Contact us at: sooddram@gmail.com

 

மக்கள் சேவைக்கே முதலிடம்

சாதனை வீரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னு டைய அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் முன் உரை யாற்றும் போது அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச் சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அனைவரும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நல்லெண்ணத்துடன் கடுமையான பங்களிப்பை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரசாங்க நிர்வாக சேவையின் உயர்மட்டத்திலுள்ள அமைச்சர்கள் தலைமையிலான சகல உத்தியோகத்தர்களும், தங்கள் கடுமையான உழைப்பின் மூலமே மஹிந்த சிந்தனை எண்ணக் கருவை தங்குதடையின்றி நெறியாக செயற்படுத்த முடியும் என்றும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தங்கள் பாவனைக்காக கொடுக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டி ருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, அமைச்சர்கள் தங்கள் பெருமையை பறைசாற்றும் சின்னங்களாக பயன்படுத்தலாகாது என்றும், ஒரு அமைச்சர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது 10 முதல் 15 வாகனங்களுடன் சென்று, அரசாங்க பணத்தை வீணாக்குவதை இனிமேலாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்காத வகையில் அமைச்சர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இதனுடன், அமைச்சு க்களின் அநாவசியமான செலவுகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜனாதிபதி அவர்கள் மேலும் வலியுறுத்தினார்.

எனது அரசாங்கம் வெற்றிகரமான முறையில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டில் சமாதானத்தையும், அமைதியை யும் நிரந்தரமாக நிலைபெற செய்து, மக்களின் துன்பம், துயரங்களை போக்கி, அவர்களுக்கு பொருளாதாரத்துறையில் நல்வாழ்வை பெற்றுக் கொடுக்கும் பணியில் இன்று தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்ற கருத்தை வலியுறுத்திய ஜனாதிபதி நாட்டை மீண்டும் பொருளாதார துறையில் மறுமலர்ச்சியடையச் செய்வதற்கு அமைச்சர்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறியுள்ளார்.

எனவே, புதிதாக நியமனம் பெற்றுள்ள அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் தங்கள் பொறுப்புக்களை கடமையுணர்வுடன் நல்ல முறையில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

ஜனாதிபதியின் இந்த யோசனைகள் அரசாங்க அதிகாரிகளுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. உரிய நேரத்தில் தங்கள் காரியாலயங்களுக்கு வந்து, கடமைகளை ஆரம்பிக்க வேண்டிய சில அரசாங்க அதிகாரிகள் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சரியான முறையில் நிறைவேற்றாமல் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதை இனிமேலாவது கைவிட்டு, தங்களு க்கு அரசாங்க நிர்வாக இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதி காரத்தை மக்களின் நன்மைக்காகவும், அவர்களின் பிரச்சினை களுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காகவும் பயன்படு த்துவது அவசியமாகும்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவை நிறைவேற்றும் முகமாக, ஒவ்வொரு அரசாங்க காரியாலயத்திலும்மக்களே எங்கள் எஜமானர்கள், அவர்களுக்கு பணி செய்வதே எங்கள் கடமைஎன்ற சுலோகங்களை மக்களுக்கு தெரியக் கூடிய வகையில் எழுதி வைக்க வேண்டும்.

அவ்விதம் அரசாங்க காரியாலயங்கள் நீதி, நேர்மையுடன் தங்கள் பணிகளை நிறைவேற்றும் கருமபீடங்களாக மாற்றப்பட்டால் நிச்சயம் மக்களின் பிரச்சினைகளுக்கு கால தாமதமின்றி தீர்வுகளும் கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதிலும் இன்று நிலவி வரும் மோசடிகள், கஷ்டங்கள் அனைத்தும் இனிமேல் இருக்கக் கூடாது. அத்தகைய சீர்கேடுகளுக்கு பொறுப்பான அரசா ங்க அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடு மையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஜனாதிபதி சம்பந்தப் பட்ட உயரதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அதியுன்னதமான எண்ணக்கரு நாடெங்கிலும் நெறியான முறையில் நிறைவேற்றப்படுகின்றதா என்பதை தினகரன் அவதானிக்கும் மக்கள் சேவையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. தொடர்ந்தும் எமது பத்திரிகை இந்தப் பணியை நிறைவேற்றும் என்பதை நாம் உறுதியுடன் அறிவிக்க விரும்புகிறோம்.

தினகரன் பத்திரிகையின் வளர்ச்சிக்கு மகத்தான சேவையாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் அமரர்களான பேராசிரியர் கைலாசபதி, எஸ்.சிவகுருநாதன் ஆகியோரின் பாதையில் இந்த நற்பணியை தினகரன் தொடர்ந்தும் மேற்கொள் ளும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com