|
||||
|
ஒடுக்கப்பட்ட
மக்களின்
பிரச்சினைகளில்
அதிகார வர்க்கம்
தப்படித்து (பறை),
சங்கு ஊதி போய்
அழைக்கும்
வழக்கத்தை
மீறிவிட்டதாக
ஆதிக்க சாதியினரால்
ஊரை விட்டு
ஒதுக்கிவைக்கப்பட்ட
தலித் மக்களை சந்திப்பதற்காக
இன்று காலையில் செவ்வூர் (சிவகங்கை
மாவட்டம்,
திருப்பத்தூர்
அருகில்) கிராமத்திற்குச்
சென்றோம்.
பாதிக்கப்பட்ட மக்களை
சந்தித்துப்
பேசினோம்.
டிஎஸ்பி, வட்டாட்சியர்
உள்ளிட்ட
அதிகாரிகளிடம்
புகார் செய்தும் எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை
என்று அவர்கள் கூறினார்கள்.
உடனடியாக, தலித் சமூகத்தின்
பெரியவர்கள்
சிலரை அழைத்துக்
கொண்டு திருப்பத்தூர்
வட்டாட்சியரிடம்
புகார் அளிப்பதற்காக
சென்றோம்.
தமிழ்நாடு
தீண்டாமை
ஒழிப்பு முன்னணியின்
மாவட்டச்
செயலாளர்,
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்
கட்சியின்
மாவட்டச்
செயற்குழு
உறுப்பினர்
என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு,
புகார் மனுவை வட்டாட்சியரிடம்
கொடுத்தேன்.
“ஓ...செவ்வூரா?” என்று மனுவை
வாங்கி கையில் வைத்துக்கொண்டார். பிரித்து படிக்கும்
எண்ணமும்
இல்லை.
“அதான், 6ம் தேதி பீஸ்
கமிட்டி (அமைதிப்பேச்சுவார்த்தை)
போட்டிருக்குமே”
என்று அலட்சியமாகச்
சொன்னார்.
“இல்லை சார். தலித்
மக்களை ஊரைவிட்டு
ஒதுக்கி வச்சிருக்காங்க.
கடைகளில்
சாமான் கொடுக்க மறுக்குறாங்க.
கடுமையான
அச்ச உணர்வுல
அந்த மக்கள்
இருக்காங்.
இதற்கு நீங்க நடவடிக்கை
எடுக்கனும்ல”
என்று சொன்னேன்.
“அப்படித்தானங்க
இருக்கும். இதுக்காக ஊரை மாத்த முடியுமா,
நாட்டை மாத்த முடியுமா?”
என்று பொறுப்பற்ற
முறையில்
வட்டாட்சியர்
பேசினார்.
“எவ்வளவு சீரியஸான விசயம். நீங்க
என்ன பேச்சு
பேசுறீங்க.
தலித் மக்களை ஊரை விட்டு
ஒதுக்கி வச்சிருக்காங்க.
கடையில சாமான் தர மாட்டேங்குறாங்க.
இப்படியொரு
அநியாயம்
நடந்திருக்குதுனு
அங்குள்ள
விஏஓ முதல்ல
புகார் கொடுத்திருக்கனும்.
அவர் அதை செய்யலை. அதனால உங்கக்கிட்ட
வந்திருக்கிறோம்.
நீங்க நடவடிக்கை
எடுக்க வேண்டாமா?” என்று கேட்டேன்.
“அதான் 6ம் தேதி பீஸ்
கமிட்டி போட்டிருக்குள்ள”
என்று மீண்டும் அலட்சியமாகச்
சொன்னார்
வட்டாட்சியர்.
எங்களுடன் நின்று கொண்டிருந்த,
செவ்வூர்
தலித் சமூகத்தின்
பெரியவர்
மாணிக்கம்
திடீரென அழ ஆரம்பித்துவிட்டார்.
“
எங்க பிள்ளைக
பள்ளிக்கூடத்துல
படிக்கிதுக.
அதுகளையெல்லாம்
இன்ன பேச்சுனு
இல்லை. சாதிய சொல்லி
இழிவா பேசுறாங்க.
எங்களால எப்படி ஊர்ல இருக்க
முடியும்”
என்று அழுகிறார்.
அப்பொழுது, செவ்வூரில்
கடை வைத்திருக்கும்
செட்டியாரம்மாவிடம்
இருந்து மாணிக்கத்திற்கு
அலைபேசி அழைப்பு. (சிறிய
கடை ஒன்றை
வைத்துள்ள
செட்டியாரம்மா
ஆதிக்க சாதியல்ல. தலித் மக்களுக்கு
சாமான் கொடுத்ததற்காக
இவரது கடையில் ஆதிக்க சாதியினர்
யாரும் சாமான் வாங்குவதில்லை)
நீங்க பேசுங்க என்று மாணிக்கம்
என்னிடம்
போனை கொடுத்தார். அதை வாங்கி நீங்களே பேசுங்க என்று வட்டாட்சியரிடம்
போனை கொடுத்தேன்.
அதை அவர் வாங்க மறுத்தார்.
பிறகு, நானே பேசினேன்.
போனில் செட்டியாரம்மாவின்
அழுகை குரல்.
“ரொம்ப கொடுமையா
இருக்கு சார். ரெண்டு பொம்பளை
பிள்ளைங்கல
வச்சிருக்கேன்.
கடையை வச்சுத்தான்
பொழைச்சுக்கிட்டு
இருக்கோம்.
என் கடையில்
இதர சாதிக்காரங்க
யாரும் சாமான் வாங்கக்கூடாதுன்னு
சரவணன் (ஆதிக்கசாதிக்காரர்)
சொல்லிட்டாரு.
வியாபாரமே சுத்தமா
இல்லை. நிற்கதியா நிக்கிறேன்”
என்று தேம்புகிறார்.
பெரியவர் மாணிக்கம்,
செட்டியாரம்மா
ஆகியோரின்
அழுகை நம் மனதின்
வேதனையை அதிகரித்தது. எனவே, வட்டாட்சியரிடம்
பேசி எந்தப்பயனும்
இல்லை என்ற முடிவுக்கு
வந்து, உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டேன்.
வெளியூரில் இருப்பதாகச்
சொன்னார்.
விசயத்தைச்
சொன்னதும்,
உடனடியாக
கோட்டாட்சியதை
திருப்பத்தூருக்கு
அனுப்பிவைப்பதாக
உறுதியளித்தார்
(மாவட்ட ஆட்சியரிடம்
நான் பேசிய
விசயம் வட்டாட்சியருக்குத்
தெரியாது).
அதுவரையில் அலட்சியமாக
பேசிக்கொண்டிருந்த
வட்டாட்சியர்,
வேகவேகமாக
எங்களை நோக்கி வந்து, “உள்ளே
வந்து உட்காருங்க
சார் என்றார். இல்லை
சார் நாங்க
இங்கேயே நிற்கிறோம்
என்று சொன்னோம்.
ஒரு மணி நேரத்தில்
கோட்டாட்சியர்
வந்துவிட்டார். “அந்தத் தரப்புல (ஆதிக்க சாதியினர்)
பேசினேன்.
சமாதானமா போறதா சொல்றாங்க”
என்று கோட்டாட்சியர்
சொன்னார்.
“இல்லை
சார். ஊரைவிட்டு
ஒதுக்கி வைத்திருக்காங்க,
கடையில் சாமான் தர மறுக்குறாங்க,
ஊர் மந்தைச்சாவடி
உள்ளே நுழைவதைத்
தடுக்குறாங்க,
ஊர் பொதுப்பணத்தை
வச்சிருக்காங்க.
இப்படி நிறைய பிரச்சினை
இருக்கு. இதுல உறுதியான
நடவடிக்கை
எடுக்கனும்”
என்று கோட்டாட்சியரிடம்
சொன்னோம்.
அப்பொழுதும் பெரியவர் அன்பரசன் அழுதிவிட்டார். பறையனா
பொறந்தது
தப்பாய்யா.. சாதியைச்
சொல்லி எங்களை இப்புடி கேலப்படுத்துறாங்க..அராஜகம்
பண்றாங்க...என்று கேவிக்கேவி
அழுதார்.
சற்று நேரம் அமைதி
நிலவியது.
“இரண்டு தரப்புலயும்
பேசுவோம். நாளைக்கு நீங்களும்
வாங்க. அவங்களையும்
வரச்சொல்வோம்”
என்று கோட்டாட்சியர்
கூறினார்.
அதன் அடிப்படையில்
நாளை பேச்சுவார்த்தை
நடைபெறவிருக்கிறது.
(ஒடுக்கப்பட்ட
மக்களின்
பிரச்சினைகளில்
அதிகார வர்க்கம் எந்தளவுக்கு
சுரணையற்று
இருக்கிறது
என்பதற்காகவே
இந்தப்பதிவு) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |