|
||||
|
சஞ்சய் தத்துகளும்
சல்மான் கான்களும் பேரறிவாளன்களும்! முதன்முதலில் இந்திய நீதித் துறையைப் பார்த்து மிரண்டுபோனது, ஷோவா பஷார் பரம்பரையின் வழக்கு தொடர்பாக செய்தி வெளியானபோது. 175 வருஷம் பழமையான வழக்கு இது; இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று அந்தச் செய்தி சொன்னது. கொஞ்ச நாட்களில், "இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 3.56 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவை தவிர, ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 1.5 கோடி வழக்குகள் பதிவாகின்றன" என்று மேலும் அசரடித்தார் அன்றைய சட்டத் துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ். ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.எஸ். சௌகான் இன்னும் ஒருபடி மேலே போய், "இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்" என்று பிரமிக்கவைத்தார். அதற்கு அப்புறம் இந்திய நீதித் துறையின் 'வேகம்' தொடர்பான செய்திகள் / தகவல்கள் பழகிவிட்டன. சில நாட்களுக்கு முன்கூட ஒரு செய்தி வெளியானது. "நம்முடைய உயர் நீதிமன்றங்களில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இவற்றில், 25% வழக்குகள் இன்னும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருக்கின்றன. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் 1957-ல் தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்னும் நிலுவையில் இருக்கிறது" என்றெல்லாம் பட்டியலிட்டது அந்தச் செய்தி. ம்ஹூம்... ஒரு சலனமும் ஏற்படவில்லை. பழகிவிட்டது. ஒரு செய்திக்கும் சம்பவத்துக்கும் உள்ள வேறுபாடு இதுதான். கல்லூரியில் இதழியல் வகுப்பு எடுக்கும்போது சொல்லிக்கொடுப்பார்களே அப்படி, மனிதனை நாய் கடித்தால் அது சம்பவம்; நாயை மனிதன் கடித்தால் அது செய்தி. இந்தியாவில் வாய்தா வழக்குகள் விசேஷம் இல்லை. ஒரு வழக்கு உடனே விசாரணைக்கு வந்தால், அதில் தீர்ப்பு வந்தால் அது நிச்சயம் விசேஷம். நடிகர் சல்மான் கானின் 'டொயோட்டோ லேண்ட் குரூயிஸர்' கார், நடைபாதையில் படுத்துத் தூங்கிய ஏழைகள் மீது ஏறி ஒருவரைக் கொன்று நால்வரைக் காயப்படுத்தியது, 2002-ல். வெறுமனே விபத்து என்று இதைச் சொல்லிவிட முடியாது. காரை ஓட்டியபோது சல்மான் கான் குடித்திருந்தார். சம்பவ இடத்திலிருந்து தப்பினார். வழக்கை உடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்தார். எத்தனை சாட்சியங்கள் பிறழ்ந்தன? எத்தனை ஆவணங்கள் காணாமல்போயின? வழக்கின் முக்கிய சாட்சியம் ரவீந்திர பாட்டிலின் வாழ்க்கையே நாசமாக்கப்பட்டதே? 13 ஆண்டுகள் கழித்து, சல்மான் கானின் குற்றத்தை உறுதிசெய்து ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அன்றைய தினமே மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, கையோடு ஜாமீனையும் அளிக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் உயர் நீதிமன்றமும் ஜாமீன் அளித்து, தீர்ப்பை நிறுத்திவைக்கிறது. என்ன வேகம்! சல்மான் கானின் 'டொயோட்டோ லேண்ட் குரூயிஸர்' காரைவிட வேகம்! சல்மான் கான் தீர்ப்பு செய்தி வெளியான நேரத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுதியிருந்தார்: "ஒரு வழக்கை எவ்வளவு மெதுவாக நடத்த முடியும் என்பதை தண்டனைக்கு முன்னும், எவ்வளவு விரைவாக நடத்த முடியும் என்பதை தண்டனைக்குப் பிறகும் அறிந்துகொள்ள நமக்கு இன்னொரு வாய்ப்பு. " அப்படித்தானே இருக்கிறது? இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய சாபக்கேடு அதன் தாமதம் என்றால், இந்திய நீதித் துறை மிகக் கடுமை காட்ட வேண்டியவர்கள் அல்லவா வாய்தாவாலாக்கள்? நீதித் துறைக்குச் சவால் விடும் வகையில், வாய்தாக்களால் வழக்கை இழுத்தடிப்பவர்களில் ஆகப் பெரும் பான்மையினர் செல்வாக்குள்ளவர்கள். ஆனால், அப்படி இழுத்தடிப்பவர்களின் வழக்குகளே தண்டனைத் தீர்ப்புக்குப் பின் சீக்கிரமாக மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படுகின்றன; தீர்க்கப்படுகின்றன. இங்கே நீதித் துறை சமூகத்துக்குக் கொடுக்கும் சமிக்ஞை என்ன? நேற்று ஒரு நண்பர் கேட்டார்: ராஜீவ் காந்தி படுகொலை 1991-ல் நடந்தது. 350-க்கும் மேற்பட்டோர் உயிரைப் பறித்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு 1993-ல் நடந்தது. முன்னதைப் பின்னின்று நடத்தியது புலிகள் என்றால், பின்னதைப் பின்னின்று நடத்தியது பாகிஸ்தான் உளவுத் துறை. பேரறிவாளன் மீதான பிரதான குற்றச்சாட்டு அவர் இரண்டு பேட்டரிகள் வாங்கிக்கொடுத்தது. சஞ்சய் தத் மீதான பிரதான குற்றச்சாட்டு தாவூத் இப்ராஹிம் ஆட்கள் கொடுத்த துப்பாக்கிகள், எறிகுண்டுகளை வைத்திருந்தது. இரண்டுமே 'தடா' வழக்குகள்தான். இன்னும் சொல்லப்போனால், பேரறிவாளன் வழக்கு பல வகைகளில் பலவீனமான வழக்கு. ஆனால், பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லப்படுபவரை, தூக்குக் கயிறு வரை அழைத்துச் சென்றுவிட்டு 24 ஆண்டுகளாகச் சிறைக்குள் வைத்திருக்கிறோம். துப்பாக்கிகளையும் எறிகுண்டுகளையும் வைத்திருந்தவர் 20 ஆண்டு இழுத்தடிப்புக்குப் பின் 5 ஆண்டு சிறைத் தண்டனையில் இருக்கிறார். இடையிலேயே 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். என்ன மாதிரி அணுகுமுறை இது? சில கேள்விகளுக்கெல்லாம் நம் நாட்டில் பதில்கள் கிடைப்பதே இல்லை! சமஸ், |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |