|
||||||
|
போதைப் பொருள்
கடத்தல்காரர்களின்
களமாகும்
வடபகுதிக்
கடற்பரப்பு...!
2012ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம்
நாள்... வடபகுதி
கடற்பரப்பு...
கரையில் இருந்து சுமார் 18 கடல் மைல்
தொலைவு....“யாழ். குருநகர்
பக்கமாக இருந்து அலைகளை கிழித்துக்கொண்டு
விரைந்த டிங்கி படகு ஒன்று
இந்திய கடல் எல்லைக்கு
நெருக்கமாக
இலங்கை கடல் எல்லைக்குள்
நுழைந்து
நின்ற மீன்பிடிப்
படகு ஒன்றிற்கு
அருகே சென்றது” “இரு படகுகளும்
அணைக்கப்பட்டதைத்
தொடர்ந்து
மீன்பிடிப்
படகில் இருந்தவர்கள்
டிங்கிப்
படகில் வந்தவர்களிடம்
பார்ஸல் ஒன்றை கைமாற்றினர்”
“இதில் ஏதோ விபரீதம்
இருப்பதை
புரிந்து
கொண்டோம்.
உடனே எமது
கடற் கண்காணிப்பு
படகினை அப்படகுகள்
நின்ற பக்கமாக செலுத்தினோம்”
“நமது படகு
மின்னல் வேகத்தில்
அப்படகுகளை
நெருங்கியது
எம்மை கண்ட - படகுகள்
இரண்டும்
அவ்விடத்தை
விட்டு நழுவ முயன்றன.”
படகை நிறுத்துங்கள்...........!
படகை நிறுத்துங்கள்.....!
படகை நிறுத்துங்கள்.......!
“உத்தரவிட்டவாறே
அப்படகுகளை
நெருங்கினோம். சமிக்ஞைகளைக் காட்டினோம்.
எமது படகில்
இருந்த எச்சரிக்கை
மின்னொளியை
(பிlash ழிight)
அப்படகுகளை
நோக்கிப்
பாய்ச்சினோம்.
நமது படகு அப்படகுகளை
வட்டமிட்டு
முற்றுகையிட்டது.”
அப்போது யாழ். குருநகர் பக்கமாக
இருந்து வந்த டிங்கிப்
படகில் மூவர் இருப்பதைக்
கண்டோம்.
மற்றையது இந்திய
மீன்பிடிப்
படகு என்பதை
அடையாளம்
கண்டதுடன்
அதில் ஐவர் இருப்பதையும்
கண்டோம்.
“நமது படகு
மேற்படி இரு படகுகளையும்
நெருங்கிய
வேளையில்
டிங்கிப்
படகில் இருந்தவர்கள்
பார்ஸல் ஒன்றை எடுத்துக்
கடலில் வீசினார்கள்”
“உடனே எங்கள்
கடற் கண்காணிப்புப்
படகில் இருந்த கடற்படை அதிகாரியான
ஹேரத் கடலினுள் பாய்ந்து நீந்திச் சென்று கடலில் விட்டெறியப்பட்ட
பார்ஸலை எடுத்து வந்தார்.”
“இதனையடுத்து
கடற்படை அதிகாரிகளான
ஹேரத்தும்
விஜேவர்த்தனவும்
விரைந்து
செயற்பட்டு
டிங்கிப்
படகில் ஏறி அதில்
இருந்தவர்களை
மடக்கிப்
பிடித்து
வந்தனர்.”
“இதனிடையே, இந்திய மீன்பிடி படகு இந்திய
கடல் எல்லையை
நோக்கி ஓட்டம்பிடித்தது. இருப்பினும் அந்த படகினை துரத்திச்
சென்ற நாம் அது
இந்திய கடல் எல்லைக்குள்
நுழைவதற்கு
முன்னதாக
இலங்கை கடற்பரப்புக்குள்
வைத்து மடக்கினோம்.
அதில் இருந்த
ஐந்து தமிழக மீனவர்களையும்
கைது செய்தோம்.
இவை அனைத்தும்
எமது படகில்
பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு
கமராவில்
பதிவாகியுள்ளன.”
இது வடபகுதி
கடற்பரப்பில்
இலங்கை கடற்கரையிலிருந்து
சுமார் 18 கடல் மைல்
தொலைவில்
அரங்கேறிய
ஹெரோயின்
போதைப்பொருள்
கடத்தலை முறியடித்த
இலங்கை கடற்படைத்தளபதி
லெப்டினன்ட்
கொமாண்டர்
சரித்த குணவர்த்தன
கொழும்பு
மேல் நீதிமன்றத்தில்
மேல் நீதிமன்ற
நீதிபதி பிரீதிபத்மன்
சூரசேன முன்னிலையில்
வழங்கிய சாட்சியம்.
ஆம், வடபகுதி கடற்பரப்பு
இந்திய - இலங்கை போதை வஸ்த்துக்
கடத்தல்காரர்களின்
களமாக மாறிவருகிறது. குறிப்பாக
கேரளா, தமிழ்நாடு
ஆகியவற்றை
தளமாக கொண்ட போதைப்
பொருள் வியாபாரிகள்
இலங்கையின்
வடபகுதி கடலூடாக இலங்கைக்குள்
போதைப் பொருள்களை
விநியோகிக்க
தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டு
யுத்தம் ஏற்படுவதற்கு
முன்னர் வடபகுதிக்
கடலை கடத்தல்காரர்கள்
கள்ளக் கடத்தல் தேவைகளுக்கு
பயன்படுத்தி
வந்தனர்.
ஆயினும், இலங்கையின்
உள்நாட்டு
யுத்தம் குறிப்பாக
வடபகுதியில்
மையம் கொண்டிருந்ததினால்
அப்பகுதி
கடலில் பாதுகாப்பு,
கண்காணிப்புகள்
மிக தீவிரப்படுத்தப்பட்டதனால்
இக்கள்ளக்கடத்தல்
வியாபாரம்
தடைப்பட்டு
செயலிழந்து
போயிருந்தது.
இந்திய - இலங்கை
கடத்தல்காரர்கள்
முற்றாக முடக்கப்பட்டனர்.
இதனால் ஓய்ந்து
போயிருந்த
வடபகுதி கடற்பரப்பினூடான
கள்ளக்கடத்தல்
மற்றும் போதைப்பொருள்
கடத்தல் வியாபாரமானது
தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
வடக்கில் மீனவர்கள்
நலன்களுக்காக
ஏற்படுத்தப்பட்ட
தளர்வுகளை
சாதகமாக பயன்படுத்தி
போதைப்பொருட்களை
கடல்மார்க்கமாக
இலங்கைக்குள்
எடுத்துவர
கடத்தல்காரர்கள்
வடபகுதி கடலை பயன்படுத்தத்
தொடங்கியுள்ளனர்.
விமானம் மூலமாகவோ
கப்பல்களூடாகவோ
அல்லது பொதிகள் சேவைகளூடாகவோ
இலங்கைக்குள்
போதைவஸ்துகளை
எடுத்து வரமுடியாதளவு
துறைமுகம்,
இறங்கு துறைகளின்
பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ள
நிலையில்
கடத்தல்காரர்கள்
கபடத்தனமாக
கடல்மார்க்கத்தை
கையாளத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக கடத்தல்காரர்கள்
இலங்கை, இந்திய மீனவர்களின்
உதவிகளை பெறுவதுடன்
கடத்தலுக்கு
அவர்களின்
மீன்பிடி
படகுகளையும்
பயன்படுத்துகின்றனர். இவ்வாறு
வடபகுதி கடல்மார்க்கமாக
மீன்பிடி
வள்ளங்களில்
இலங்கைக்குள்
எடுத்துவரப்படும்
சஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள்
கடத்தப்படும்
வேளையிலும்
நாட்டுக்குள்
விநியோகிக்க
முற்படும்
சந்தர்ப்பங்களிலும்
பிடிபட்டுள்ளனட
அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின்
பல பாகங்களில்
இருந்தும்
கேரள கஞ்சா
அவ்வப்போது
பிடிக்கப்பட்டுள்ளன. இந்த கேரள கஞ்சாவை
வைத்திருந்த
விநியோகித்த,
பயன்படுத்திய
பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக் காலங்களில்
மன்னார் கடல் மார்க்கமாக
எடுத்துவரப்பட்ட
பெருமளவு
கஞ்சா, ஹெரோயின், புகைத்தல்
பொருட்கள்
மற்றும் போதைப் பாக்கு வகைகள் என்பன பொலிஸாராலும்
கடற்படையினராலும்
பல்வேறு சந்தர்ப்பங்களில்
கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில்
பலர் கைதுசெய்யப்பட்டும்
உள்ளனர்.
இது தவிர ஆங்காங்கே
கேரள கஞ்சாவுடன்
கைதாவோர்
தொகை அண்மைக்காலமாக
அதிகரிக்கத்
தொடங்கியுள்ளது. இது தொடர்பான செய்திகளை
அநேகமான பத்திரிகைகளில்
காண முடிகிறது.
கடந்த 27ஆம்
திகதியும்
அதிகாலை வேளையில் இந்தியாவிலிருந்து
இலங்கைக்கு
100 கிலோ கேரள
கஞ்சாவினை
கடத்திவர
மேற்கொள்ளப்பட்ட
பாரிய போதைப் பொருள் கடத்தல் முயற்சி இலங்கை கற்படையினரால்
முறியடிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து இலங்கை
கடற்பரப்புக்குள்
100 கிலோ கேரள
கஞ்சாவினை
கடத்திவந்த
இந்திய மீன்பிடிப்படகு
ஒன்றினையும்
கடத்திவரப்பட்ட
கஞ்சாவை இலங்கைக்கு
கொண்டு செல்வதற்காக
வந்திருந்த
இலங்கை மீனவர்களுக்கு
சொந்தமான
டிங்கி படகு ஒன்றினையும்
கச்சதீவுக்கு
அருகே இலங்கைக்கு
சொந்தமான
கடற்பரப்பில்
வைத்து இலங்கை கடற்படையினர்
சுற்றிவளைத்தனர்.
இந்த முற்றுகையில்
இந்திய மீனவர்களால்
எடுத்துவரப்பட்டு
இலங்கை மீனவர்களிடம்
கையளிக்கப்பட்ட
100 கிலோ கேரள
கஞ்சாவையும்
படகு பயணம்
தொடர்பாக
தகவல்களை
பரிமாறும்
ஜி.பி.எஸ்.கருவி
ஒன்றையும்
மீட்ட கடற்படையினர்
இந்திய மீன்பிடிப்
படகில் இருந்த நான்கு பேரையும் டிங்கிப் படகில் இருந்த இலங்கையர்கள்
இருவரையும்
கைதுசெய்தனர்.
இது தொடர்பாக
கடற்படைப்
பேச்சாளர்
கொமாண்டர்
பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய,
இலங்கையில்
அடிக்கடி
பல இடங்களில்
கேரள கஞ்சா
கைப்பற்றப்படுகின்ற
போதும் இந்தளவு (100 கிலோ) கேரளக்
கஞ்சா ஒரே தடவையில்
கைப்பற்றப்பட்டது
இதுவே முதற்தடவை
என குறிப்பிட்டார்.
எனவே, இவ்வாறான
கள்ளக் கடத்தல்களை
முறியடிப்பதற்கு
இலங்கை கடற்படையினர்
தீவிர நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளதாகவும்
கடற்பரப்பில்
கண்கணிப்பு
நடவடிக்கைகளை
முடுக்கிவிட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
வடபகுதி கடற்பரப்பினுள்
அத்துமீறி
நுழையும்
இந்திய மீன்பிடி ரோலர்கள் இலங்கையில்
தடைசெய்யப்பட்ட
மீன்பிடி
முறை, வலைகளை
பயன்படுத்தி
கடல் வளத்தை
சுரண்டிச்
செல்கின்றனர்.
இதனால் ஏற்படும்
பிரச்சினைகளும்
இருநாட்டு
மீனவர்களினது
பரஸ்பர குற்றச்சாட்டுகளும்
தொடர்கின்ற
நிலையில்
இலங்கையின்
வடபகுதி மீனவர்கள்
சிலரும் இந்திய மீனவர்கள்
சிலரும் போதைப் பொருள் கடத்தலில்
ஒன்றாக இணைந்து செயற்படுகின்றமை
ஆச்சரியம்
தருவதாக இருக்கிறது.
இது அண்மையில்
இடம்பெற்ற
இந்திய - இலங்கை இடையேயான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு
சம்பவங்களின்போது
இருநாட்டு
மீனவர்களும்
கூட்டாகவே
அகப்பட்டுக்
கொண்டமை மூலம் அம்பலமாகியுள்ளது.
ஒரு சில
மீனவர்கள்
சுயலாபத்துக்காக
இத்தகைய சட்டவிரோத
செயற்பாடுகளுக்கு
துணைபோகின்றமை,
நேர்மையாக
உழைத்து வாழும் ஏனைய மீனவர்களை
பாதிப்படைய
செய்யும்
அபாயகரமான
சூழ்நிலையை
ஏற்படுத்திவிடக்கூடும்.
இது மட்டுமன்றி
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில்
சட்டவிரோத
போதைவஸ்து
பாவனை அதிகரிக்கக்
கூடிய அபாயகரமான
சூழலை இது உருவாக்குவதுடன்
போதைவஸ்துக்கு
அடிமையான
சமுதாயம்
ஒன்று உருவாக இது வித்திடும்.
மொத்தத்தில் இந்திய
மீன்பிடிப்
படகுகளில்
எடுத்துவரப்படும்
கேரள கஞ்சா
மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைவஸ்துக்கள்
நடுக்கடலில்வைத்து
வடபகுதியைச்
சேர்ந்த கடத்தல்காரர்களிடம்
கைமாற்றப்படுகின்றது.
இது வடபகுதிக்கும்
நாட்டின்
ஏனைய பகுதிகளுக்கும்
புதியதொரு
அச்சுறுத்தலாக
வடிவெடுத்துள்ளது.
(க.பவன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |