|
||||
|
பிரதேசவாதத்திற்கே இந்நிலை
எனில் இனவாதம் எம்மாத்திரம்?
பிரதேசவாத ரீதியான
கருத்துக்கள்
மீண்டும்
தளிர்விட
ஆரம்பித்துள்ளதோ
எனும் சந்தேகம் தமிழ் மக்கள்
மத்தியில்
எழுந்துள்ளதுடன்
அது ஒருவித
பய உணர்வையும்
தோற்றுவித்துள்ளதை
கடந்த வாரம் ஊடகங்களில்
வெளியாகிய
சில செய்திகள்
தெளிவாக கோடிட்டுக்
காட்டியுள்ளன.
இத்தனை அழிவுகளையும்
சந்தித்த
பின்னரும்
தமிழ் மக்களுக்குள்ளேயே
பிரதேசவாதம்
பிரித்தாள
முயலுமானால்
இனவாதம் தமிழினத்தை
எவ்வளவு தூரம் நசுக்க
முயலும் என்பதை நினைத்துப்
பார்க்க வேண்டும். முப்பது வருடகால
யுத்தம் தமிழ் மக்களை
அழித்த போது வடக்கு,
கிழக்கு, மலையகம் என்று பார்க்கவில்லை.
ஒருவேளை விடுதலைப்
புலிகள் பிரதேச ரீதியில் தமது உறுப்பினர்களை
பிரித்தாண்டிருக்கலாம்.
அதனால்தான் அவர்களில்
இன்று பெயர் சொல்லக்கூட
ஒருவர் கூட இல்லாது
முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்களோ
தெரியாது.
இலங்கைக்கு வெள்ளைக்காரனால்
சுதந்திரம்
வழங்கப்பட்டதன்
பின்னர் ஒற்றுமையாக
வாழ்ந்த தமிழ் – சிங்கள
சமூகங்களுக்கிடையில்
நாட்டை ஆண்ட பெரும்பான்மையின
ஆட்சியாளர்களின்
போக்கினால்
சிறிது சிறிதாக பிரச்சினைகள்
எழ ஆரம்பித்தன.
தமிழர்கள் தமக்குப்
புறக்கணிப்புக்கள்
இடம்பெறுவதாக
குற்றம் சாட்டினர்.
அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள்
தமது எதிர்ப்புக்களை
சிறிய அஹிம்சை வழிப் போராட்டங்கள்
மூலம் காட்டத் தொடங்கினர்.
மாறி மாறி
ஆட்சிக்கு
வந்த பெரும்பான்மையின
அரசுகளால்
தமிழரைத்
திருப்திப்
படுத்த முடியவில்லை
அல்லது தமிழர்கள்
அதிகம் கேட்கிறார்கள்
என்ற இருவேறு
நிலைப்பாடுகளையே
எடுக்க வேண்டியதாயிற்று.
திருப்தியில் பொறுமையிழந்த
தமிழ்த் தலைமைகள் தமது அஹிம்சைப்
போராட்டங்களை
தமிழ் இளைஞர்களுக்கு
மூளைச் சலவை செய்து
ஆயுதப் போராட்டமாக
மாற்றின. இது ஒரு
இனத்துக்கான
உரிமைப் போராட்டமமாக
இருந்தமையால்
அது ஆயுதம்
ஏந்திய போராட்டமாக
இருந்தபோதிலும்
இந்தியா உட்பட பல
நாடுகள் தமிழருக்கு
ஆதரவு வழங்கின. அதனால் பல தமிழ்
இயக்கங்கள்
உருவாகி பின்னர் அதற்குள் முட்டிமோதி,
சுட்டுத்தள்ளி
விடுதலைப்
புலிகள் மட்டும் பலமான போராட்ட
அமைப்பாக
மாறி அரசாங்கத்துடன்
போராடியது.
உரிமைப் போராட்டமாக
ஆரம்பித்து
அது திசைமாறி
பயங்கரவாதப்
போராட்டாக
மாறி பாரிய
அழிவுகளை
ஏற்படுத்தியமையால்
இறுதியில்
புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டமை
வரலாற்று
நிகழ்வாகும்.
இந்த சுமார் முப்பது வருட கால
தமிழர் போராட்டத்தில்
தமிழருக்குள்
பிரதேசவாதம்
இருந்ததாக
எச்சந்தர்ப்பத்திலும்
பதிவாகியதாகத்
தெரியவில்லை. ஐக்கிய
தேசிய முன்னணி அரசாங்கத்துடன்
புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை
நடத்திக்
கொண்டிருந்த
கால இறுதியில்
கிழக்கிலிருந்த
விடுதலைப்
புலிகளில்
பெரும்பாலானோர்
அன்று கருணா அம்மான்
என்றழைக்கப்பட்ட
புலிகளின்
கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த இன்றைய பிரதி அமைச்சர்
விநாயகமூர்த்தி
முரளிதரன்
தலைமையில்
புலிகள் அமைப்பிலிருந்து
பிரிந்து
சென்றனர்.
அதற்கு அவர்கள்
முன்வைத்த
காரணம் புலிகளின்
தலைமை பிரதேசவாதத்துடன்
செயற்படுகிறது
என்பதாக அமைந்திருந்தது.
அன்று அதனைப்
பலரும் ஏற்றுக்கொண்டனர்.
வடக்கின் புலித்
தலைமை போர்முனைக்கு
கிழக்கின்
வீரர்களையே
அனுப்பி பலிக்கடாவாக்குகிறது
என்ற குற்றச்சாட்டு
மேலோங்கி
ஒலித்தது.
அது உண்மையாக
இருக்கலாம்.
அது இன்றும்
தேவையில்லை.
புலிகளுடன் சேர்ந்து
தமிழரின்
பிரதேசவாதமும்
அழிந்துபோகட்டும்
என்பதே இன்று தமிழ்
மக்கள் முன்னாலுள்ள
கருத்தாக
உள்ளது.
உரிமைப் போராட்டம்
என்று புறப்பட்ட
தமிழினம்
இறுதியில்
கண்டது அழிவுகளையே
என்றால் எவராலும் அதனை மறுக்க
முடியாது. இறுதியில்
தேவையற்ற
ஒரு போராட்டமாக
முடிவடைந்த
முப்பது வருடகால போராட்டத்தை
இடைநடுவிலாவது
கைவிட்டு,
ஆட்சி புரிந்த அரசுகளுடன்
அணைந்து சென்று தமிழர் வாழ்விடங்களை
அபிவிருத்தி
செய்து மற்றும் விடயங்களில்
சலுகைகளை
பேச்சுக்கள்
மூலம் கேட்டுப் பெற்று வாழ்ந்திருந்தால்
தமிழினம்
இத்தனை பாரிய அழிவுகளைச்
சந்திக்காது
வாழ்ந்திருக்கலாம்.
புலிகளை வளர்த்துவிட்ட
தமிழ்ச் சமூகம் இன்று புலிகளாலேயே
அழிவையும்
சந்தித்து
நிற்கும்
நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்காது.
புலிகளின் முழுமையான
அழிவிற்கும்
அவர்கள் மூலம் தமிழினம்,
இந்நாடு கண்ட அழிவிற்குப்
பின்னரும்
பிரதேசவாதம்
பேசுவது ஆரோக்கியமானதல்ல
எனும் கருத்துப்
பொதுவாக எழுந்துள்ளது.
இன்று தமிழர்களில்
ஒரு பிரிவினர்
அரசாங்கத்துடனும்,
மற்றுமொரு
பிரிவினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும்,
மலையகப் பெருந்தோட்ட
மக்கள் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ¤டனும்
சார்ந்துள்ளனர்
என்பதை எவரும் மறுக்க முடியாது. சிறு பிரிவினர்
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்
இதர தமிழ்க்
கட்சிகளுடனும்
ஐக்கியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்
மக்களை கட்சி ரீதியாகப்
பிரித்துப்
பார்த்தாலும்
பரவாயில்லை,
பிரதேச ரீதியாகப்
பிரித்துக்
கூறுபோட முயல்வது, சிந்திப்பது
பாரிய விளைவுகளையே
தரும். முதலில் தமிழர்
எனும் மகுடத்தில்
திரண்டு கட்சி ரீதியாகப்
பிரிந்து
நிற்பதில்
எவ்விதமான
பாதகமும்
இல்லை. தமிழருக்குள்ளே
பிரதேசவாதத்தை
தமிழரே ஏற்படுத்திக்
கொண்டால்
அது தமிழரைப்
பிரித்தாள
முயற்சிக்கும்
நாட்டிலுள்ள
ஒருசில இனவாதிகளுக்கு
களம் அமைத்துக்
கொடுப்பது
போலாகிவிடும்.
எனவே இவ்விடயத்தில்
ஒரு தடவைக்கு
பல தடவைகள்
சிந்தித்தே
தமிழ் அரசியல்வாதிகள்
தமது கருத்துக்களை
வெளியிட வேண்டும். தமிழருக்குள்ளேயே தமிழரைப்
பிரித்தாழ்ச்
சிலர் அடியெடுத்துக்
கொடுப்பார்கள்.
ஆனால் அதனைத்
தமிழ்ச் சமூகத்தின்
நன்மை கருதித் தமிழ் அரசியல்வாதிகள்
தவிர்த்துக்
கொள்ள வேண்டும்.
ஏற்கனவே தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினர்
புலிகளின்
பாணியில்
தமிழ்த் தேசியம் பற்றி உள்நாட்டில்
‘@சிவருவது
போதாது என்று வெளிநாடுகளுக்கு
சென்று புலம்பெயர்ந்து
வாழும் புலி சார்பு
மக்களுடன்
அங்கும் பேசிவருவது
உள்நாட்டில்
இனவாதிகளுக்கு
கடுப்பை ஏற்றியுள்ளது.
இதற்கு மேலும்
கடுப்பை யேற்றும் விதத்தில்
பிரதேசவாதத்தையும்
கிளப்பிவிடாமலிருப்பதே
தமிழினத்திற்கு
இன்னுமொரு
அழிவை ஏற்படாதிருப்பதைத்
தடுக்கும்.
பிரதேசவாதத்தில் திருப்தி
காண முடியாது.
விடில் எப்படி
தமிழ்ச் சமூகம் இன ரீதியாக
திருப்திகாண
முடியும்? |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |