|
||||
|
மொழிகளின்
வரலாறு
சில மொழிகள் அழிவடையும்
நிலையில்
உள்ளன. அவற்றுள்
தமிழும் ஒன்று -
யூனஸ்கோ
(மருதூர் ஏ. மஜீத்) மொழி என்பது நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம்,
கலாசார எழுச்சி உணர்ச்சிகள்,
கருத்துக்கள்
என்பவற்றை
வெளிப்படுத்தும்
ஊடகம் அல்லது கருவி எனலாம். உலகில் ஏழாயிரத்துக்கும்
மேற்பட்ட
மொழிகள் பேசப்படுகின்றன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன், உலகின்
மொத்த சனத்தொகை 50
இலட்சம் முதல் 1 கோடி
வரை இருந்த
போது, அவர்களிடையே
12 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன
என்பது மொழியியலாளர்களின்
முடிவாகும்.
(ஆதாரம் ஜோன் நோபல்
வைல் பீல்ட்
எழுதிய ஆராய்ச்சிக்
கட்டுரை டெயிலி நியூஸ் 11.10.2007)
இவைகளுள் மிகப்
பழமைவாய்ந்த
மொழிகளாக
1.
எபிரேயம்
2.
வல்காத்து
3.
ஷிட்டா
4.
அரமைக்
5.
சால்ட்டியம்
6.
பழைய
கிரேக்கம்
என்பவற்றை கூற முடியும். உலகில் பேசப்படும்
ஏழாயிரத்திற்கு
மேற்பட்ட
மொழிகளிலே
மூவாயிரம்
மொழிகள் மட்டுமே எழுத்து வடிவமும், இலக்கிய இலக்கணமும்
உள்ள மொழிகளாகும்.
இவற்றில் 200 மொழிகள் 10 இலட்சத்திற்கும்
குறையாத மக்கள் கூட்டத்தினரால்
பேசப்படுகின்றன.
இதனை வேறொரு வகையாக கூறுவதாயின். முதலில்
சீன மொழியையும்
அதனை அடுத்து
முறையே ஆங்கில, இந்தி, உருது
உள்ளிட்ட
ஹிந்துஸ்தான்,
ஸ்பானிஸ்,
போர்த்துக்கீஸ்,
ஜப்பான், ஜேர்மன், பிரஞ்சு போன்ற மொழிகளை
அதிக மக்கள்
தொகையினர்
பேசுகின்றனர்
எனலாம்.
இதில் சீன
மொழியை 70 கோடிக்கு மேற்பட்ட மக்களும், ஆங்கில மொழியை 40 கோடிக்கு மேற்பட்ட மக்களும், பிரஞ்சு மொழியை 5.6 கோடிக்கு மேற்பட்ட மக்களும் பேசுகின்றனர்
என புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன.
ஆங்கில மொழியை கற்காத நாடே இல்லை
எனலாம்.
இதே போல
அரபு மொழியை
முஸ்லிம்
நாடுகள் அனைத்திலும்
கற்கும் வாய்ப்பு கொண்டதாகவும்,
முஸ்லிம்கள்
சிறுபான்மையினராக
வாழும் இலங்கை போன்ற நாடுகளில்
மத மொழியாக
ஒவ்வொரு முஸ்லிம் பிள்ளையும்
கற்கும் மொழியாகவும்
உள்ளது.
இதேவேளை இந்தியாவில்
845 வகையான மொழிகளும்,
பாகிஸ்தானில்
32 வகையான மொழிகளும்,
ஆபிரிக்காக்
கண்டத்தில்
1000 மொழிகளும்,
அமெரிக்காவில்
56 வகையான மொழிகளும்
பேசப்படுகின்றன.
சீனாவில் 100 மொழிகள்
பேசப்படுகின்றன.
சோவியத் நாட்டில்
56 மொழிகள் பேசப்படுகின்றன.
ஆங்கில மொழியை
நாற்பது கோடி மக்களும்,
ஹிந்தி, ரஸ்யன், ஸ்பானிஸ், ஜேர்மன், ஜப்பான், அரபி, வங்காளி,
போர்த்துக்கீஸ்,
மலாய், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மொழிகள்
ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்கள் பேசப்படும்
மொழி களாகவும்
கருதப்படுகின்றன.
இந்தியாவில் ஹிந்தி மொழியை 1330 இலட்சம் பேர் பேசுகின்றனர். இரண்டாவது இடத்தை
440 இலட்சம்
பேர் பேசும்
தெலுங்கு
மொழி பிடித்திருக்கிறது.
மூன்றாவது இடமே தமிழ் மொழிக்கு
கிடைத்திருக்கின்றது.
தமிழ் மொழியை
420 இலட்சம்
பேர் பேசுகிறார்கள்.
200
மொழிகளை பத்து இலட்சத்திற்குக்
குறைவான மக்களே பேசுகிறார்கள்.
உலக மொழிகளிலே
குறைந்த சொற்களைக்
கொண்ட மொழி 'டாகி'
என்ற மொழிதான். கயானா
நாட்டின்
ஒருசில பகுதிகளில்
இம்மொழி பேசப்படுகின்றது.
இம்மொழியில் 340 சொற்கள்தான்
உண்டு.
இந்த மொழிகளில்
கணனி போன்ற
அறிவியல்
தொழில் நுட்பமும்
காலத்தேவைகளுக்கு
ஈடுகொடுத்து
நிற்கக்கூடியதுமான
மொழிகளே நீண்டு நிலைத்து வாழும் எனக் கூற
முடியும்.
மற்ற அனைத்து மொழிகளும்
அழிந்து ஒழிவது வரலாறு கண்ட முடிவாகும்.
ஆங்கில மொழியில் ஏழு இலட்சத்துத்
தொண்ணூறாயிரம்
வார்த்தைகள்
உண்டு. (790000)
இவற்றில்
49000 சொற்கள்
பொதுப் பயன்பாட்டு
வார்த்தைகள்.
(300000) மூன்று
இலட்சம் வார்த்தைகள்
தொழில்நுட்ப
வார்த்தைகள்.
அரபி மொழியில் வாளுக்கும்,
ஒட்டகத்திற்கும்
ஆயிரம், ஆயிரம் வார்த்தைகளுக்கு
மேல் உண்டு.
இப்படிப்பட்ட மொழிகள் தொன்மையானதெனக்
கருதப்படுவதோடு,
வாழும் தன்மையுள்ளதாகவும்
கருதப்படுகின்றன.
இம்மொழிகளின் இன்னுமொரு
தன்மை என்னவெனில்,
தேவையேற்படின்
வேறு மொழிச்
சொற்களையும்
தன்னுள் உள்வாங்கிக்கொள்ளும்
தன்மையுள்ளதாகும்.
யூனஸ்கோ ஆய்வின்படி
உலகில் சில மொழிகள்
அழிந்து விட்டன. அதாவது, செட்டிடே,
எஸ்ருக்கன்
ஆகிய மொழிகள்
வழக்கிழந்து
இல்லாமல்
போய்விட்டன.
சுமேரியன், ஒல்லாந்து,
அரமை ஆகிய
மொழிகள் வேறு மொழிகளாக
உருமாறித்
தங்களை அழித்துக்
கொண்டுள்ளன.
சில மொழிகள் அழிவடையும்
நிலையில்
உள்ளன. அவற்றுள் தமிழும்
ஒன்று என்று கூறுகிறது
இந்த ஆய்வு.
அதாவது, இம்மொழியின்
அழிவோடு இம்மொழிகளில்
உள்ள கலை,
கலாசாரம்
என்பனவும்
அழிந்து விடும்.
மொழி மனிதனின் கண்களுக்குச்
சமமானது. மனிதனை அழிக்க
வேண்டுமென்றால்
அவர்களின்
தாய் மொழியை
சிறுகச் சிறுக அழித்தால்
போதும் எனகிறார் அறிஞர் பெர்னாட்ஷா.
மேலும் உலகில் பேசப்படும்
மொழிகளைப்
பின்வருமாறு
குடும்பங்களாக
வகுத்து நோக்க முடியும்.
1.
செமித்திய
ஹமிட்டே மொழிக் குடும்பம்
2.
இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்
3.
திராவிட மொழிக் குடும்பம்
4.
மலாய - யோலீசியன்
மொழிக் குடும்பம்
5.
துரோனிய மொழிக் குடும்பம்
6.
பாண்டூ மொழிக் குடும்பம்
7.
சீன - தீப்பேத்திய
மொழிக் குடும்பம்
8.
ஆசிய மொழிக்
குடும்பம்
இக்குடும்பங்களுள் மிக மிகப்
பிற்பட்ட
காலத்தில்
வடிவமைக்கப்பட்டதே
திராவிட மொழிக் குடும்பம்
எனலாம்.
இத்திராவிட மொழிக் குடும்பத்துள்
பின்வரும்
மொழிகள் அடங்கும். தெலுங்கு,
கன்னடம், தொண்டி, குறூக் அல்லது ஓரான், துளு,
கூய், குவி
அல்லது கோந், கோயா,
பிராகூப்,
மால்டோ, கொடது, படாக்,
கொலாமி, இருளா, குறவத,
பார்ஜி, கொண்டா அல்லது கூயி, கதபா,
நாய்க்கி,
பெங்கோ, கோட்டா, ஒல்லாரி, தோடா என
25 மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தில்
அடங்கும்.
கல்கத்தாவில் நடைபெற்ற
ஆசியக் கழகத்தில்
1786 இல் வில்லியம்
ஜே(ல)ம்ஸ்
என்பவர் தமிழையும்,
மலையாளத்தையும்
இந்தோ ஐரோப்பிய மொழி குடும்பம்
என அறிவித்தார்.
இந்தோ ஐரோப்பிய
மொழிக் குடும்பத்தில்
இருந்து
1816 இல் வில்லிசு
என்பவரும்
அவரைத் தொடர்ந்து
1856 இல் கால்ட்வெல்ட்
ஐயரும் தமிழையும்
மலையாளத்தையும்
தலைமை மொழிகளாக்கி
திராவிடக்
குடும்பம்
ஆக்கினர்.
ஐரோப்பியர்களுக்கு கீழைத்தேய
மொழிகள் உதைபந்து போன்றது. அவர்கள் எப்படியும்
உதைத்து விளையாடுவார்கள்.
கோல்ட்வேல்ட் ஐயர். இவ்வாறு வடிவமைக்கப்படுவதற்கு
முன் தமிழும்,
மலையாளமும்
இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்துடன்
சேர்ந்திருந்தன.
அதாவது, அரபு மொழி
ஆபிரிக்க
மொழிகள், எபிரேய் மொழி, பின்ஸிய
மொழி, தமிழ்,
மலையாளம்,
சுமேரியன்
போன்ற மொழிகள் செமிட்டிக்
மொழிக் குடும்பத்தை
சார்ந்தது
என்லாம். இது இவ்வாறிருக்க
உலகில் பேசப்படும்
இம் மொழிகளில்
சில நாளடைவில்
வளர்ச்சியடைகின்றன.
சில நாளடைவில்
தேய்ந்து
மாய்ந்து
போகின்றன.
15
நாளைக்கு
ஒரு மொழி
அழிந்து வருவதாக ஒரு ஆய்வு
கூறுகின்றது.
இவ்வாறு தேய்வதற்கும்,
வளர்வதற்கும்
பல காரணங்கள்
கூறப்படுகின்றன. அக்காரணங்களை பின்வருமாறு
தொகுத்து
நோக்க முடியும்.
1.
கலிபோர்னியாவில்
பேசப்படும்
ஒரு மொழி
போமோ என
அழைக்கப்படுகிறது.
இம்மொழியை ஐம்பது
பேர் மட்டுமே
பேசுகிறார்கள்.
அதனால் இந்த நூற்றாண்டிற்குள்ளேயே
இம்மொழி உலகை விட்டு
அழிந்து விடும் வாய்ப்புண்டு.
2.
250 மொழிகள்
தலா 10 இலட்சம்
மக்களாலேயே
பேசப்படுகின்றன.
3.
21 ஆம் நூற்றாண்டிற்குள்
3000 மொழிகள்
அழிந்து விடும்.
4.
இன்னும் சில ஆண்டுகளுக்குள்
இருபது மொழிகள் உலக அரங்கில்
இருந்து விடைபெற்றுவிடும்.
5.
அமேசன் நதிக்கு அருகாமையில்
வசிக்கும்
'ஹிக்ஸ்கறயானா'
எனும் மொழியும் அழிவடையும்
நிலையில்
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொழியினை
300 பேர் மட்டுமே
பேசுகிறார்கள்.
6.
அவுஸ்திரேலியாவில்
உள்ள பென்றிக்
தீவில் உள்ள 'கயார்டில்ட்'
என்ற மொழிக்கும்
எதிர்காலம்
இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இந்த மொழி
அழிவதற்கு
இந்த மொழியின்
இலக்கணச்
சிக்கல் ஒரு காரணமாக
உள்ளது என்கிறார்கள்
ஆய்வாளர்கள். உதாரணமாக காலம் காட்டுவது
வினைச்சொல்.
ஆனால் இம்மொழியின்
பெயர்ச் சொற்களும்
காலம் காட்ட மாற்றப்படுவதும்
இம் மொழியின்
அழிவிற்குக்
காரணமாக உள்ளது (இலக்கணச்சிக்கல்).
இது இவ்வாறிருக்க
உலகில் ஆறு மொழிகளே
உலகளாவிய
மொழிபெயர்ப்பிற்குரிய
(பரிவர்த்தனைக்குரிய)
மொழிகளாக
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆறு மொழிகளுமே
ஐ.நா. சபையிலும் வேறு உலக நாடுகளிலும்
மொழிபெயர்க்கப்படும்
மொழிகளாக
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அம்மொழிகளாவன,
1.
அரப்
2.
இங்கிலிஸ்
3.
பிரஞ்
4.
ரஸ்யன்
5.
ஸ்பெயின்
6.
சீனம்
இம்மொழிகளைச் செம்மொழி என்றழைக்கலாமா?
மேலும் பன்னிரெண்டு
மொழிகள் உலகளாவிய பிரபலம் பெற்ற மொழிகளாகக்
கொள்ளப்படுகின்றன. அவையாவன, அரப், இங்கிலீஸ்,
பிரஞ்சு, ரஸ்யன், ஸ்பெயின், சீனம், ஜேர்மன்,
இத்தாலி, கிரேக்கம்,
ஸ்பானிஸ்,
போர்த்துக்கீஸ்,
ஜப்பான்.
இம்மொழிகளைச் செம்மொழியாகக்
கொள்ளலாமா?
ஐ.நா. வில் பரிவர்த்தனை
செய்யப்படும்
ஆறு மொழிகளுள்ளும்
தமிழ் இல்லை.
இதேவேளை பன்னிரெண்டு
உலகளாவிய
மொழிகளிலும்
தமிழ் இல்லை. இவற்றுக்குப் பல காரணங்கள்
உள. அவற்றுள்
முக்கியமானதாக
அதிகமக்கள்
பேசாமை ஒரு காரணமாகவும்,
இரண்டாவது
அதிகமான மக்கள் இதனைப் படிப்பதற்கு
விரும்புவதில்லை
என்ற காரணமும்,
இம்மொழியில்
எழுத்துக்கள்
அதிகம் என்ற காரணத்தையும்
கூற முடியும்.
உலக மொழிகளின்
எழுத்துக்களை
அவதானித்தால்
இது தெட்டத்
தெளிவாக விளங்கும்.
தமிழ் எழுத்து
247
சீனம் 216
பாரசீகம் 31
ஸ்பானிஷம் 27
இங்கிலிஸ் 26
இத்தாலி 22
துருக்கி 28
பிரஞ்சு 26
கிரேக்கம் 24
சமஸ்கிருதம் 48
அரபி 28
ஜேர்மன் 26
இலத்தீன் 27
ரஸ்யன் 33
ஜப்பான் 22
இந்த நிரலை அவதானித்தால்
தமிழும், சீனமும் எழுத்து கூடிய மொழிகளாக
தெரிகின்றன.
சீன மொழியில் எழுத்து கூட இருப்பது
அம்மொழிக்கு
வளமே தவிர
வளமற்ற தன்மையல்ல.
சீன மொழியில் ஒரு எழுத்து
ஒரு சொல். அதனால் மொழி வளமடைகிறது.
இந்நிலைமை தமிழுக்கு
இல்லை.
ஒரு காலத்தில்
இவ்வாறான
ஒரு நிலைமை
தமிழுக்கும்
இருந்தது. உதாரணமாக நீ, போ,
பை, கை,
வைஇ மை,
தை, தீ
போன்ற சொற்களை கூறலாம். ஆனால் இன்று தமிழுக்கு
இந்த நிலைமை
இல்லை. அதனால் எழுத்துக்கள்
தமிழுக்கு
இடைஞ்சலாக
இருக்கின்றன.
அதனால் எழுத்துக்
குறைப்பு
அவசியமாகின்றது. இதே வேளை எல்லா
மொழிகளிலும்
உயிரெழுத்துகள்
ஐந்தேதான்
உயிர்ச்சத்தம்
ஐந்துதான்.
ஆனால் தமிழில்
உயிரெழுத்துக்கள்
பன்னிரெண்டாக
உள்ளன. எனவே உயிரெழுத்திலும்
கவனம் செலுத்த வேண்டியுள்ளது
எனலாம். உலகளாவிய மொழிகளோடு
சேர்வதற்கும்
நீண்டு நிலைத்து உயிர் வாழ்வதற்கும்
இவ்வாறு ஏராளமான சீர்திருத்தத்திற்கு
உட்படுத்தப்பட
வேண்டிய நிலையில் தமிழ் மொழி
உள்ளது என்பதனை எடுத்துக்
கூறுவதோடு,
அடுத்தடுத்து
வரும் கட்டுரைகளில்
இவைபற்றி
விரிவாக ஆராய்வோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |