|
||||
|
இத்துடன் இறுதியாக
இருக்கட்டும்
இத்தவறு! சவூதியில் மரணதண்டனைத்
தீர்ப்பு
விதிக்கப்பட்டுள்ள
இலங்கை யுவதி ரிஸானாவுக்கு
கருணை காட்டுமாறு
உலகெங்கும்
இருந்து தொடர்ச்சியாக
வேண்டுகோள்கள்
விடுக்கப்பட்டு
வருகின்றன.
இப்பெண்ணை மரணத்திலிருந்து
காப்பாற்றுவதற்
கான பிரார்த்தனைகளும்
ஆங்காங்கே
நடைபெறுகின்றன.
ரிஸானாவின் சொந்த ஊரான மூதூரிலும்
இவ்விதமான
பிரார்த்தனையொன்று
நடைபெற்றுள்ளது.
ரிஸானாவின் விடயமானது
சர்வதேச ரீதியில் மனித உரிமைகள்
அமைப்புகளின்
கவனத்தை இன்று பெரிதும்
ஈர்த்துள்ளது.
அப்பெண் மீது சுமத்தப்பட்டிருக்கும்
கொலை குற்றச்சாட்டை
மறுதலிக்கும்
விதத்தில்
சர்வதேச அளவில் ஒருபுறத்தே
குரல் எழுப்பப்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்புக்கு
அப்பால் மனிதாபி மான அடிப்படையில்
இப்பெண்ணுக்கு
கருணை அளிக்கு மாறு மற்றொரு
புறத்தே உருக்கமான
வேண்டுகோள்கள்
விடுக்கப்படுகின்றன.
சவூதியைப் பொறுத்தவரை
வெளிநாட்டுப்
பிரஜைகளுக்கு
நீதி மன்றத்தினால்
மரணதண்டனைத்
தீர்ப்பு
வழங்கப்படுவது
இது தான்
முதன்முறையல்ல...
வெளிநாட்டவர்கள்
பலர் பல்வேறு
குற்றச்சாட்டுகளின்
பேரில் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட
சம்பவங்கள்
சவூதியில்
பல தடவைகள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் ரிஸானா மீதான நீதிமன்றத்
தீர்ப்பைப்
பொறுத்த வரை கண்டனங்களும்
வேண்டுதல்களும்
உலக அளவில்
தீவிரமடைந்திருப்பதற்கான
காரணம் என்னவென்பது
இங்கு கரிசனைக்குரியதாகிறது.
அதேசமயம்
உலகளாவிய
வேண்டு தல்களை சவூதி அரசாங்கம்
உதாசீனப்படுத்தி
விடுவது முறையானதுமல்ல...
ரிஸானா மீதான அனுதாப
அலையின் பின்னணியில்
மறைந்திருக்கும்
அடிப்படைக்
காரணி குறித்து அந்நாட்டு
அரசாங்கம்
பரிசீலனை
செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
ரிஸானா மீதான கொலைக் குற்றச்சாட்டை
ஏற்றுக் கொள்வதற்கு
சர்வதேச அளவில் கூடுதலான தரப்பினர்
தயாராக இல்லை யென்பது
வெளிப்படையான
உண்மை. இதற்குக் காரணமும்
இல்லாமலில்லை.
சவூதியில் வாழும்
பிறநாட்டவர்கள்
இது போன்ற
நெருக்கடிகளின்
போது நீதி
விசாரணையை
எதிர்கொள்வதில்
பல்வேறு பின்னடைவான
அம்சங்களைக்
கொண்டிருக்கின்றனர்.
சில வழக்குகளின்
போது நிரபராதி
ஒருவர் தனது நியாயத்தன்மையை
நிரூபிப்பதற்கான
ஆற் றாமையையும்
எதிர்கொள்ள
வேண்டியுள்ளது.
இத்தகைய ‘ஆதரவற்ற
தன்மை’ நிரபராதியைக்
கூட ஆபத்தில்
தள்ளி விடக் கூடும். அதேசமயம் குற்றச்
செயலின் தன்மைக்கு
மீறிய தண்டனையைக்
கூட அனுபவிக்கும்
பரிதாபம்
ஏற்படலாம்.
ரிஸானாவின் வழக்கு
விடயத்திலும்
இது போன்ற
பின்னடை வுகள் எதிர்நோக்கப்பட்டதாக
தகவல்கள்
வெளிவருகின்றன. எனவேதான் சட்டவரையறைகளுக்கு
அப்பால் சவூதி அர
சாங்கம் இவ்விடயத்தை
மீள்பரிசீலனை
செய்ய வேண்டு மென்ற கோரிக்கைகள்
பல்வேறு தரப்புகளிலிருந்தும்
விடுக் கப்படுகின்றன.
இவ்வேண்டுகோள்கள் அலட்சியப்படுத்தக்
கூடியவையும்
அல்ல.
ரிஸானாவின் இன்றைய
பரிதாப நிலைமைக்குப்
பொறுப்பேற்க
வேண்டியவர்களாக
மேலும் சிலர் உள்ளதை
இவ்விடயத்தில்
சுட்டிக்காட்டாமலிருக்க
முடியாது. அந்த யுவதி அவளது பதினேழு
வயதில் பணிப்பெண்
வேலைக்கு
அனுப்பப்
பட்டுள்ளார்.
அவரது பிறப்புச்
சான்றிதழில்
04.02.1988ல் பிறந்தவரெனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவரது கடவுச் சீட்டில்
04.02.1982 என்பதே
பிறந்த திகதியெனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் நிரூ பிக்கப்படுமானால்
குற்றமிழைத்தோராக
பலர் உள்ளனர்.
பராய மடையாத
பதினேழு வயதான இளம்பெண்ணை
பணிப் பெண் வேலைக்கு
அனுப்ப ஆயத்தமான நபர்கள் தொடக்கம் அப்பெண்ணை
விமானத்தில்
வழியனுப்பி
வைத்த நபர்கள் வரை அநேகர்
இவ்விடயத்தில்
குற்ற வாளிகளாவர்.
இக்குற்றத்தில் தொடர்புடையோர்
கண்டுபிடிக்கப்பட்டு
உரிய சட்டநடவடிக்கை
மேற்கொள்வது
மிகவும் அவசியம். இது போன்ற குற்றங்கள்
எதிர்காலத்தில்
நிகழாமலிருப்பதை
உறுதி செய்வதற்கு
அந்நடவடிக்கை
இன்றியமையாததாகும்.
அதேசமயம் குடும்ப வறுமையைக்
காரணமாக வைத்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
இளவயதுப்
பெண்களை வெளிநாட்டுக்கு
பணிப்பெண்ணாக
அனுப்பி வைக்கும் விபரீத காரியத்திற்கு
பெற்றோர்
எவரும் முற்படலாகாது.
ரிஸானாவின் பெற்றோரான
நபீக் தம்பதியர்
இன்று அனுபவிக்கும்
துயரம் எமது நாட்டில்
இறுதியானதாக
இருக்கட்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |