|
||||
|
நரேந்திர மோடி
நரேந்திர மோடி இன்று
உலகெங்கும்
உச்சரிக்கப்படும்
பிரபல்யமானதொரு
பெயர். இந்திய அரசியல்
வரலாற்றில்
வரலாறு படைத்த நாயகனாக இன்று உலகெங்கும்
பேசப்படும்
மாபெரும்
தலைவன் நரேந்திர மோடி. இவர் எதிர்வரும்
21ஆம் திகதி
உலகின் மிகப் பெரிய
ஜனநாயக நாடான இந்தியாவின்
14ஆவது பிரதமராகப்
பதவி யேற்கவுள்ளார்.
1950 ஆம் ஆண்டு
செப்டம்பர்
17ஆம் திகதி
குஜராத் மாநிலத்தில்
ஒரு நடுத்தர
வசதி படைத்த
சாதாரண குடும்பத்தில்
பிறந்த நரேந்திர மோடி தனது
சிறு வயதில்
மிகவும் கஷ்டங்களை
அனுபவித்து
கல்வி கற்று இன்று
பாரத தேசத்தின்
பிரதமர் எனும் உயர்
நிலைக்கு
உயர்ந்துள்ளார்.
பிரதமர் பதவிக்காக
அவர் போட்டியிட்ட
காலத்தில்
நாடு பூராவும்
இடம்பெற்ற
சுமார் ஐநூறுக்கும்
அதிகமான தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்
மோடி கலந்து
கொண்டுரையாற்றியபோது
தனது கடந்த
கால அரசியல்
அனுபவத்தையே
அதிகம் பகிர்ந்து
கொண்டார்.
மோடி, குஜராத்தை
சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில்
ஒருவராகப்
பன்னெடுங்காலமாகத்
திகழ்ந்து
தொடர்ந்து
நான்கு முறை குஜராத்
மாநில இடைத்தேர்தலில்
வெற்றிபெற்று,
குஜராத் அரசியல் வரலாற்றில்
நீண்டகால
முதல்வராக
இருந்தவர்
என்ற சாதனையைப்
பெற்றவர்.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும்
மாநிலத்தில்
மிகப்பெரிய
அளவில் தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்
என்பதில்,
அதிக ஆர்வம்
கொண்டவராக
விளங்கிய
அவர், மின்சாரம்,
தண்ணீர், பாதை வசதிகள்,
பெண் கல்வி,
ஆரோக்கியம்,
ஊழலற்ற நிர்வா கம், விவசாயம்,
தொழில் வளர்ச்சி என அனைத்துத்துறைகளிலும்
பல திட்டங்களை
நடைமுறைப்படுத்தி,
குஜராத் மாநிலத்தை
மற்ற மாநிலங்களுக்கு
முன்மாதிரியாக
மாற்றிக்காட்டினார்.
அதனை குஜராத்
மாநில மக்கள் மட்டுமல்லாது
முழுநாட்டு
மக்க ளுமே
அறிந்து வைத்திருந்தனர்.
அதன் பிரதிபலிப்பே
இன்று அவரைப் பிரதமராக்கி
அழகு பார்க்க
வைத்துள்ளது.
இவர் இளமைப்
பருவத்திலிருந்து
ராஷ்டிரிய
சுயம்சேவா
சங்க ஒரு உறுப்பினராகவும்
இருந்துவரும்
மோடி, இளமைப்
பருவத்திலேயே
அரசியலில்
ஆர்வம் கொண்டவராகவே
காணப்பட்டார்.
இவர் 1998ஆம்
ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
ஊடகங்களும்
அறிஞர்களும்
இவரை இந்து
தேசியவாதியாக
விவரிப்பதை
இவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்
எனினும் இவர் தன்னை
ஒருபோதும்
இந்து தேசிய வாதியாக
வெளிப்படையாகக்
காட்டியது
கிடையாது.
இருந்தும்
இந்தியாவிற்குள்ளும்
சர்வதேசத்திலும்
மிகுந்த சர்ச்சைகளுக்
குட்பட்ட
மனிதராக மோடி இருந்து
வருவதை ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டும்.
எது எவ்வாறு
இருப்பினும்
இன்று மோடி தான்
பெற்ற வெற்றி மூலமாக ஒரு சாதனை
வீரனாக பாரத தேசத்து
மக்களால்
போற்றப்படும்
நிலையிலுள்ளார்.
மோடி அவர்களது அறுதிப்பெரும்பான்மை
வெற்றி மூலமாக பாரதத்தில்
1984ஆம் ஆண்டுக்குப்
பிறகு முதல் முறையாக
தனிப்பெரும்பான்மையுடன்
மத்திய அரசு அமைகிறது. இந்தியா இதுவரை
16 லோக்சபா தேர்தல்களை
எதிர்கொண்டிருக்கிறது.
1984ஆம் ஆண்டு
நடைபெற்ற
லோக்சபா தேர்தலில்
இந்திரா படுகொலையால்
ஏற்பட்ட அனுதாபத்தின்
விளைவாக காங்கிரஸ்
கட்சிக்கு
415 இடங்கள்
கிடைத்தன.
அதன் பின்னர்
நாட்டில்
நடைபெற்ற
அனைத்து தேர்தல்களிலும்
காங்கிரஸ்
தனிப்பெரும்பான்மையைப்
பெறவில்லை.
எதிர்க்கட்சியாக இருந்த
பா.ஜ.கவுக்கும்
கிடைக்கவில்லை.
தற்போது 30 ஆண்டுகளுக்குப்
பின்னர் நாட்டில் முதல் முறையாக
தனிப் பெரும்பான்மை
பலத்துடன்
பாரதிய ஜனதா மத்திய
அரசை அமைக்கிறது.
பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். தற்போது பாஜக 277 இடங்களில்
முன்னிலையில்
இருக்கிறது.
அத்துடன் தனிப்பெரும்பான்மை
பெற்ற காங்கிரஸ்
அல்லாத முதல் கட்சியாக
பாஜக உருவெடுத்துள்ளது.
மேலும் காங்கிரஸ்
அல்லாத வலிமையான தனிப்பெரும்பான்மையுடன்
கூடிய முதல் மத்திய
அரசையும்
பாரதிய ஜனதா அமைக்கிறது.
மேலும் இந்தியாவில்
இதுவரை இருந்து வந்த கூட்டணி
ஆட்சி சகாப்தம் என்பது முடிவுக்கும்
வந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் வெற்றிபெற்ற
மோடி அவர்கள்
தனது வெற்றியுரையில்
இந்திய தேசத்தில்
நல்லாட்சி
புரிவேன்
என்றும், நாட்டை மறுகட்டமைப்பு
செய்வேன்
என்றும் தெரிவித்திருக்கிறார்.
பாஜகவின்
வெற்றிக்குப்
பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில்
ஆற்றிய தனதுரையில்
மோடி, தேர்தலில்
தனிப் பெரும்பான்மை
வழங்கிய இந்திய மக்களுக்கு
நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஜனநாயக நடைமுறைகளை
கருத்தில்
கொண்டு மக்கள் இந்த தீர்ப்பை
அளித்துள்ளனர்
என்பதை உணர்கிறேன்.
புதிய சாதனையை
படைக்க உதவிய நாட்டு
மக்களுக்கு
தலை வணங்குகிறேன்
என மோடி
கண்ணி யமானதொரு வெற்றியுரையை
நிகழ்த்தி
மக்கள் மனங்களில்
இடம்பிடித்திருக்கிறார்.
இந்திய அரசியல்
வரலாற்றில்
காங்கிரஸ்
அல்லாத வலுவான கொள்கைகள்
கொண்ட தேசியவாத கட்சிக்கு
ஒரு கட்சிக்கு
முதல் முறையாக இந்திய மக்கள் மிகப் பெரிய
தனிப் பெரும்பான்மை
வெற்றியை
அளித்துள்ளனர்.
மத்தியில் அமையவுள்ள
அரசு, இந்திய
மக்கள் அனைவருக்கும்
சொந்தமான
அரசு. ஒரு தனிப்பட்ட
கட்சிக்கோ,
ஒரு குறிப்பிட்ட
மதத்துக்கோ
சொந்தமானது
அல்ல எனவும்
மோடி தனது
வெற்றியுரையில்
குறிப்பிட்டுள்ளார்.
இது அந்நாட்டில்
மோடி மீதம்,
பாரதீய ஜனதாக் கட்சி மீதும்
சந்தேகக்
கண்களுடன்
இருந்த சிலருக்குக்
கூட நிச்சயம்
நம்பிக்கை
ஒளி தருவதாக
அமைந்திருக்கும்.
பாஜக வரலாற்றை நோக்கினால்
ஜனதா கட்சியிலிருந்து
பிரிந்து
1980 ஆம் ஆண்டு
பாஜக உதயமானது. 1984ஆம்
ஆண்டு பாராளுமன்றத்
தேர்தலில்
பாஜக இரண்டு
இடங்களில்
மட்டுமே வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்குப்
பிறகு அந்தக் கட்சி தற்போது
தனிப் பெரும்பான்மை
என்ற வளர்ச்சி
கண்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு தேர்தலுக்குப்
பிறகு, எதிர்கட்சி
ஒன்று தனிப் பெரும்பான்மை
பெற்று ஆட்சி அமைக்
கிறது. சுதந்திர இந்தியாவின்
தேர்தல் வரலாற்றில்
எதிர்கட்சி
பெரும்பான்மை
பெற்று ஆட்சி அமைப்பது,
இது இரண்டாவது
முறை என்பது
குறிப்பிடத்தக்கது.
மத்தியில் 25 ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு கட்சி
தனிப் பெரும்பான்மை
பெற்று ஆட்சி அமைக்கப்
போகிறது.
1989ற்குப் பிறகே மத்தியில்
கூட்டணி ஆட்சியே நடைபெற்று
வந்தது.
1996ஆம்
ஆண்டு பாஜக தலைமையில்
முதன் முதலில் ஆட்சி அமைந்தது. ஆனால்
அது 13 நாட்களில்
கவிழ்ந்தது.
பிறகு 1998ஆம் ஆண்டு
தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் ஆட்சியைப்
பிடித்தது
இதுவும் 13 மாதங்களே நீடித்தது.
13 என்ற எண் பாஜகவிற்கு
பெரும் அலர்ஜியாகத்
தொடங்கியது.
பிறகு 1999ஆம்
ஆண்டு கார்கில் போரை முன்வைத்து
மீண்டும்
பாஜக தலைமை
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரியணை ஏறியது. இந்தத் தேர்தலில்
பாஜக 182 இடங்களைக்
கைப்பற்றியது.
1984ஆம் ஆண்டு
பெருத்த எதிர்பார்ப்பிற்கு
எதிராக 543 தொகுதிகளில்
படுமோசமாக
2 இடங்களையே
கைப்பற்றியது
காரணம் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து
ஏற்பட்ட அனுதாப அலை.
மாறாக காங்கிரஸ்
கட்சி 1999ஆம்
ஆண்டு மிகக் குறைவான
114 இடங்களைக்
கைப்பற்றியது
2014ஆம் ஆண்டு
இரட்டை இலக்கத்தில்
தேங்கிப்
போயுள்ளது.
இந்த இரண்டு பெரும் தோல்விகளுமே
காங்கிரஸ்
கட்சிக்கு
சோனியா காந்தி தலைமையின்
கீழ் ஏற்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.
இதுசாரிகளுக்கும் இந்த தேர்தல்
முடிவுகள்
மிகவும் குறைவான எண்ணிக்கையையே
கொடுத்துள்ளது. இந்த
நிலையில்,
காங்கிரஸின்
10 ஆண்டு கால ஆட்சியில்
மக்கள் கடும் அதிருப்தி
அடைந்ததன்
விளைவாகவும்,
மோடியின்
எழுச்சியின்
காரணமாகவும்
பாஜக மகத்தான
வெற்றியை
இப்போது நிலைநாட்டியுள்ளது
என்றே கூற வேண்டும்.
எனவே வெற்றியைத்
தனதாக்கிக்
கொண்டுள்ள
நரேந்திர
மோடி இனித்
தொடரவுள்ள
அரசியல் பயணத்தில்
தான் தெரிவித்தது
போன்று அனைவரையும்
அரவணைத்துச்
செல்ல வேண்டும்.
அத்துடன் அண்டை நாடான இலங்கையுடன்
நட்பு, ராஜதந்திர
உறவுகளைப்
பேணி இருநாட்டு
மேம்பாட்டிற்காகவும்
பாடுபட முன்வர வேண்டும்.
(தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |