|
||||
|
ஈகுவடோரில் தோல்வியில்
முடிந்தது
சதிப்புரட்சி
செப்ரெம்பர் 30ம்
திகதி ஈகுவடோர் நாட்டு ஜனாதிபதி ரஃபேல் கொரயா அந்நாட்டுப்
பொலிஸாரினால்
பலவந்தமாகத்
தடுத்து வைக்கப்பட்டார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட
ஒரு சட்டம்
பொருளாதார
ரீதியாகத்
தங்களைப்
பாதிக்கின்றது
எனக் கூறிப்
பொலிஸார்
வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டனர்.
அவர்களுடன்
நேரடியாகப்
பேசி உண்மை
நிலையை விளக்கும்
நோக்கத்துடன்
பாசறைக்குச்
சென்ற ஜனாதிபதி மீது பொலிஸார்
கண்ணீர்ப்
புகைத் தாக்குதல்
நடத்தியதோடு,
கனமான ஆயுதங்களாலும்
தாக்கியுள்ளனர்.
காயமடைந்த ஜனாதிபதியை
இராணுவ வைத்தியசாலைக்குக்
கொண்டு சென்ற பொலிஸார்
அவரைப் பலவந்தமாகத்
தடுத்து வைத்து இராஜினாமா
செய்யும்படி
வற்புறுத்தினார்கள்.
ஜனாதிபதி மறுத்துவிட்டார்.
“நான் இங்கிருந்து
ஜனாதிபதியாக
வெளியே போக முடியாவிட்டால்
பிணமாகவே
பேவேனேயொழிய
இராஜினாமா
செய்யமாட்டேன்”
என்று அவர் உறுதியாகக்
கூறினார்.
இதேவேளை ஏறக்குறைய
எல்லாப் பாசறைகளையும்
கிளர்ச்சிப்
பொலிஸார்
தங்கள் கட்டுப்பாட்
டுக்குள்
கொண்டு வந்திருந்தனர். விமான
நிலையங்களும்
மூடப்பட்டன.
பாதுகாப்புப் படையினரிலும்
சிலர் கிளர்ச்சிப்
பொலிஸாருக்கு
ஆதரவாகச்
செயற்பட்டனர்.
ஜனாதிபதி கைது செய்யப்பட்டார்
என்ற செய்தி
பரவியதும்,
ஆயிரக் கணக்கானோர்
அவருக்கு
ஆதரவு தெரிவித்து
வீதியில்
இறங்கினார்கள். அன்று
மாலை விசேட
படையினர்
மேற்கொண்ட
அதிரடி நடவடிக்கையின்
மூலம் ஜனாதிபதி மீட்கப்பட்டார்.
ஈகுவடோர் ஆட்சி மாற்றங்களுக்குப்
பெயர் பெற்ற நாடு. ரஃபேல் கொரயா 2006ம்
ஆண்டு ஜனாதிபதியாகத்
தெரிவு செய்யப்பட்டார்.
அதற்கு முன் பத்து வருட
காலத்தில்
எட்டு ஜனாதிபதிகள்
பதவி வகித்தனர்.
கொரயாதான் அண்மைக்கால
வரலாற்றில்
கூடுதலான
காலம் பதவியில் இருப்பவர்.
கடந்த வருடம்
இரண்டாவது
தடவையாகவும்
மிகக் கூடுதலான பெரும்பான்மை
வாக்குகளால்
அவர் தெரிவு
செய்யப்பட்டார்.
அண்மைய கணக்கெடுப்பில்
அவரது அங்கீகார விகிதம் 70ஐத்
தாண்டிவிட்டது.
கொரயா பொருளாதாரத்தில்
கலாநிதிப்
பட்டம் பெற்றவர். அவர் ஜனாதிபதியாகத்
தெரிவு செய்யப் பட்டதும் பொரு ளாதாரத்
துறையில்
பல ‘றடிகல்’
நடவடிக்கைகளை
மேற்கொண்டார்.
பிரதான தொழிற்துறைகளைத்
தேசியமயமாக்கினார்.
அமெரிக்க நாடுகளுக்கான
பொலிவிய மாற்று அமைப்பு என்ற அமைப்பில்
ஈகுவடோரை
அங்கத்துவ
நாடாக இணைத்தார்.
சுகாதார சேவைக்கான
செலவினத்தை
இரண்டு மடங்காக அதிகரித்தார்.
அமெரிக்க நாடுகளுக்கான
பொலிவிய மாற்று அமைப்பு எனப்படுவது
இடதுசாரிக்
கருத்துள்ள
நாடுகளின்
கூட்டமைப்பாகும். இந்த நாடுகள் சமத்துவ அடிப்படையில்
தங்களுக்கிடையே
பொருளாதார
ஒத்துழைப்பை
வகுத்துக்கொண்டுள்ளன.
அரசியலிலும் பொருளாதாரத்திலும்
அமெரிக்க
நாடுகள் மத்தியில்
மேலாண்மை
செலுத்தும்
ஐக்கிய அமெரிக்க நிலைப்பாட்டுக்கு
இந்த அமைப்பு
வலுவான சவாலாக உள்ளது. திழிகிதி வில் ஈக்குவடோர்
இணைந்ததால்
அமெரிக்கா
கொண்டிருந்த
சினம் மேலும் அதிகரிக்கும்
வகையில், ஈக்குவடோரிலுள்ள
அமெரிக்கத்
தளத்தை மூடிவிடுமாறு
ஜனாதிபதி
கொரயா கடந்த வருடம்
உத்தரவிட்டார்.
ஈகுவடோர் பொலிஸ்
சேவையில்
அமெரிக்க
தூதரகம் ஊடுருவல் செய்திருக்கின்றது
என்று சில காலத்துக்கு
முன் ஒரு
கனேடிய ஊடகவியலாளர்
செய்தி வெளியிட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
இச்செய்தி
தொடர்பாகக்
கருத்துத்
தெரிவித்த
ஈகுவடோரிலுள்ள
அமெரிக்கத்
தூதுவர் ஹீதர் ஹொட்ஜெஸ்
போதைவஸ்துக்
கடத்தலுக்கு
எதிரான நடவடிக்கைகளுக்காகவே
ஈகுவடோர்
பாதுகாப்புப்
படையினருக்கும்
அமெரிக்காவுக்குமிடையே
ஒத்துழைப்பு
நிலவுகின்றது
எனக் கூறியிருந்தார்.
இது கனேடிய ஊடகவியலாளரின்
செய்தியை
மறைமுகமாக
ஒத்துக்கொண்டதற்குச்
சமன். போதை வஸ்துக் கடத்தலுக்கு
எதிரான ஒத்துழைப்பு
ஈகுவடோர்
அரசாங்கத்துக்கூடாக
இடம்பெற வேண்டுமேயொழிய
நேரடியாக
அல்ல. நேரடியான
ஒத்துழைப்பு
ஊடுருவலே.
ஈகுவடோருக்கு
விசுவாசகமாக
இல்லாமல்
அமெரிக்காவுக்கு
விசுவாசமாக
இருக்கின்றார்
எனக் கூறி
ஜனாதிபதி
கொரயா 2008ம்
ஆண்டு பொலிஸ் அதிபரைப் பதவி நீக்கம்
செய்தார்
என்பதையும்
இங்கு குறிப்பிட
வேண்டும்.
இவற்றையெல்லாம் பார்க்கையில்,
ஈகுவடோரில்
தோல்வியடைந்த
சதிப்புரட்சிக்குப்
பின்னால்
அமெரிக்காவே
இருந்தது
என்று வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவெஸ் கூறுவதை நிராகரிக்க
முடியாது.
அமெரிக்க
நாடுகளுக்கான
பொலிவிய மாற்று அமைப்பு வில் இணையும்
நாடுகளில்
ஆட்சிக் கவிழ்ப்பை
மேற்கொள்வதற்கு
அமெரிக்கா
முயற்சிக்கின்றது
என்பதற்கு
ஹொன்டுராஸ்
ஒரு உதாரணம்
என்கிறார்
சாவெஸ்.
ஹொன்டுராஸில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட
ஜனாதிபதியான
மனுவெல் ஸெலாயா தனது நாடு
திழிகிதி
வில் இணையும்
என்று அறிவித்தார். அதைத்
தொடர்ந்து,
2009ம் ஆண்டு
இராணுவ சதிப்புரட்சி
மூலம் அவரது ஆட்சி
கவிழ்க்கப்பட்டது.
இப்போது ஹொண்டுராஸிலுள்ள
இராணுவ ஆதரவு அரசாங்கத்துக்கு
அமெரிக்கா
பெருமளவில்
உதவி புரிகின்றது.
தோல்வியடைந்த சதிப்புரட்சியைத்
தொடர்ந்து
ரஃபேல் கொரயாவின்
செல்வாக்கு
மேலும் அதிகரித்திருக்கின்றது. ஆனால்,
அவரது செயற்பாடுகளினால்
பாதிக்கப்பட்ட
உள்ளூர் பெருமுதலாளித்துவ
சக்திகளினதும்
அமெரிக்காவினதும்
அச்சுறுத்தலைச்
சமாளித்தாக
வேண்டுமே. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |