Contact us at: sooddram@gmail.com

 

எழுபது ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்திருந்த வெள்ளிக் கட்டிகள்

ற்போது உலகின் விழிகளை வியப்பில் திகைக்க வைத்திருக் கும் ஒரு பொக்கிஷ பெயர், கடலில் மூழ்கி இருக்கும் புதையல். கடலுக்குள் கப்பல்கள் மூழ்கிப்போவது சாதாரண நிகழ்வு தான். ஆனால் அதையும் சரித்திரமாக மாற்றும் தன்மை சில கப்பல்கள் மூழ்கிப்போன தில் நடந்ததுண்டு. இதற்கு சரியான உதாரணம் டைட்டானிக். டைட்டானிக் மிகப் பிரமாண்டமான பயணிகள் கப்பல். எதனாலும் அதை மூழ்க வைக்க முடியாது என்ற இறுமாப்பு அதை வடிவமைத்த அனைவருக்கும் இருந்தது. அந்த இறுமாப்பை தகர்த்தது இயற்கை. தனது முதல் கன்னிப் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி மூழ்கிப் போனது. சரித்திரம் படைத்தது. ஆனால் கெயர் சோப்பா என்ற கப்பலின் கதையோ வேறு. கிட்டத் தட்ட 70 ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்திருந்த இந்த கப்பலுக்கு மூழ்கிய காலத்தைவிட கண்டுபிடிக்கப் பட்ட காலமே சரித்திர புகழைத் தேடித்தந்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த கப்பலில் மறைந்திருக்கும் ரூ. 1,000 கோடிக்கு மேல் மதிப்பு உள்ள வெள்ளிக் கட்டிகள்.

கெயர் சோப்பா ஒரு நீராவி சரக்கு கப்பல். பிரிட்டிஷ் - இந்திய ஸ்டீன் நேவிக்கேஷனுக்காக பால்மர்ஸ் ஷிப் பில்டிங் கம்பெனி 1919 ல் கட்டிக் கொடுத்தது. தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் உள்ள கிலோஸ்கோ துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டி ருந்தது. அவ்வப்போது அவுஸ்திரே லியா, ஆப்பிரிக்கா தூர கிழக்கு நாடுகளுக்கும் பயணம் செய்தது.

இந்த கப்பல் 412 அடி நீளம் கொண்டது. 3 ஆயிரத்து 227 தொன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. கிட்டத்தட்ட 21 வருடங்க ளாக எவ்வித சிக்கலும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்த இதன் பயணம் 1940 இல் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல் கத்தாவில் இருந்து அதன் இறுதிப் பயணம் தொடங்கியது. அப்போது இந்த கப்பலில் வெள்ளிக் கட்டிகளும், டீத்தூளும் ஏற்றப்பட்டன. 83 மாலுமி களுடனும், 2 துப்பாக்கி ஏந்திய காவலர்களுடனும் கப்பல் புறப்பட்டது.

அப்போது இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலம். எதிரி நாட்டுக் கப்பல்களை நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தகர்த்தெறிவதில் ஜேர்மனி வல்லமை பெற்றிருந்தது. அதனால் ஆங்கிலேய அரசு தங்களின் கப்பல்கள் அனைத்தையும் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கெயர் சோப்பாவும் அதற்கு தப்பவில்லை. பாதுகாப்புக்கான இராணுவ துணைக் கப்பல்கள் புடைசூழ கம்பீரமாக கடலில் பயணித்தது.

கிட்டத்தட்ட 2 மாத பயணத்துக்கு பிறகு அத்திலாந்திக் கடல் மீது சென்று கொண்டிருந்தது. அத்திலாந்திக் கடல் முரட்டுத்தனமான கடல். அதனிடம் அமைதி இருப்பதில்லை. அன்றைக்கும் அப்படித் தான். பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. கடல் கொந்தளித்தது. மிக உயரமான அலைகள் வேறு பயமுறுத்தின. மணிக்கு 19 கி. மீ. என்ற வேகத்தில் சென்ற கொண்டிருந்த கப்பலின் வேகத்தை மேலும் குறைத்தார் கப்பலின் கப்டன். கடலின் சூழ்நிலை வேறு பயணத்துக்கு சாதகமாக இல்லை. போதாக்குறைக்கு எரிபொருள் இருப்பும் குறைவாக இருந்தது. இதைக் கொண்டு லிவர்பூல் வரை போக முடியாது என்ற முடிவுக்கு வந்த கப்பலின் கப்டன் மேற்கு அயர்லாந்தில் உள்ள கால்வே துறை முகத்துக்கு போக முடிவு எடுத்தார்.

பாதுகாப்பாக வந்துகொண்டிருந்த இராணுவ துணைக் கப்பல்கள் விலகிக் கொள்ள பெயர் சோப்பா தனியாக அயர்லாந்துக்கு பயணமானது. இதை நோட்டமிட்டது ஜேர்மன் போர் விமானம் ஒன்று. தனியாக வரும் இங்கிலாந்து கப்பல் பற்றிய தகவல் ‘யூ... போட்’ என்ற நீர்மூழ்கிக் குண்டுகளை வீசும் படகுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்த படகின் கப்டன் எர்னஸ்ட் மெங்கர்சன் தனது படகை கெயர் சோப்பா கப்பல் இருக்கும் இடம் நோக்கி செத்தினார். நன்றாக அழகுபடுத்தப்பட்டிருந்த அந்த படகு தாக்குதலுக்கு தான் வருகிறது என்ற சந்தேகம் யாருக்கும் உருவாகவில்லை.

கப்பலின் அருகில் வந்த ‘யூ... போட்’ படகு சக்தி வாய்ந்த நீர்மூழ்கிக் குண்டு ஒன்றை அதன் மீது வீசியது. அது கப்பலின் முன் பகுதியை துளைத்து உள் பகுதியை கிழித்துப் போட்டது. அப்போது தான் புதிய நாள் தொடங்கி 8 வினாடிகள் ஆகி இருந்தன. நேரம் 00.08. 1941 பெப்ரவரி 17.

கப்பல் தாக்கப்பட்டவுடன் ரேடியோ சமிக்ஞை தடைப்பட்டு உலகின் தொடர்பில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. 20 நிமிடங்களில் கப்பல் முழுவதுமாக மூழ்கியது. தப்பிக்க வழி இல்லாமல் கப்பலுடன் சேர்ந்து மூழ்கினர் மாலுமிகள். கப்பலில் 3 உயிர் காக்கும் படகுகள் இருந்தன. அதில் ஒன்றில் கப்பலின் 2 வது உயர் அதிகாரி ரிச்சர்டு ஜரேஸ் என்பவர் 6 மாலுமிகளுடன் தப்பித்தார். 13 நாட்கள் கடலுக்குள் தத்தளித்த அவர் மட்டும் கரை சேர்ந்தார். அவருடன் வந்த 6 மாலுமிகளும் கடலில் மூழ்கி இறந்தனர்.

பொதுவாக கப்பல்கள் கடலில் மூழ்கிவிட்டால் அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஏனென்றால் மூழ்கிய கப்பலின் மொத்த மதிப்பைவிட வெளியே எடுக்கும் செலவு கூடுதலாக இருக்கும். ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்பம் இந்த செலவுகளை குறைத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் என்பது மனிதன் இல்லாமல் எந்திரங்களை கொண்டு செய்வது. ரொபோ, கெமரா போன்றவற்றின் வரவால் இந்த வேலை எளிதானது. இவை மனிதன் நுழைய முடியாத ஆழ்கடலிலும் எளிதாக இறங்கி தகவலை கொண்டு வந்து சேர்த்து விடுகின்றன.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சி தான் இங்கிலாந்துக்கு கெயர் சோப்பாவை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலையும் ஆவலையும் கொடுத்தது. அதற்காக 1989 இல் ஒரு கேள்விப்பத்திரம் கோரப்பட்டது. அது டீப் வட்டர் றிக்கவரி அன்ட் எக்ஸ்புளோரேஷன்’ என்ற நிறுவனத்துக்கு கிடைத்தது. அந்த நிறுவனமும் கடலுக்குள் குதித்து தேடிப் பார்த்தது. எதுவும் அகப்படவில்லை. வெளியே வந்தது.

மீண்டும் 2010 ஜனவரியில் ஒரு கேள்விப் பத்திரம் கோரப்பட்டது. இந்தமுறை ஒடிசி மெரைன் எக்ஸ்புளோரேஷன் என்ற நிறுவனம் கடலுக்குள் இறங்கியது. அமெரிக்க நிறுவனமான இது ஏற்கனவே கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல விருதுகளை பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு மேலாக கடலை அலசி ஆராய்ந்ததில் இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மூழ்கிய பொக்கிஷ கப்பலை கண்டுபிடித்தனர். இது மிகப்பெரிய சாதனை.

நடுக்கடலில் 4.7 கி. மீ. ஆழத்தில் அடர்ந்து இருளில் சகதிக்குள் புதைந்து போய் பாசி மூடியிருக்கும் ஒரு கப்பலை அடையாளம் காண்பது என்பது சாதாரண செயல் அல்ல. முதலில் மனிதர்கள் தான் கடலுக்குள் இறங்கினார்கள். 2.7 கி. மீ. ஆழம் வரை சென்றவர்களால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இனி முடியாது என்று மேலே வந்துவிட்டனர்.

அதன்பின் சக்தி வாய்ந்த விளக்குகள், கேமிரா சகிதமாக நவீன ரொபோவை கடலுக்குள் அனுப்பினர். 4.7 கி. மீ. ஆழம் சென்றவுடன் மூழ்கி இருந்த கப்பலை கண்டுபிடித்தது.

முதலில் ரொபோ கெமிராவில் நீர்மூழ்கிக் குண்டு ஏற்படுத்திய பெரிய ஓட்டை தான் பதிவானது. அதன் வழியாக உள்ளே நுழைந்து கப்பலின் உள் பகுதியை பார்த்த போது அந்த பகுதி கபில நிறத்தில் தொங்கும் பனிபோல் பளபளப்பாக தெரிந்தது. அதில் இடுப்பளவு உயரம் கொண்ட பித்தளையால் ஆன திசை காட்டும் கருவி ஜொலித்துக்கொண்டிருந்தது. இது இலேசான நம்பிக்கையை தர கெயர் சோப்பா கப்பல் தானா என்பதை உறுதி செய்ய மேலும் ஆதாரத்தை தேட முயன்றனர்.

மிகச் சிறிய கெமிரா மூலம் 4 1/2 மணி நேரம் கப்பலை சோதனை செய்தனர். கப்பலின் உள்புறத்தில் இருக்கும் கருப்பு சிவப்பு வண்ணம் மேலும் கூடுதலான நம்பிக்கையை தந்தது. ஏனென்றால் பிரிட்டிஷ் இந்திய ஷிப்பிங் நேவிகேஷன் கப்பலின் உட்புறம் இதே வண்ணத்தில் தான் இருக்கும். அதன்பின் நங்கூரத்தின் வடிவம், கப்பலின் அடிப்பகுதியில் சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் எண் எல்லாமே கெயர் சோப்பாவுடன் ஒத்துப்போயின. கப்பலில் வெள்ளிக்கட்டிகள் இருக்கும் இடத்தை மட்டும் ரோபோவால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் டீத்தூள் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பெட்டியை ரொபோ படம் எடுத்த போது பெட்டியின் உள்பகுதி யில் பளபளப்பான ஒரு கோடு தெரிந்தது. அதுதான் வெள்ளிக்கட்டி என்று முடிவுக்கு வந்தனர்.

இதுபற்றி ஒடிசி நிறுவனத்தின் த¨லைமை செயல் அதிகாரி கிரேக் ஸ்டெம் என்பவர் கூறும் போது ‘இங்கிலாந்து அரசு எங்களது கண்டுபிடிப்பை அங்கீகரித்து பத்திரிகைக்கு செய்தி வெளியிட்டுள் ளது. ஆனால் இந்த கப்பலில் எவ்வளவு வெள்ளி இருக்கும் என்பது யாருக்கும்தெரியாது. யுத்த காலத்தில் கப்பலில் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் உண்மையான மதிப்பை தெரிவிக்க மாட்டார்கள். அதை இரகசிய குறிப்பாகவே வைத்துக்கொள்வார்கள். கப்பல்களில் மதிப்புமிக்க சரக்குகள் சென்றால் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளாக நேரிடும் என்பதால் தான் இந்த ஏற்பாடு. ஆனால் ஒடிசியின் வரலாற்று ஆராய்சி மூலமும் கப்பலுக்காக செலுத்தப்பட்டிருந்த காப்பீட்டுத் தொகையின் மதிப்பு போன்றவற்றை வைத்தும் இந்த கப்பலில் 240 தொன் அளவுக்கு வெள்ளி இருக்கும் என்று தெரியவந்தது. அவை கட்டிகளாகவோ அல்லது நாயணங்களாகவோ இருக்கலாம்’ என்றார்.

மூழ்கிக் கிடக்கும் வெள்ளியின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 1,284 கோடி ரூபாய். அதிர்ஷ்டவசமாக இந்த கப்பல் மேல்நோக்கியபடியே மூழ்கி இருக்கிறது. அதாவது கடலுக்கு அடியில் தரை தட்டி நிற்பது போல் அதனால் சுலபமாக இதன் மீது உள்ள பொருட்களை வெளியே எடுக்க முடியும். அதிலும் மேல் பக்கம் குண்டால் தகர்க்கப்பட்ட ஓட்டை இருப்பது இன்னும் வசதி.

ஒடிசி நிறுவனம் 2012ல் கப்பலில் இருக்கும் பொருட்களை எடுக்கத் தொடங்கும் அதில் கிடைக்கும் பொருளின் மதிப்பில் 80 சதவீத ஒடிசி நிறுவனத்துக்கும் 20 சதவீதம் இங்கிலாந்து அரசுக்கும் போய்ச்சேரும். நவீன தொழில்நுட்பம் ஆழ்கடல் தேடலில் மிகப்பெரிய கதவை திறந்து வைத்துள்ளது. அதன் முதல் முயற்சி தான் கெயர் சோப்பாவின் கண்பிடிப்பு. இன்னும் இதுபோன்ற ஏராளமான கப்பல்கள் கடலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின் றன. உலகப்போரில் தாக்கப்பட்டு கடலில் மூழ்கிய கப்பல்கள் ஏராளம். அவற்றினுள்ளும் ஏகப்பட்ட பொக்கிஷ செல்வங்கள் இருக்கும்.

இதுவரை அடர்ந்த இருளையும் திகில் நிறைந்த மர்மங்களையும் மட்டுமே உலகுக்கு சொல்லிக் கொண்டிருந்த ஆழ் கடல்கள் இனி புதையலையும் பொக்கிஷங்களையும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெயர் வந்தது எப்படி?

முதலில் இந்த கப்பலுக்கு எஸ். எஸ். வார் ரோபக் என்று தான் பிரிட்டிஷ் ஷிப்பிங் கண்ட்ரோலர் பெயர் கொடுத்திருந்தார். ஆனால் கப்பல் முழுவதுமாக கட்டி முடிப்பதற்குள் கெயர் சோப்பா என்ற பெயரை மாற்றினார். கேயர் சோப்பா என்பவர் உத்தர (வடக்கு) கர்நாடகத்தை ஆட்சி செய்த மன்னர் விஜயநகரப் பேரரசுக்கு நெருங்கிய உறவினர். இவரது வழிவந்த மன்னர்கள் போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்தனர். அவர்களை கட்டுக்குள் வைத்திருந்தனர். இதுவே பின்னாளில் இந்த பகுதியில் ஆங்கிலேயர்கள் காலூன்ற காரணமாக அமைந்தது. அதனால் பிரிட்டிஷாருக்கு கேயர் சோப்பா வம்சத்தின் மீது எப்போதும் பாசம் இருந்தது. அதன் வெளிப்பாடாகவே கர்நாடகத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஜோக் பால்ஸ¤க்கு (அருளி) கேயர் கோப்பாவின் பெயரை வைத்தனர். பின்னர் வார் ரோபக் என்ற கப்பலுக்கும் அவர் பெயரையே வைத்தனர்.

மூழ்கிக் கிடக்கும் மேலும் ஒரு கப்பல்

வட அத்திலாந்திக் கடலில் ஜேர்மனியின் நீர்மூழ்கி கப்பல் குண்டு வீச்சில் 1917, பெப்ரவரி 9 ஆம் திகதி மூழ்கிய மற்றொரு கப்பலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எஸ். எஸ். மன்டோலா என்ற அந்த கப்பலில் ரூ. 1 இலட்சத்து 11 ஆயிரம் பவுண் வெள்ளி உள்ளது. அதாவது 19 தொன்னுக்கு சமம். இதன் இன்றைய இந்திய மதிப்பு 85 கோடியே 50 இலட்சம் ரூபாய்.

 

 

 

 

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com