|
||||
|
0 வாகுமா
யுரோ ?
(ஏ.ஜி.எம். தெளபீக் )
ஐரோப்பிய நாடுகளில்
தோன்றியுள்ள
பொருளாதார
நெருக்கடிகள்
கடன் தொல்லைகள்
நாணயப் பெறுமதியிறக்கம்
என்பன அந்நாடுகளின்
அரசாங்கங்களை
பெரும்யோசனைக்குள்
மூழ்கடித்துள்ளன.
இன்று ஐரோப்பிய
நாடுகளிலுள்ள
எல்லா ஊடகங்களும்
முக்கியத்துவம்
கொடுக்கும்
செய்தியாக
இந்த பொருளாதார
நெருக்கடி
அந்நாடுகளில்
விஸ்வரூபமெடுத்துள்ளது.
பெருந்தொகையானோர் தொழில்களை
யிழந்துள்ளனர்.
இன்னும் சிலர் கட் டாயத்தின்
பேரில் வேலை யிழப்புச்
செய்யப்படுகின்றனர்.
கணிசமான ஐரோப்பிய
வங்கிகளின்
கதவுகள் அடைக்கப்பட்டு
விட்டன. ஓய்வூதியம்
காப்புறுதி
நஷ்டஈடுகள்
தொடர்பாக
ஐரோப்பிய
தொழிலாளர்கள்
நம்பிக்கையிழக்குமளவிற்கு
எல்லாச் சலுகைகளும்
ஐரோப்பிய
அரசுகளினால்
ரத்துச் செய்யப்பட்டுக்கொண்டு
வருகின்றன.
இவ்வாறு திடீரென
பொருளாதாரம்
அதல பாதாளத்துக்குள்
எவ்வாறு சென்றதென்று
இரண்டு வருடங்களுக்கும்
மேலாக ஐரோப்பிய பொருளியல்,
அரசியல் தலைவர்கள்
மண்டயை பிய்த்துக்கொண்டிருக்கின்றனர்.
காரியம் நடந்தபாடில்லை.
காரணம் கண்டறியப்படவில்லை.
உலகின் ஒவ்வொரு
மூலைகளிலிருந்தும்
ஒவ் வொரு
யோசனைகள்
என இன்று
ஏராளமான ஆலோசனைகள்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மாநாடுகள் பல கூட்டப்பட்டுவிட்டன.
வணிக வங்கிகள்,
மூலதனச் சந்தைகள், நிதிச் சந்தைகள், மத்திய வங்கிகளின்
தலைவர்கள்
ஒன்றுகூடிப்
பேசியாச்சு.
பலனெதனையும் காணவில்லையே!
ஐயோ நிலைமை
இவ்வாறு சென்றால் சொகுசு வாழ்க்கைகள்,
சுகபோகங்கள்
பறிபோய் ஆண்டிகளாகி
விடுவோமோ
என்ற பயம்
இன்று அனைத்து ஐரோப்பியர்களையும்
ஆட்கொண்டு
விட்டது.
ஆரம்பமாக கிரேக்கத்தில்
தொடங்கிய
இந்த பொருளாதார
நெருக்கடி
இன்று அமெரிக்கா
வரை அகலக்
கால் விரித்துக்கொண்டிருக்கி
ன்றது. வறுமையும், பட்டினியும்
எம் மைச்
சூழ்ந்துகொள்ள
முன்னர் பொருளாதார
நெருக்கடிக்குத்
தீர்வு காணுங்கள்
என்பதே அமெரிக்க மக்களின் கோரிக்கை.
ஆடை, அல
ங்காரம், வாசனைத்திரவியம்
தின்பண் டங்கள் நவீன மென்ரக
குடிபானங்கள்,
மதுபானங்கள்
என்றும் கொளுத்த வருமானமென்றும்
உள்ளத்தின்
சந் தோசம்
வானை முட்டுமளவு
வாழ்க்கை
நடத்திய மக்களாச்சே
அமெரிக்கர்கள்.
நாளை ஒரு
காலம் இவையெல்லாவற்
றையும் இழந்து தெருத் தெருவாய் பிச்சையெடுப்பதையும்
மற்றவர்களிடம்
கையேந்துவதையும்
விரும்புவார்களோ,
எனவேதான்
இன்றே இப்பெரிய நெருக்கடிக்கு
தீர்வு தாருங்கள்
என தெருவில்
இறங்கி விட்டனர்.
இன்று நேற்று அல்ல ஒரு
மாதத்தையும்
தாண்டி வீறுநடைபோடுகின்றது
இந்த ஆர்ப்பாட்டம். பொலிஸார் பொறுமையிழந்து
விட்டனர்
அரசியல்வாதிகள்
ஆத்திரம்
கொண்டுவிட்டனர்.
இதனால்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை
இனிமேல் விடாதீர்கள்
அடியுங்கள்,
உதையுங்கள்
என்ற உத்தரவை
வெள்ளை மாளிகை வெளிப்படையாக
இட்டுவிட்டது.
இதன் எதிரொலிதான்
ஐநூறுக்கும்
மேற்பட்டோரை
அமெரிக்க
அரசு கைது
செய்தமை.
நிலைமை அடங்கவில்லை
ஆர்ப்பாட்டம்
ஓயவில்லை
மாறாக ஓங்கி உயர்ந்து
கொண்டே செல்கின்றது.
பாராக் ஒபாமா நிர்வாகம்
மட்டுமல்ல
டேவிட்கெமருன்
அரசாங்கம்
தனித்தல்ல
பிரான்ஸ்
ஜனாதிபதி
நிக்கலஸ்
சர்கோஸியுடன்
நிற்கவில்லை
தலையிடி. ஜேர்மன் அதிபர்
ஏஞ்சலா மேர்கலை தொடாமல் செல்லவில்லை
நெருக்கடி
அயர்லாந்து
போத்துக்கல்
கிரேக்கம்
என அனைத்து
ஐரோப்பிய
அரசாங்கங்களையும்
ஆட்டம் காணச் செய்துள்ளன.
சவூதி அரேபியாவிடம்
பிரிட்டன்
கடன் கேட்டுள்ளது.
சீனாவிடம் பிரான்ஸ்
உதவி கோரியுள்ளது.
கிரேக்கம் என்னையே
முதலில் காப்பாற்றுங்கள்
என்று உலகே அதிரும்படி
அபயக் குரல் எழுப்பி
யுள்ளது.
எப்படி யுள்ளது இடாம்பிக வாழ்வு, செல்வச் செழிப்பில்
வாழ்ந்தோர்
நிலை. பொருட்களின் விலை வீழ்ச்சியடையக்
கூடாது என்பதற்காக
எத்தனையோ
டொன் கோதுமை
மாவை எவருக்கும்
வழங்காமல்
கடலில் கொட்டிய புண்ணியவான்களல்லவா
இவர்கள்.
ஏன் இப்படி
இன்று பஞ்சம் வரு முன்னே
மாண்டு போகின்றார்கள்
என்பதே தெரியவில்லை.
கிரேக்கத்தின்
கடன் தொல்லையை
நீக்கினால்தான்
தமக்கும்
பஞ்சம் வராமல் பாதுகாத்து
யூரோவின்
பெறுமதியை
தக்கவைக்கலாம்,
நாணயத்தின்
பெறுமதியை
ஸ்திரப்படுத்தலாம்
என்பதே யூரோ வலயத்திலுள்ள
நாடுகளின்
முடிவு.
யூரோ என்பது ஐரோப்பிய யூனியன்கள்
பெரும்பாலான
நாடுகள் புழக்கத்தில்
விட்ட நாணயம். இதிலுள்ள எல்லா நாடுகளும்
தங்களது பணத்தை யூரோ வங்கியில்
வைப்பி லிட்டுள்ளன.
இந்த வைப்பினால்
பெறப்படும்
வட்டிகள்
யூரோ வலய
நாடுகள் நிதி நெருக்கடியை
எதிர்நோக்கும்போது
கடனாக வழங்குவதே
ஜேர்மனியிலுள்ள
யூரோ மத்தி
வங்கியன்
வேலை. ஏனையவர்களின்
விஞ்ஞான தொழில்நுட்ப
வளர்ச்சிகள்
மேலோங்கி
அந்நாடுகளின்
வெளிநாட்டுச்
செலாவணி அதிகரிக்கின்றபோது
ஐரோப்பிய
நாடுகளை அது பாதிக்கக்
கூடாது என்பதற்காகவே
யூரோ நாணயம்
புழக்கத்தில்
விடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்த எல்லா நாடுகளும்
இல்லாவிட்டாலும்
சுமார் 17 நாடுகள் இந்த யூரோ
வலயத்திலுள்ளன. இந்நாடுகள் நமக்கிடையிலான
கொடுக்கல்
வாங்கல்களை
யூரோ நாணயமூடாகவே
மேற்கொள்கின்றன.
பொதுவாக அமெரிக்காவின்
டொலருக்குப்
போட்டியாகவே
யூரோ அறிமுகமான
தென்பதே உண்மை. ஆனால் இன்று யூரோ நாணயம்
நெருக்கடிக்குள்ளாகி,
டொலர் நெருக்கடியை
எதிர் நோக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
இதனாலே இன்று ஐரோப்பாவும்
அமெரிக்காவும்
தலையில் கை வைத்துக்கொண்டு
குந்திக்
கொண்டுள்ளன.
சரி இனி விடயத்துக்கு
வருவோம். அண்மையில் கூடிய யூரோ வலயத்தலைவர்கள்
உலக நிதி
நெருக்கடியை
முடிவுக்குக்
கொண்டுவர
பலயோசனைகளை
மேசையில்
முன்வைத்துள்ளனர்.
இதில் முதலாவது
கிரேக்கத்தை
கடன் சுமையிலிருந்து
கழற்றிவிடுவது.
இவ்வாறு செய்து
கிரேக்க பொருளாதாரத்தை
வளப்படுத்தினால்
யூரோ வலயத்திலுள்ள
எல்லா நாடுகளும்
தப்பிவிடும்
இல்லாவிட்டால்
ஒவ்வொரு நாடாக தொற்றிவிடும்.
கூட்டான பொருளாதாரக்
கட்டமைப்பில்
பல நாடுகள்
இணைந்து எல்லா நாடுகளதும்
நாணய பெறுமானங்களும்
சமமாக கணிக்கப்பட்டதாலே
இந்நிலைமை.
இம் முறையின்படி
யூரோவிலுள்ள
ஒரு நாட்டின்
வளர்ச்சி
அந்நாட்டுக்கு
மாத்திரம்
சொந்தமாகாது
அதாவது அந்நாட்டு
பொருளாதாரத்தை
மாத்திரம்
வளர்க்காது
அதேபோல் ஒரு நாட்டின்
பணவீக்கம்,
கடன் நெருக்கடி
என்பன ஏனைய அங்கத்துவ
நாடுகளையும்
பாதிக்கும்
இந்நிலையே
இன்று யூரோவுக்கு
ஏற்பட்டுள்ளது.
கிரோக்கப்
பொருளாதாரம்
பள்ளத்தில்
விழ எல்லா
நாடுகளும்
உடனே பள்ளத்தில்
விழாவிட்டாலும்
பள்ளத்தையும்,
குளியையும்
நோக்கிய பயணத்தையே
தொடர வேண்டிய
நிலையை தோற்றுவித்துவிட்டது.
இதைக் கருத்தில்
கொண்டே யூரோ வலய
நாடுகளின்
வங்கிகள்,
தனியார் நிறுவனங்கள்
என்பன கிரேக்கத்தின்
350 மில்லியன்
யூரோ கடன்
பழுவில் ஐம்பது விதத்தைப்
பொறுப் பேற்றுக்கொண்டுள்ளன.
இக்கடனை ஜேர்மனியிலுள்ள
யூரோ வங்கி
வழங்கவுள்ளது.
இதனால் மொத்தக்
கடன் சுமை
250 பில்லியன்
யூரோவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான உதவிகள்
கிரேக்கத்தின்
உள்நாட்டு
உற்பத்தியைப்
பாதிக்கும்
என்ற ஐயத்துக்கு
மத்தியில்
இதற்கான பிணை ஒப்பந்தத்தில்
கிரேக்க அரசும் அந் நாட்டின்
தனியார் நிதி நிறுவனங்களும்
ஒப்பமிட வேண்டுமென
வேண்டப் பட்டுள்ளன.
வெளிநாட்டு உதவிகளை
நம்பியிராமால்
உள்நாட்டு
உற்பத்திகளை
அதிகரித்து
சுயமாக கடன் சுமையை
குறைக்க வேண்டு மென்பதற்கே
பிணை கோரப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டின்
இறுதிவரை
கிரேக்கப்
பொருளாதார
வளர்ச்சிக்கு
யூரோ வலய
நாடுகள் உதவுமென நம்பப்படுகிறது.
இக்காலப் பகுதிக்குள்
எதிர்பார்த்த
பொருளாதார
வளர்ச்சி
காணப்படா
விடின் யூரோ வலய
அங்கத்துவம்
கேள்விக்குள்ளாகலாம். எனினும் 2014ம் ஆண்டு
வரை பொறுத்திருந்து
பார்ப்பதே
பொருத்தமென
கூட்டத்தில்
கருத்துரை
வழங்கிய தலைவர்கள்
விளக்கியுள்ளனர்.
இன்னும் மூன்று
வருடங்களுக்குள்
மொத்தமாக
நூறு பில்லியன்
யூரோவை ஐரோப்பிய நாடுகள் வழங்கும் இவ்வுதவியைக்
கொண்டு கிரேக்கம்
முன்னேறா
விட்டால்
கதை கந்தல்தான்.
அமெரிக்க ஜனாதிபதி
ஐரோப்பிய
தலைவர்களின்
இந்த முடிவைப்
பாராட்டியுள்ளார்.
சர்வதேச நிதி நெருக்கடியில்
யூரோவின்
பங்கு தவிர்க்க முடியாது எனவே யூரோ
வலய தலைவர்கள்
அக்கறையுடன்
செயற்பட வேண்டுமென்றும்
கோரிக்கை
விடுத்துள்ளார். ஆக்கபூர்வமற்ற துறைகளில்
செலவிடுவதை
ஐரோப்பிய
நாடுகள் குறைக்க வேண்டுமென்பதும்
பொருளாதார
நிபுணர்களின்
கருத்து.
வெடிமருந்துகள் ஆயுதங்கள்
அழகுசாதனப்
பொருட்கள்
என்பவை இதில் அடங்கும். 440 பில்லியன்
யூரோவாக விருந்த ஐரோப்பிய நாடுகளின்
ஆயுதச் செலவு 1.0 ட்ரில்லயன்
யூரோவாக உயர் ந்துள்ளமையும்
மாநாட்டில்
நாட்டில்
சுட்டிக்காட்டப்பட்டது.
ஆண்டவா மனித உயிர்களை அழித்து மானி டப்
பிறவியை துவம்சம் செய்யவா இவ்வளவு செலவு. இச்செல வினங்கள்
ஏழைகளின்
வயிற்றுப்
பசியை போக்கினால்
நினைக்கும்
போதே அஹா
இனிக்குதே.
என் மனமே.... |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |