|
||||
|
பிரச்சினைகளின் தீர்வுக்கு
சாதகமான சூழ்நிலை
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின்
இரண்டாவது
பதவிக் காலம் நேற்று
ஆரம்பமாகியது. கோலாகலமாக ஜனாதிபதி
செயலக முன்றலில்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தலைவராக இரண்டாவது
தடவையாகச்
சத்தியப்
பிரமாணம்
செய்தார்.
ஜனாதிபதியின் முதலாவது
பதவிக் காலம் இலங்கையின்
வரலாற்றில்
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாக
அமைந்தது.
ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின்
காலத்தில்
கூர்மைபெற்ற
பயங்கரவாதம்
அவருக்குப்
பின்னர் பதவி வசித்த
மூன்று ஜனாதிபதிகளினதும்
காலத்தில்
நாட்டுக்கும்
மக்களுக்கும்
பல சேதங்களை
உண்டாக்கி
வளர்ந்ததேயொழிய,
அதனை ஒழிக்க
முடியவில்லை.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின்
முதலாவது
பதவிக் காலத்திலேயே
விடுதலைப்
புலிகள் இயக்கத்தின்
பயங்கரவாதத்தை
முழுமையாக
ஒழிக்க முடிந்தது.
அபிவிருத்தித் திட்டங்களுக்கு
மத்தியிலேயே
பயங்கரவாதத்துக்கு
எதிரான நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது. அபிவிருத்தியைப் பொறுத்த
வரையில் கூட ஜனாதிபதியின்
முதலாவது
பதவிக் காலம் முத்திரை
பதித்தது
எனத் தயக்கமின்றிக்
கூறலாம்.
முன்னைய காலங்களிலும்
பார்க்க மிகக் கூடுதலான
அபிவிருத்தித்
திட்டங்கள்
நாட்டின்
பல பகுதிகளிலும்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் பேசும்
மக்களைப்
பொறுத்தவரையில்
ஜனாதிபதியின்
இரண்டாவது
பதவிக் காலம் முக்கியத்துவம்
வாய்ந்தது. நாட்டின் சகல பிரசைகளுக்கும்
பொதுவான பிரச்சினைகள்
இருக்கின்ற
அதேவேளை தமிழ் பேசும்
மக்களுக்குத்
தனியான பிரச்சினைகளும்
உள்ளன. இனப்பிரச்சினைக்கு
அரசியல் தீர்வு காண்பதும்
அண்மைய இராணுவ நடவடிக்கையின்
போதும் அதற்கு முன்னரும்
இடம்பெயர்ந்த
தமிழ் மக்களினதும்
வடக்கிலிருந்து
புலிகளால்
வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்களினதும்
மீள்குடியேற்றமும்
தமிழ் பேசும் மக்களுக்கு
முன்னாலுள்ள
தனித்துவமான
பிரதான பிரச்சினைகள்,
இப்பிரச்சினைகளின்
தீர்வுக்கு
ஜனாதிபதியின்
இரண்டாவது
பதவிக் காலம் சாதகமான
காலகட்டமாக
உள்ளது.
மீள்குடியேற்றத்தில் கணிசமான முன்னேற்றம்
ஏற்பட்டுள்ள
போதிலும்,
இடம்பெயர்ந்த
அனைவரும்
மீள்குடியேற்றப்பட்டு
அவர்களின்
வாழ்க்கையில்
சுமுக நிலை ஏற்பட்ட
நிலையிலேயே
இப் பணி
பூர்த்தியடைந்தது
எனக் கூற
முடியும்.
இந்த இலக்கை
அடையும் நோக்கத்துடன்
அரசாங்கம்
செயற்படுகின்றது
என்பதில்
சந்தேகமில்லை.
உள்ளூர் அரசியல்
தலைவர்களுக்கும்
இவ்விடயத்தில்
பொறுப்பு
உண்டு. அரசாங்கத்துடன் இணைந்து
தங்கள் பங்களிப்பையும்
அவர்கள் செலுத்தும்
பட்சத்தில்
மீள்குடியேற்றப்
பணி விரைவில்
பூர்த்தியடையக்
கூடியதாக
இருக்கும்.
வடக்கிலிருந்து புலிகளால்
வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்களை
அவர்களது
சொந்த இடங்களில்
குடியமர்த்துவதில்
ஏதேனும் தடங்கல் இருக்க நியாயம் இல்லை. இவ்விடயத்தில் அரசாங்கத்தைச்
செயற்பட வைக்கும் பிரதான பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்களைச்
சார்ந்தது.
இனப் பிரச்சினையின்
தீர்வுக்கும்
ஜனாதிபதியின்
இரண்டாவது
பதவிக் காலம் சாதகமானது. அரசியல் தீர்வு
முயற்சிகளுக்குத்
தடையாகச்
செயற்பட்டு
வந்த புலிகள்
இப்போது அரசியல் அரங்கில் இல்லை. தனிநாடு சாத்தியமற்றது
என்பதும்
இப்போது உறுதியாகிவிட்டது.
தமிழ்த் தலைவர்கள்
யதார்த்தத்துக்கு
அமைவான முறையில் அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தை
நடத்தித்
தீர்வு முயற்சியை
மேற்கொள்வார்களேயானால்
அரசியல் தீர்வு விரைவில் சாத்தியமாகும்.
பிரச்சினைகளின் தீர்வுக்குச்
சாதகமான சூழ்நிலை இப்போது நிலவுகின்றது. தமிழ் பேசும்
மக்களின்
தலைவர்கள்
இதைச் சரியான முறையில் பயன்படுத்த
வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |