|
||||
|
ஜெயலலிதாவின் அரசியல்
உணர்த்தும் பாடம் வருமானத்துக்கு மிஞ்சிய சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நீதிமன்றத்தி னால் வழங்கப்பட்டதில் இருந்து ஊசலாடிக் கொண்டி ருந்த ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு நேற்று தப்பிப் பிழைத்துள்ளது. பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கை விசாரணை செய்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் ஜெயலலிதாவின் அரசியல் தலைவிதி தங்கியிருந்ததென்று கூறுவதே இங்கு பொருத்தமானது. முன்னதாக பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி நேற்று தீர்ப்பு வழங்கியிருக்குமானால் ஜெயலலிதாவின் தலைவிதியே தலைகீழாகிப் போயிருக்கும். சிறைவாசத்தை விடுத்து வெறுமனே அபராதத் தொகையைச் செலுத்துமாறு மாத்திரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால் கூட இன்னும் ஆறு வருட காலத்துக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டி யிட்டிருக்கவே முடியாது. முதலமைச்சர் நாற்காலி நிரந்தரமாகவே பறிபோவது ஒருபுற மிருக்க, அரசியல் வாழ்வில் ஆறு வருட கால இடைவெளி யென்பது ஜெயலலிதாவை தமிழக அரசியலில் இருந்து நிரந்தரமாகவே அந்நியப்படுத்தி வைத்திருக்கக் கூடும். பெரும் பரபரப்பு நிறைந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரசியல் சூனியத்துக்குள் இருந்து நேற்று மீட்சிபெற்று வந்துள்ளார் ஜெயலலிதா. முன்னாள் முதலமைச்சர் மீதான அபாயம் பெரும்பாலும் நீங்கி விட்டதாகவே இங்கு எண்ணத் தோன்றுகிறது. கர்நாடக உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்து ஜெய லலிதாவுக்கு எதிரான தரப்பினரோ அல்லது கர்நாடக மாநில அரசு தரப்பிலோ வழக்குத் தாக்கல் செய்வதற்கு வாய்ப் பொன்று உள்ளது. ஆனாலும் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக இனிமேல் எதிர்நோக்குகின்ற எந்தவொரு வழக்கும் பிசுபிசுத்துப் போகுமென்பதே தமிழ்நாடு சட்டத்துறை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஜெயலலிதா இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு முதலமை ச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார். அதன் பின்னர் அவரது அரசியல் எதிர்காலம் மிகவும் செல்வாக்கு மிகுந்ததாக அமையுமென்று தமிழ்நாட்டின் அரசியல் ஆய் வாளர்கள் கூறுகின்றனர். மாநிலத்தில் மாத்திரமன்றி மத்திய அரசியலிலும் செல்வாக்கை விஸ்தரிக்கக் கூடிய வாய்ப்பு தென்படுவதாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஜெய லலிதாவின் பெரும் மக்கள் செல்வாக்கும், அவரது அரசியல் தேவையும் கருதி நீதிமன்ற விசாரணைகளின் போது மத்திய அரசிலிருந்து செல்வாக்குகள் பிரயோகிக்கப்பட்டிருக்கக் கூடும் எனவும் ஊர்ஜிதமில்லாத ஊகங்கள் வெளியாகின்றன. ஆளுமை, வசீகரம். செல்வாக்கு, ஆற்றல் அத்தனையும் நிறைந்த தொரு அரசியல்வாதியாக ஜெயலலிதா திகழ்கிறார். அன்றைய காலத்தில் கலையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் அவர். சினிமா கதாநாயகி ஒருவர் இந்திய மாநிலம் ஒன்றின் தலை மைப் பதவியை எட்டிப் பிடித்தாரென்றால் ஜெயலலிதாவின் திறமையை விளக்குவதற்கு வேறு உதாரணங்கள் அவசிய மில்லை. திராவிட ஆதரவுப் போராட்டங்கள் வாயிலாக அரசியலுக்குள் காலடி பதித்த மூத்த தலைவர்கள் கூட ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்குக்குக் காரணமாக இலங் கைத் தமிழர் விவகாரத்தை அவர் கையாண்ட விதத்தையும் கூறுவது இங்கு மிகவும் பொருத்தமாகும். இலங்கைத் தமிழர் விவகாரமே கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அவருக்கு வரலாறு காணாத பெருவெற்றியை ஈட்டித் தந்தது. தமிழகத்தில் மாத்திரமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் ஜெயலலிதா மீதான அபிமானமும் அனுதாபமும் இன்றும் உண்டென்பதை மறுக்க முடியாது. இத்தனை செல்வாக்குகளுக்கும் அப்பால் ஜெயலலிதாவின் மறு பக்கம் கறை படிந்ததாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற காலம் தொடக்கம் ஊழல் முறை கேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் அவரைத் துரத்தியபடியே வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஜெயலலிதா குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்து தப்பிப் பிழைத்திருக்கிறார். நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்தும் அவரை விடாமல் துரத்தியபடியே செல்கின்றன. அவரது அரசியல் வாழ்வில் இவையெல்லாம் பெரும் கறைக ளென்பது உண்மைதான். ‘நெருப்பின்றி புகை வருவதில்லை’ என்ற கூற்றுக்கு ஏற்பவே இக்குற்றச்சாட்டுகளையெல்லாம் நோக்க வேண்டியிருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபடுகின்ற தலைவர் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ் வாறு நடந்து கொள்ளலாகாது என்பதற்கான முன்மாதிரிகள் ஜெயலலிதாவின் கடந்த கால அரசியல் பயணத்தில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் நேர்மை மிகுந்த அரசியல் தலைவருக்கு உதாரண புருஷராக கர்மவீரர் காமராஜர் இன்று வரை போற்றப்பட்டு வருவதையும் இவ்விடத்தில் குறிப் பிடாமலிருக்க முடியாது. ஊழல், முறைகேடு, இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்ற வையெல்லாம் எத்தனையோ தலைவர்களை அரசியலில் இருந்து வீழ்த்தியிருக்கின்றன. ‘ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்’ என்று புத்தபெருமான் போதித்த நீதிக் கருத்தின் யதார்த்தத்தை ஜெயலலிதா சந்தித்த துன்பங்கள் எமக்கெல்லாம் உணர்த்துகின்றன. (Thinakaran) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |