|
||||
|
மே
18. முள்ளிவாய்க்கால்
நினைவுதினம் இதற்கு
அரசியல் ரீதியான பெறுமதி ஒன்றுமில்லை மே
18.
முள்ளிவாய்க்கால் நினைவுதினம்.
முகநூலில் பதியப்படும்
புகைப்படங்கள்
நெஞ்சை அறுக்கின்றன.
கண்ணில் ஈரம் துளிர்க்காமல்
நகர முடியவில்லை
தான். ஆனால், ஏய் ராஜபக்ஷே என்ற அடிவயிற்று
உறுமல் எனக்கு எழவில்லையே
ஏன்? இதைச்
சொல்லக் கூச்சம் ஒன்றுமில்லை.
தமிழில் நிகழும்
இந்த வெற்று
உறுமல்கள்
ஒரு கும்பல்
மனநிலையின்
கையாலாகாத
கோபம். அது ஒரு மதிக்கத்தக்க
உணர்வுதான்.
ஆனால் அதற்கு
அரசியல் ரீதியான பெறுமதி ஒன்றுமில்லை.
கடந்த இருபது
ஆண்டுகளில்
ஈழத்தில்
நடந்தது என்ன? தமிழகத்தின் நம் அரசியல் தலைமைகள்
ஈழமக்களின்
நலன் குறித்து
சாதித்தது
தான் என்ன? ஒன்றுமே இல்லையா
என்றால், ஆம்.ஒன்றுமே
இல்லைதான்.
பிரபாகரன் குறித்த
சிறிய விமர்சன முணுமுணுப்பு
கூட தமிழில்
எழவில்லையே
ஏன்? இந்த அறிவு மொன்னைத்
தனம் தான்
புலிகளை, சக மனிதர்கள்
என்று பார்க்காமல்
ஒரு சாகசக்காரர்களாக
தமிழின் வெகுஜன மனநிலையில்
நிலை நிறுத்தியது.
தமிழீழ அரசியல்
பேசிய எல்லோரும்
இதில் தவறிழைத்தவர்கள்
தான். தேசிய
இன மக்களின்
விடுதலை என்பது சாகசத்தின்
பாற்பட்டதல்ல.
அது வலிமிகுந்தது. ஒரு கட்டத்துக்கு
மேல் ஆசுவாசம்
வேண்டி நகரக் கூடியது.
தமிழக மக்களாகிய
நாம் அந்த
உணர்வை மதித்ததே இல்லை. அங்கீகரித்ததே இல்லை.போரில்
புலிகள் தோற்றவுடன்
இலங்கைத்
தமிழர்கள்
மீது நமக்கு
சுரக்கும்
இரக்கம் புலிகளின்
காலத்திலேயே
வந்திருக்க
வேண்டும்.
எவ்வளவு இடப்பெயர்வுகள்,
வேதனைகள்.
நமது சாகச மனநிலையையிட்டு
நாம் அதை
காணாது கடந்தோம்.
நமது தமிழகத்
தலைமைகள்
அதை தூபம்
போட்டு வளர்த்தன.
அதனால் தான் பிரபாகரன்
இறந்ததைக்
கூட அறிவிக்க
இயலாத கயமையில் தவிக்கின்றன.
வைகோ, நெடுமாறன்,
பின்னாளில்
சீமான் போன்றோர்களின்
அரசியலை இந்த அடிப்படையில்
நான் நிராகரிக்கிறேன். இப்போது
மீதமிருக்கும்
அம்மக்களுக்குத்
தேவை ஆறுதல். உங்கள் கபடமான அல்லது முட்டாள் தனமான வீர
வணக்கம் அல்ல. போர்க்கால
புகைப்படங்களில்
சாவின் விளிம்பில்
அந்த உயிர்களின்
கண்களைப்
பார்த்தவர்கள்
யாரும், அவர்களை அரசியலுக்குப்
பயன்படுத்த
முடியாது.
கூடாது. புலிகளின் மீதான சாகச மனநிலையில்
இருந்து நாம் வெளியேறுவோம்.
இசைப்ரியா மட்டுமல்ல
கைகள் கட்டப்பட்ட
நிலையில்
கொல்லப்படக்
காத்திருக்கும்
அந்த போராளி
சிறுவனும்
வாழ வேண்டியவனே.
என் கண்ணீர்
அவனுக்கும்
உரியது. அந்த எளிய உயிர்களை வைத்து சூதாடியவர்களை
நாம் மன்னிக்க
முடியாது.
அதை இனங்கண்டு
கொள்ள குறைந்த பட்ச அரசியல்
புரிதல் தேவை. ஆனால்
உணர்ச்சிவசப்படுவதை
நிறுத்தும்
இடத்திலிருந்துதான்
அந்த புரிதல்
தொடங்குகிறது.
(Karl Max)
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |