Contact us at: sooddram@gmail.com

 

யதார்த்தத்துக்கு அமைவான அரசியல் தீர்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இச் செய்திகளை இருதரப்பும் மறுக்காத நிலையில் அவை சரியான செய்திகள் எனக் கருத முடியும். அரசாங்கத்துடன் கூட்டமைப்புத் தலைவர்கள் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தையின் பிரதான பேசுபொருள் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்விடயம் தொடர்பாகக் கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததாலேயே இனப்பிரச்சினை இன்று சிக்கலான நிலைக்கு வந்திருக்கின்றது.

முன்னைய பேச்சுவார்த்தைகளும் எட்டப்பட்ட உடன்பாடுகளும் தோல்வி அடைந்ததற்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் இன்று வரை தொடர்கின்றதேயொழிய அத்தோல்விகளிலிருந்து எந்தத் தரப்பும் பாடம் கற்றுக் கொண்டதாக இல்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு மாத்திரமன்றி ஆட்சியாளர்க ளுக்கும் உண்டெனினும், இனப்பிரச்சினையினால் பாதி க்கப்பட்டுள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத் துபவர்கள் என்ற வகையில் தமிழ்த் தவைர்களுக்குக் கூடுதலான பொறுப்பும் கரிசனையும் இருக்க வேண்டி யது அவசியம்.

பேச்சுவார்த்தைகள் உட்பட முன் னைய தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்ததில் தங்களுக்கும் பொறுப்பு உண்டா என்பதையிட்டுத் தமிழ்த் தலைவர்கள் நிதானமாகச் சிந்திப்பது நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு அவசியமானது. தமிழ்த் தலைவர்கள் தரப்பில் தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன.

இப்போது அவை பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அத் தவறுகள் மீண்டும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே இன்றைய தேவை. நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை பயனுறு வகையில் அமைவதற்கு இது அவசியமானது.

சரியான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது மாத்திரம் தீர் வுக்கான பயனுறு பங்களிப்பாக அமையாது. இறுதித் தீர்வுக்கான சரியான திட்டத்தை முன்வைக்கின்ற அதே வேளை அத்திட்டத்தை றடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகின்றதா என்பதையும் கவ னத்தில் கொள்ள வேண்டும்.

சக்திவலுச் சமநிலை யைக் கவனத்தில் கொள்ளாத எந்த முயற்சியும் எதிர் பார்க்கும் பலனைத் தருவதில்லை. பேரினவாத சக்தி கள், ஜனநாயக சக்திகள், இனப் பிரச்சினைக்கு நியாய மான அரசியல் தீர்வை ஆதரிக்கும் சக்திகள் எனப் பல் வேறு சக்திகளின் வலுவே யதார்த்தத்தின் அடிப்படை ஆகின்றது. எனவே யதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறைக்கு ஊடாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளின் விளை வாகச் சிங்களக் கடுங்கோட்பாட்டுச் சிந்தனையாளரின் கை முன்னரிலும் பார்க்க இப்போது ஓரளவு மேலோ ங்கியிருக்கின்றது என்ற கசப்பான உண்மையையும் அரசியலமைப்புத் திருத்தம் சம்பந்தப்படும் தீர்வுக்குச் சிங்கள மக்களின் ஆதரவும் அவசியம் என்பதையும் ஏற்றுக்கொண்டு தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண் டிய நிலையில் தமிழ்த் தலைவர்கள் உள்ளனர். இறுதித் தீர்வை வலியுறுத்துகின்ற அதேவேளை யதார்த் தத்துக்கு அமைவான உடனடித் தீர்வை ஏற்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். இறுதித்  தீர்வைப் படிப்படியாக அடைவதற்கும் தமிழ் மக்களின் வாழ்புல உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் இது அவசியமானது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com