|
||||
|
புலிகள் இறுதிநேரம்
வரை மக்களை
கேடயமாகவே
வைத்திருந்தனர்
-
நல்லிணக்க
ஆணைக்குழு
முன் யாழ்.அரச
அதிபர் இமெல்டா சுகுமார்
பொதுமக்களுக்காக அரசாங்கம்
பாதுகாப்பு
வலயத்தைப்
பிரகடனப்படுத்திய
போதிலும்,
அதில் மக்களோடு மக்களாக புலிகள் இயக்கத்தினரும்
இரண்டறக்
கலந்திருந்தார்களென்று
யாழ். மாவட்ட அரசாங்க
அதிபரும்
முல்லைத்தீவு
மாவட்ட முன்னாள் அரச அதிபருமான
திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
புலிகள் மக்களை வெளியேற இடமளிக்கவில்லை
என்றும் மீறித் தப்பிச் செல்ல முயன்றவர்கள்
மீது துப்பாக்கிச்
சூடு நடத்தினார்களென்றும்
கற்றறிந்த
பாடங்கள்
மற்றும் நல்லிணக்கம்
பற்றிய ஆணைக்குழு
முன்னிலையில்
நேற்று (04) சாட்சியம்
அளித்த போது திருமதி
சுகுமார்
குறிப்பிட்டார்.
புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்திருந்தார்களென்று
கூறிய யாழ். அரச அதிபர் அதனையும் மீறி மக்கள்
வெள்ளைக்
கொடி ஏந்தியவாறு
இராணுவத்தினரின்
பகுதிக்குத்
தப்பி வந்தார்களென்றும்
குறிப்பிட்டார்.
வெள்ளைக் கொடியுடன்
தப்பி வந்த மக்கள்
எவரையும்
இராணுவம்
சுடவில்லையென்று
அவர் திட்டவட்டமாகத்
தெரிவித்தார்.
‘வெள்ளைக்
கொடியுடன்
இராணுவத்
தினரிடம்
தப்பி வந்த அனைவரும்
இன்னமும்
உயிருடன்
வாழ்கிறார்கள்.
வேண்டுமானால் அவர்களுள்
சிலரை ஆணைக்குழு
முன்னிலையில்
கொண்டு வந்து சாட்சியமளிக்கவும்
இயலும். நான் எப்போதும்
மக்களுடன்
வாழ்கிறேன்.
அவர்களின் சுகதுக்கங்களில்
பங்கேற்கிறேன்.
மக்கள் எவராவது அவ்வாறு வெள்ளைக் கொடியுடன்
வந்து இராணுவத்தினரின்
துப்பாக்கிச்
சூட்டுக்கு
இலக்காகியிருந்தால்
எனக்குத்
தெரிந்திருக்கும்’
என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு – 7 ஹோட்டன்
பிளேசிலுள்ள
லக்ஷ்மன்
கதிர்காமர்
கற்கை நிலையத்தில்
நேற்று நடந்த ஆணைக்குழு
விசாரணையில்
சாட்சியம்
அளித்த அரச அதிபர்
இமெல்டா சுகுமார்,
ஜனவரி 19 ஆம் திகதி
(2009) இராணுவக்
கட்டளையிடும்
அதிகாரியிடமிருந்து
எனக்கோர்
அறிவிப்பு
தொலைநகல்
மூலம் வந்தது. அதில்,
வள்ளிபுனம்
பகுதியில்
மக்களுக்குப்
பாதுகாப்பு
வலயத்தைப்
பிரகடனப்படுத்துமாறு
வரைபடத்துடன்
அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நான் அறிவிப்புச்
செய்தேன்.
ஆனால், மக்கள்
எங்கு செல்கிறார்களோ
அங்கே புலிகளும்
செல்வார்கள்.
நாம் புதுக்குடியிருப்புக்கு
இடம்பெயர்ந்த
பொழுது மன்னார், முல்லைத்தீவு,
வவுனியா (நெடுங்கேணி),
கிளிநொச்சி
மாவட்டங்களைச்
சேர்ந்த சுமார் 3,50,000 பொதுமக்கள்
அங்கு இருந்தார்கள்.
இறுதிவரை மக்கள்
நம்பிக்கையுடன்
தமது உடைமைகளையும்
எடுத்துக்கொண்டு
இடம்பெயர்ந்தார்கள்.
புதுக்குடியிருப்பில் தற்காலிக
அலுவலகத்தில்
நான் இயங்கிய
பொழுது எம்மை வெளியேறுமாறு
இராணுவம்
கேட்டுக்கொண்டது.
ஜனவரி 22ஆம்
திகதி காலை 10 மணி
முதல் பிற்பகல் இரண்டு மணிவரை போர் நிறுத்தம்
செய்து நாம் வெளியேற
அவகாசம் வழங்கினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான்
நான் அங்கிருந்து
ஒட்டுசுட்டானுக்கு
இடம்பெயர்ந்தேன்.
ஆனால் எனது உத்தியோகத்தர்கள்
பலர் மக்களுடன்
அங்கேயே தங்கிவிட்டார்கள்.
அவர்களைப் புலிகள்
அனுமதிக்கவில்லை.
அவரின் சாட்சியம்
நிறைவடைந்ததும்
ஆணைக்குழுவின்
தலைவரும்
உறுப்பினர்களும்
அரச அதிபரிடம்
கேள்விகளைத்
தொடுத்தனர். அதற்குப்
பதில் அளித்த அவர், இடம்பெயர்ந்த
மக்களுக்கு
சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கத்தின்
உதவியுடன்
அரச நிவாரணத்தைப்
பெற்றுக்
கொடுத்ததாகவும்
ஆனால், அதில் 80% மட்டுமே
மக்களைச்
சென்றடைந்ததாகவும்
20% உணவைப் புலிகள் எடுத்திருக்கலாமென்றும்
கூறினார்.
புலிகளின் துப்பாக்கிச்
சூட்டினால்
5, 6 கிராம சேவை உத்தியோகத்தர்களும்
தமது உத்தியோகத்தர்கள்
சிலரும் கொல்லப்பட்டதாகவும்
அரச அதிபர்
தெரிவித்தார். இறுதி
நம்பிக்கையுடன்
மக்கள் கொண்டு சென்ற இலட்சக்கணக்கான
வாகனங்கள்
பல கிலோமீற்றர்
தூரத்திற்கு
எரியுண்டு
கிடந்ததாகவும்
அவர் குறிப்பிட்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |