Contact us at: sooddram@gmail.com

 

பூக்களை வெட்டி எறியக்கூடும்...

(ஜான் செரியன்)

சோவியத் யூனியன் உதயமான காலத்திலிருந்து உலக முதலாளித்துவ மானது சோஷலிஸ்ட் அரசுகளைக் கவிழ்ப்பதிலேயே முனைப்புடன் செயல் பட்டு வந்துள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் சோஷலிஸ்ட் கியூபாவை அடியோடு தகர்த்திடுவதற்காக அரை நூற்றாண்டு காலமாகப் பல் வேறு சதிவேலைகளை அரங்கேற்றி வந் துள்ளன. முன்னாள் ஜனாதிபதி காஸ்ட் ரோவைப் படுகொலை செய்வதற்காக அமெரிக்கப் புலனாய்வுத் துறை 300 தடவைகளுக்கும் மேல் முயற்சித்துத் தோல்வியடைந்துள்ளது.

சமீபத்தில் வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார் போன்ற பல்வேறு தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சிந்தனை படைத்த தலைவர்கள் தேர்தல்கள் மூலமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அதனால் அமெரிக்க ஆட்சி யாளர்களுக்கு மிகவும் எரிச்சலும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வெனிசுலா ஜனாதிபதி சாவேஸை படுகொலை செய்வதற்காகத் தொடர்ந்து திட்டமிட்ட சதிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஈக்வடார் நாட்டு ஜனாதிபதி ரபேல் கோரியாவை சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கம் செய்திடும் சதிகள் அரங்கேற்றப்பட்டன. ஈக்வடார் நாட்டுத் தலைநகரான க்விட்டோவில் கடந்த செப்டம்பர் 20ம் நாளன்று ஜனாதிபதி ரபேல் கோரியா சில உள்ளூர் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளால் சிறைபிடிக்கப்பட்டார்.

ஜனாதிபதி கோரியா தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள முற்போக்கான இடதுசாரித் தலைவர்களில் ஒருவராவார். அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஈக்வடார் நாட்டில் பல்வேறு வகையான தீவிரமான அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறார். நாட்டில் தனியார் வசமிருந்த ஹைட்ரோ கார்பன் தொழிற்சாலைகள் அரசுடைமையாக்கப்பட்டன. மேலும் ஜனாதிபதி கோரியா நாட்டில் பற்பல சமூக நலத்திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.

கலகக்கார காவல்துறைப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது கோரியா அவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டார். மேற்படி கலகக்காரர்கள் அவரைப் பதவியிலிருந்து விலகுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். ஆனால் ஜனாதிபதி கோரியா சிறிது கூடக் கலங்காமல் உருக்கு உறுதியுடன் தலைநிமிர்ந்து நின்றார். நீங்கள் விரும்பினால் என்னைச் சுட்டுத்தள்ளுங்கள்என்று அவர் கலகக்காரர்களைப் பார்த்து தலைநிமிர்ந்து கம்பீரமாகக் கூறினார். ஜனாதிபதி கோரியா 2006ம் வருடம் பதவியேற்றார். அதற்கு முன்னர் ஈக்வடார் நாட்டில் 10 வருடங்களில் 8 பேர் ஜனாதிபதி பதவிக்கு வந்து போயுள்ளனர்.

காவலர்களின் தாக்குதல்களில் காயம்பட்ட ஜனாதிபதி கோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து தொலைபேசி மூலம் பேசிய அவர் பின்வருமாறு கூறினார்மருத்துவமனையை விட்டு நான் அதிபராக மீண்டு வருவேன் அல்லது பிணமாகக் கொண்டு வரப்படுவேன்”. மேலும் வெனிசுலா நாட்டுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மக்கள் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதை வரியொன்றை மேற்கோள் காட்டிப் பேசினார். அவர்கள் பூக்களை வெட்டியெறியக்கூடும், ஆனால் மீண்டும் ஓர் புதுவசந்தம் வருவதை அவர்களால் தடுத்திட முடியாதுஎன்பதே மேற்படி கவிதை வரியாகும்.

அவர் கலகக்காரர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட செய்தியறிந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் மருத்துவமனை முன் திரண்டனர். பின்னர் ஜனாதிபதியின் சிறப்பு மெய்க்காவல்படையினரால் கோரியா விடுவிக்கப்பட்டார். அந்த மீட்பு நிகழ்ச்சியில் ஒரு மெய்க்காவலர் உயிரிழக்க நேர்ந்தது. ஜனாதிபதி கோரியாவுக்கு நாட்டில் 70 சதவீத மக்களுடைய ஏகோபித்த ஆதரவு உள்ளது.

ஒபாமா நிர்வாகமானது தொடர்ந்து தென் அமெரிக்க நாடுகளில் இத்தகைய கவிழ்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வரு கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஈக்வடார் நாட்டின் காவல்துறைக்குள் தங்களுடைய அடியாட்களை ஊடுருவச் செய்கிறார்கள். ஜனாதிபதி கோரியா அமெரிக்கர்களுடைய மேற்படி சதிச்செயல்களையெல்லாம் வேரும் வேரடி மண்ணுமில்லாமல் வெட்டியெறிந்து வருகிறார்.

ஈக்வடார் நாட்டில் அமெரிக்கத் தூதராகப் பணிபுரிந்து வரும் ஹீதர் ஹோட் ஜஸ் வேறு பல நாடுகளில் பணிபுரிந்த போதெல்லாம், அந்த நாடுகளிலுள்ள ஜனநாயக ஆட்சிகளைக் கவிழ்க்கும் சதிவேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் கியூபா அரசைக் கவிழ்ப்பதற்காகப் பற்பல முயற்சிகளை மேற்கொண்ட துண்டு. அவர்தான் 1990ம் வருடம் நிகரகுவா நாட்டில் மக்களாட்சியைக் கவிழ்த்தவர். அவர்தான் தற்சமயம் ஈக்வடார் நாட்டில் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க ஆட்சியாளர்கள் 3.8 கோடி டாலர்களை ஈக்வடார் நாட்டிலுள்ள பற்பல தனியார் அமைப்புகளுக்கு வாரி வழங்கியுள்ளனர். மேற்படி அமைப்புகள் யாவுமே கோரியாவின் ஆட்சிக்கு எதிராக அணிதிரண்டுள்ளன. மேலும் ஈக்வடார் நாட்டிலுள்ள பெரிய பெரிய செய்தி ஊடகங்கள் யாவும் தனியார் வசம் உள்ளன.

இத்தகையதோர் சூழ்நிலைகளில் கோரியா தன் நாட்டு மக்களுக்காக நல்ல பல செயல்திட்டங்களை உருவாக்கியாக வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமை உள்ளது. கோரியா, தனது ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்ட பின்னர், தன்னுடைய அரசானது கலகம் செய்த காவலர்களுக்கு எதிராக எந்த ஒரு பாதகமான நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்று உறுதியளித்துள்ளார். அவர் நாட்டிலுள்ள அதிருப்தியாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்திய நிகழ்ச்சிகளானவை மக்கள் மத்தியில் கோரியாவின் செல்வாக்கை அதிகப்படுத்தியுள்ளது. அவர் தன்னந்தனியாக நிராயுதபாணியாக கலகக்காரக் காவலர்களை உறுதியுடன் எதிர் கொண்டவிதம் குறித்து நாட்டு மக்கள் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். ஒரு மிகச்சிறந்த பொருளாதாரப் பட்ட தாரியான கோரியா, தன் நாட்டில் ஆற்றிட வேண்டிய பொருளாதாரப் பணிகள் ஏராளமாக உள்ளன. அவர் தனது நாட்டு மக்களுக்கான மக்கள் சேவையில் முழு வெற்றி பெறுவார் என்பதுஉறுதி.

நன்றி - “பிரண்ட்லைன்

தமிழில்: கே.
அறம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com