|
||||
|
ராஜபக் ஷே வருகை தமிழர் பிரச்னைக்கு பின்னடைவு இல்லை நாட்டின், 14வது பிரதமராக, நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்வு, மிகப் பெரிய கொண்டாட்டம் தான். அதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த நிகழ்வுக்கு, 'சார்க்' நாடுகளின் தலைவர்களை அழைத்திருப்பது, குறிப்பாக இலங்கை அதிபர், ராஜபக் ஷேவை அழைத்திருப்பது, மிகப்பெரிய கொந்தளிப்பை, உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அழைப்பதில் தவறில்லை எடுத்த எடுப்பிலேயே, இப்படியொரு எதிர்ப்பை, புதிதாக பதவியேற்கும் அரசு எதிர் கொள்ளத்தான் வேண்டுமா என கேட்டால், கொஞ்சம் யோசித்து, இந்த விஷயத்தை கையாண்டிருக்கலாமோ என, நினைக்கத் தோன்றுகிறது. அதற்காக, ராஜபக் ஷேவை, பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததால், தமிழர்கள் பிரச்னையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் யாரும் கருத வேண்டியதில்லை. பக்கத்து வீட்டுக்காரன், நம்மோடு பகைதான். ஆனாலும், நம் வீட்டில் ஒரு சுப காரியம் நடக்கும்போது, அவனை மரியாதை நிமித்தமாக நிகழ்வுக்கு அழைப்பதில் தவறில்லை தான். அந்த சுப நிகழ்வுக்கு அழைத்து விட்டதால், ஆண்டாண்டு காலமாக நிலவி வந்த பகை, ஒரே நாளில் தீர்ந்து விடும் என, சொல்ல முடியாது. பக்கத்து வீட்டுக்காரனின் மன நிலையும், ஒரே நாளில் மாறிவிடும் என, எதிர்பார்க்க வேண்டியதில்லை. அப்படியொரு சாதாரண நிகழ்வாகவே, பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததை, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பக்கத்து வீட்டுக்காரன் சுப நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, வருகை தரும் போது, நமக்குள்ளேயே இருக்கும் சிலர், பக்கத்து வீட்டுக்காரனை, வன்மத்தோடு எதிர்கொண்டு விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. அப்படி எந்தவொரு எதிர் மறையான விளைவுகளும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற, பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதுதான், நியாயமான சிந்தனை. தண்டிக்கப்பட வேண்டும் அப்படித்தான், ராஜபக் ஷே வருகையால், இங்கே ஏதும் மோசமான நிகழ்வு நடந்து விடக்கூடாது என்று நினைக்கிறோம். காரணம், இலங்கையில் நடந்த பிரச்னைகளால், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் நபர், அதிபர் ராஜபக் ஷே. அதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என, இங்கிருக்கும் தமிழ் அமைப்புகளும், உலகத்தின் பல மூலைகளிலும் இருக்கும் தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெரும் வெற்றியடைந்திருக்கும், பா.ஜ., தரப்பு, இங்கிருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளித்திருக்கலாம். இந்தியாவில் நடக்கும் ஒரு பதவியேற்பு விழாவிற்கு வரும், இலங்கை அதிபர் ராஜபக் ஷேவிடம், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, யாரும் பேசப் போவதில்லை. அது ஒரே நாளில், ஒரே சிட்டிங்கில் பேசி முடிக்கக்கூடிய பிரச்னையும் அல்ல. அதனால், அவர் வருகைக்கு அவ்வளவு முக்கியத்துவமும் தர வேண்டியதில்லை. இங்கே இருக்கும் சின்ன சலசலப்புகளும் கூட, அவர் வந்து விட்டு போன பின்னால், அடங்கி விடும். இலங்கையைப் பொறுத்த வரையில், அதிபராக இருந்த ஜெயவர்த்தனா முதல், அனைவருமே புத்திசாலித்தனமாகவே, தமிழ் இன பிரச்னையை கையாண்டு வருகின்றனர். தமிழர் பிரச்னையில், அவர்கள் தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே பிரதானப்படுத்தி, அதை வைத்து இலங்கையிலும், வெளியேயும் மிகப் பெரிய லாபத்தை சம்பாதிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களில், மிகுந்த சாதுர்யமான நபராக தன்னை காட்டி வருபவர் தான், ராஜபக் ஷே. அவரை, நாம் அவ்வளவு எளிதாக அணுகி, பிரச்னையை தீர்த்துவிட முடியாது.புதிய அரசின் வெளியுறவு கொள்கை என்ன என்பதே, முழுமையாக அறியாத சூழ்நிலையில், அவரின் இந்திய வருகையால், இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு கிட்டிவிடும் என்றோ, பிரச்னை இன்னும் மோசமான சூழ்நிலையை எட்டப் போகிறது என்றோ யாரும் சொன்னால், அதை கேட்க வேண்டிய அவசியமில்லை. அழுத்தம் குறையலாம் ஏனெனில், பதவியேற்பு விழாவுக்கு வருகிறவர், அந்த நிகழ்ச்சியை முடித்ததும், திரும்பிச் செல்லப் போகிறார்.ராஜபக் ஷேவுக்கு, உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கடும் அழுத்தமும், நெருக்கடியும் பல வகையிலும் இருந்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவோடு இணக்கமான போக்கை கடைபிடிப்பது போல காட்டிக் கொள்வது, அவருக்கு நல்லது. அதாவது, உலக நாடுகளின் அழுத்தம் குறையலாம்.அதை நினைத்தே, விழாவுக்கு எப்படா கூப்பிடுவார்கள் என, காத்திருந்தது போல, பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததும், முதல் ஆளாக வருகை தர சம்மதித்துள்ளார்.இப்பவும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. வீட்டுக்கு வரும் விருந்தாளியை நல்லவிதமாக மரியாதை செய்து அனுப்பி வைத்து விட்டு, கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, இந்திய தூதரகம் மூலமாக, இலங்கை பிரச்னையை, மத்திய அரசு திடமான எண்ணத்துடன் அணுக வேண்டும். நல்ல தீர்வு கிடைக்கும் இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது அண்டை நாட்டு பிரச்னைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இருந்தாலும், ஒரு இனம், மற்றொரு இனத்தால் பாதிக்கப்பட்டதை, மனிதாபிமானத்தோடு எதையும் எதிர் கொள்ளும் இந்தியா போன்ற ஜனநாயக நாடு, தட்டிக் கேட்கத்தான் வேண்டும்; தடுக்கத்தான் வேண்டும்.இதை செய்தால்தான், காலப் போக்கில் அங்கிருக்கும் தமிழர்களுக்கு, பிரச்னைகளில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும். அதை, புதிய பா.ஜ., அரசு செய்ய வேண்டும். ஏனென்றால், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும் என, பா.ஜ.,வினர் தேர்தல் பிரசாரத்தின் போது, உறுதி கொடுத்துள்ளனர். அதனால், கல்யாண வீட்டுக்கு வருகை தருபவர்களை வைத்து, கலாட்டா - எதிர்ப்பு தெரிவிப்பதைக் காட்டிலும், காலம் காலமாக இருக்கும் பிரச்னையை தீர்க்க உதவியாக புதிய அரசு இருக்க வேண்டும் என, இப்போதிலிருந்தே அழுத்தம் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். பத்ரி சேஷாத்ரி -எழுத்தாளர் நன்றி : தினமலர் 25.05.2014 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |