|
||||
|
இந்திய
அமைச்சர்
ராஜாவின் ஸ்பெக்ரம்
விவகாரம்
காங்கிரஸின்
நேர்மைக்கு
உரைகல்
இந்தியாவின் மத்திய
தொலைதொடர்பு
அமைச்சர்
அ. ராஜா பதவி விலக
வேண்டும்
என்ற கோரிக்கை
பல்வேறு கோணங்களிலிருந்து
வருகின்றபோதிலும்
அவர் பதவி
விலகுவதற்கான
அறிகுறிகள்
தென்படவில்லை.
அரசாங்கமும் அவரைப்
பதவி விலக்குவதாக
இல்லை.
ஸ்பெக்ரம் ஊழல் குற்றச்சாட்டு
இவருக்கு
எதிராகச்
சுமத்தப்பட்டுள்ளது.
‘ஸ்பெக்ரம்
பக்கேஜ்’ என்ற பெயரில்
சில அலைவரிசைகளை
ஏலம் விட்டதில்
வழமையான நடை முறைகளுக்கு
முரணாகத்
தன் னிச்சையாகச்
செயற்பட்டதன்
மூலம் அரசாங்கத்துக்கு
ஒரு இலட்சத்து
எழுபத்தாறாயிரம்
கோடி ரூபா
நட்டம் ஏற்படுத்தியிருக்கின்றார்
என்பது இவருக்கு எதிரான குற்றச்சாட்டு.
இக் குற்றச்சாட்டை
எதிர்க் கட்சிகளோ ஊடகங்களோ சுமத்தவில்லை.
இந்தியாவின் கணக்காய்வு
மற்றும் தணிக்கைத்துறைத்
தலைவர் தனது வருடாந்த
அறிக்கையில்
இக் குற்றச்சாட்டைச்
சுமத்தியிருக்கின்றார்.
இக் குற்றச்சாட்டை
அடிப்படையாகக்
கொண்டே எதிர்க் கட்சிகளும்
ஊடகங்களும்
ராஜா பதவி
விலக வேண்டும்
என்ற கோரிக்கையை
முன்வைக்கின்றன.
இந்த ஏலம்
தொடர்பாக
நிதி அமைச்சும்
நீதி அமைச்சும்
செய்த சிபார்சுக
ளுக்கும்
வழமையான நடைமுறைகளுக்கும்
முரணாகவே
ராஜா செயற்பட்டிருப்பதாகக்
கணக்காய்வு
மற்றும் தணிக்கைத்துறைத்
தலைவரின்
அறிக்கையில்
சொல்லப்பட்டுள்ளது.
சில முறைகேடான
நன்மைகளைப்
பெறுவதற்காகவே
இவ்வாறு செயற்பட்டிருக்கின்றார்
என்ற சந்தேகமும்
அந்த அறிக்கையில்
தெரிவிக்
கப்பட்டிருக்கின்றது.
ராஜாவின் முன்னைய பதவிக் காலத்திலேயே
இந்த ஏலம்
நடைபெற்றது. அப்போதே இக்குற்றச்சாட்டுகள்
வெளிவந்துவிட்டன.
கடந்த பாராளுமன்றத்
தேர்தலுக்குப்
பின் திராவிட
முன்னேற்றக்
கழகத்துக்கு
அமைச்சுப்
பதவிகள் வழங்குவது
தொடர்பான
பேச்சு வார்த்தையின்
போதும் இவ்விடயம்
எழுந்தது.
ரீ. ஆர். பாலுவுக்கும் ராஜாவுக்கும்
அமைச்சுப்
பதவிகள் வழங்கப் போவதில்லை
என்று மன்மோகன் சிங் கூறினார்.
இவ்விருவருக்கும் எதிராக
ஊழல் குற்றச்சாட்டுகள்
இருப்பதே
காரணம் என்றும் சொன்னார்.
ஆனால், ராஜாவுக்கு அமைச்சுப்
பதவி வழங்க
வேண்டும்
என்றும் முன்னைய அமைச்சே அவருக்குக்
கொடுக்கப்பட
வேண்டும்
என்றும் கலைஞர் கருணாநிதி
பிடிவாதம்
பிடித்ததால்
மன்மோகன்
சிங் விட்டுக்கொடுக்க
வேண்டி ஏற்பட்டது.
ராஜாவை மீண்டும்
தொலைத் தொடர்பு அமைச்சராக
நியமித்தார்.
திராவிட முன்னேற்றக்
கழகத்தின்
சிரேஷ்ட உறுப்பினரான
ரீ. ஆர். பாலுவுக்கு
அமைச்சுப்
பதவி பெற்றுக்
கொடுப்பதில்
அக்கறை காட்டாமல்
ராஜாவின்
விடயத்தில்
மாத்திரம்
கருணாநிதி
ஏன் அக்கறை
செலுத்தினார்
என்ற கேள்வி
அந்த நாட்களில்
அரசியல் வட்டாரங்களில்
கேட்கப்பட்டது.
கனிமொழியின் வற்புறுத்தலாலேயே
கருணாநிதி
அவ்வளவு அக்கறை செலுத்தியதாகவும்
பேசப்பட்டது.
இப்போது விடயம் உச்ச நீதிமன்றம்வரை
போய்விட்டது. மத்திய புலனாய்வுப்
பணியகம் இவ்விடயம்
தொடர்பாக
உச்ச நீதிமன்றத்தில்
முதனிலை அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றது.
விசாரணையைத்
துரிதப்படுத்துமாறு
மத்திய புலனாய்வுப்
பணியகத்துக்கு
உத்தரவிட்ட
உச்ச நீதிமன்றம்
ராஜா எப்படித்
தொடர்ந்து
அமைச்சராகப்
பதவி வகிக்லாம்
என்ற கேள்வியையும்
எழுப்பியது.
உச்ச நீதிமன்றத்தின்
இக் கேள்விக்குப்
பின்னர், ராஜா இராஜினாமா
செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
நாளுக்கு
நாள் வலுவடைகின்றது.
இந்த நிலையில்,
நிதியமைச்சரும்
காங்கிரஸ்
கட்சியின்
சிரேஷ்ட தலைவருமான
பிரணாப் முகர்ஜியைச்
சந்தித்த
கனிமொழி ராஜாவைப் பதவி விலக்க
வேண்டாம்
என்று கோரிக்கை விடுத்தார்.
கனிமொழி தானாக இக்கோரிக்கையை
விடுத்தாரா?
அல்லது கலைஞரின்
சார்பில்
விடுத்தாரா?
*காங்கிரஸ்
கட்சியின்
நேர்மைக்கு
இது ஒரு
உரைகல். ஐ.பி.எல். ஊழலுக்காக
சசி தரூரையும்
ஆதர்ஸ் வீடு ஒதுக்கீடு
ஊழலுக்காக
அசோக் சவானையும்
இராஜினாமா
செய்யும்
படி கூறியது
போல ஸ்பெக்ரம்
ஊழலுக்காக
ராஜாவை இராஜினாமா
செய்யும்படி
காங்கிரஸ்
தலைமை கூறுமா? அல்லது திராவிட
முன்னேற்றக்
கழகத்தின்
ஆதரவைப் பெறுவதற்காக
ஊழலைக் கண்டும் காணாதது போல் இருக்குமா? |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |