க
எல். ரீ.ரீ.ஈயினர் எங்களை
நோக்கிச்
சுட ஆரம்பித்திருந்தனர்.
இரு மகள்மாரையும்
ரயரொன்றுடன்
இணைத்துக்கொண்டு
நாங்கள் நந்திக் கடலை நீந்திக்
கடந்து கொண்டிருக்கையில்
எங்களை நோக்கி எல்.ரீ.ரீ.யினரின்
துப்பாக்கிச்
சன்னங்கள்
உக்கிரமாக
வர ஆரம்பித்தன.
ரயிருடனான எங்கள்
தொடர்பு அறுந்தது.
நீரில் மூழ்கிய
மூத்த மகளைக் காப்பாற்றிவிட்டோம்.
இளைய மகள் சடலமாக நீரில் அடித்துச்
செல்லப்படுவதைக்
கண்டும் எதுவும் செய்ய முடியாத
பாவிகளாக
தவித்து நின்றோம்.
இந்த துயர சம்பவம்
இடம்பெற்று
மூன்று வருடங்கள்
கழிந்த நிலையில், இத்தம்பதிகள்,
தங்கள் மூத்த மகளின்
எதிர்காலத்துக்காக
ஒரு புது
வாழ்வு தொடங்கிவிட்டனர்.
வாழ்வதற்கான எல்லா நம்பிக்கைகளையும்
தெலைத்துவிட்ட
தயானி ஜெகதாஸ் தம்பதியினர்
இன்று புதியதோர்
வாழ்க் கைக்கான எதிர்பார்
ப்போடு காத்திருக்
கிறார்கள்.
இரண்டாவது மகள்
பிறந்த புதிதில் மக ளுக்காக
பால்மா பக் கற்
வாங்கிக்கொண்டு
வரும்போது,
பயிற்சிக்
காக, வெல்லாமுள்ளி
வாய்க் காலிலுள்ள
முகாமுக்கு
அழைத்துச்
செல்லப் பட்டவர் ஜெகதாஸ், ஆனால் 6 நாட்களிலேயே
அங்கிருந்து
தப்பி வந்துவிட்டார்.
தப்பி வந்தது
முதல், நந்திக் கடலைக் கடக்கும்வரை
பங்கருக்குள்ளேயே
அவரது வாழ்க்கை கழிந்திரு
ந்தது.
‘இப்ப நாங்கள்
சந்தோஷமாக
இருக்கிறம்’
என்று கூறும் ஜெகதாஸ், அங்கு வீதி
நிர்மாணத்
தொழிலாளியாக
நாளொன்றுக்கு
800 ரூபாய் வருமானமாகப்
பெறுகின்றார். அரசினால் முள்ளியவளையில்
அவர்களுக்கென
வழங்கப்பட்ட
காணியில்
ஒரு சிறு
வீட்டை அமைக்க வேண்டும் என்பது அவர்களது கனவு.
பிறப்பிலேயே கால ஊனமான
தங்கராசா
கணேஷலிங்
கத்தையும்
எல்.ரீ.ரீ.ஈ
யினர் வீட்டு வைக்கவில்லை. இறுதி
யுத்தத்தில்
அவரும் ஒரு மனிதக்
கேடயமாகப்
பயன்படுத்தப்பட்டவர்.
சக்கர நாட்காலியில்
செல்லும்
இவர், அலம்பில்
சந்தியில்
சிறு வியாபாரம்
செய்பவர்
அவர் தனது
துயர அனுபவங்களை
நினைவு கூர்ந்தார்.
எல்.ரீ.ரீ.ஈ மக்களை
புதுமாத்தளனுக்கு
விரட்டியடித்தபோது,
இடம்பெயர்வதற்கு
அவருக்குக்
சச்கர நாற்காலி இருக்க வில்லை. முழங்காலில் செப்பைக்
கட்டி தவிழ்ந்து
சென்றி ருக்கிறார்.
எல். ரீ.ரீ. ஈயினரின் துப்பாக்கிப்
பிரயோகத்
துக்கு மத்தியில்
இராணுவக்
கட்டுப்பாட்டுப்
பகுதிக்குள்
நுழைந்த அனுபவத்தை
அவர் விபரித்தார்.
இராணுவத் தினரால்
காப்பாற்றப்படுவதற்கு
நாங்கள் காத்திருந்தோம்.
ஏன் எல்.ரீ.ரீ.ஈ
யினர் பலர். கூட அவ்வாறு காத்திருந்த
னர் என்றார்.
இப்போது தான் தங்கராசாவுக்கு
ஒரு சக்கர
நாற்காலி
கிடைத்திருக்கிறது.
24ம் சிங்க
படையணி யின் தளபதி
கேர்ணல் சந்ரா அபயக்கோணின்
பணிப் புக்கு அமைய அவருக்கு
இராணுவ முகாமில் இருந்து தினமும் மதிய உணவுப்
பார்சல் கிடைக்கின்றது.
அவரது சக்கர நாற்காலிக்கு
புதிய சக்கரங்கள்
வாங்குவதற்கும்
படையினர்
உதவியிருக்கிறார்கள்.
முன்னரெல்லாம், தனது வியாபாரத்தால்
வருமானம்
கிடைக்கிறதோ
இல்லையோ வாரா வாரம்,
1000 ரூபாய் எல்.ரீ.ரீ.ஈக்கு
கப்பமாக கொடுத்ததையும்
அவர் நினைவு
கூர்ந்தார்.
அலம்பில் தங்கபுரத்தைச்
சேர்ந்த நிர்மலா செல்வம் (வயது 34) மிகுந்த
மகிழ்ச்சியுடன்
இருக்கின்றார்
முன் பள்ளி
ஆசிரியையான
அவருக்கு
24 ஆம் படையணி
யைச் சேர்ந்த
இராணுவத்தினர்
இலவசமாக வீடொன்றைக்
கட்டிக்கொடுத்துள்ளனர்.
‘எல்.ரீ.ரீ.ஈ
யினரின் கட்டுப்பாட்
டில் முல்லைத்தீவில்
இருந்தபோது
நான் முன்பள்ளி
ஆசிரியராக
எனது பணிகளை
ஆரம்பித்தேன்.
எங்களை புதுமாத்தளனுக்குக்
செல்லுமாறு
எல்.ரீ.ரீ.ஈயினர்
பணித்த தால் நாங்கள்
இடம்பெயர
வேண்டியதாயிற்று,
எல்.ரீ.ரீ.ஈ
யினரிடமிருந்து
தங்கள் பிள்ளைகளைக்
காப்பாற்ற,
பெற் றோர்
அவர்களை பெரிய பரல்களுக்குள்ளும்,
பங்கர் களுக்குள்ளும்
ஒளிந்து வைத்திருக்கிறார்கள்.
எனது 10 வயது மகனை பங்கருக்குள்
தான் நான்
ஒளிதது வைத்திருந்தேன்
என்றார்.
கணவனை இழந்த நிர்மலா முன்பள்ளி
ஆசிரி யையாக மாதாந்தம்
3000 ரூபாய் சம்பளம் பெறுகின்றார்
தனது மகனுக்கு
சிறந்த கல்வியை வழங்கவேண்டும்
என்பதே அவரது இலட்சியம்.
எங்கே எங்களது
பிள்ளை களை எல்.ரீ.ரீ.ஈ.
யினர் பிடித்து செல்வார்களோ
என்ற அச்சத்திலேயே
இந்தப் பகுதித் தாய்மார்கள்
வாழ்ந்தார்
கள். ‘எனது தம்பி
நிமல்ராஜை
என் அம்மா
அழுது கெஞ்ச கெஞ்ச
இழுத்துச்
சென்றார்கள்’.
இப்போது நிமல் ராஜ் புனர்வாழ்வளிக்கப்பட்ட
பின் குடும்பத்தவர்களோடு
இணைந்திருக்கின்றார்.
வீட்டுக்கு ஒருவர் என்ற எல்.ரீ.ரீ. ஈயின்
ஆட்சேர்ப்புத்
திட்டத்தின்
கீழ், 2006 ஆம் ஆண்டில்
அரச சார்பற்ற
நிறுவனத்தில்
பணிபுரிந்த
நிமல்ராஜ்,
இயக்கத்தில்
கட்டா யமாகச் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அதிஷ்டவசமாக
நிமல்ராஜுக்கு
ஆஸ்துமா நோயிருப்பதனால்
அவர் யுத்த
முனைக்கு
அனுப்பப்படவில்லை.
ஆனால் இறுதி யுத்தத்தில்
எல்.ரீ.ரீ.ஈயின்
படைபலம் குறுகவே முன் னேறிவரும்
இராணுவத்தைத்
தடுக்க எல்லோரும்
யுத்த முனைக்கு அனுப்பப்பட்டனர்.
‘எல்.ரீ.ரீ.யிலிருந்து
இரண்டு தடவைகள் நான் தப்பிவந்தேன்.
அவர்கள் எங்கள்
வீட்டுக்கு
வந்து அப்பாவை மிரட்டவே மீண்டும் சென்று இணைந்துகொண்டேன்.
இறுதியாக புதுமாத்தளனில்
என்னை ரி-56
ரக துப்பாக்கியுடன்
முன்னணி அரங்கில் நிறுத்தி னார்கள். ஆனால் நான் என்னிடமிருந்த
ஆயுதத்தை
மறைத்து மக்களோடு சென்று இராணுவத்தினரிடம்
சரணடைந்தேன்’
என்றார்.
புனர்வாழ்வு
நிலையத்தில்
சிங்களம்,
ஆங்கிலம்
இரண்டையும்
கற்றுள்ள
நிமல்ராஜ்,
கிளிநொச்சியில்
தனக்குச்
சொந்தமான
2 ஏக்கர் காணி யில்
விவசாயம்
செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்த வருட ஆரம்பத்தில்
அவருக்கும்,
கிளிநொச்சியைச்
சேர்ந்த முன்பள்ளி
ஆசிரியை ஒருவருக்கும்
திருமணம்
இனிதே நடத்திருக்கிறது.
நாங்கள் நந்திக்கடலினூடாக
மீண்டும்
திரும்புகையில்
இரவு 8 மணியிருக்கும்
மீன் பிடிக்காக
நந்திக் கடல் நோக்கி
வந்த சிவலிங்கம்
மணிராமைச்
சந்தித்தோம். ‘இப்ப இங்கு
மீன் பிடிக்கிறவையின்ர
எண்ணி க்கை 500 இலிருந்து
800 ஆ கூடிட்டுது.
சுமாரா 4000ல இருந்து
5,000 கிலோ வரை மீன்பிடிக்கினம்’
என்றார் அவர். சமீபகாலங்களில்
அதிகளவில்
மீன் பிடிக்கப்படு
வதாகக் கூறிய அவர்
எல்.ரீ.ரீ.ஈ
யின் காலத்தில்,
மீனவர் களிடம் வரி அறவிடப்பட்டதோடு,
எல்.ரீ.ரீ.ஈ.
முகாம்கள்,
சில தலைவர்களின்
வீடுகள் அங்கே இருந்ததனால்,
நந்திக் கடலின் சில பகுதிகளில்
மீன்பிடிக்க
எல்.ரீ.ரீ.ஈ
தடை விதித்திருந்ததாகவும்
கூறினார்.
தற்போது நந்திக்
கடல் முழுவதும்
மீன்பிடிக்கக்
கூடியதாக
உள்ளதாகவும்,
அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும்
கூறினார்.
யுத்தத்தின் பின் முன்லைத்தீவு,
தற்போது சமாதானத்தின்
பலனை அனுபவிக்கத
தொடங்கியிருக்கிறது.
மக்கள் மனங்களில்
நம்பிக்கை
துளிர்விட
ஆரம்பித்திருக்கிறது.
அண்மையில் முல்லைத்தீவுக்குச்
சென்று வந்த ஒப்சேவர்
பத்திரிகையாளர்
ஷானிகா எழுதிய கட்டுரையின்
மொழிபெயர்ப்பு. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |